எனினும் வெறும் தரையில் படுக்கக்கூடாது. பாய் அல்லது விரிப்பு அல்லது தாளையாவது விரித்துப் படுக்க வேண்டும். இல்லையேல் தரையின் சூடு அல்லது குளிர்ச்சி உடலுக்கு ஊறு நேர்விக்கும். தொண்டைக்கேடு அல்லது பிற நலக்கேடு ஏற்படும். தலைக்கு ஒரு துண்டினை மடித்துத் தலையணையாய்ப் பயன்படுத்த வேண்டும்.
29-மே-2023 07:01:22 IST
நல்ல திட்டம். ஆனால், இது தீண்டாமை போல் உள்ளதே .பொதுவான ஓய்வறையில் அவர்களுக்கு இடம் ஒதுக்குவதில் என்ன சிக்கல்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே விழி, தமிழா விழி.
20-அக்-2022 03:54:03 IST
செய்தித் தலைப்பு தவறான பொருளைத் தருவதாக உள்ளது. கணவனுடன் வாழாத, வாழ விரும்பாத, அவன் மேல் குற்ற வழக்கு தொடுத்துள்ள பெண்ணிற்கு, கருக்கலைப்பிற்காகக் கணவனின் இசைவு தேவையில்லை என்பதே நீதிபதியின் தீர்ப்பு. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம், மொழியைக் காப்போம், இனத்தைக் காப்போம்.
28-செப்-2022 22:17:07 IST
மிதியூர்தியில் கட்டணமானியைப் பயன்படுத்துவதாக இருந்தால் ஓட்டுநர்கள் கோரிக்கை நியாயமானது எனலாம். முன்பெல்லாம் குறைந்த தொலைவிற்கு உரூ.30/ கட்டணமாக வாங்கியவர்கள், தொற்றுப் பரவல்காலத்தல் உரூ.50 வாங்கினர். இப்பொழுது உரூ.70 முதல் உரூ.80 வரை வாங்குகின்றனர். உரூ.50 வாங்கிய தொலைவிற்கு உரூ. 100/ வாங்கியவர்கள், இப்பொழுது உரூ.120 வாங்குகின்றனர். இவையெல்லாம் அதிகக்கட்டணம் கேட்காத ஓட்டுநர்கள் நிலை, மிகுதியாக வாங்குநர் கட்டணம் தாங்க இயலவில்லை. எனவே, கட்டாயமாகக் கட்டணமானியைப் பயன்படுத்துவதை அரசு நடைமுறைப்படுத்தி அதற்கு ஓட்டுநர்களும் ஒப்புக் கொண்டால் மட்டுமே புதிய கட்டண வரையறை தேவை. இல்லையேல் என்ன பயன்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே விழி, தமிழா விழி
22-செப்-2022 04:07:13 IST
இச்செய்தியில் "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், இருவரும் தனித்தனியே பிரசாரம் செய்தனர். எனவே, இருவருக்கும் இடையிலான பூசல், முடிவுக்கு வந்து விட்டதாக நினைத்து, கட்சியினர் மகிழ்ச்சி அடைந்தனர்" என உள்ளது. இருவரும் இணைந்து பரப்புரை மேற்கொண்டனர். எனவே, பூசல் இல்லை எனக் கருதினால் சரியாக இருக்கும். ஆனால், தனித்தனியே பரப்புரை மேற்கொண்டதில் இருந்தே இருவரிடையே பூசல் நீறு பூத்த நெருப்பாக இருந்துள்ளது என அறியலாம் அல்லவா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே விழி, தமிழா விழி எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம்
26-பிப்-2022 04:32:21 IST
பாராட்டுகள். “பல மொழிகளை கற்றாலும், நமது அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் தொலைக்காமல் இருக்க தாய் மொழியான தமிழில் கல்வி கற்று, தமிழர்களோடு தமிழில் உரையாடி தாய் மொழியை வளர்ப்போம்.”
எனக் குறிப்பிட்டுள்ளமை மிகவும் பாராட்டிற்குரியது. தினமலர் பிற சொற்கள் கலப்பின்றி வந்தால் மேலும் சிறப்பாக இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே விழி, தமிழா விழி எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம்
21-பிப்-2022 04:47:19 IST
மக்களாட்சி மீதான கொடுந்தாக்குதல். மக்கள் நாயகம் பச்சைப் படுகொலை. இதனைக் குடியரசுத் தலைவர் நீக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே விழி, தமிழா விழி.
13-பிப்-2022 02:54:41 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.