Arul : கருத்துக்கள் ( 35 )
Arul
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
17
2021
உலகம் நான் எடுத்த முடிவு சரியானதே அமெரிக்க அதிபர் திட்டவட்டம்
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த பித்தலாட்டம்? பாவம் அப்பாவி ஆப்கன் மக்கள். தயாரிக்கும் ஆயுதங்கள் எல்லாம் வீண்போகாமல் விற்கப்பட வேண்டும். விற்கப்பட வேண்டும், விற்கப்பட்டால்தான் அமெரிக்காவிற்கு வருமானம் வரும் என்பதால், ஏதாவது இரு நாடுகளுக்கிடையே போரை தூண்டிவிடுவது. பின்பு, போரை நிறுத்துவதற்கு உதவி செய்வது போல நடித்து, ஏதேனும் ஒரு நாட்டிற்கு ஆதரவாக போரில் சண்டையிட்டு, ஆயுதங்களை விற்பது, பயன்படுத்துவது. இது ஒருவிதமான வியாபாரம். இரண்டாவது, ஒரு நாட்டிற்குள், அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக பிரிவினை வாதிகளை ஏற்படுத்தி , அவர்களை ஒன்று சேர்த்து, அவர்களை அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக போரிட வைப்பது. அவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து போரை தூண்டிவிடுவது. இதுதான் ஜி.எட்டு நாடுகளின் தலையாய வேலை. அதிலும் அமெரிக்காவின் முழு நேர வேலையே இதுதான். இதில் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான். தீவிரவாதிகளை உருவாக்குவதும், அழிப்பதும் அமெரிக்கா மற்றும் இதர வல்லரசு நாடுகள்தான். இதுபோன்ற கொத்தடிமைத்தனத்திற்கு அவர்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கும் நாடுகள், அப்பாவி ஏழை அல்லது கச்சா எண்ணெய் வளம் கொண்ட நாடுகள்தான். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, ஓமன் போன்ற சிறிய நாடுகள்தான். அக்கறை இருந்தால் இவர்கள் பெரிய நாடுகளில் வேலைய காட்ட வேண்டியதானே? பெரிய நாடுகளிடம் வாலாட்டினால், வாங்கி கட்டிக்கொள்ள வேண்டுமே. பாவம் அப்பாவி மக்கள்.   16:03:22 IST
Rate this:
1 members
0 members
5 members

மார்ச்
17
2021
சினிமா லோகேஷ் கனகராஜ் பிறந்த நாள் : முன்னணி இயக்குனர்கள் நேரில் வாழ்த்து...
பிறந்தநாள் வாழ்த்துக்கள். அதிக நாட்கள் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை, இனி பணியாற்றப்போகும் படங்களில், கதை மற்றும் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, குறைந்த செலவில்,விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும், நல்ல வெற்றிப்படங்களை கொடுத்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.   11:53:12 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
26
2020
அரசியல் மோடி உருவ பொம்மை எரிப்பு காங்.கை விளாசிய நட்டா
மற்ற கட்சியினரை தாங்கள் மதித்திருக்கிறீர்களா? காங்கிரஸ் தலைவரை வெளிநாட்டுக்காரி என்று விமர்சிப்பதும், ராகுல் காந்தியை பப்பு என்று ஏளனம் செய்வதும், தங்கள் கட்சியின் செயல்தானே   10:32:24 IST
Rate this:
8 members
1 members
5 members

அக்டோபர்
26
2020
அரசியல் உலக நாடுகளின் எரிசக்தி தேவையை இந்தியா பூர்த்தி செய்யும்
தற்போதெல்லாம் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், எதிர்கட்சியோ, பொதுமக்களோ எந்த குறைகளையும் எடுத்து கூறவோ, விமர்சனம் செய்யவோ முடிவதில்லை. ஏனென்றால் அதை ஏற்றுக்கொள்ளும் எண்ணம் எவரிடமும் இல்லை. அரசாங்கம் மட்டுமல்ல, தனி மனிதரும் அப்படி மாறிவிட்டார்கள். ஒருவன் தனது நண்பன் செய்யும் தவறை சுட்டிக்காட்டினாலோ, நல்லதை எடுத்துக்கூறினாலோ, அன்றிலிருந்து அவனை எதிரிபோல பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அல்லது சண்டை வருகிறது. சிலசமயம் கொலையிலும் முடிகிறது. இதேநிலைதான் அரசியலிலும் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் யாரும் இல்லை. "உள்ளூர்காரனுக்கு பெட்ரோல் 90 ரூபாய். வெளிநாட்டுகாரனுக்கு பெட்ரோல் 30 ரூபாய்" என்று நடப்பை சொன்னால், முதலில் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். ஏண்டா தவறு செய்கிறாய் என்று கேட்டால், அதை கேட்கும் அளவுக்கு நீ யோக்கியனா என்று எதிர் கேள்வி கேட்கும் காலம். அல்லது செய்ததை நியாயப்படுத்தும் காலம் இது. ஒவ்வொரு கட்சியும் தற்போது ஐ.டி டீம் வைத்திருக்கிறார்கள். மற்ற கட்சியினர் விமர்சனம் செய்தால், உடனுக்குடன் பதில் தருவதற்கும், சமாளிப்பதற்கும், சிறந்த பேச்சாளர்களையும் வைத்திருக்கிறார்கள் ஒவ்வொரு கட்சிகளிலும். எந்த கட்சி ஆட்சி செய்தாலும், யார் எது கேட்டாலும், பேசியே சமாளித்துவிடுவார்கள். அதுதான் தற்போது நடக்கிறது.   10:27:44 IST
Rate this:
8 members
0 members
7 members

செப்டம்பர்
16
2020
சினிமா மெக்கானிக் போஸ்டரை காப்பியடித்த கமல்ஹாசன் 232...
இதிலென்ன காப்பியை கண்டுபிடித்துவிட்டீர்கள்? அது துப்பாக்கியின் உருவம். இது துப்பாக்கியால் ஆன மனித உருவம். இதிலென்ன காப்பி இருக்கிறது?   09:37:49 IST
Rate this:
3 members
0 members
4 members

மார்ச்
14
2020
பொது என் கருத்தை கொண்டுபோய் சேர்த்ததற்கு நன்றி ரஜினி
ரஜினிகாந்த் வந்து, தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவரோ, மாற்றம் வரட்டும் அதன்பின் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்கிறார்.   14:48:59 IST
Rate this:
6 members
1 members
5 members

மார்ச்
13
2020
பொது 7 மாதங்களுக்கு பின் பரூக் அப்துல்லா விடுதலை
இவ்ளோ நாளா ரிலீஸ் பண்ணாம, கொரோனா ருத்ரதாண்டவம் ஆடிட்டு இருக்கும் போது ரிலீஸ் பண்றங்கண்னா...எங்கயோ இடிக்கிதே. கற்பழிச்சு கொலை செய்ற சாதாரண ஆளுங்களுக்கே தண்டனை நிறைவேத்த முடியல. கருணை மனு போட்டு தப்பிச்சுக்குறாங்க. அப்படி இருக்கும்போது அரசியல்வாதிகளுக்கு மட்டும் தண்டனை கிடைக்கவா போகுது உள்ள இருந்தா எப்படியும் தப்பிச்சுருவாங்கன்னு , கொரோனா வந்துருக்குற நேரம் பாத்து வெளில விட்ருக்காங்க.   10:10:31 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
6
2020
கோர்ட் தண்டனையை தாமதப்படுத்த முயற்சி நிர்பயா குற்றவாளி மீண்டும் மனு
நீங்க சொல்றது சரிதான் . ஆனால் , அந்த அதிகாரிகளும் எத்தனை மனு போட்டு காலம் கடத்துவார்களோ.   10:54:51 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
3
2020
சம்பவம் மீன் பிரியர்களை மிரட்டும் பார்மலின் ரசாயனத்தால் புற்றுநோய் அபாயம்
ஒவ்வொரு விஷயத்திலும், நன்மை தீமை இரண்டும் சேர்ந்தே இருக்கின்றன. எவை நல்லவை, எவை கெடுதல் என்பதை நமது அறிவு மற்றும் விழிப்புணர்வின் மூலம் பகுத்தறிந்து செயல்பட வேண்டும். ராமன்-ராவணன், அகிம்சை-தீவிரவாதம், தேசப்பற்று-தேசவிரோதம் இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஒருவன் நல்லதை விதைத்தால், இருவர் தீயதை விதைக்கிறார்கள். மீன் நல்லது என்று முன்னோரும், மருத்துவமும் சொன்னால், அதிலும் தீமையை புகுத்திவிட்டார்கள். கலப்படம் இல்லாத பொருளே இல்லை என்று சொல்லும் நிலை வந்துவிட்டது. பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுப்பது எவ்வளவு கடினமோ, அதே போன்ற நிலைக்கு ஒவ்வொரு பொருளையும் மாற்றிவிட்டார்கள். கோழிக்கறி ஆபத்து என்று மீன் பக்கம் வந்தால், இதிலும் ஆபத்தா? கோரோனோவிடம் மட்டுமல்ல ...இனி எதிலும் எச்சரிக்கையுடன் இருந்தால் நல்லது.   10:38:00 IST
Rate this:
0 members
0 members
4 members

பிப்ரவரி
16
2020
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
இவர்களிடம் விளக்கம் கேட்டதற்கு, அவர் கேட்காமலே இருந்திருக்கலாம். எப்போது பார்த்தாலும் ஆண்களைப்பற்றி குறை சொல்வதும், ஆண் சமுதாயத்தின்மீது மலிவான எண்ணங்களைக்கொண்டிருப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். தவறு இருபக்கமும் இருக்கலாம். அதற்காக ஒருவரை மட்டுமே குறைகூறுவது சரியா? ஏற்கனவே வெந்த புண்ணில், வேலை பாய்ச்சுவதைப்போல இருக்கிறது சகுந்தலா அம்மையாரின் ஆரம்ப வரிகள் சில. கடிதம் எழுதியவரின் வாழ்க்கை நிலை நிச்சயம் ஒருநாள் மாறும் என நம்புவோம். வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் மிகுந்த வலியைத் தருமளவிற்கு வந்து போகிறது சில சமயங்களில். குழந்தைகள் மீதான பாசத்தின் பொருட்டாவது அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள். எல்லாம் ஒரு நாள் மாறும். வாய்ப்பு வரும்போது இறுக பிடித்துக் கொள்ள்ளுங்கள். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கோபமும் வெறுப்பும் வெற்றியை தரப்போவதில்லை. என் வாழ்க்கையில் அதை உணர்ந்திருக்கிறேன். எந்த சோதனைகள், பிரச்சனைகள் வந்தாலும், விவேகத்துடனும் பொறுமையுடனும் கையாளுங்கள். விட்டுக்கொடுங்கள். உங்களை கோபப்படுத்தும் நிகழ்வுகளை மறக்கப்பழகுங்கள். வலிகளை ஏற்றுக்கொள்ளுங்கள். வழி பிறக்கும்.   12:53:47 IST
Rate this:
1 members
0 members
44 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X