Lakshmi Sree N : கருத்துக்கள் ( 1 )
Lakshmi Sree N
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
3
2022
வாரமலர் இது உங்கள் இடம்!
சில தினங்களுக்கு முன் எனக்கு கண்ணில் எரிச்சல் ஏற்பட்டதால், அருகில் உள்ள eye கிளினிக்கிற்கு, நானும் என் கணவரும் சென்றிருந்தோம்.அங்கே முன்னரே சிலர் காத்திருந்தனர் . வெளியில், pharmacy மற்றும் நோயாளிகள் வருகை, இரண்டையுமே ஒரு நடுத்தர வயது பெண் கையாண்டு கொண்டிருந்தார். எங்களை காத்திருக்குமாறு கூறியதும் வெளியில் நின்றிருந்தோம். சிறிது நேரம் கழித்து என்னுடைய முறை எப்போது? என்று கேட்க சென்ற போது.. இன்னும் ஒருவர் இருப்பதாக சொன்ன அவர்.. இங்கே எப்பவும் BP ,Pulse check பண்ணிட்டு தான் டாக்டர் கிட்ட அனுப்புவோம். செக் பண்ணிக்கோங்க என்றார்."சரி" என்றதும் , ஆள்காட்டி விரலில் pulse oximeter ஐ வைத்து பார்த்துவிட்டு ..."பல்ஸ் கம்மியா இருக்கே" என்றதும் ..எனக்கு கவலை ஆகிவிட்டது. வெளியில் வந்து கணவரிடம் சொன்னதும்...அவரும் கவலையடைந்தார்.ஒரு பத்து நிமிடம் வரை "ஐயோ போச்சு" என்கிற ரீதியில் நான் புலம்பிக்கொண்டிருந்தேன். என் கணவரோ .."அதெல்லாம் ஒன்னும் இருக்காது" என்று என்னை தேற்றிக்கொண்டிருந்தார் . அதற்குள் என் முறை வந்துவிட்டது. உள்ளே சென்றதும் டாக்டர் , கண்ணை பரிசோதித்து விட்டு , தூசி ஏதாவது பட்டு இதுபோல infection ஆகி இருக்கும் ..என்று சொல்லி மருந்துகள் எழுதிக்கொடுத்தார். பின் ,நானாகவே மனசு தாங்காமல் ,டாக்டர் வெளியில் pulse குறைவாக இருப்பதாக சொன்னார்கள். ஏதாவது problem இருக்குமா ? என்று கேட்டேன். "அப்படியா? என்ன வயது உங்களுக்கு? ( எனக்கு 28) அதற்குள் பல்ஸ் குறைவாக உள்ளதா? படபடப்பு இருக்கிறதா? (நான் இல்லை என்று மண்டையை ஆட்டினேன் ) எதற்கும் இதை செக் செய்துகொள்ள வேண்டும் " என்று அவர் பங்குக்கு ஒரு குண்டை தூக்கி போட்டார். மீண்டும் மீண்டும் அதை பற்றி கேட்டதில்.. சிலருக்கு எப்போதுமே குறைவான பல்ஸ் காட்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது .ரொம்பவும் கவலைப்பட வேண்டியடதில்லை என்றார். வெளியே வந்து மருந்துகளும் வாங்கியாயிற்று. ஆனாலும் கவலை. என் கணவரிடம் புலம்பினேன். அவர்.. "அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. எதற்கும் இன்னொரு முறை செக் செய்து பார் " என்றார். நானே மறுபடியும் போய் ,ரீடிங் எடுக்க சொன்னேன். இப்பொழுது பார்த்தால் ..சரியாக இருந்தது. "இப்போ சரியா இருக்கே" என்றார் அந்த அம்மா. அப்போது தான் நிம்மதியாக இருந்தது. உடனே அந்த அம்மா ,"bp யும் பாத்திருங்க" என்று அதையும் பார்த்து நார்மல் என்றதும் தான் ...விட்டா போதும் டா சாமி என்று கிளம்பி வந்து சேர்ந்தோம். கொரோனா காலத்தில் ஒட்டு மொத்தமாக எல்லோரும் oximeter களை வாங்கியதால் இது போன்ற தரம் குறைந்த மெஷின்கள் தயாரிக்க பட்டிருக்கலாம். மருத்துவமனைகள் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. லக்ஷ்மி ஸ்ரீ - சென்னை   17:43:14 IST
Rate this:
2 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X