Anushya Ganapathy : கருத்துக்கள் ( 43 )
Anushya Ganapathy
Advertisement
Advertisement
Advertisement
மே
2
2021
அரசியல் மூன்றாவது கட்சியாக உருவாகிறதா நாம் தமிழர்?
இரண்டாவதுக்கும் மூன்றாவதுக்கும் இழுத்துகிட்டு இருந்த கொஞ்சம் சுவாரசியமா இருந்திருக்கும்.5 ஒரு நாள் விளையாட்டில், மூன்றாவது நாள் கடைசி 10 ஓவர் இந்தியா ஜெயிக்குமா ஜெயிக்காதா இருப்போம் இல்ல அப்படி இருக்கும்ன்னு எதிர்பார்த்தேன்.   17:05:31 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
26
2021
கோர்ட் தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை தலைமை நீதிபதி காட்டம்
பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு போலத்தான் இந்த 5 வருட தேர்தல் தேர்வும். படிக்கிற பிள்ளைகளுக்கே தேர்வு வைக்கலையே. இந்த அரசியல் வியாதிகள் எதுக்கு தேர்தல் பரப்புரை? பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும் பொது இவங்க என்ன பண்ணிட்டாங்கன்னு இந்த பரப்புரை? பிள்ளைகளே onlineல படிக்குது. இவங்க ஆன்லைன்ல பண்ணின என்ன? தேர்தல் ஆணையம் சரியாக திட்டமிடாமல் விட்டது நிச்சயமாக தவறுதான்.   20:06:19 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
22
2021
பொது பூமித்தாயின் மூச்சை அடைக்கும் பாலிதீன்! இன்று உலக பூமி தினம்
அதனால தான் நாம இப்போ மூச்சு அடைச்சு (mask போட்டு) நிற்கிறோம்.   22:46:01 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
18
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
ஆங்கிலத்தில் ஆராய்ச்சி பண்றதை விட்டு விட்டு வாழ்க்கையின் நிஜத்தை கற்கலாம்.   18:13:07 IST
Rate this:
1 members
0 members
9 members

ஏப்ரல்
19
2021
சம்பவம் மரணத்தின் மடியில் குழந்தை நொடியில் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் - டுவிட்டரில் டிரெண்டிங்
அது அப்படி அல்ல. யாருக்கும் சேதம் இல்லை, போகலாம் என்று குறியீடு கொடுக்கும் போது ஓட்டுநர் பதறாமல் செல்வார் என்பதற்காக. ஓட்டுனரும் பார்த்துஇருப்பர், ஆனால் நிறுத்தமுடியாத காரணத்தினாலும் குழந்தை என்ற காரணத்தினால் பதட்டத்தில் இருந்திருப்பர். அவர்க்கு இந்த பச்சை குறியீடு முக்கியம்.   18:00:26 IST
Rate this:
2 members
0 members
2 members

ஏப்ரல்
8
2021
அரசியல் ஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை சீமான் தொகுதியில் தான் இந்த அவலம்
இது எப்படி சீமான் தொகுதி ஆகும்? அவரு இப்போ தானே போட்டிபோடுறார். dmk சங்கர் க்கு தான் எங்கள் வோட்டு என்று தானே எல்லோரும் சொன்னாங்க. என்னமோ dmk, admk பேச்ச கேட்டு தெளிவா இருந்தவங்கள மூளைகளை சீமான் குழப்பி விட்டுட்டாருன்னு சிண்டு முடிச்சிவிடுறீங்க.   16:09:41 IST
Rate this:
1 members
0 members
1 members

ஏப்ரல்
9
2021
சினிமா
இந்த படத்தை பத்தி நான் பேசல. ஆனா இப்போ எல்லாம் ஜாதியே பார்க்குறது இல்லன்னு சொல்றவங்களுக்கு ... நான் திருநெல்வேலி பொண்ணு. போன வருஷம் இதே ஏப்ரல் மாசம் கொரோனா வந்தப்போ, நம்ம யாருக்காச்சும் உதவி பண்ணலாம், இந்த போலீஸ்கரங்களுக்கு கொஞ்சம் நீர் மோர் ஆச்சும் செய்து குடுக்கலாம்ன்னு சொன்ன போது, என் அப்பா சொன்னது, "அவர்கல்லாம் நாம குடுத்த குடிக்க மாட்டாங்க". இந்த ஏப்ரல் வெயில் கொழுத்துது. 2. எங்க வீட்டுல மட்டும் தண்ணி வரல, நான் 10 குடம் தண்ணி எடுக்கும் போது ஏன்னு கேட்காதவங்க, அவங்க வீட்டுல தண்ணி வரலன்னுதும், பஞ்சாயத் தலைவருக்கு போன் போட்டு, நாங்க தான் ஏதோ தப்பு பண்ணின மாதிரி வீட்டுக்குள்ள வந்து சோதனை பண்ணிட்டு போனாங்க. 3. எங்க வீட்டுல மட்டும் முருங்கை மரம் இருக்கு. தொடக்கத்துல முருங்கைக்காய் வாங்கிட்டு இருந்த பக்கத்துக்கு வீடு, என்ன நடந்ததோ தெரியல, இப்போ வாங்குறது இல்ல. இவங்க எல்லாம் மார்க்கெட் எப்படி பொருள் வாங்குறாங்க? யாரு விளையாவச்சதுன்னு எப்படி கண்டு பிடிப்பாங்க? இதுல வேற, இவங்களுக்கு யாரு இங்க இடம் குடுத்தது வீடு கட்டன்னு, போகும் போதும் வரும் போதும் பொருமல் வேற. நானும் வேற ஏதும் காரணம் இருக்குமான்னு கேட்டு பார்த்துட்டேன், ஒன்னும் இல்ல, ஒண்ணே ஒன்னு தவிர, ஆதிதிராவிடர்-லேயே அவங்க வேறயாமா, நாங்க வேறயாமா. ஆனா இவங்க முன்னாடி கடவுள் என்ன ஆசிர்வாதமாதான் வச்சிருக்கார்.   13:26:37 IST
Rate this:
2 members
1 members
16 members

பிப்ரவரி
11
2021
அரசியல் மே.வங்கத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியாது அமித்ஷா
மதுவந்தி, தமிழ்நாட்டுல பாணி பூரி குடுன்னு ஹிந்தில கேட்டா, வடநாட்டுல வட விக்கிற நம்மாளுகிட்ட வட குடுன்னு தமிழில்யா கேட்கும்? என்ன லாஜிக் இது?   15:43:40 IST
Rate this:
3 members
0 members
5 members

ஜனவரி
3
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
ரொம்ப சிம்பிள், இதற்கு ஏன் குழப்பம்? நான் படிக்க வேண்டும், doctorate இல்லா விட்டாலும், டிகிரியாவது முடிக்கவேண்டும் என்று மட்டும் கூறி பார். நீதான் வேண்டும் என்று ஒத்தக்காலில் நிற்பவன் உனக்காக காத்திருப்பார், உன் உறுதியை பார்த்து பெருமை கொள்வார், அதே துறையில் இருக்கும் அவர, நீ படிக்க உதவி புரிவார், உங்கள் சிறுபிள்ளைத்தனமான மற்ற சபதத்தில் நீங்கள் தெளிவு பெற வழிநடத்துவார் - இது போதும் அவரை நம்பலாம். தன துணையின் விருப்பத்திற்கும், குறிக்கோளும் உறுதுணையாய் இருக்கும், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அந்த அன்பை நம்பலாம். அப்படி இல்லாமல், இல்லவே இல்லை, முதலில் திருமணம், பின்பு ... என பேசினால், தாராளமாக உங்கள் படிப்பை மாத்திரம் கவனம் செலுத்தலாம். doctorate முடியுங்கள். கணவன்/மனைவி இல்லையென்றாலும், கல்வி கைகொடுக்கும்.   12:01:38 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜனவரி
3
2021
பொது ஆன்மிக பயணம் ரஜினி முடிவு?
ரஜினி அவர்களே, நீங்க அரசியலுக்கு வந்து நல்லாட்சி புரியவேண்டும் என்று நினைத்து இருந்தால், உங்களை சுற்றி இருக்கும் கூட்டத்தை நம்பாமல், உங்களைவைத்து பிழைக்க நினைத்த கட்சியை நம்பாமல், உங்கள் வயதான தொண்டர் கூட்டத்தை நம்பாமல், நல்லாட்சி என்பது மக்களுக்கு ஆனது, ஆதலால் என் மக்களிடம் கேப்பேன் என்று ஒரு சின்ன சர்வே நடத்திருந்தால், 3/10 பேர் தான் உங்களுக்கு ஆதரவு அளித்திருப்பார்கள், உங்களுக்கு யதார்த்தம் புரிந்திருக்கும், வோட் போடும் தலைமுறை மாறிவிட்டது, அதன் ஆராய்ந்து அறியும் ஆய்வு உயர்ந்துவிட்டது, கேள்வி கேட்கும் திறன் கூடிவிட்டது, இவ்வளவு ஏன், உங்கள் திரைத்துறையினரே வோட் போடமாட்டார்கள், இவர்களுக்கு மத்தியில், நம் வண்டி ஓடாது என்பது புரிந்திருக்கும், உங்கள் மனநிம்மதி உங்களோடு இருந்திருக்கும். மற்றவர்கள் ஆசைகாட்டி ஏமாற்றும் வயசா உங்களுக்கு? யோசித்திருக்க வேண்டாமா?   11:15:28 IST
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X