நான்கு நாட்களுக்கு முன்பு, காரைக்குடியில், ஒரு சர்வதேச முன்னணி மின்னணு உபகரண வர்த்தக நிலையத்தில், எனது உறவினருக்காக ஒரு குளிர்சாதன பெட்டி (Fridge) வாங்கச் சென்றேன். குளிர்சாதன பெட்டியை தேர்வு செய்து, நமது அரசாங்கத்தின் சேவை வரியோடு கூடிய ரசீது போட்டு, பணம் செலுத்தும் இடத்திற்கு வந்தபின், எனது உறவினர் தனது ICICI வங்கியின் டெபிட் அட்டையைக் கொடுத்தபோது, பணம் வசூல் செய்பவர் எந்தஒரு டெபிட் அட்டையாய் இருந்தாலும் இரண்டு சதவிகிதம் கூடுதலாக (அதாவது சேவை வரி (GST) போட்டபின்பும்..... கூடுதலாக) துகை வரும் எனக்கூறியதைக் கேட்டு வேறு வழியின்றி பணமாகக் கொடுக்க நேர்ந்தது. முட்டையிட்ட கோழிகளுக்கு மட்டுமே...... எரியுமாம்.....மற்றவர்க்கு இதைப் பற்றி ஏனோ தெரிய வாய்ப்பில்லாமலேயே இருக்கிறது. மேலும் தற்போது, எத்தனை கடைகள் POS மிஷின்களை வைத்திருக்கின்றன? வைத்திருந்தால் அதற்கு வங்கிக்கு வாடகை.....பணம் வருவதில் தாமதம்.....தாமதமாக வரும் பணத்திற்குப் பிடித்தம்.....சரி.....டிஜிட்டல் பரிவர்த்தனையின் மற்றோர் அங்கமான GPay, PhonePe போன்ற மூன்றாம் நபர்களின் செயலிகள் வழியாக பணப் பரிமாற்றம் செய்யலாம் என்றால் அவற்றில் பல முறைகேடுகள் இன்னும் களையப்படாமலேயே இருக்கின்றன. தெரியாமல் இந்தியனாய் பிறந்துவிட்டோமோ? என நினைக்கத் தோன்றுகிறது.
01-ஆக-2021 09:15:55 IST
விடுமுறை நாட்களிலும் ஊதியம்,ஓய்வூதியம் போன்றவை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும் என்று பெருமை பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். கடந்த சில மாதங்களாக, விடுமுறை நாட்களில்கூட, நாம் கட்ட வேண்டிய லோன்களுக்கு சத்தமே இல்லாமல் நமது நிலையான அறிவுறுத்தல் (Standing Instruction) மூலம் நமது அக்கவுண்டுகளிலிருந்து பணத்தை எடுத்துவிடுவது ஒருபுறமிருக்க, தவணை கட்டும் நாளின் முடிவில் பணத்தை எடுக்காமல் அந்நாளின் ஆரம்பத்திலேயே எடுக்கிறார்கள். இது சரிதானா??? தவணை நாள் முடியும்வரை காத்திருக்கவேண்டியது அவசியம் தானே? அத்தோடு முடிந்ததா..... ஒரு சில வங்கிகள், மேலே கூறியதுபோல தவணை நாளின் ஆரம்பத்திலேயோ அல்லது முடிவிலேயோ நமது தவணைத் துகையை எடுக்கும்போது, அந்த வங்கிக்கணக்கில் தவணைத் துகையைவிட ஒரு ரூபாய் குறைவாக இருந்தால்கூட, ரூபாய் 500.00 அபராதத்துகையாகவும் மற்றும் அந்த அபராதத்துகைக்கு சேவை வரியும் (GST) சேர்த்து நம்மிடம் வசூல் செய்கின்றனர்.
இந்த நடத்தை கந்து வட்டிக் கொடுமையைவிடக் கேவலமானது.
மேலும் Mother Bank ATM ல் பணம் எடுப்பதற்கும், Other Bank ATM ல் பணம் எடுப்பதற்கும் பல விதிமுறைகளை அவ்வப்போது கொடுத்து, பரிவர்த்தனை அளவை குறைத்துக் கொண்டிருக்கும் நமது ஆற்றல் மிகு வங்கிகள், அனைத்து ATM களிலும் பண இருப்பு அளவை பராமரிக்க ஏதாவது ஒரு அமைப்பை நிர்வகிக்கிறதா? அப்படி இருந்தால் தெரியப்படுத்த வேண்டுகிறேன். ஏனெனில், உதாரணமாக ஒருநாளில் ATM ல் 20,000.00 ரூபாய் பணம் எடுக்க நமக்கு அனுமதி இருந்தாலும், நமது சில Mother Bank ATM கள் தவிர அனைத்து Mother Bank ATM களும் உதாரணமாக 5,000.00 மோ அல்லது 10,000.00 மோ மட்டுமே தருகிறது. நமது ஒருநாள் அளவான 20,000.00 ரூபாயை நாம் எடுக்க இரண்டு முதல் நான்கு பரிவர்த்தனைகள் ஆகின்றன. அதனால் நாம் வங்கிகள் குறிப்பிட்ட இலவச பரிவர்த்தனைகளை மாதத்தின் முதல் பத்து நாட்களுக்குள்ளேயே இழந்துவிடுகிறோம். அடுத்து அந்த மாதத்தில் நாம் செய்யப்போகும் மற்ற Mother Bank ATM பரிவர்த்தனைகள் மூலம் வரும் பரிவர்த்தனை கட்டணம் அனைத்துமே வங்கியின் பாக்கெட்டுக்குத்தான். Mother Bank ATM கே இந்த கதி என்றால் Other Bank ATM களுக்கு கேட்கவே வேண்டாம்.
இது நமது சட்டைப்பைகளிலிருந்து நமக்கே தெரியாமல் பிக்பாக்கெட் அடிக்கும் திருட்டுத் தொழிலுக்கு ஒப்பானது.
இவை அனைத்திற்கும் ஒரே ஒரு காரணம் மட்டுமே உள்ளது என நினைக்கிறேன். தான்தோன்றித்தனமாக வாழும் நாம், நமது ஒவ்வொரு மாத அறிக்கையையும் (Statement) சரியாக அல்ல.....அல்ல..... பார்ப்பதே இல்லை. நமது திண்டாட்டம் வங்கிகளுக்கும், அவற்றை முறையாக நிர்வகிக்க உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கிக்கும் பெரிய கொண்டாட்டமே
வாழ்க ஜனநாயகம்.....வளர்க பணநாயகம்.....
01-ஆக-2021 08:15:16 IST
இந்த கொரோனா பரவலுக்கு, மத்திய அரசு, மாநில அரசு, அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் நம்மையும் உட்கொண்ட மக்கள் மட்டுமே காரணமில்லை சகோதரி. தேர்தலை நிறுத்தவோ இல்லை கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் தேர்தல் பரப்புரை செய்யும் வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யாமல் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்த மற்றும் கொரோனாவை மறைமுகமாக பரவச்செய்துகொண்டிருந்த "வானளாவிய அதிகாரம் உள்ள" என்று சொல்லப்படும் நமது நீதிமன்றங்களும், அவற்றில் வீற்றிருந்து நீதியை நிலைநாட்டும் கடவுளுக்கு நிகரான மாண்புமிக்க நீதிபதிகளும் மற்றும் தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையத்திற்கு மீறிய ஒரு சக்தி இந்த நாட்டில் இல்லை என்று இந்தியமக்களை உணரவைத்த டி.என். சேஷன் போன்றோரைப் பார்த்தும் திருந்தாத தேர்தல் ஆணையமும் இந்த கொரோனா பரவலுக்கு முக்கியமான காரணம்.
தற்போது சில கோடிகளை, மாஸ்க் அணியாத ஏழைகளிடமிருந்தும், நடுத்தரவர்க்கத்தினரிடமிருந்தும் அபராதமாகப் பெற்றுவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் ஸ்காட்லாந்துக்கு காவல்துறைக்கு சளைக்காத நமது காவல்துறை, தேர்தல் பரப்புரையின்போது எங்கு சென்றது. அப்போதைய அபராத வசூல் எவ்வளவு?
மேலும், நிறைவாக "தேரா மன்னனாக" இருக்கும் நமது அரசாங்கத்தை தட்டிக்கேட்கும் அதிகாரம் உள்ள மற்றும் சர்வ வல்லமையுள்ள செய்திகள் வெளியிடும் நாளேடுகள் எங்கு சென்றன?
எழுதுகோலை விஞ்சிய அதிகாரம் நாள்பட வாழ்ந்ததில்லை என்பது நாமறிந்த உண்மை.
ஆக, கொரோனாவை மீண்டும் வரவேற்றதில் மேலே குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் பங்குள்ளது.
ஏன், நமக்கும் கூட பங்குள்ளது. நாம் மாஸ்க் அணியாமலும், அடிக்கடி கைகளை சுத்தமாகக் கழுவாமல் சோம்பி இருப்பதாலும், தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிவதாலும், நமது கைவிலங்கிடப்பட்ட சுகாதாரத்துறை அவ்வப்போது கூறும், அறிவுரைகளை கேட்டு அதன்படி நம்மை மாற்றிக்கொள்ளாதிருப்பதாலும் கூட கொரோனா நம்மை ஆட்கொள்ள சொந்தக்கையில் சூனியம் வைத்துக்கொள்ளவிழைகிறோம் என நான் நினைக்கிறேன்.....
13-ஏப்-2021 10:14:10 IST
ரொம்ப சரி.....
விஞ்ஞான ஊழல் செய்வது திமுக.....
அதை அட்சரம்பிசகாமல் அப்படியே கடைப்பிடித்து,
உனக்கும் பெப்ப...உங்கொப்பனுக்கும் பெப்ப...என சொல்பவர்கள்தான்.....
இந்த அதிமுக.....
06-ஏப்-2021 20:36:30 IST
நடுத்தர வர்க்கத்தினருக்கும், சாமானியருக்கும் பெரிய நன்மைகள் நடக்கவில்லையெனிலும், பெரிய தீமைகளும் இல்லை. ஆனால், தற்போதைய எதிர்க்கட்சி ஆண்டிருந்தால்.....
05-ஏப்-2021 15:56:03 IST
இலவசங்கள் சொந்தப்பணமோ இல்லை கட்சிப்பணமோ இல்லை. அவை பெரிதாக நாம் தந்த பணங்கள், அவைகளே நமக்கு மிகச்சிறிதாக திரும்பி வருகின்றன. நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து எத்தனையோ பிரச்சினைகளை முன்னெடுத்து நீதி வழங்குகின்றன. இதற்கு எப்போது.....?
05-ஏப்-2021 14:59:24 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.