Veejay : கருத்துக்கள் ( 4 )
Veejay
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
29
2022
சினிமா
ஆஹா தமிழ் ஓ டி டி தளத்தில் கிடைக்கிறது. சமீபத்தில் பார்த்ததில் மிகசிறந்த படம் இது. விதார்த் நடிப்பு மிக அருமை.   07:18:44 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
8
2021
அரசியல் கொரோனா நிவாரணம் ரூ.2,000 திட்டம் நாளை துவக்கிவைப்பு
அதென்ன அரிசி அட்டைக்கு???. மற்றவர்கள் எல்லாம் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? மற்றவர்கள் எல்லாம் பணக்காரர்கள் என்று இன்றைய முதல்வர் நினைக்கிறாரா??? இதுபோன்ற காலகட்டத்தில் அரசாங்கங்கள் எல்லோருக்கும் தான் உதவவேண்டும். இது தான் எடப்பாடி போன்ற ஒரு சாதாரண குடும்ப பின்புலத்தில் இருந்து ஒருவர் முதல்வர் ஆவதற்கும் அரசியல் குடும்ப வாரிசு ஒருவர் முதல்வர் ஆவதற்கும் உள்ள வித்தியாசம். அவர்கள் பணம் குடுத்த போது எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்கள். நீதிமன்றத்தில் அது ஒரு பிரச்சனையான பின்புதான் அரிசி அட்டைக்கு மட்டும் என்று சொன்னார்கள். அதற்குப்பின்பும், அரிசி அட்டையாக மாற்றிக்கொள்வதற்கு வாய்ப்பு கொடுத்தார்கள். ஆனால், இப்போதோ??? கொரோனா என்பது எல்லோரையும் தான் பாதித்து இருக்கிறது. அரிசி அட்டை வைத்திருப்பவர்களை மட்டும் அல்ல. குறைந்த வருவாய் கொண்டவர்களில் எத்தனை பேர் நாட்டுக்காக சிலிண்டர் மானியம், ரேஷன் பொருளை விட்டுக்கொடுத்தார்கள் என்பது தற்போதைய முதல்வருக்கு தெரியுமா??? அவர்கள் எல்லோரும் இந்த கொரோனா காலத்தில் கேனயனாகி விட்டார்கள். வளர்ந்த நாடுகளில் கூட இந்த காலகட்டத்தில் எல்லா மக்களுக்கும் தான் பண உதவி செய்தார்கள். அதை முதலில் இன்றைய முதல்வர் தெரிந்துகொள்ளவேண்டும்.   08:31:56 IST
Rate this:
3 members
0 members
8 members

மார்ச்
5
2021
பொது தரை மட்டத்திற்கு சென்ற வீடு 5 அடி உயரம் தூக்கி நிறுத்தம்
இன்னும் கொஞ்ச நாளில் கடலூர் மாவட்டத்தின் எல்லா வீடுகளுக்கும் இதே நிலை தான் இருக்கும். அந்த அளவுக்கு ஒவ்வொரு முறையும் சாலையின் உயரத்தை அதிகப்படுத்தி போடுகிறார்கள். சாலை போடும்போது பழைய சாலையின் உயரத்திற்கே தான் போடவேண்டும் என்று அரசும் சொல்லிவிட்டது, கோர்ட்டும் சொல்லிவிட்டது. ஆனால், இந்த மாவட்டத்து அரசியல்வாதிகள் அதை கேட்பதாக இல்லை. இன்னும் சில வருடங்களில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்தே நேராக சாலையில் இறங்கி நடக்கும் அளவுக்கு ஒவ்வொரு வருடமும் சாலையின் உயரத்தை ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். கேட்டாலும் பதில் அளிப்பதில்லை. மிரட்டல் மட்டுமே வரும். ம்ம்ம்ம்ம்.....   12:19:33 IST
Rate this:
1 members
1 members
14 members

மார்ச்
3
2021
சினிமா தமிழ்நாட்டில் மூடப்படும் தியேட்டர்கள் அதிகரிப்பு......
என்னென்னமோ காரணம் சொல்றாங்க. ஆனா, யாரும், குடும்பமா அனைத்து வயதினரும் பார்க்கற மாதிரி படம் எடுக்கணும்னு சொல்லல. இளைஞர்களை மட்டுமே நம்பி படம் எடுத்தா எப்படி ரொம்ப நாள் ஓடும். முதல் ரெண்டு அல்லது மூணு நாள் இளைஞர்கள் வருவாங்க. அப்புறம்???   11:06:49 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X