Nesan : கருத்துக்கள் ( 297 )
Nesan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
10
2020
பொது 16வது முறையாக யாசகர் பூல்பாண்டியன் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கல்
ஐயா உங்களை நினைத்தா பாவமா இருக்கு, உங்கள் பணம் பங்கு போடும் கூட்டத்துக்கு போகுது. நீங்கள் வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நேரடியாக உதவி செய்யுங்கள். உங்கள் வெள்ளை உள்ளத்திற்கு பாராட்டுகள்.   07:04:14 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
7
2020
சிறப்பு பகுதிகள் மாஜி சி.பி.ஐ. இயக்குனர் அஸ்வானி குமார் தூக்கிட்டு தற்கொலை
இவருடன் நிறைய வழக்குகளும் ,உண்மைகளையும் யாரோ புதைத்து விட்டார்கள்   07:25:45 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
7
2020
அரசியல் அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோவிந்தா, கோவிந்தா... கல்லா கட்டிட்டு பன்னீர் புத்திசாலித்தனமா இருமணச ஒதிங்கிட்டார். மேலிடத்து சமரசமும் ஒரு காரணமா இருக்கலாம் . பழனி சம்பாரித்ததையும் , கொடுப்பதையும் வைத்து தேர்தலில் நிக்கலாம்னு நினைக்கிறார். பன்னீரை முதல்வர் வேட்ப்பாளரா நிறுத்தி இருந்தா ஒரு சில இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கு . காரணம் ரத்தத்தில் ஊறிப்போன சாதி ஓட்டுகள் . நாளையே சசிகலா வீரியத்துடன் வந்துட்டா, அவர் காலிலே விழுந்து ஒண்ணா ஐக்கியம் ஆகிருவார். காரணம் சாதி உணர்வுகள் . அப்பறம் கோவிந்தா , கோவிந்தா தான்...   16:08:43 IST
Rate this:
7 members
0 members
2 members

அக்டோபர்
2
2020
நலம் இரும்புச்சத்துள்ள உணவு சாப்பிடுங்க... - மாதவிலக்கு ஒழுங்கின்மை சரியாகிவிடும்!
சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயால், அதிகமாக பாதிக்கப்படுவதற்கு முழுக்க, முழுக்க காரணம் ஒழுங்கற்ற உணவு பழக்க, வழக்கம் மற்றும் முறையான உடற்பயிற்சி இன்மை. கண்டதையும் தலைக்குள்ளே போட்டுக்கிட்டு சதா கவலைப்படுறது. பெரும்பான்மையான பெண்கள் திருமணம் ஆகும்வரைதான் தங்கள் உடலை அக்கறையுடன் பராமரிக்கிறார்கள். ஒரு ஈர்ப்பு, அழகு, மினுமினுப்பு வேணும்னு நினைக்கிறார்கள். திருமணமாகி ஒரு குழந்தை பிறந்துவிட்டால், அதோட வாழ்க்கையில் எல்லாம் அடைந்துவிட்டது நினைக்கிறார்கள். உடலை நன்கு பராமரிப்பது இல்லை. உடற்பயிற்சி துளிகூட செய்வதில்லை. உடலால் மட்டும் இல்லை உள்ளத்தாலும்,எண்ணத்தாலும் சோர்ந்து போகிறார்கள். வார்த்தைகளுக்கு கூட வயதாகிவிடுகிறது மிக இளமையில். கணவர், குழந்தைகள், மாமனார், மாமியார் , நாத்தனார்... என்ற ஒரு குடும்ப மாயைக்குள் விழுந்துவிடுகிறார்கள். இதற்க்கு நடிகைகள் கூட விதிவிலக்கு இல்லை. இதில் மிக அரிதான பெண்காலே, தங்களது உடலையும், மனதையும் என்றும் இளமையாக வைத்து கொள்ள வேண்டும் என்று கவனம் செலுத்துகிறார்கள். ஆளுமை என்பது அன்பு , பண்பு , பாசம் , நேசன் , அறிவு, அழகு , ஈர்ப்பு... அது நம் கல்லறை வரை வரவேண்டிய சொத்து என்பதை ஆணும் , பெண்ணும் உணரவேண்டும்.   21:54:14 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
30
2020
உலகம் பார்வையாளர்களிடம் மரியாதை குறைவாக பேசிய கிளிகள் தனிமைப்படுத்தியது பூங்கா நிர்வாகம்
"பார்வையாளர்களிடம் மரியாதை குறைவாக பேசிய கிளிகள்: தனிமைப்படுத்தியது பூங்கா நிர்வாகம்" , ஐந்து அறிவு படைத்த கிளிக்கே இந்த தண்டனை. மிகவும் தரைகுரைவாக " நாயை தூக்கி..." பேசிய ஆறு அறிவு படைத்த மாண்புமிகு ராஜாவுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்   21:08:27 IST
Rate this:
2 members
0 members
17 members

செப்டம்பர்
28
2020
சினிமா அஜித் வராதது பிரச்னையா - சரண் கோபம்...
திரு அஜித் அவர்களே, நீங்கள் நல்ல நண்பர் என்று சரண் சொல்லுகிறார். ஆனால் நீங்கள் அவருக்கு ஆறுதல் சொன்னதாகவோ, துக்கம் விசாரித் தாகவோ தெரியவில்லை. நீங்கள் நிறைய புத்தகம் படிப்பவர் என்று கேள்விபட்டு இருக்கேன். உங்கள் வாசிப்பு, இது போன்ற துக்க விசயங்களில் முதல் ஆளாக நிர்க்கவேண்டும் என்று கற்பிக்கவில்லையா ?. ஏட்டு சுரைக்காய் வாழ்க்கைக்கு உதவாதுன்னு எங்க பாட்டி சொல்லுவாங்க.   22:45:31 IST
Rate this:
27 members
1 members
15 members

செப்டம்பர்
28
2020
பொது பிரேமலதாவுக்கு கொரோனா மருத்துவமனையில் அனுமதி
ஒரு மருத்துவரே தன்னை தக்காத்து கொள்ள தெரியவில்லையே?. படிப்பு வேலை செய்யவில்லை. விரைவில் குணம் அடைய வாழ்த்துகள்.   22:19:45 IST
Rate this:
0 members
1 members
0 members

செப்டம்பர்
7
2020
சிறப்பு கட்டுரைகள் ஆசிரியப் பணி பிழைப்பு அல்ல கடவுளின் அழைப்பு
பணிகளில் ஆத்மார்த்தமானது ஆசிரியர் பணி. இன்று மாணவர்களுக்கு கர்ப்பித்தலை பல ஆசிரியர்கள் பகுதி நேர தொழிலாக மாற்றிவிட்டார்கள். ஒரு சில ஆசிரியர்கள் ஒப்புக்கு பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். எதாவது ஒரு சங்க பதவியில் இருப்பவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யாமல் சம்பளம் வாங்குகிறார்கள். சில ஆசிரியர்கள் பேசும் வார்த்தைகள் காது கொடுத்து கேட்க முடிவது இல்லை. இதில் நடத்தை குறைபாடு வேறு. தனியார் பள்ளிகள் கல்வியை வியாபார நோக்கத்தோடு நடத்துகின்றன. இன்றைய ஆட்சியாளர்கள் அதைவிட மோசோமோ மோசம் , அன்றைய ஆசிரியர்களின் பணி போற்றுதலுக்கும், வணக்கத்துக்கும் உரியது. நல்ல ஆசானாய் ஒவ்வோரூ மாணவர்களின் உள்ளங்களில் வாழ்ந்தார்கள். எனக்கு இன்னும் நினைவிருக்கிறது திரு ஆரோக்கியசாமி என்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர், புகை பழக்கம் உள்ள ஒரு பெரியவரை சுருட்டை பற்றவைத்து புகையை உல் இழுத்து ஒரு வெள்ளை துணியில் ஊதாவைத்து, அதில் படிந்த கருமை நிறத்தை காண்பித்து, அதனால் ஏற்படும் தீமையை விளக்கினார். மேல்நிலை பள்ளியில் திரு பிரான்சிஷ் என்ற ஆசிரியர் மிக அருமையா கணிதம் நடத்துவார். எல்லாம் புரியவைத்துவிட்டு, ".. மாடு மேய்ந்திட்டு வருது கட்டுநா கட்டு, கட்டடா போ " என்பார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ... அன்று ஆசிரியர்கள் தான் மாணவர்களின் வாழ்க்கை வழி காட்டிகள். இன்று ஒருசிலரே அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆசிரியர் பணியில் வாழ்கிறார்கள்   17:47:13 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
22
2020
சிறப்பு கட்டுரைகள் ஆசிரியர், பெற்றோர், மாணவர் கூட்டணி
கல்வி என்பது அறிவை வளர்க்கும் ஆனால் அதுவே வாழக்கை ஆகாது. குக்கிராமத்திலிருந்து, ஏழ்மை நிலையிலிருந்தும் படித்த எத்தனையோ பேர் இன்றும்,என்றும் மேதைகலாய் உலகு எங்கும் சிறந்து விலங்குகிறார்கள். அந்த சூழ்நிலையில் இருந்து வந்தவர்கள் பெற்றோர்களை, உற்றார் உறவினர்களை, நண்பர்களை கைவிட்ட்தில்லை. ஆசிரியர்களை உயிரினும் மதிக்கிறார்கள். அதற்க்கு மூல கரணம் அவர்களது பெற்றோர்கள் தாயக,தந்தையாக,நல் ஆசானை அடிப்படை பண்புகளை சின்னம்சிறு வயதில் தளிர்களின் இதயங்களில் நல் விதையாய் விதைத்தே. இன்றைய பிள்ளைகள், மாணவ செல்வங்கள் எதிர்காலம் குறித்துப் பெரிய அக்கறை இன்றி, நிகழ் காலத்தின் அருமையும், பெருமையும் புரிதலும் இன்றி "இந்த நாளை ஆடிக் களித்தல் என்கிற தத்துவ நிலையை எங்கிருந்து இந்தத் தலைமுறையினர் பெற்றனர்" பத்தாம் பசலித்தனமான, தனிமனித மற்றும் சமூக கடமை என்னவென்று கற்றுக்கொள்ளாத பெற்றோரிடம் இருந்துதான். பிறந்த குழந்தை வளரும்பொழுது தாய் தந்தை முகம் பார்த்து அடையாளம் கண்டு சிரிக்கவேண்டிய மழலை ஸ்மாட்போனை பார்த்து இளிக்கிறது. எதையோ அக்கறையுடன் அடையாளம் காண துடித்து அழுகும் குழந்தையின் கையில் அடக்கமான ஐபோன் அடைக்கலமாகிறது. இது யார் குற்றம்? இவர்களால் "நிகழ்காலம் மட்டுமே நிரந்தராமானவை" என்ற ஜெ.கே யை எடுத்துரைக்க இயலுமா? "அன்றைய தினத்தில் நம் மனத்தை ஆக்கிரமித்திருக்கிற ஏதோ ஒரு சுகமான அல்லது வருத்தமான ஒன்றை மையப்படுத்தி" மனதை அலைபாய விடும் பெற்றோர்களால்,ஆசிரியர்களால் தனது குழந்தை செல்வங்களுக்கு,மாணவசெல்வகளுக்கு எப்படி கவனச்சிதறல் இன்றி நிகழ் காலத்தை கையகப்படுத்துவது என்று கற்பிக்கமுடியும்?. "வீடுகளில் ஒரு முறைக் கூப்பிட்டாலே, “என்னங்க அம்மா, என்னங்க அப்பா” என கேட்கும் குழந்தைகள் அபூர்வமாகிக் கொண்டு வருகிறார்கள்." இதற்க்கு யார் காரணம்?, பெற்றோர்களே. சின்ன சிறுவயதிலேயே அன்பையும், பன்பையும்,நேசத்தையும், நல்ல ஒழுக்கங்களையும் ஊட்டவேண்டும். மரியாதையாக எப்படி தாய், தந்தை, தாத்தா, பாட்டி, சகோதர சகோதிரிகள், உற்றார் உறவினர்களை அழைப்பது,மதிப்பது என்பதை குழந்தை பருவத்திலே பெற்றோர்கள் நன்கு கற்றுக்கொடுக்கவேண்டும். அப்படி கற்றுக்கொடுத்தல் பசுமரத்து ஆணிபோல் மனதில் இளமையிலேயே பதிந்துவிடும். ஐந்தில் வலையாயது ஐம்பதில் வளையாது என்பார்கள். அப்படி போதித்து வளர்க்கப்படுபவர்கள், கல்வித்துணையுடன் அறிவை வளர்ப்பார்கள்,ஆசானை மதிப்பார்கள்,நிகழ் காலத்தை பொன்னால் ஆக்குவார்கள், கவனச்சிதறலய் களைந்துவிடுவார்கள், அனைத்து நற்பண்புகளும் நற்குணமாகும். அனைத்திற்கும் பிறப்பும், வளர்ப்பும் அடிப்படை காரணம்.   23:46:09 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
21
2020
உலகம் எல்லையில் சீனா அத்துமீறல் அமெரிக்க எம்.பி., ஆவேசம்
தலை வாழை இலை போட்டு உபசரித்தோம். பட்ஸை துரோகி சீனா காரனுக்கு ஆட்டம் பாட்டம் கொண்டடாட்டம் மகாபலிபுரம் விழா கோலம். நேரு காலத்தில் சீனனுக்கு உதவி செய்தார், கைமாறாக நம்மீதே போர்செய்தான். கொஞ்ச இடத்தையும் கைப்பற்றி விட்டான். அப்பட்டிப்பட்ட பச்சை துரோகி சீனாக்காரன். நமது அரசு வரலாற்றை படிக்கணும் . பாராட்டுக்கள் அமெரிக்க எம்.பிக்கு .   10:56:31 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X