இதற்க்கு பெயர்தான் மாற்றாந்தாய் மனப்பான்மை. காஜா புயல் ஓகிக்கி புயல் வெள்ளம் இன்னு ம்பல சீரழிவுகளை தமிழகம் சிக்கி தவித்தபோது திரும்பி பார்க்காத பிரதமர் புயல் அடித்து அடுத்தநாளே ஓடுகிறார் என்றால் இந்த பாசத்தை என்னவென்று சொல்வது.சொந்த மண்ணின் மீது அன்பு இருக்கட்டும் அனைத்தும் செய்யட்டும் அது நன்றி கடன் ஆனால் வேறு மாநிலங்களை கைவிட்டு சோனா மாநிலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது இந்திய ஒருமை பாட்டிற்கு சரியா?என்ற கேள்வி நடுநிலையாளர்கள் மனதில் எழுகிறது.
19-மே-2021 12:25:07 IST
உலகில் இரண்டு பாலினம் ஆன் பெண் மற்றது மூன்றாம் பாலினம். சீமானுக்கு அரசியல் தெரியும் ஆனால் அதை எப்படி நடத்த வேண்டும் என்கிற இங்கிதம் தெரியவில்லை.முதலில் சீமான் தன வாய் கொழுப்பை அடக்க வேண்டும் மற்ற அரசியல் வாதிகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் .சுற்றிலும் கழுசடை வாய் திறந்தாள் சாக்கடை அப்புறம் இதை எப்படி மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்? தமிழன் ஊழல் வாந்தியையும் மன்னித்து வாக்களிப்பான் ஆனால் அநாகரீக அரசியல் எப்போதும் அனுமதிக்க மாட்டான்.இரண்டாயிரம் மூன்றாயிரம் வோட்டு வாங்கி மூன்றாம் இடம் வாங்குவது கடைசி இடம் வாங்குவதும் எல்லாம் ஒன்றுதான்.சீமானுக்கெல்லாம் தமிழ் நாட்டில் இடமில்லை சீமான் அரசியல் அந்த அளவிற்கு தரமில்லை.சீமான் கொள்கைக்கும் அரசியலுக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லை
03-மே-2021 12:03:01 IST
விவசாயிகள் அந்தளவிற்கு இரக்கமில்லாதவர்கள் இல்லை. உங்களையெல்லாம் போன்று சுயநலமாய் அவர்கள் நினைத்திருந்தால் உணவு உற்பத்தியையே நிறுத்தி இருக்க முடியும் ஆனால் அப்படி செய்யாமல் போராடுபவர்கள் பிரிந்து விவசாயம் செய்ய கிளம்பி தொடங்கியும் விட்டார்கள் என்பதுதான் செய்தி.
22-ஏப்-2021 14:00:38 IST
மோடியின் படத்தை கூட விளம்பரம் செய்யாமல் பிரச்சாரம் செய்த என் டி ஏ கூட்டணி மோடியின் இந்த வரவை மனப்பூர்வமாக ஏற்று கொண்டு மோடியை வரவேற்றிருப்பார்கள் என்றுதான் நாம் நம்புவோம். இப்போதெல்லாம் மோடி தேர்தல் நடக்கும் எந்த மானித்திற்கு சென்றாலும் வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லுகிறார் அந்த வளர்ச்சியை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு மன்னர்கள் வழங்கியதை போல் ஆயிரம் பொற்காசுகள் வழங்கலாம்.மோடியின் இன்றைய வரவு மோடி வந்தார் நின்றார் சென்றார் என்கிற நிலையில்தான் இருந்தது.
30-மார்ச்-2021 21:34:14 IST
இந்த தீர்மானத்தில் புறக்கணிப்பதும் எதிர்த்து வாக்களிப்பதும் ஒன்றுதான். இலங்கை அரசின் மீது சுமத்த பட்டிருப்பது கொலை குற்றம் தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்ற மனிதாபமற்ற செயல் இதை கண்டித்து இந்திய தமிழர்கள் ஐ நா வரை சென்று நீதி கேட்டுள்ளார்கள்.ஆனால் இப்போது இலங்கை செய்தது படு கொலைதான் என்று ஆறு நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. உண்மையிலேயே தமிழர்களின் உயிர் மீது அக்கறை இருந்திருந்தால் இந்தியாவும் ஆதரித்திருக்க வேண்டும் மாறாக புறக்கணிப்பு செய்து இந்திய தமிழர்கள் மட்டுமல்ல உலக தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதிருக்கிறார்கள்.
இதுதான் மனிதாபிமானத்திற்கு இந்தியா காட்டும் ஆதரவு காரமா? நல்லவர்கள் இதை நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள். தீர்மானத்தை ஆதரித்து மனிதாபத்திற்கு போராடும் அந்த 22 நாட்டிற்கும் தமிழர்களின் இதயம் கனிந்த நன்றி.
23-மார்ச்-2021 17:37:57 IST
நீங்கள் தமிழர் என்று அறிமுகம் செய்து கொள்ளும் அளவிற்குத்தான் உங்கள் வளர்ச்சி என்றால் மக்கள் உங்களை நம்பவில்லை என்று அர்த்தம்.வானதி சொல்வதை பார்த்தல் உங்களுக்குள் ஏதாவது புரிந்துணர்வு இருக்குமோ என்று என்ன தோன்றுகிறது.நீங்கள் மீண்டும் சினிமாவிற்குத்தான் போவீர்கள் என்றும் கோவை தெற்கில் தாமரைதான் மலரும் என்கிறார்.உங்களை நினைத்து பரிதாபப்படுகிறேன் கமல்.கமல் கமலாவிடம் தோற்கும் நிலை வந்துவிடுமோ என்று நினைக்க தோன்றுகிறது.நீங்கள் தமிழர் மட்டுமல்ல சேர்ந்து வாழ்வதில் Living together ல் பக்கா இந்தியர்.
16-மார்ச்-2021 20:36:22 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.