Jey Kay - jeykay@email.com : கருத்துக்கள் ( 985 )
Jey Kay - jeykay@email.com
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
9
2019
பொது 22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு
தணிக்கை என்ற பெயரில் மரியாதையாக எழுதும் கருத்துக்களை கூட வெட்டுவதால் தான் மலரில் எழுதுவதை குறைத்துக்கொண்டு பிற ஊடகத்திற்கு மாறிவிட்டேன். மலரின் தணிக்கை குழு சற்று சிந்தித்து செயல்படுவது வடியையாளர்களை தக்கவைத்துக்கொள்வதற்கு உதவும். இங்கு வரும் அநேக கருத்துகளில் தரமற்ற கருத்துகளே அதிகம், அத்தகைய கருத்துக்கள் தான் மலர் ஆதரிக்கிறது போலும். இதை போவதில்லை/ வெளியிடவேண்டிய அவசியமில்லை, இது கத்திரி போடும் மலர் தனிக்கை குழுவுக்கான பதிலே.   18:17:20 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
9
2019
பொது 22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு
. 2030 முதல் பெட்ரோல் டீசல் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படமாட்டாது, இணையத்தில் தேடிப்பார்க்கவும். 2030ஆம் ஆண்டிற்குள் அணைத்து மகிழுந்துகளும் மின்சாரத்தில் இயங்கும் வண்ணம் இருக்குமாறு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியை ஒதுக்கிவைத்து பார்த்தால் உண்மையான காரணம் புரியும்.   17:34:40 IST
Rate this:
10 members
0 members
18 members
Share this Comment

செப்டம்பர்
9
2019
பொது 22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு
மகிழுந்து விற்பனை சரிய சில காரணங்கள் உண்டு, உலகம் எண்ணெயை விட்டு விலகுகிறது. அடுத்து EV (electric vehicle) சந்தையை பிடிக்கும், அரசு மானியம் வழங்கியும் அதன் விலை இப்போது அதிகம், ஆனால் பிற்காலத்தில் விலை வாங்குவதற்கு ஏற்ற விலையில் வரும். 2030 பிறகு இந்தியாவில் பெட்ரோல் டீசல் மகிழுந்துகள் வழக்கில் இருக்காது. காற்று மாசு காரணமாக ஏப்ரல் 2020 முதல் BS VI இணக்கம் கொண்ட வாகனங்களை மட்டுமே பயன் படுத்த வேண்டும். தற்போதுள்ள BS IV இணக்கமான வாகனங்களை மேம்படுத்த சில லட்சங்கள் செலவு செய்ய வேண்டும். இதனால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கையில் இருக்கும் இருப்பை கழிக்க பார்கின்றதாலும் விலை குறைந்துள்ளது. BS VI இணக்க வாகனங்களின் எரிபொருளின் விலை அதிகம். மாநகரங்களில் அரசு மெட்ரோ சேவையை விரிவு படுத்துகிறது, சரியான பொது போக்குவரத்து கிடைக்கும் போது மக்கள் மகிழுந்தை நாடிப்போவது குறையும். Uber ola போன்ற share ride பெருகியதும் ஒரு காரணம்.   16:22:33 IST
Rate this:
5 members
0 members
19 members
Share this Comment

செப்டம்பர்
8
2019
பொது விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது
உழைக்க மனம் இல்லாமல் சோம்பேறியாக இருக்கும் அவனே பொறுப்பு. வேண்டுமானால் நீர் அவர்களுக்கு சோறு போடலாம். அந்த உதவாக்கரை சோசயலிச சிந்தனைகளை இந்தியா என்றோ கைகழுவி இருந்தாலும் இன்னும் சிலர் அதை பிடித்துக்கொண்டு அழுது புலம்பி கொண்டிருக்கின்றனர்.   16:48:44 IST
Rate this:
1 members
0 members
31 members
Share this Comment

செப்டம்பர்
3
2019
உலகம் போரை பாக்., துவக்காது இம்ரான்கான் அறிவிப்பு
இந்த செய்தி குறித்து எவரும் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. காரணம், ஆர்டிகிள் 370ஐ இந்தியா அப்புறப்படுத்தியதை தொடர்ந்து பாகிஸ்தான் பல உலக நாடுகளின் துணையை நாடி வருகிறது, ஆனால் சீனா தவிர எந்த ஒரு நாடும் பாகிஸ்தானுக்கு செவி சாய்க்கவில்லை. எது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என்றோ, இந்தியா பாகிஸ்தான் இருவரும் தமக்குள்ள பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும் என்றோ, நிலைமையை உன்னிப்பாக கூர்ந்து கவனித்து வருகிறோம் என்றோ தான் அணைத்து உலக நாடுகளும் தமக்குள்ள பேசி வைத்தார் போல் ஒரே கருத்தை கூறிவருகின்றன. இந்த நிலையில் இந்தியாவை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும் என்ற நோக்கில் பாகிஸ்தான் சில நாட்களுக்கு முன் காஸ்னவி ஏவுகணையை சோதனை செய்தது, பதிலுக்கு இந்தியாவும் ஏவுகணை சோதனை செய்யும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்தது. அவ்வாறு இந்தியா ஏவுகணை சோதனை செய்யும் பட்சத்தில் ஆசிய கண்டத்தில் பதட்டம் நிலவுவதை போல் ஒரு மாயையை பாகிஸ்தான் தோற்றுவிக்க எண்ணியது, அதன் ஒருபகுதியை இந்த போர் துவங்க மாட்டோம் என்ற ஒப்பாரியும் கூட, ஆனால் தனக்கு பக்கத்தில் இருப்பது புலி அல்ல பூனை தான் என்று இந்தியா நன்றாக உணர்ந்தமையால் பாகிஸ்தானின் சிறுபிள்ளை தனமான செயல்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்காமல் தனது காரியத்தில் கண்ணாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் சோதனை செய்த காஸ்னவி ஏவுகணை என்பது சீன தயாரிப்பான அதன் காலம் சென்ற M 11 ஏவுகணையை ஆகும் (1987ஆம் ஆண்டு மாடல்), அதற்க்கு பச்சை வண்ணமிட்டு அதை காஸ்னவி ஏவுகணை என்று பாகிஸ்தான் அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிடம் அதைவிடவும் கைதேர்ந்த பல ஏவுகணைகள் உள்ளது.   07:28:07 IST
Rate this:
0 members
0 members
35 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2019
அரசியல் பகடையாக்குது பாக்., தெறிக்குது திமுக
இன்று முதல் இவர் தமிழக இம்ரான் கான் என்று அன்புடன் அழைக்கப்படுவார். வாக்கு வங்கி படுத்தும் பாடு. இரண்டு பேரும் புமிக்கு பாரம்   12:48:57 IST
Rate this:
0 members
0 members
53 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2019
பொது சந்திராயன் 2 எடுத்த பூமி புகைப்படங்கள் வெளியீடு
நமது அறிவுக்கு ஏற்றவகையில் மட்டுமே ஒரு விடயத்தை காண முடியும்.   16:51:18 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
17
2019
உலகம் பாக்.,கில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது கைது
இந்த கைதின்பின்னணி பின்வருமாறு, தீவிரவாதத்திற்கு பணம் வணங்குவதால் கடந்த வருடம் பாகிஸ்தானை கண்காணிப்பு பட்டியலில் வைத்த FATF 27 பரிந்துரைகளை அறிவுறுத்தியது, கடந்த மாதம் கூடிய FATF கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 27லில் இரண்டை மட்டுமே பாகிஸ்தான் செயல்படுத்தி இருந்ததாக அறிவிக்கப்பட்டது. விளைவு பாகிஸ்தான் கண்காணிப்பு பட்டியலில் தொடர்கிறது. ஏற்கனவே இருக்கும் நிதி நெருக்கடியில் எந்த பட்டியலில் தொடர்வதால் மூலம் பாகிஸ்தானுக்கு ஆண்டொன்றுக்கு 1000 கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படுகிறது. கடந்த மாதம் FATF சுட்டிக்காட்டியதில் கவனிக்கப்படவேண்டியது பின்வருமாறு, தம்மை (FATF) ஏமாற்றும் விதமாக தீவிரவாத ஒழிப்பு சட்டத்தின் கீழ் சயீதை கைது செய்யாமல் பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் மட்டுமே சயீதை பாகிஸ்தான் கைது செய்தது, பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை 60 நாட்களுக்கு மேல் காவலில் வைக்க முடியாது. மேலும் பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் சயீதின் சொத்துக்களை முடக்கவோ, ஆயுதத்தை அணுக மறுப்பாதையோ, வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதையோ தடுக்கமுடியாது, ஆதலால் தான் அறிவுறுத்தியபடி பாகிஸ்தான் நடக்க தவறியது என்று FATF கடந்த மாதம் தெரிவித்தது. சயீத் நடத்தி வந்த மதராஸாக்களை பாகிஸ்தான் மூடாமல் தான் எடுத்து நடத்தி வருகிறது, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் அத்தகைய மதரஸாக்களுக்கு 30 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியது, இதர மாநிலங்களுடன் சேர்த்து 105 கோடி ரூபாயை பாகிஸ்தான் சயீதின் மதரஸாக்களுக்கு ஒதுக்கியுள்ளது. இதற்கும் பாகிஸ்தான் விளக்கமளிக்குமாறு FATF கோரியுள்ளது. கருப்பு பட்டியலில் சேரவிருந்த பாகிஸ்தானை சீனா, துருக்கி மற்றும் சாகீர் நாயகிற்க்கு அடைக்கலம் கொடுத்துவரும் மலேசியாவின் துணையுடன் FATF முயற்சியை பாகிஸ்தான் முறியடித்தது. அக்டோபர் மாதம் வரையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்றால் பாகிஸ்தானின் நிலை மேலும் சரிவடையும், ஆதலால் இம்முறை சயீதை பாகிஸ்தான் மீண்டும் கைதுசெய்துள்ளது. தீவிரவாதம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் இம்முறை கைது செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அதை வரவேற்பதில் அர்த்தமுண்டு, இல்லை என்றால் இது ஒரு வழக்கமான கண்துடைப்பு நாடகம் மட்டுமே.   14:40:30 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

ஜூலை
13
2019
உலகம் இந்தியாவுக்கு பாக்., பூச்சாண்டி
'பாகிஸ்தான் வான்பகுதி திறக்கப்படாத நிலை யில், விமானங்கள் மாற்றுப் பாதையில் பறப்பதால், 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு, 430 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகியுள்ளது' என்பது ok அதே வேளையில் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை உபயோகிக்காததினால் (overflying charges) பாகிஸ்தானுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை பற்றிய விவரத்தையும் சேர்த்து வெளியிட்டிருந்தால், இந்தியாவின் தான்தோன்றித்தனத்தினால் இந்த இழப்பு என்று இங்கு வந்து உளறும் கிணற்று தவளைகளுக்கு உறைந்திருக்கும். அதாவது வெளிநாட்டு விமானங்கள் ஒரு நாட்டின் வான்வெளியை பயன்படுத்தி பறக்கையில் சம்பந்தப்பட்ட நாட்டிற்கு கட்டணம் அளிக்கவேண்டும் என்பதே OVERFLYING CHARGES. நமக்கு 430 கோடி விரயம் என்றால் பாகிஸ்தானுக்கு overflying charges கிடைக்காததன் மூலம் ஏற்பட்ட வருவாய் இழப்பு 688 கோடி. நமக்கு 430 கோடி என்பது பெரிய தொகை அல்ல ஆனால் பாகிஸ்தான் இன்று இருக்கும் நிலைமையில் 688 கோடி என்பது அவர்களுக்கு மிகவும் பெரிய தொகை. இருப்பினும் நமது போர் விமானங்களை எல்லையில் இருந்து அப்புறப்படுத்த கோருவது சிறுபிள்ளைத்தனம். இதற்கும் ஆதரவாக கொடிபிடிக்கம் ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கும். பாகிஸ்தான் தனது வான் எல்லையை மூடியே வைத்திருக்கட்டும், அதனால் நம்மை விட அவர்களுக்கே அதிகம்.   00:57:42 IST
Rate this:
2 members
0 members
38 members
Share this Comment

ஜூன்
13
2019
அரசியல் பிரியங்கா முதல்வர் வேட்பாளர் காங்., விருப்பம்
கடந்த பாராளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வியது போதாது என்றும், கம்பெனியை குடும்ப கட்டுப்பாட்டிலிருந்து காப்பாற்ற மேலும் வச்சு செய்தால் தான் முடியும் என்று காங்கிரஸ்காரர்கள் முடிவெடுத்து விட்டனர் போலும்.   16:10:12 IST
Rate this:
4 members
0 members
24 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X