விவாதம் எல்லாம் அப்புறம் பார்க்கலாம். கடந்த பத்து வருடங்களில் ரூ. 4000 கோடிகள் மேல் வருமானம் பெற்ற காங்ரஸ் செலுத்திய வருமான வரி எவ்வளவு ஐயா?
08-ஜன-2021 14:41:08 IST
மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை செலவு செய்வதெல்லாம் பிறகு பார்க்கலாம் ஐயா. மாநில மற்றும் தேசிய அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு பல வருமானங்களுக்கு நமது நாட்டில் முழுமையான வருமான வரி விலக்கு மற்றும் பல விலையில்லா (இலவசம்) சலுகைகளை அளிக்கப்படுகிறது. உங்க "மையம்" கட்சி அங்கீகாரம் பெற்றதும், வரி விலக்கு மற்றும் சலுகைகளை கோருவீர்களா? அல்லது பொதுமக்கள் போல் செலுத்துவீர்களா?
07-ஜன-2021 14:21:48 IST
தற்பொழுதைய ஆட்சியாளர்களின் கீழ் கடன் சுமை இரட்டிப்பானது உண்மையாக இருக்கக்கூடும். ஆனால், குடிமக்களின் வாழக்கை தரம் இரட்டிப்பானதா?
22-டிச-2020 12:32:16 IST
தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேறியிருக்கலாம். ஆனால், அத்தியாவசிய தேவைகளான குடிநீர், சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு என அனைத்திலும் பின்தங்கி உள்ளோம்.
22-டிச-2020 12:32:14 IST
திரு. மாலிக் ராஜா அவர்களின் கூற்று கண்டிப்பாக உற்று நோக்கப்பட வேண்டிய ஒன்று. தற்பொழுதைய ஆட்சியாளர்களின் கீழ் கடன் சுமை இரட்டிப்பானது உண்மையாக இருக்கக்கூடும். ஆனால், குடிமக்களின் வாழக்கை தரம் இரட்டிப்பானதா? இல்லை. தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேறியிருக்கலாம். ஆனால், அத்தியாவசிய தேவைகளான குடிநீர், சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு என அனைத்திலும் பின்தங்கி உள்ளோம். இதற்க்கு ஆளும் கட்சியினர்கள் மட்டும் பொறுப்பல்ல. வரி விலக்கு பெற்ற அனைத்து கட்சிகளும் தான். விவசாயிகள் தங்கள் உரிமைக்காக ஒன்றிணைந்ததுபோல், முறையாக வரி செலுத்துவோர் ஒன்றிணைந்தால் மட்டுமே இதற்க்கு தீர்வு.
22-டிச-2020 12:32:07 IST
"நமது இலக்கு 200க்கு மேல். இதில் ஒரு இஞ்ச் குறையகூடாது". இந்த "பஞ்ச்"ல எதுக்கு ஓர் "இஞ்ச்". டிரவுசர், சட்டைக்கு அளவு குடுக்குற மாதிரில இருக்கு. பேசாம இந்த அரசியல விட்டுட்டு, தையல் மெசின் ஒன்னு வாங்கிட்டு செட்டில் ஆயிருங்க தல.
20-டிச-2020 13:38:59 IST
பள்ளியில் பாடத்தில் பயின்றது "ஜாலியன்வாலாபாக்" படுகொலைகள். அதற்க்கு அடுத்தபடியாக நிகழ்ந்தது "தூத்துக்குடி ஸ்டெர்லைட்" போராட்டத்தில் தான் என்று நம்பினேன். இதன் இடையே 1970ல் தி.மு.க ஆட்சியில் கோவையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் போலீசால் விவசாயிகள் சுட்டு கொல்லப்பட்டனர் என்பது இந்த பதிவின் மூலமே அறிகிறேன்.
20-டிச-2020 09:46:49 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.