தமிழகத்தின் இந்த நிலையை எண்ணி சிரிப்பை அடக்க முடியவில்லை. சஹ்யோக் என்ற நமது நாட்டின் மொழி இவர்களது எதிர்ப்புக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகிறது.ஆனால் ஏதோ ஒரு மொழியின் ' மெர்ஷல்' போன்ற தமிழ் மொழி அறியாத வார்த்தைகளை கொண்டாடுகின்றனர்.இந்த நிலையை என்னவென்று கூறுவது.
03-ஆக-2022 08:28:34 IST
சாலையோர வியாபாரியிடம் மக்காச்சோளம் வாங்கியது இவரது எளிமையைக்காட்டுகிறது.கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை செலவு செய்யும் பொழுது பேரம் பேசுதல் மனித இயல்புதானே? இதில் விமர்சிக்க ஒன்றும் இல்லை என்பதுதானே யதார்த்தம்.
24-ஜூலை-2022 19:09:17 IST
இந்த இரு பாடகியர்களையும் மனமாற வாழ்த்துகிறோம்,அநேக ஆசிர்வாதங்களை அள்ளி வழங்குகின்றோம்.இவர்கள் தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளமாக விளங்கும் பார்த்தாய் திருநாட்டின் ஒப்பற்ற குழந்தைகள்.வாழ்க வளர்க, இவர்களது தேசிய ஒருமைப்பாட்டின் உன்னத சேவைகள்.
21-ஜூலை-2022 09:05:51 IST
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சரியாக பராமரிக்காததால் வந்த விளைவு. இதனை பி.ஜே.பி.தலைவர் பல முறை வலியுறுத்தி கூறியும் காவல் துறை தலைமை விழித்துத்கொள்ளவில்லை.
18-ஜூலை-2022 09:05:44 IST
செந்தில் குமார் அவர்களது விளக்கம் மக்களுக்கு சிரிப்பைத்தான் தருகிறது. இதுவரையிலும் செய்தாற்போலவே, இனியும் சமயத்திற்கு ஏற்றாற்போல் மக்களை ஏமாற்றி தங்களது சுயநல லாபங்களை நடத்திக்கொண்டு செல்லலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள். இவர்களது ஒவ்வொரு செயல்பாடுகளும் கண்காணிக்கப்படுகின்றன என்பதை இவர்களது சிற்றறிவுக்கு எட்டுவதில்லை. திராவிட விடியல் பொய்யர்களின் இரட்டை வேடம் ஒவ்வொரு நாளும் இவ்வாறு கலைந்து கொண்டே இருக்கும் என்பது நிதர்சனம்.
18-ஜூலை-2022 08:57:19 IST
இந்தி மொழி பயின்றால் பானி பூரி விற்பனை செய்வதன்றி வேறு எதுவும் செய்வதற்கு இல்லை என்று கூறியவர் இந்த அமைச்சர். இவர் கேந்திர வித்யாலயாவில் தமிழ் மொழியை பாடமாக்கக் கூறுவது வேடிக்கை. இவர் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும், பிற மொழிகளை போற்றத்தெரியாதவர்கள் தம் மொழியை நிச்சயமாக வளர்க்க முடியாது என்பது உறுதி.
15-ஜூலை-2022 13:09:45 IST
திராவிட கட்சிகள் திறமையற்றவர்களை உயர் கல்வி அமைச்சராக நியமித்து பல்கலைக்கழகங்களுக்கு நன்மைகளைச் செய்யவில்லை.இவர்களது பேச்சும்,செயல்களும் இப்படித்தான் இருக்கும்.இவர் பட்டமளிப்பு விழாக்களுக்கு எப்பொழுதுமே செல்லாமல் இருப்பது மாணவர்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்கள் அனைவருக்குமே நன்மையே விளைவிக்கும்.
12-ஜூலை-2022 18:17:32 IST
மதமாற்றம் செய்து மக்களை சேவை என்ற பெயரில் ஏமாற்றிப் கொண்டிருந்த பல பொய்யான நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. ஆகையால் அப்பாவி மக்களை திசைதிருப்ப தற்சமயம் இதுபோன்ற மலிவான, கீழ் தரமான யுக்தியை கையாளுகிறார்கள். திராவிட மாடல் ஆட்சியில் இதுபோன்ற செயல்களை கண்டிக்காத தால், இவர்களின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது.
08-ஜூலை-2022 08:58:20 IST
இவர் வளர்ந்த, வளர்க்கப்பட்ட விதம், இவரிடம் சிறந்த தர்மத்தை எதிர் பார்ப்பது வீணான செயல்.பணத்திற்காக இவர்கள் எதையும் செய்வார்கள் என்பது நிதர்சனம், இது அனைவரும் அறிந்ததே. இவர்களது வக்ர புத்தியினால் உருவான தரம் குறைந்த பொய்யான ஒரு திரைப்படம், சனாதன தர்மத்தை எந்த ஒரு வகையிலும் பாதிக்காது. ஆகையால் இழிவான இவர்களின் செயல்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்.
06-ஜூலை-2022 09:15:11 IST
நாட்டின் ஓவ்வொரு குடிமக்களும் தங்களது தாய் மொழியின் மீது பெருமையும்,பற்றும் அளவிலா பாசத்தையும்,பக்தியையும் கொண்டிருக்க வேண்டும்.ஆனால் மொழியில் பிரிவினை வாதத்தை முன் நிறுத்தி நம்நாட்டின் பிற மொழிகள் மீது வெறுப்புணர்வுகளை மக்களிடையே பரப்பி விட்டார்கள்.இதன் விளைவாக வேற்றுமொழியான ஆங்கிலம் தமிழகத்தில் முன்னிலைபெற்று கோலோச்சி வருகிறது.தாய்மொழி தமிழ் வெறும் பேச்சளவில், தமிழக மக்களின் உணர்வுகளோடு விளையாடும் திராவிட கட்சிகளின் அரசியல் பகடைக்காயாக மட்டுமே உலவி வருகிறது. இந்த நிலை மாற வேண்டும், தமிழகத்தில் மீண்டும் செந்தமிழ் ஓங்கி உயர்ந்து வளரவேண்டும்.புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டு,கல்வியின் தரமும், தமிழும் வளர மக்கள் முயற்சி செய்ய வேண்டும்.
24-ஜூன்-2022 08:45:36 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.