உக்கிரைன் மற்றும் ரஷ்ய போரினால், இரண்டு/ மூன்று வருடமாக தொடரும் கொரானா தொற்று, இயற்கை மாறுதல்களால் மழை, வெள்ளம், ஆகியவற்றால் அனைத்து உலக நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இவர் என்னவோ இந்தியா மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது போலவும், அதற்கு பிரதமர் மட்டுமே காரணம் என்பது போலவும் மக்களை திசைதிருப்புகிறார். இவர் என்னதான் கரடியாக கத்தினாலும் மக்களுக்கு தெரியும் இவரையும் இவர் கட்சியையும்.
26-ஜூன்-2022 18:27:55 IST
ஜனாதிபதி தேர்தலுக்கு தகுதியான நபராக , தற்போதைய Vice President திரு வெங்கையா நாயுடு அவர்களை பிஜேபி நிறுத்தினால், திமுக, திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனா உள்ளிட்ட எதிர்கட்சிகளும், எதிர்ப்பார் யாரும் தகுதியான நபர் இல்லாவிடில், ஆதரிக்க முன்வருவார்கள்..
20-ஜூன்-2022 19:57:00 IST
பின் ஏன் திமுக 380கோடி ரூபாயை ஹிந்தி பேசும் பிஹாரி பிரஷாந்த் கிஷோர்க்கு கொடுத்து ஆட்சியைப் பிடித்தது? சுயமாக சிந்தித்து ஆட்சியை பிடித்திருந்தால் 380கோடி ரூபாய் மிச்சமாயிருக்குமே?
06-ஜூன்-2022 20:18:52 IST
இது அனைத்து வடமாநிலங்கள் செல்லும் ரயில்களிலும் வழக்கமாக நடைபெறுகின்றன. தமிழகத்திற்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். குறிப்பாக ஆந்திரா பார்டர் தாண்டிவிட்டால், ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, மற்றும் வடமாநிலத்தவர் பலர் அனைத்து முன்பதிவு பெட்டிகளிலும் முன்பதிவு செய்யாமல் ஏறிப் பயணிகளுக்குப் பகல் முழுவதும் தொந்தரவு கொடுப்பார்கள். ஆனால் இரவு வண்டிகளில் டிடிஆர் மற்றும் ஆர்பிஎப் அவர்களை அனுமதிப்பதில்லை.
26-மே-2022 18:50:22 IST
தமிழகத்தில் உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் பல தனியார் போக்குவரத்து திட்டங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டிருப்பதால், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ரயில் போக்குவரத்தை அதிகரிக்கவும், புதிய ஸ்டேஷன்களை உருவாக்கவும் ஒரு போதும் பார்லிமென்டிலோ சட்டசபையிலோ குரல் கொடுக்க மாட்டார்கள். புதிய ரயில் பாதைகள் ஏற்படுத்தி, ரயில் போக்குவரத்தை அதிகரித்தால் அவர்களின் பஸ் போக்குவரத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு விடுமே?
21-மே-2022 11:22:25 IST
ஏற்கனவே மத்திய அரசும் மெடிக்கல் கௌன்ஸிலும் உக்ரெயினிலிருந்து திரும்பும் மருத்துவ மாணவர்களை இந்தியாவின் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்து அவர்களின் கல்வி தொடர ஏற்பாடு செய்துகொண்டிருக்கும் இந்த வேளையில் எதற்கு இப்படி ஒரு கடிதம்? நான் கடிதம் எழுதியதால் தான் மத்திய அரசு தமிழக மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கியது என்று மீடியாக்களில் விளம்பரம் செய்துகொள்ளவா?
08-மார்ச்-2022 11:13:37 IST
அறுபது வயதிற்கு மேல் உள்ளவர்களும், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு உள்ளவர்களும் மூன்றாவது பூஸ்டர் டோஸ் போடச்சென்றால் இரண்டாவது ஊசி போட்டு 9 மாதங்கள் ஆனால் தான் போடமுடியும் என்று திருப்பி அனுப்பினால் தடுப்பூசிகள் வீணாகாமல் என்னவாகும்?
04-பிப்-2022 12:32:53 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.