கும்பாபிஷேகத்திற்கு முதல்நாள் சிலையை வைக்கும் முன்பாக அவற்றில் வெள்ளி, செம்பு போன்ற நவரத்தினங்கள் என்று சொல்லப்படும் தகடுகள், சிலர் தங்க நாணயங்களை வைப்பது வழக்கம். அன்று மட்டும் அனைவரும் கருவறைக்குள் செல்வர் என்பது கும்பாபிஷேகத்தை பார்த்த அனைவருக்கும் தெரியும். இதுதான் அனைத்து கோவில்களிலும் நடைபெறுகிறது. ஆனால் இங்குமட்டும் நுழைந்ததை பிரச்சினையாக்குகின்றனர்
02-பிப்-2023 16:52:05 IST
இதுதான் நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையா சார்? அதிகாரத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் தமக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களை இழிவாக பேசுவது சாதாரணமாக நடைபெறுகிறது. கல்வி நிறுவனங்களிலேயே ஆசிரியர்களை மோசமாக திட்டுகின்றனர். அதிகாரிகள் தமக்கு கீழே உள்ளவர்களை திட்டுகின்றனர். இப்படிப்பட்ட சூழல் இருப்பதால்தான் இவர் கல்லை வீசியுள்ளார். இதுபோன்ற செயல்களை உண்மையிலேயே கண்டிக்க வேண்டுமென்றால் மற்றவர்களை சமமில்லாமல் நடத்தும் ஆணவப்போக்குடைய அனைவரையும் கண்டிக்க வேண்டும். ஆணவ புத்தியை கண்டிக்க வேண்டும். சிலர் சாதாரண விவாதங்களிலேயே அவதூறாக, வெறுப்பை உமிழ்கின்றனர்.
25-ஜன-2023 12:26:06 IST
காமராஜர் பெயரில் கட்சி நடத்திக்கொண்டு காமராஜருக்கு துரோகம் செய்ப்பவர் இவர். அரசியல் பேசமாட்டேன் என்கிறார் தற்போது அடுத்த புராஜெக்ட் வந்துவிட்டதுபோல. புரோக்கர் வேலைக்கு வந்துவிட்டார். அழகு தமிழில் இவர் பேசியதை கண்டு இவரை மதித்தவர்களில் நானும் ஒருவன்.
23-ஜன-2023 11:39:55 IST
ஆளுநர் கூறியதற்கு பாண்டிச்சேரி ஆளுநர் எதற்காக வக்காலத்து வாங்கினார்?
தமிழ்நாடு என்ற வார்த்தையை பொங்கல் அழைப்பிதழில் ஆளுநர் தவிர்த்தார் என செய்தி வெளியானது.
இப்போது இவ்வளவு நாள் கழித்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என கூறுகிறார்.
18-ஜன-2023 16:52:25 IST
சர்ச்சைக்குரிய வாசகங்கள் என நீங்கள் எப்படி முடிவுக்கு வந்தீர்கள்?
தொடர்ந்து ஆளுநர்தான் மோதல்போக்கை கடைபிடிக்கிறார்? ஆளுநர் மளிகை விவகாரங்களை தமிழக பாஜக தலைவர்கள் சாதாரணமாக பேசுகின்றனர். அந்த தகவல்கள் அவர்களுக்கு எப்படி செல்கிறது?
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தில் நியமனம் செய்யப்பட ஒருவர் அதிகாரமுடையவராக கருதப்படுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
12-ஜன-2023 12:23:03 IST
கல்விக் கட்டணம் தொடர்ந்து உயர்வு, அனைத்தும் தனியார்மயம், கலாச்சார சீரழிவு, போதைப்பழக்கங்கள் அதிகரிப்பு, குற்றங்கள் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, விவசாய நிலங்கள் அழிப்பு - இவையெல்லாம் பற்றி மக்கள் பேசக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு தேவையில்லாத விஷயங்களை பேசி வருகின்றனர்
11-ஜன-2023 10:37:24 IST
ஒன்றிய அரசு என்று சொல்வதோ, தமிழா அரசாங்கம் என்று சொல்வதோ இரண்டுமே தவறல்ல.
ஒன்றிய அரசு என்று கூறியபோது அப்படியானால் தமிழக அரசை பஞ்சாயத்து என்று கூறலாமா என்று எதற்காக பேசினார்கள்...
திமுகவும் பாஜகவும் வேண்டுமென்றே வெறும் வார்த்தைகளை வைத்துக்கொண்டு முக்கியத்துவமில்லாத பிரச்சனைகளை பெரிதாக்குகின்றனர்.
ஆனால் இருவருமே ஒரே கொள்கையை அமல்படுத்துகின்றனர்.
அரசியலாக்கக்கூடாது என்றால் என்ன? அரசியல் என்றால் கேட்ட விஷயமா சார்? அரசியல்வாதிகள் பேசினாலே அது அரசியல்தான்
10-ஜன-2023 15:57:29 IST
தமிழக ஆளுநர் என்பது தவறான வார்த்தையல்ல. அது ஏற்கனவே உள்ளதுதான். தமிழக முதல்வர் என்பதும் புழக்கத்தில் உள்ளதுதான்
தமிழ்நாடு என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்தாரா இல்லையா என்பது தெரியவில்லை. அவர் வேண்டுமென்றே தவிர்த்தார் என்பதுபோல் செய்தி வெளியிடுவது ஆளுநரை அவமதிக்கும் செயலே
10-ஜன-2023 11:36:38 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.