எல்லா இடங்களிலும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் முழு மூச்சுடன் செயல் படும் மத்திய அரசு, பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளை மட்டும் அவர்களின் பிடியிலிருந்து விடுவிக்க முடியாதா? அரசுடமை வங்கிகளின் மூலமாக, விவசாயிகளின் தேவைகளை எப்படி இந்த இடைத்தரகர்கள் நிறைவேற்றுகிறார்களோ அதை விட சகாயமாக நிறைவேற்றினால் இந்த பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வர இயலும் என்று தோன்றுகிறது. இதற்கான சிறப்பு அறிவிப்புகளை இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவிப்பார் என்று நம்பலாம் .
14-ஜன-2021 09:08:34 IST
தமிழக சட்ட சபையில் ஒரு அங்கத்தினர் கூட இல்லாத நிலையில், ஆரம்ப நிலையில் ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ். என்று இரு அணிகளாக சிறிது காலம் பிரிந்திருந்த சூழலும் மாறி நிலைமை ஈ.பி.எஸ்.க்கு சாதகமாக மாறி ஒரு நிலையான அரசும் அமைந்து அஇஅதிமுக ஒரு வலுவான கட்சியாக இருக்கும் நிலையில் பிஜேபி ரொம்ப அடக்கி வாசிக்க தவறிவிட்டது. கூட்டணி இல்லாமல் ஒரு ஜூனியர் பார்ட்னராக இருக்கும் நிலையில், அந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியை, தன் கட்சி ஒரு வலுவான நிலையை அடையும் வரையாவது காத்திருத்தல் தான் பயன் அளிக்கும் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தமிழக பிஜேபி மட்டுமின்றி அதன் தேசிய தலைமையும் ஏன் இப்படி பக்குவமின்றி, அதிலும் ரஜினி அவர்கள் பல ஆண்டுகாலமாகவே மதில் மேல் பூனையாக இருந்து வந்ததை பார்த்த பிறகும் கூட , நடந்து கொண்டனர் என்பது வியப்பைத் தருகிறது . இனி காங்கிரஸ் போல அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு அவர்கள் ஆதரவில் சில தொகுதிகளில் பிஜே பி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அதுவே பெரிய சாதனையாக அமையும் .
12-ஜன-2021 09:56:23 IST
கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்திய சீன வீரர்கள் கலப்பில் இந்திய தரப்பில் இருபது இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்பதை இந்தியா தயக்கமின்றி வெளிப்படுத்தியது. அரசின் மரியாதையுடன் அவர்களை வானுலகம் செல்ல, இந்திய மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் வழி அனுப்பியது . சீன தரப்பில் எவ்வளவு வீரர்கள் உயிரிழந்தனர் என்பதை இதுவரை அதிகார பூர்வமாக வெளியிடும் துணிவு அந்நாட்டு அதிபருக்கு இல்லை. மக்களும் அதை பெரிதாக பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இன்று பாக்கிஸ்தான் தெரிவித்ததைப்போன்றே என்றாவது ஒரு நாள் சீனாவும் அதை வெளியிட வேண்டிய சூழல் நிச்சயம் உருவாகும் .
10-ஜன-2021 11:23:09 IST
வன்முறையைத் தூண்டும் வகையில் ட்விட்டரில் பதிவு செய்தமைக்காக டொனால்ட் டிரம்ப்பின் கணக்கை நிரந்தரமாக முடக்கியது வரவேற்கத்தக்கதே. அதே மாதிரி ஐசிஸ் தீவிர வாதிகள் தங்கள் இயக்கத்திற்கு ஆட்களை தேர்வு செய்தல் , தீவிரவாத வன்முறைச் செயல்களுக்கு தூண்டுகோலாக இருக்கும் திட்டங்களை பரப்புவது போன்ற செயல்களுக்கு ட்விட்டரை பயன் படுத்துவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் உலக அளவில் எத்தனை பேர்களுடைய கணக்குகளை இவ்வாறு நிரந்தரமாக முடக்கியது என்பதும் தெரிந்தால் நல்லது .
09-ஜன-2021 15:39:07 IST
பிஞ்சிலேயே கருகி விட்ட இளம் குழந்தைகளின் பெற்றோருக்கும் உற்றோருக்கும் ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. அதே நேரம், கிருமிகளால் பல்லாண்டு காலமாக கோரக்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் கட்டுப்படுத்த முடியாத அளவில் பல்லாயிரக் கணக்கான சிறுவர்களை பலி வாங்கிய மூளைக்காய்ச்சலை முன்னிறுத்தி யோகி ஆதித்யநாத் அவர்களின் ராஜினாமாவைக் கோரிய எதிர்க்கட்சிகள், அவர்களுக்கு ஒத்து ஊதிய ஊடகங்கள் இப்போது என்ன செய்கின்றன. மருத்துவ மனைகளில் தீயணைப்பு உபகரணங்கள் எப்போதும் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு அவசர காலங்களில் உடனுக்குடன் செயல் படக்கூடிய தரத்தில் உள்ளனவா என்று அடிக்கடி அதிகார பூர்வமான ஊழலற்ற சோதனைகள் நடத்தப்பட்டனவா, என்பதை ஆதாரங்களுடன் விசாரித்து, நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக இவ்விபத்து நிகழ்ந்திருப்பின் அவர்களுக்கு உரிய தண்டனை கொடுப்பதுடன், துயருக்கு ஆளான குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் மருத்துவமனை உரிமையாளர்களும் நிர்வாகமும் தர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினால் மட்டுமே மக்கள் அச்சமின்றி மருத்துவ மனைகளை நாட முடியும். இதற்கான நாடு தழுவிய சட்டத்தை மத்திய மருத்துவ, சுகாதாரத்துறை உடனே இயற்ற வேண்டும்.
09-ஜன-2021 11:29:22 IST
வரவேற்கப்படவேண்டிய உத்தரவு . கல்விச்சாலைகளுக்கு இல்லாத முக்கியத்துவம் திரை அரங்குகளுக்கு கொடுத்தல் நேர்மையற்ற செயல். உணவு விடுதிகள் , கல்விக்கூடங்கள் போன்ற பொது இடங்களில் சமூக இடைவெளி கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க இயலும் . அது கூட எவ்வளவு பயன் தரும் என்று கணிக்க முடியாத நிலையில் திரை அரங்குகளை முழு வீச்சில் இயங்க அனுமதிப்பது மீண்டும் நோய்த்தொற்றை அதிகரிக்க வைக்கும் . இவ்வளவு நாட்கள் கடுமையாக இரவு பகல் பாராமல் உழைத்த முன்னிலை வீரர்களின் பணிச்சுமையை இன்னும் அதிகரிக்க வைக்கும் செயல் மனிதாபிமானமற்றது .தமிழக அரசு தயங்காமல் மறுபரிசீலனை செய்து முன்னிருந்த உத்தரவையே கண்டிப்பாக கடைப்பிடிக்க திரைத் துறையினரின் ஒத்துழைப்பை பெற வேண்டும். திரைப்பட ரசிகர்களும் தங்களுக்குள்ள குடும்ப , சமூக உடல் நலம் கருதி திரையரங்குகளுக்கு போகாமல் இருந்து ஓராண்டு காலமாக நம்மை அச்சுறுத்தும் கொடு நோய் இன்னும் வீரியமடையாமல் தடுக்க அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.
08-ஜன-2021 21:34:34 IST
இவரைப்போன்ற நல்ல அதிகாரிகள் தான் இந்த நாட்டின் இன்றைய இன்றியமையாத தேவை. அனைத்து அதிகாரிகளும் இந்த மனோ பாவத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றினால், தானாகவே ஒவ்வொரு மாநிலத்திலும் காமராஜர் ஆட்சி மலரும். எல்லா அமைச்சர்களும், கடினமாக படித்து பயிற்சி பெற்று திறமையாகவும் நேர்மையாகவும் பணியாற்றும் இந்த அதிகாரிகளுக்கு பயந்து ஒழுங்காக ஆட்சி செய்வார்கள். அனைத்து தரப்பினரும் புகார் கொடுக்க தேவையில்லாத சூழலில் வாழ்வார்கள் .
08-ஜன-2021 16:04:35 IST
எத்தனை குறைகளிருப்பினும் நம் நாட்டின் பாராளுமன்ற நடை முறையை பின்பற்றினால் அமெரிக்காவிற்கும் அந்நாட்டு மக்களுக்கும் நல்லது. இப்போது உள்ள தேர்தல் முறையில் பல குறைபாடுகள் உள்ளன . வேட்பாளர் தேர்விலிருந்து , வாக்கு சீட்டு , வோட்டுப்பெட்டி , எண்ணிக்கையிலும் , வெற்றி தோல்வி அறிவிப்பில் என்று எல்லா கட்டங்களிலும் ஒரு தாமதமான செயல்பாடு தொழில்நுட்பம் நிறைந்த இந்த நவீன உலகுக்கு சிறிதும் பொருத்தமற்றதாக உள்ளது. மின்னணு வாக்கு இயந்திரங்களை பயன்படுத்தி முடிவுகளை உடனுக்குடன் அறிவிப்பதோடன்றி வாக்கு அளிக்கும் அத்தனை அம்சங்களிலும் பாராளுமன்ற ஜன நாயக முறைகளை நடைமுறைப்படுத்தினால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் .
08-ஜன-2021 15:27:47 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.