ARUL : கருத்துக்கள் ( 62 )
ARUL
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
6
2019
அரசியல் மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கு இலவசம் கெஜ்ரிவால் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
பதினெட்டு வயதிற்குக் கீழே உள்ளவர்கள் , அறுபது வயதிற்கு மேலே உள்ளவர்கள் , மாற்றுத்த் திறனாளிகள் , மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் , வேறு சில காரணங்களால் உடல் உழைப்பு மேற்கொள்ள இயலாதவர்கள் , மருத்துவ உதவி இன்றியமையாதது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் இவர்களைத் தவிர யாருக்கும் அரசின் இலவசங்கள் இல்லை என்ற நிலை நாட்டில் உருவாக உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்   19:12:27 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
22
2019
பொது ஆசிரியர் தகுதித்தேர்வில் 99 சதவீதம் பேர் பெயில்
இன்னும் ஒரு முறை வாய்ப்பு கொடுத்துவிட்டு , அதிலும் தேறாதவர்களை ,தயவு தாட்சண்யமின்றி , பணி நீக்கம் செய்ய வேண்டும் . எத்தனையோ தனியார் பள்ளிகளில்,இவர்களை விடப் பத்து மடங்கு திறமைசாலிகளாய் இருந்து கொண்டு , இவர்கள் வாங்கும் ஊதியத்தில் பாதி கூட வாங்காமல் பணி புரியும் பலருக்கு நியாயம் செய்ய வேண்டும்   09:34:19 IST
Rate this:
1 members
0 members
24 members

ஜூலை
30
2019
பொது சரியாக பணியாற்றாத ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப ரயில்வே முடிவு
சுமார் 10% பணிகளைத் தவிர, மற்ற அரசு அலுவல்களுக்கு , பணி அனுபவம் என்பது அத்தியாவசியமானது அல்ல, என்ற நிலைமை , கணிணிகளின் துணையோடு நடத்தப்படும் இன்றைய நிர்வாக நடைமுறைகளால் சாத்தியமாகி இருக்கும் உண்மையை எவரும் மறுக்க முடியாது. அதனால் 25 அல்லது 30 வருடங்கள் அலுவலர்களின் பணிக்காலம் என்ற பத்தாம் பசலி நடைமுறையை மாற்றி அரசு அலுவலர்களின் பணிக்காலம் 5 வருடங்கள் மட்டுமே என்ற திட்டம் கொண்டு வந்தால் நாட்டில் வேலை வாய்ப்பு 5 அல்லது ஆறு மடங்கு அதிகரிக்கும். 5 வருடங்கள் முடிந்ததும் , வேறு துறைகளில் வேலை தேடிக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு அவர்கள் தள்ளப்படுவதால், சுய தொழில் முயற்சிகள், வியாபாரம், விவசாயம் , போன்றவை வளரும். அதே சமயம், ஊழல் குற்றங்களுக்கான தண்டனைகள் மிக மிகக் கடுமையாக்கப்பட வேண்டும். அப்போது தான் அரசு அலுவலர்கள் , 5 வருடங்கள் கழித்து, தனியார் துறைகளில், பணி வாய்ப்பை உறுதி செய்து கொள்ள, 5 வருட கால பணிக்காலத்தில் முறையற்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும். இந்த யோசனை கொஞ்சம் விசித்திரமாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் அரசு அலுவலர்களின் ஆணவத்தை அடக்கும்.அதே சமயம் நிர்வாகமும் பாதிக்கப்படாது   21:15:17 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
28
2019
கோர்ட் சபாஷ்! ஹெல்மெட் விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி
தலைக்கவசம் அணியாதவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனையை விடப் பல மடங்கு கடுமையான தண்டனை, போதையில் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தும் பெரிய மனிதர்கள் , அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் ஆகியவர்களுக்குக் கொடுப்பதற்கு அரசு ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது ? பணத்திமிரிலும் , பதவித்திமிரிலும் விபத்துகளை ஏற்படுத்தும் அந்த நாய்களுக்கு , இப்பொழுதுள்ள சட்டங்களின் படி வழங்கப்படும் தணடனையை வழங்கி விட்டுக் கூடுதல் தண்டனையாக , எந்த இடத்தில் விபத்து அவர்கள் ஏற்படுத்தினார்களோ அதே இடத்தில் கம்பத்தில் குறைந்தது எட்டு மணி நேரம் கட்டி வைத்து , குறைந்தது நூறு பேர்கள் செருப்பினால் அடிப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்வது அவசியம்   09:47:39 IST
Rate this:
0 members
0 members
20 members

ஜூன்
3
2019
சிறப்பு பகுதிகள் இவர் போல யாரென்று...
""இவர் வெற்றி பெற்றார் என்று சொல்வதை விட எதற்கும் விலை போகாமல் ஒரு எளிய உண்மையான மனிதரை வெற்றி பெறச் செய்து தொகுதி மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்"".-முருகராஜ் அவர்களின் இந்த ஒரு வரிக்காக அவருக்குப் பல கோடி பாராட்டுகள்   22:24:24 IST
Rate this:
0 members
0 members
15 members

ஏப்ரல்
20
2019
அரசியல் ஓட்டளிப்பதை கட்டாயமாக்க பொது விவாதம் ராமதாஸ்
அதற்கு முன்பு குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்று தெரிந்தும் அவர்களை வேட்பாளராக நிறுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்   12:43:59 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
10
2018
சம்பவம் முட்டை, சத்துமாவு சப்ளையில் ரூ.5,000 கோடி ஊழல்! வாங்கிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு வருகிறது சிக்கல்
ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் அரசு அதிகாரிகளுக்கு இப்போது நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின் படி என்ன தணடனை வழங்க முடியுமோ அதை வழங்கி வீட்டுக் கூடுதலாக இந்தத் தண்டனை வழங்கப்படுவதற்கு வகை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும். அந்தத் தண்டனை என்னவென்றால் , மாதம் ஒருமுறை அவர்கள் தணடனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சிறைச்சாலை வாயிலில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அவர்களைக் கட்டி வைத்துப் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் , இரத்தக் காயம் ஏற்படாத வகையில் செருப்பால் ஒரு முறை பலம் கொண்ட மட்டும் அடித்து விட்டுச் செல்ல வகை செய்வது.அந்த ஊழல் நாய்களால் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பைச் சந்தித்தவர்களுக்கு இது கொஞ்சம் மன ஆறுதல் தரும் .   12:18:29 IST
Rate this:
0 members
0 members
16 members

ஜூன்
20
2018
பொது 8 வழி சாலை கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும்
முதலில் செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு வாகன நெரிசலில் ஒரு நிமிடம் கூட சிக்காமல் வாகனங்கள் போக ஆவன செய்யுங்கள் என்று கேட்டால் செய்ய மாட்டார்கள் . ஏனெனில் சென்னையில் நிலங்களைக் கையகப்படுத்துவது அரசால் முடியாத காரியம். தாதாக்கள் கட்டுப்பாட்டில் அனைத்து நிலங்களும் உள்ளன. அதனால் தான் அப்பாவி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார்கள்   16:33:10 IST
Rate this:
13 members
1 members
124 members

மே
15
2018
பொது சசிகலா இனி, முன்னாள் சகோதரி புது, பட்டம் சூட்டிய திவாகரன்
மன்னார்குடி மாபியா குடும்பம் என்ற பெயர் எனக்கு இருக்காது.நீங்கள் சொல்லுவது நடக்கும் என்று வைத்துக் ,கொண்டாலும், """முன்னாள் மன்னார்குடி மாபியா குடும்பம் என்ற பெயர் """ ஒட்டிக் கொண்டிருக்குமே. அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?   08:27:55 IST
Rate this:
1 members
0 members
33 members

மே
11
2018
அரசியல் வருமான வரியை ஒழிக்க வேண்டும் சுப்ரமணியன் சாமி
நான் 2016 நவம்பர் தினமலரில் எழுதிய பதிவு இது ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: வருமான வரி என்பதே இருக்கக் கூடாது.வருமான வரி முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும்.அதற்குப் பதிலாக EXPENDITURE TAX ( செலவு வரி ) மட்டுமே விதிக்கப்பட வேண்டும். இதன் முக்கிய அம்சங்களாக இருக்க வேண்டியவை. மக்களின் செயல்கள் அனைத்தும், விற்றல், வாங்குதல் என்ற இரண்டு பிரிவுகளுக்குள் அடைக்கப்பட்டு, விற்பனைக்கு ஜி.எஸ்.டி., வாங்குதலுக்கு செலவு வரி (expenditure tax )என்று இரண்டே வரிகள் தான் நாட்டில் இருக்க வேண்டும். உள் நாட்டுப் பொருட்களை வாங்குவதற்கான செலவு வரியை விட, வெளி நாட்டுப் பொருட்களை வாங்குவதற்கான செலவு வரி அதிகமாக இருக்க வேண்டும். சேவை, தர்மம், உதவி, ஆயுள் பாதுகாப்பு, மருத்துவச் செலவுகள், கல்விச் செலவுகள் வேறு பல பொது நலச் செயல்களுக்கான செலவுகள், போன்றவைகளுக்கு செலவு வரி இல்லை. என்பதோடு அதற்குச் செலவிடப்படும் தொகை மற்ற விஷயங்களுக்காக செலவிடப்படும் தொகையிலிருந்து கழித்துக்கொள்ளப்படும் விதமாக செலவு வரி சலுகை அளிக்கப்பட வேண்டும். இது ஒரு கோடிட்டுக்காட்டுதல் ( outline ) மட்டுமே. மேலும் பல அம்சங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட வேண்டும் .   10:04:15 IST
Rate this:
0 members
1 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X