Indiya Tamilan : கருத்துக்கள் ( 24 )
Indiya Tamilan
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
1
2021
அரசியல் தலைவா... ரஜினி... பிரதமர் மோடி வாழ்த்து
தலைவா ஓட்டுக்காக தானே இப்படி சொல்கிறார். ரஜினி என்றவர் சொல்லி இங்கு யாரும் ஓட்டு போட போவதில்லை. இளைஞர்கள் மத்தியில் சுத்தமாக செல்வாக்கில்லை. ஒரு நடிகரை ஓட்டு க்காக (இவர் சொன்னால் போடுவார்கள் என்று நம்பி ) இப்படி சொல்வது பிரதமர் பதவிக்கு அசிங்கம் இல்லையா.மோடி தான் ஒரு தரமில்லாத அரசியல்வாதி என்று நிரூபிக்கிறார்   17:52:35 IST
Rate this:
1 members
0 members
0 members

மார்ச்
28
2021
அரசியல் வானதி சீனிவாசன் துக்கடா தலைவர் ம.நீ.மை, சர்ச்சை அறிக்கை!
என்ன பெரிய சர்ச்சை அறிக்கை. சகோதரி வானதி வார்த்தைக்கு வார்த்தை மநீம தலைவர் கமலை நடிகர் நடிகர் என்று கூறுவது சரியா? பிரச்சாரத்தில். அவரை நடிகர் என்று கூறி கொண்டு இவர் அரசியல்வாதிகள்??? ஸ்மிருதி இரானி, நமீதாவுடன் சேர்ந்து ஆட்டம் போடுகிறாரே இவர்கள் இருவரும் நடிகைகள்தானே.தரம் தாழ்ந்து பேசும் ராதாரவி நடிகர் இல்லையா.அது இருக்கட்டும். பிஜேபிதானே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சி தலைவர்களை துக்கடா தலைவர்களுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டாம் என்று கூறியது.அதாவது பிஜேபிக்கு வந்தால் அது ரத்தம் மற்ற கட்சிகளுக்கு வந்தால் அது தக்காளி சட்னியா?   11:52:46 IST
Rate this:
15 members
0 members
3 members

பிப்ரவரி
2
2021
அரசியல் இது உங்கள் இடம் அவர்கள் தொண்டர்கள் அல்ல!
இந்திய அளவில் பிஜேபி இல்லாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிற்கு நல்லது. தமிழகத்திற்கு திமுக,அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு நல்லது. கமல் ஹாசனுக்கு அடுத்த சட்டசபை தேர்தலில் முதல்வர் ஆக அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதற்க்கு அவர் செய்ய வேண்டியது அடுத்த தேர்தல் வரை பொறுமையாக திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல் இருக்க வேண்டும். வரும் தேர்தலில் யாருடைய பேச்சையும் கேட்காமல் தனித்து நின்று வாக்கு சதவீதத்தை அதிக படுத்த வேண்டும். ஒரு கணிசமான இடங்கள் வெல்வதற்கு திமுகவுடன் கூட்டணி சேர கூடாது. கூட்டணி சேர்ந்து வென்றால் இனி வரும் காலங்களில் கமல் சென்ற லோக்சபா தேர்தலில் வாங்கிய வாக்கு சதவீதத்தை மட்டுமே குறிப்பிட்டு அதுதான் கமலின் வாக்கு வங்கி என்ற முத்திரை குத்தப்பட்டுவிடும்.நீட் போன்ற கடினமான லோக்சபா தேர்தலை சந்தித்த அவருக்கு ஸ்டேட் போர்டு போன்ற சட்டசபை தேர்தல் கொஞ்சம் எளிதாகவே இருக்கும். நிச்சயம் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் தனித்து நின்று கமல் வாங்கும் இந்த வாக்கு சதவீதம் அவரின் எதிர்கால அரசியலுக்கு பெரும் பலமாக இருக்கும். இம்முறை அவர் மூன்றாம் கூட்டணி கூட அமைக்க கூடாது. திமுக கூட்டணியில் சேர்ந்தால் எம் எல் ஏ க்கள் கிடைக்கலாம் ஆனால் விஜயகாந்த் போன்ற நிலைக்கு ஆளாக்கி விடுவார்கள் பின்னர். இந்த சட்டசபை தேர்தலில் கமல் தனித்து நிற்க வேண்டும். அடுத்து வரும் மாநகராட்சி தேர்தலில் தனித்தோ, கூட்டணியோ வைத்து கொள்ளலாம்.அடுத்த லோக்சபா தேர்தலில் கட்டாயம் கூட்டணி வைத்து ஐந்து, ஆறு எம்பிக்களை கமல் பெறலாம். இந்த எம்பிக்கள் மற்றும் மாநகராட்சி தேர்தலில் வெல்லும் கவுன்சிலர்களை நன்கு செயல்பட வைத்தால் மக்கள் மனதில் இடம் பெற்று அடுத்த சட்டசபை தேர்தலில் முதல்வர் ஆக அதிக வாய்ப்பிருக்கிறது. கமல் ஹாசன் தூய தமிழில் பேச அதிக முயற்சி எடுப்பது நல்லதுதான் என்றாலும் அவர் சாமான்ய மக்களுக்கு புரியும்படி பேசவேண்டும். அதாவது மேடை தமிழை குறைத்து கொண்டு பேச்சு தமிழில் அவர் பேச வேண்டும். விஜயகாந்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். மற்றும் சாமான்ய மக்களை சென்றடைய வேண்டும் என்றால் சில நேரங்களில் ஆவேசமாகவும் பேசவேண்டும். எளிய தமிழில் சுற்றி வளைக்காமல் பேசவேண்டும். இது மிக முக்கியம் கமல் ஹாசனுக்கு. இரண்டாம் கட்ட தலைவர்களை மக்களிடத்தில் அறிமுகப்படுத்தி வைத்து பேச வைத்தால் கமலின் வேலை பளு கொஞ்சம் குறையும். மக்களை கவரும் வகையில் கவிஞர் சினேகன் போன்ற பேச்சாளர்கள் அதிகம் வேண்டும்.குறிப்பிட்ட இடைவெளியில் பொதுக்கூட்டங்கள் கட்சியினரை வைத்து நடத்த வேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து போராட்டங்கள் தேவைக்கு ஏற்றவாறு நடத்த வேண்டும் விஜயகாந்த் கட்சி வீழ்ந்ததற்கு இது முக்கிய காரணம். இதை எல்லாம் செய்தால் கமலுக்கு,மக்கள் நீதி மையத்திற்கு நாளை நமதே.   15:55:01 IST
Rate this:
7 members
1 members
2 members

பிப்ரவரி
2
2021
அரசியல் இது உங்கள் இடம் அவர்கள் தொண்டர்கள் அல்ல!
இன்றைய சூழலில் யார் தமிழக முதல்வராக வர வேண்டும்? ஆனால் நடைமுறையில் யாருக்கு வாய்ப்பு உள்ளது? ப.சிதம்பரம், ஸ்டாலின், விஜயகாந்த், அன்புமணி,கமல் ஹாசன்.அதிக தகுதியுள்ள சிதம்பரம் முதல்வர் ஆனால் நல்லது, ஆனால் காங்கிரசுக்கு உள்ள செல்வாக்குப்படி அது சாத்தியமாகாது. விஜயகாந்த் நல்ல மனிதர், துணிச்சல்காரர்,நல்லது செய்ய வேண்டும் என்ற உள்ளம் கொண்டவர் ஆனால் அவரின் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதால் கட்சி செல்வாக்கிழந்து இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடையாது. டாக்டர் அன்புமணி ராமதாசிற்கும் வாய்ப்பு இல்லை ஏனென்றால் அவர் கட்சி ஜாதி மற்றும் வன்முறை அரசியல் செய்யும் கட்சி என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது மற்றும் வட தமிழகத்தில் மட்டுமே அவருக்கு செல்வாக்கு உள்ளது.கமல் ஹாசன் தன்னுடைய திரை துறையில் இந்தியா முழுவதுமே வேறு எந்த நடிகரும் செய்ய முடியாத பல சாதனைகளை செய்த இன்னும் செய்ய துடிக்கும் முன்னோட்ட எண்ணம் கொண்ட புத்திசாலி நடிகர் என்ற அடிப்படையில் அரசியலிலும் அவர் நிச்சயம் சாதிப்பார் என்ற எண்ணம் மக்களிடம் குறிப்பாக இன்றைய தலைமுறையிடம் உள்ளது அவரை மற்ற நடிகர்களுடன் ஒப்பிட முடியாது.ஆனால் கமல் ஹாசனின் வாக்கு வங்கி இந்த முறை இரட்டை இலக்கத்தை தொட வாய்ப்புள்ளது சில இடங்களில் வெல்லவும் வாய்ப்பு உள்ளது தனித்து நின்றாலும். திமுக,அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல் பொறுமையுடன் இருந்தால் அவர் அடுத்த சட்டசபை தேர்தலில் முதல்வர் ஆக அதிக வாய்ப்பிருக்கிறது.மிக பெரிய கட்டமைப்பை கொண்ட திமுக,அதிமுகவில் அதிமுகவிற்கு வாய்ப்பு இல்லை அந்த கட்சியின் வாக்குகள் இந்த முறை சிதறி பல கட்சிகளுக்கும் போக போகிறது.இந்த இரண்டு கட்சிகளும் இல்லாத கூட்டணி ஆட்சி வந்தால் தமிழகத்திற்கு நல்லது ஆனால் வேறு வழி இல்லாமல் திமுகவின் ஸ்டாலின்தான் இம்முறை முதல்வர் ஆவார்.   15:03:58 IST
Rate this:
7 members
0 members
1 members

ஜனவரி
19
2021
பொது அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா காலமானார்
பொது நலத்திற்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்த டாக்டர் சாந்தா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.   11:52:27 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜனவரி
19
2021
அரசியல் கமலுக்கு அறுவை சிகிச்சை நலமுடன் உள்ளதாக தகவல்
தமிழ் திரையுலகின் மன்னிக்கவும் இந்திய திரையுலகின் மாபெரும் கலைஞர் கமல் அவர்கள் வெகு விரைவில் குணமடைந்து வர வாழ்த்துக்கள். 🎉🎉🎉   11:48:22 IST
Rate this:
2 members
0 members
12 members

ஜனவரி
14
2021
சினிமா பூமி
மன்னிக்கவும் ஒரு நல்ல படத்தை தவறாக விமர்சித்துள்ளார்கள் ஏற்று கொள்ள முடியாது.   00:15:45 IST
Rate this:
3 members
0 members
11 members

ஜனவரி
3
2021
முக்கிய செய்திகள் ரசீதில் ஐந்து ரூபாய்... வாங்குவதோ 20 ரூபாய்! டூவீலர் நிறுத்தக் கட்டண வசூலில் சுருட்டல்
இதை எல்லாம் சகித்து கொண்டு தான் வாழ வேண்டும் இந்த நாட்டில் வேறு வழியே இல்லை.   11:33:59 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
2
2021
சிறப்பு கட்டுரைகள் தனிமனித ஆளுமை இனி சாத்தியமா?
வெற்றிடத்தை நிரப்ப, ஒரு தனி மனித ஆளுமை, ரஜினி என்ற பெயரில் வந்து விட்டது என்று பெரும்பாலான மக்கள் ஒன்றும் நினைக்க வில்லை. ரஜினியின் ரசிகர்கள் மட்டுமே நினைத்தனர். கமர்ஷியல் வெற்றியை தவிர இவரின் சாதனைகள் ஒன்றுமே இல்லை எல்லா மாநிலங்களிலும் இவரை போல நடிகர் இருப்பது சாதாரணமான ஒன்று. இளவயதில் இவர் என்னென்ன செய்தார் என்று அப்போதைய ஊடகங்களுக்கு நன்கு தெரியும். தகுதி இல்லாத நபரை துதி பாடுவது மிக கேவலமான ஒன்று.   11:30:14 IST
Rate this:
1 members
0 members
4 members

டிசம்பர்
18
2020
அரசியல் முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பதில் மகிழ்ச்சி கமல்
டாஸ்மாக்கால் தமிழகத்தில் குடும்பங்கள் சீரழியவில்லை அப்படித்தானே? டிவியில் வரும் பொழுது போக்கு நிகழ்ச்சியால் சீரழிகிறது. உங்கள் எல்லோர் வீட்டிலும் அதைத்தானே பார்த்து கொண்டிருக்கிறார்கள்.   13:21:38 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X