Chowkidar Senthilsigamani.T : கருத்துக்கள் ( 1235 )
Chowkidar Senthilsigamani.T
Advertisement
Advertisement
மார்ச்
20
2019
அரசியல் தி.மு.க., தேர்தல் அறிக்கை சாத்தியமில்லாத சத்தியங்கள்!
பொய்மூட்டையின் மறுபெயர் தான் திமுகவின் தேர்தல் அறிக்கைகள் .கடந்த காலத்தில் திமுக அறிக்கைகளை பார்த்தாலே தெரியும் .நடக்க முடியாதவற்றை சொல்லி ஊழலில் கொள்ளையடிப்பது அவர்களுக்கு கைவந்த கலை .அதற்க்கு ஆயிரம் சான்றுகள் தரலாம் .அதில் ஓன்று மட்டும் தற்போது - முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என மறைந்த கருணாநிதி 2006 சட்ட மன்ற தேர்தலில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் .ஆனால் நடந்தது என்ன ? காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு தனது இறுதித் தீர்ப்பை அறிவித்தது. ஆனால், அதை முறைப்படி அமலாக்க அதை முதலில் மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வேண்டும். அதில் வெளி யிடப்பட்டுவிட்டால், அதை நிறைவேற்ற வேண்டிய கடமை கர்நாடகத்துக்கு மேலும் அதிகமாகும். ஆனால், இதை கெஜட்டில் வெளியிடாமல் இழுத்தடித்து வந்தது மத்திய காங்கிரஸ் அரசு .இதை கெஜட்டில் ஏன் வெளியிடவில்லை ? என்று மத்திய அரசை அந்த நேரம் உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது. அப்போது மத்திய காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணி கட்சியாக பதவி சுகங்களை ஏகத்திற்கும் அனுபவித்து வந்த திமுக இது குறித்து துளி கூட கவலைப்படவேயில்லை . இது மறைந்த கருணாநிதியின் துரோகம் .மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட நீண்ட சட்ட போராட்டத்தின் மூலமாக நீதி மன்றம் மூலம் சாதித்தவர் காவேரித்தாய் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான். மேலும் இந்த செய்திக்கு தினமலர் வாசகர்கள் தனியே கருத்துக்களை போட தேவையில்லை - நம்ம தினமலர் செய்தி தமிழகத்தை புரட்டி போட்ட 1967-ம் ஆண்டு தேர்தல் மார் 30, 2016 தமிழக அரசியலை அடியோடு புரட்டிப் போட்ட, 'சுனாமி' தேர்தல் தான் 1967. வானத்தை பிளக்க வைக்க கோஷங்கள். 'ஐய்யய்யோ பொன்னம்மா அரிசி விலை என்னம்மா காமராஜ் அண்ணாச்சி கருப்பட்டி விலை என்னாச்சு கக்கா மாணவர்கள் என்ன கொக்கா' என, உணர்ச்சிமிகு கோஷத்தோடு வாக்குறுதிகள் வேறு.நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ரூபாய்க்கு ஒரு படி அரிசி உடனே கிடைக்கும். படிப்படியாக ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம். 'கடல்நீரை குடிநீராக்குவோம் கடல் பாசியில் இருந்து அல்வா தயாரிப்போம் தேங்காய் நாரில் இருந்து ரப்பர் தயாரிப்போம். ஆளுக்கு ஐந்து ஏக்கர் நிலம் தருவோம் சம்பளமின்றி அமைச்சர்கள் பணிபுரிவோம்.' இது நடக்கக் கூடியதா? நடந்ததா, நடத்தத்தான் முடியுமா?ஏமாந்த தமிழக அரசியலில், பொய்யான வாக்குறுதிகள், கவர்ச்சித் திட்டங்கள் அன்றே உருவாகி கோலோச்சியது. அது மட்டுமா 'பையிலே பணம் கையிலே அரிசி. கூலி உயர்வு கேட்டான் அத்தான் குண்டடி பட்டு செத்தான்'.பூவின்றி பொட்டின்றி தலைவிரி கோலமாய் கதறிய பெண்களின் சுவரொட்டிகள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன. 'காகிதப் பூ மணக்காது, காங்கிரசின் சோஷலிசம் இனிக்காது.' புரிந்து கொள்ள முடியாத மேடைப் பேச்சும், அடுக்குமொழியும் இடைவிடா உழைப்பும் காங்கிரசை வீழ்த்தியது. பேரறிஞர் அண்ணாதுரை, முதுபெரும் தலைவர் ராஜாஜி, இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய முன்னணித் தலைவர் ராமமூர்த்தி, அவருடன் வலதுசாரி கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம், கண்ணியமிகு காயிதேமில்லத், ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, மரியாதைக்குரிய சிலம்புச் செல்வரின் தமிழக கழகம் ஆகியவற்றின் ஆதரவு அனைத்தும், ஓங்கிய குரலாய் வீழ்த்தியது காங்கிரசை.அணைகளைக் கட்டி தொழிற்சாலைகளை அமைத்து, வேலை வாய்ப்புகளை பெருக்கி, கல்விக்கு முக்கியத்துவம் தந்து வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒரு மாநிலத்தை, ஆழிப் பேரலையாய் அப்படியே வாரி சுருட்டிவிட்ட தேர்தல் 1967. முதல் தேர்தல் முடிவே, காங்கிரஸ் வேட்பாளர் அனந்தநாயகி தோல்வி என வானொலிச் செய்தி தான்.தொடர்ந்து, அகில இந்திய காங்கிரசின் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜ் என உச்சத்தில் இருந்த பெரியவரின் தோல்வி, முதல்வர் பக்தவத்சலம் உட்பட எட்டு அமைச்சர்களின் தோல்வி.ஓட்டுச்சாவடிகளுக்கு முன் மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றிருந்த, 'எம்.ஜி.ஆர்., குண்டு காயம் காரணமாய் கட்டுப் போடப்பட்டிருந்த புகைப்பட போஸ்டர் முக்கிய காரணம்' என்றனர். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், அரிசி பஞ்சம் என்றனர் வலுவான எட்டு கட்சி கூட்டனி என்றனர். எது எப்படியோ ஆட்சியை பிடித்தது தி.மு.க., மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன் என்றார் பெருந்தலைவர்.ஆனால் முதல்வர் பக்தவத்சலம் மட்டும் ஓங்கிக் கூறினார். 'தமிழகத்தில் விஷக்கிருமி பரவிவிட்டது தமிழக மக்களை கடவுள் காப்பாற்றட்டும் நான்சங்கீதம் கேட்கப் போகிறேன் என்றார்.'அவர் சொல்லி, 50 ஆண்டுகள் ஆகி விட்டன அன்றைய தமிழகம், இன்றைய தமிழகம் ஆராய்ந்து பார்த்தால் நெஞ்சம் நடுங்குகிறது.தமிழக மக்கள் ஊழல் திமுகவை இனியும் நம்பி ஏமாற வேண்டாம் .   06:46:55 IST
Rate this:
2 members
0 members
22 members
Share this Comment

பிப்ரவரி
24
2019
அரசியல் ஜெ.,வை புகழும் மோடி அதிமுக அலுவலகத்தில் மோடி படம்
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா.மிக சரியாக சொல்லிவிட்டீர்கள் .சபாஷ் எல்லா குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்று நிரூபணமாகி விட்ட திமுகவை ஊழல் கட்சி என்று வெகுசிலர் சொல்லிக்கொண்டே இருந்தால் அவை நிஜமாகிவிடுமா என்ன? எல்லா நீதிபதிகளுமே திமுக அடிமைகளா? லாஜிக் கே இல்லையே? உண்மை தான் நீதிபதிகள் அடிமைகள் அல்ல.ஆனால் நீதிபதிகளை விட மறைந்த முதல்வர் கருணாநிதி செயல்கள் மிக்க சாதுரியமானது .நுண்மையானது .அதனால் தான் நீதிபதிகள் அது சர்க்காரியா தொடங்கி மார்க்கண்டேய கட்சு வரை தமிழக பகுத்தறிவு புலி ,தமிழின காவலர் , ,சீர்திருத்த செம்மல், சுயமரியாதை சிங்கம் ,ஊழலுக்கு நெருப்பு ,திராவிட போர்வாள், தன்மான தலைவர் ஆரிய எதிர்ப்பு ஆசான், இனமான வேங்கை கருணாநிதியின் ஊழல்களை நிரூபிக்க முடியாமல் கருணாநிதியிடம் தோற்றனர் ..இதோ ஒரு சாம்பிள் .மறைந்த கருணாநிதி ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு பணம் மூலமாக வாங்கிய வீட்டை நாற்பந்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படி காண்பித்தார் என்று தினமலர் வாசகர்கள் படித்தறியவும் . சர்க்காரியா கமிசன் நீதிபதியின் தலையை சுற்ற வைத்த சொத்து பரிமாற்றங்கள் செய்து நீதிமன்றங்கள் மெய்ஞான வழியால் அல்ல விஞ்ஞானப்பூர்வமான வழியால் ஊழல் என கூறும் அளவிற்கு செய்தவர் கருணாநிதி .அது பற்றிய தகவல்கள் ராசாத்தி என்று தற்போது அழைக்கப்படும் கருணாநிதியின் மூன்றாவது மனைவியான திருமதி தர்மா வாங்கிய வீடு தொடர்பான ஏழாவது குற்றச்சாட்டு குறித்து சர்க்காரியா விசாரணை ஆணைய அறிக்கையின் முதல் தொகுப்பில், பக்கம் 52 மற்றும் 53-லிருந்து ஒரு சில பகுதிகளை குறிப்பிட விரும்புகிறேன் கதவு எண். 9, முதல் குறுக்குத் தெரு, ராசா அண்ணாமலைபுரம், சென்னை என்ற முகவரியைக் கொண்ட வீட்டினை திருமதி இ.எல்.விசுவாசம் என்பவரிடமிருந்து 20.1.1969 அன்று ரூ.57,000 விலை கொடுத்து வாங்கியிருக்கிறார் திருமதி தர்மா.இந்த வீட்டை 21.8.1970 தேதியிட்ட ஆவண எண் 1523/70 மூலம் தன்னுடைய பாதுகாவலர் டி.கே.கபாலிக்கு விற்றுவிட்டார் திருமதி தர்மா. இந்த வீட்டை வாங்கிய டி.கே.கபாலி, விற்பனையாளரான ராசாத்தி என்கிற திருமதி தர்மாவுக்கு ரூ 14 ஆயிரத்தைத்தான் தன் முன்னால் கொடுத்தார் என்று பதிவாளர் மேற்படி ஆவணத்தில் குறிப்பினை எழுதியுள்ளார்.அதே நாளன்று, டி.கே.கபாலியின் பெயரில் பதிவு செய்யப்படாத குத்தகை ஆவணத்தை தயாரித்து இருக்கிறார் தர்மா. இதன்படி, மாதாந்திர வாடகை ரூ.300 என்கிற அடிப்படையில் அதே வீடு திருமதி தர்மாவிற்கு வாடகைக்கு விடப்படுகிறது. அதாவது, தான் விற்ற வீட்டிலேயே தர்மா தொடர்ந்து வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 30.1.1972 அன்று மேற்படி வீட்டை கபாலி, திருமதி சிவபாக்கியம் என்பவருக்கு ரூ 45 ஆயிரத்துக்கு விற்றுவிட்டார். அதாவது, ரூ 12,000 நஷ்டத்திற்கு விற்றுவிட்டார். திருமதி தர்மாவின் தாயார் தான் இந்த சிவபாக்கியம், அதாவது பாசக்கார கருணாநிதியின் மாமியார். இந்த விற்பனைக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணம் இருக்கிறது.20.3.1972 அன்று இதே வீட்டை தனது மகள் தர்மா மற்றும் பேத்தி கனிமொழி பெயரில் எழுதி வைத்துவிட்டார் சிவபாக்கியம். தனது காலத்திற்குப் பிறகு இந்த வீடு தனது மகளுக்கும், பேத்திக்கும் போய் சேரும் என்று மேற்படி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 13.3.1973 அன்று தாக்கல் செய்யப்பட்ட தன்னுடைய வருமான வரி அறிக்கையில், இந்த வீட்டை வாங்குவதற்காக கபாலியிடம் இருந்து ரூ 40,000 கடனாகப் பெற்றேன் என்றும், தன்னுடைய சொந்த சேமிப்பு ரூ 23,000 என்றும், மொத்தம் கையிருப்புத் தொகை ரூ 63,000 என்றும் திருமதி தர்மா குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின்படி, ரூ.57,000 கொடுத்து தான் வீடு வாங்கப்பட்டு இருக்கிறது. கடனாகப் பெற்றதற்கு 11.1.1970 தேதியிட்ட பதிவு செய்யப்படாத ஆவணம் ஆதாரமாக காட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஆவணத்தின்படி, கடனாக வாங்கப்பட்ட பணம், ரூ. 15,000, ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 என்று மூன்று தவணைகளில் திருப்பி செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு திருப்பி செலுத்தப்படவில்லையெனில், மேற்படி வீடு கபாலிக்கே விற்கப்பட வேண்டும். இது சம்பந்தமான வாக்குறுதி பத்திரம் தயாரிக்கப்பட்டு அதில் 21.8.1970 அன்று தர்மா கையெழுத்திட்டு இருக்கிறார். பின்னர், அந்த வாக்குறுதி சீட்டில் திருமதி தர்மாவிடமிருந்து ரூ 40 ஆயிரத்தை பெற்றுக் கொண்டுவிட்டேன் என்று எழுதியிருக்கிறார் கபாலி. இந்த வாக்குறுதி சீட்டு 23.3.1976 அன்று வருமான வரித் துறையினரால் கைப்பற்றப்பட்டது.11.4.1973 அன்று கபாலியால் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி அறிக்கையில், திருமதி தர்மாவிற்கு ரூ 40,000 கொடுப்பதற்காக சிவபாக்கியத்திடமிருந்து ரூ 20,000 கடனாகப் பெற்றேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார் கபாலி. அதாவது, சுருக்கமாக சொன்னால் ராசாத்திக்கு கடன் கொடுப்பதற்காக ராசாத்தியின் தாயாரிடமிருந்து பணம் வாங்கியதாக ராசாத்தியின் பாதுகாவலர் கபாலி குறிப்பிட்டு இருக்கிறார். நீதிபதி சர்க்காரியா மீது நம் தமிழக மக்கள் அனுதாபப்படத்தான் முடியும். கருணாநிதி மீதான 28 குற்றச்சாட்டுகளில் இது போன்ற குழப்பமான புள்ளி விவரங்களை அலசி ஆராய வேண்டிய நிலைமை நீதிபதிக்கு ஏற்பட்டது. இப்படி நீதி மன்றங்களை குழப்பி குட்டையில் மீன் பிடிப்பதில் மிக வல்லவர் கருணாநிதி.விளைவு இன்றுவரை ஊழல் வழக்கில் சிக்காமல் தப்பித்து விட்டார்.மறைந்தும் விட்டார் .இதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்   17:40:19 IST
Rate this:
5 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
24
2019
சம்பவம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு
பாரத் மாதாகீ ஜே பாரத் மாதாகீ ஜே என்று சொல்வது மத கோட்பாடுகளுக்கு எதிரானது - அதையும் மீறி சொன்னால் மதத்தை விட்டு விலக/விலக்க வேண்டும் என்று , படவா என்ற பத்வா தடைகளை விதித்தது யார் ? வந்தேமாதரம் சொல்வதுவும் மத கோட்பாடுகளுக்கு எதிரானது - அதையும் மீறி சொன்னால் மதத்தை விட்டு விலக/விலக்க வேண்டும் என,படவா என்ற பத்வா தடைகளை விதித்தது யார் ?   16:04:06 IST
Rate this:
1 members
0 members
54 members
Share this Comment

பிப்ரவரி
23
2019
அரசியல் சுலப வெற்றியை எதிர்பார்த்த தி.மு.க., கலக்கம்!
ஹிந்து கடவுள் மறுப்பு இயக்கங்களுடன் கைகோர்த்து மதவாத சக்திகளை எதிர்ப்பதாக வாதங்கள் செய்வது தான் மறைந்த கருணாநிதி பாதை .ஸ்டாலினும் அதை தான் செய்கிறார் . இது தான் திமுகவின் ஹிந்துவிரோத போக்கின் தொடக்க புள்ளி .ஆனால் திராவிட கட்சியின் தலைவராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த ஜெயலலிதா அவர்கள் ஹிந்து மரபுகளை /ஹிந்து சம்பிரதாயங்களை /ஹிந்து கலாச்சாரங்களை /ஹிந்து சன தனா தர்மங்களை /ஹிந்து தரிசனங்களை திராவிடத்தின் பெயரினால் கேவலங்கள் /ஏளனங்கள் /இளிவரல்கள் /நக்கல்கள் /நையாண்டிகள் /பகடிகள்//ஏச்சுக்கள்//அகடியம்/ பொல்லாங்கு/ எகத்தாளங்கள் /எள்ளல்கள் /நிந்தனைகள் ஒருநாளேனும் செய்தது கிடையவே கிடையாது .ஆனால் மறைந்த திராவிட கருணாநிதி வாழ்நாளெல்லாம் ஹிந்து விரோதியாக தன்னை காண்பித்து கொண்டு ஹிந்து கலாச்சாரங்களை சிறுமைப்படுத்தி ,சிறுபான்மையினரின் ஓட்டை மொத்தமாக அறுவடை செய்தார் .அதனை ஸ்டாலினும் தொடர்கிறார் என்பது தான் கொடுமை .   15:50:55 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
24
2019
அரசியல் ஜெ.,வை புகழும் மோடி அதிமுக அலுவலகத்தில் மோடி படம்
ஜெ.,வை புகழும் மோடி: அதிமுக அலுவலகத்தில் மோடி படம்.மிக நல்ல செய்தி தானே .ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்தபோதும் மோடிஜி மீது தனிப்பட்ட மதிப்பும் ,மரியாதையையும் வைத்திருந்தார். அதனால் தான் 2002 இல் மோடிஜி குஜராத் முதல்வராக பதவியற்றபோது ,மோடிஜியின் அழைப்பை ஏற்று ,அந்த பதவியேற்பு விழாவில் ஜெயலலிதா அவர்கள் கலந்து கொண்டார்.2008 ஆம் ஆண்டு ஜனவரி , துக்ளக் இதழின் 37வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்த மோடி.,போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதா அவர்களை சந்தித்து அரசியல் நிலவரம் பேசினார் .அதே போன்று ஜெயலலிதா அவர்கள் மூன்றாவது முறையாக 2011 மே மாதம் தமிழக முதல்வராக பதவியேற்றபோது குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் அந்த பதவியேற்பு விழாவில் கொண்டார் என்பது வரலாறு . உண்மையிலே திராவிட கொள்கைகள் என எதுவும் கிடையாது - ஹிந்து விரோத /துவேஷ கருத்துக்களும் /செயல்களாலும் நிரம்பியதே திராவிட மண் கலம். இருள் தெய்வங்கள் குடி கொள்ளும் கணங்களால் ஹிந்து தெய்வ நிந்தனைகள் செய்வதை லட்சியமாக கொண்டிருந்தவர் மறைந்த கருணாநிதி .ஆனாலும் திராவிட கட்சியின் தலைவராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த ஜெயலலிதா அவர்கள் ஹிந்து மரபுகளை /ஹிந்து சம்பிரதாயங்களை /ஹிந்து கலாச்சாரங்களை /ஹிந்து சன தனா தர்மங்களை /ஹிந்து தரிசனங்களை திராவிடத்தின் பெயரினால் கேவலங்கள் /ஏளனங்கள் /இளிவரல்கள் /நக்கல்கள் /நையாண்டிகள் /பகடிகள்//ஏச்சுக்கள்//அகடியம்/ பொல்லாங்கு/ எகத்தாளங்கள் /எள்ளல்கள் /நிந்தனைகள் ஒருநாளேனும் செய்தது கிடையவே கிடையாது .ஆனால் மறைந்த திராவிட கருணாநிதி வாழ்நாளெல்லாம் ஹிந்து விரோதியாக தன்னை காண்பித்து கொண்டு ஹிந்து கலாச்சாரங்களை சிறுமைப்படுத்தி ,சிறுபான்மையினரின் ஓட்டை மொத்தமாக அறுவடை செய்தார் .அதனை ஸ்டாலினும் தொடர்கிறார் என்பது தான் கொடுமை .அதனால் தான் இரு தினங்களுக்கு முன்பு அண்ணா அறிவாலாயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இடையே லோக்சபா தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் பத்திரிக்கை செய்தியாளர்களிடம் கூறியது: எங்களுடைய முஸ்லீம் லீக் கட்சியின் சொந்த சின்னமான ஏணி சின்னத்திலேயே போட்டியிட உள்ளோம். அதிமுக- பாஜக கூட்டணிக்கு எந்த இஸ்லாமிய வாக்கும் கிடைக்காது. இஸ்லாமிய வாக்குகள் அனைத்தும் திமுக அணிக்கே வரும். ஆம் இஸ்லாமிய வாக்குகள் அனைத்தும் திமுக கூட்டணிக்கே கிடைக்கும் என்று கூறுபவர் இருக்கும் அணி மதச் சார்பற்ற அணி.போன வருடம் கத்தார் நாட்டை சேர்ந்த முஸ்லீம் அன்பர் ஒரு மிக மிக மிக அருமையான கருத்தை தினமலரில் பதிவிட்டார் .அது - என் முஸ்லீம் கடவுளரையும் /முஸ்லீம் மதகோட்பாடுகளையும் ஏற்காத /மதிக்காத /நிந்தனைகள் செய்பவர்களுக்கு நாங்கள் ஓட்டு போட மாட்டோம் .அப்படி போட்டால் அவர்கள் ஆற்றும் முஸ்லீம் மத நிந்தனைகளை /முஸ்லீம் மத விரோத செயல்களை நாங்கள் ஆதரிப்பதாக தானே அர்த்தம் என்றார் .இதன் பொருள் முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் ஓட்டு போட வேண்டும் என்பதல்ல. முஸ்லீம் மத கோட்பாடுகளை மதிப்பவருக்கு எங்கள் வாக்குரிமை என்பதாகும் .உண்மையிலே மோடிஜி அவர்கள் முஸ்லிம்களிடம் கனிவும் ,அன்பும் தான் பாராட்டுகிறார் இந்த விஷயத்திற்காக பிரதமர் மோடிஜி அவர்களை நாம் பெரிதும் பாராட்ட வேண்டும் முஸ்லிம்களுக்கு மிலாடி நபி ,ரம்ஜான் மற்றும் பக்ரீத் வாழ்த்துக்கள் தெரிவித்தார் உண்மையை சொன்னால் ஹிந்துக்களை தீவிரவாதிகள் என வெறுத்தவர் கருணாநிதி தான் ( இஸ்லாமியர்களை அல்ல ) மறைந்த திராவிட கருணாநிதி என்றுமே ஹிந்து சம்பிரதாயங்களுக்கு /ஹிந்து கலாச்சாரங்களுக்கு விரோதி தான் . இது தான் கடைந்தெடுக்கப்பட்ட போலி மத சார்பின்மை வாதம். ஆனாலும் ஹிந்து மதத்தின் மத சகிப்பு தன்மை காரணமாக அவரை 5 தடவை முதல்வராக பதவியில் அமர்த்தினர் . தேள் கொட்டினாலும் ,பாம்பு கொத்தினாலும் ,பூரான் கடித்தாலும் அத்வைத துறவிகள் மீண்டும் மீண்டும் அந்த விஷ பூச்சிகளுக்கு நல்லது தான் செய்ய முற்படுவார்கள். அகம் பிரம்மாஸ்மி தத்வம் அஸி என்று சொல்லுவதும் அது தான். அத்தகைய உயர் நிலையில் உள்ள ஹிந்துக்களால் இப்படி தான் கருணாநிதியை ஆதரித்தது போல நடக்க முடியும் .இதை பிற மதத்தினர் கடைபிடிக்க முடியாது .கருணாநிதி இதை போன்று மற்ற மதத்தை விமரிசித்து இருந்தால் அவரை 10 தலைமுறைகள் ஒதுக்கி விடுவார்கள் .இதனை ஸ்டாலின் போன்ற போலிமதச்சார்பின்மை வாதிகளை ஆதரிக்கும் நடுநிலைவாதிகள் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். .இங்கு தமிழகத்தில் இந்து மத தலைவர் ஹிந்துக்களுக்கு ஓட்டு போட சொன்னால் மதவாதம்.ஆரிய வாதம் RSS வாதம் ,,காவி வாதம் ,சுண்ணாம்பு வாதம் ,பெயிண்ட் வாதம் ,டிஸ்டம்பர் வாதம் என வெற்று கூச்சல்கள் எழும் .அதே நேரத்தில் கிருஸ்துவர்கள் ,முஸ்லிம்கள் ஆகியோர் பிஜேபியை வெறுத்து ஒதுக்கி ஹிந்துத்துவா முத்திரை குத்தினாலும் அது மதசார்பின்மை வாதம். முஸ்லிம்களுக்கு, கிறிஸ்துவர்களுக்கு பிஜேபி மதவாத கட்சி. கேட்டால் ஹிந்துத்வாவை அது ஆதரிக்கிறது என வெற்று /வெறும் கூச்சல் தான் வரும் .ஆனால் உண்மை /நிதர்சனம் என்னவென்றால் பிஜேபிக்கு மட்டும் ஹிந்துக்கள் ஓட்டு போட வேண்டும் ஆம் . பிஜேபிக்கு மட்டும் ஹிந்துக்கள் ஓட்டு போட வேண்டும் என ஒரு தேர்தலில் ஹிந்துக்கள் முடிவெடுத்தாலே போதும் - இந்தியாவில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு பிஜேபி மட்டுமே மத்தியிலும் ,மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும். ஆனால் ஹிந்துக்கள் அப்படி செய்தது இல்லை. இனியும் செய்ய மாட்டார்கள் .காரணம் ஹிந்துக்களின் மத சார்பின்மை /மத சகிப்பு தன்மை தான் . அப்துல் கலாம் அவர்களை இந்திய நாட்டின் ஜனாதிபதியாய் அழகு பார்த்தது பிஜேபி வாஜ்பாய் அரசு தான். பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மை ஹிந்து ஜனாதிபதியாக ஆக முடியாது. அப்படி இருந்தும் பிஜேபி மதவாத கட்சி. பிஜேபி கட்சியில் அனைத்து மதத்தவர் இருந்தாலும் அது மதவாத கட்சி மற்றும் வகுப்பு வாத கட்சி ஆனால் முஸ்லிம் லீக் ,மனித நேய கட்சி ,கிருஸ்துவ ஜனநாயக முன்னணி ஆகிய ஒரே ஒரு மதத்தினர் மட்டும் உள்ள கட்சிகள் மத சார்பற்ற கட்சிகள். என்ன கொடுமை சரவணன் இது ?.கன்னியாகுமரி மாவட்டத்தில் கிருஸ்துவ சர்சுகள்,கிருஸ்துவ திருச்சபைகள் ,பேராயர்கள் மூலமாகவும் மற்றும் தமிழகமெங்கும் முஸ்லிம் ஜமாத் மூலமாகவும் ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை திமுக அள்ளினாலும் அது மத சார்பின்மை கட்சி ஆம் அக்மார்க் மத சார்பின்மை கட்சி. இது தான் காலத்தின் கொடுமை. முஸ்லிம்களுக்கு ,கிறிஸ்துவர்களுக்கு மோடிஜியை பிடிக்காது .அவர்களை ஒட்டு வங்கியாய் வைத்து குடும்பத்தின் சொத்துக்களை பெருக்கிய திராவிட கலிபுருஷன் கருணாநிதியின் வாரிசு மதசார்பின்மை கோஷம் எழுப்பினால் அதனை ஆதரிப்பதுவும் ஹிந்துக்களே .திருமங்கலம் சூத்திரம் தந்த திராவிட கலிபுருஷனை உயர்த்தி பிடிக்கும் போலி மதசார்பின்மை கூட்டங்கள் திருந்தவே திருந்தாது.ஆதலால் உண்மையிலே போலிமதச்சார்பின்மை பேசி ஹிந்து துவேஷ அரசியல் நடத்தும் திமுகவை ஆதரித்து வந்த /ஆதரிக்கும்/ஆதரிக்க போகும் ஹிந்துக்களுக்கு இதனை புரிந்துகொள்ளும் பக்குவத்தை இறைவன் அருளட்டும் .இவற்றையெல்லாம் பார்க்கும் போது , மோடிஜி அவர்கள் ஜெயலலிதா அவர்களை பாராட்டியது தவறு எதுவும் கிடையாது .ஆம் மோடிஜி அவர்கள் ஜெயலலிதா அவர்களை பாராட்டியது தவறு எதுவும் கிடையாது.   13:59:51 IST
Rate this:
152 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
23
2019
அரசியல் சுலப வெற்றியை எதிர்பார்த்த தி.மு.க., கலக்கம்!
போன சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, 'நமக்கு நாமே' என ஸ்டாலின் மக்களோடு மக்கள் என வீதி தோறும் சென்று பிரசாரம் செய்தார்.- ஆம் தேர்தல் என்று வந்து விட்டால் ஹிந்துக்கள் மீது ஸ்டாலினுக்கு பாசம் வரும். மற்ற நேரம் மதசார்பின்மை கோஷங்கள். இந்த போலிமதச்சார்பின்மை வாதம் குறித்த பதிவு 2015 அக்டோபர் மாதத்தில் இதே போன்று நமக்கு நாமே திட்டத்தை தொடங்கினார் .அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் தொடங்கி பல ஹிந்து கோவில்களுக்கு சென்றார் .திமுக இந்து எதிர்ப்பு இயக்கம் /திமுக இந்து எதிர்ப்புக் கட்சி என்று தவறாக பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. அது உண்மையில்லை என்று கூறி "திமுக-வின் 90% தொண்டர்கள் இந்துக்களே.அவர்களது குடும்பத்தினர் கடவுள் மீதும் மதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டே இருக்கிறார்கள். என்று முழக்கங்கள் /பிரச்சாரங்கள் செய்தார் .இது அனைத்தும் ஹிந்து மக்களின் ஓட்டை பெறுவதற்கான யுக்தி தான். திராவிட கொள்கைகள் என எதுவும் கிடையாது - ஹிந்து விரோத /துவேஷ கருத்துக்களும் /செயல்களாலும் நிரம்பியதே திராவிட மண் கலம். இருள் தெய்வங்கள் குடி கொள்ளும் கணங்களால் ஹிந்து தெய்வ நிந்தனைகள் செய்வதை லட்சியமாக கொண்டிருந்தவர் மறைந்த கருணாநிதி .திராவிட தலைவர் கருணாநிதி வாழ்ந்த காலங்களில் எந்த வருடங்களிலும் ,ஹிந்துக்களின் தீபாவளி ,சரஸ்வதி பூஜை ,ராம நவமி மற்றும் கோகுலாஷ்டமி ஆகிய பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் சொன்னது இல்லை. கொண்டாடியதும் இல்லை ..ஆனால் சிறுபான்மை மத பண்டிகைகளுக்கு கிருஸ்துமஸ் , பக்ரீத் ,ரம்ஜான் மற்றும் மிலாடி நபி - வாழ்த்துக்கள் முதலில் சொல்லுவது கருணாநிதி தான். இது தான் கடைந்தெடுக்கப்பட்ட போலி மத சார்பின்மை வாதம். ஹிந்து மத கலாசாரங்களுக்கும் / ஹிந்து மத மரபுகளுக்கும் நிரந்தர எதிரி தான் கருணாநிதி .   10:52:13 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
23
2019
அரசியல் சுலப வெற்றியை எதிர்பார்த்த தி.மு.க., கலக்கம்!
உண்மை தான் அதுமட்டும் அல்ல. நேரு, இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி ,நரசிம்மராவ் ,மற்றும் மன்மோகன் சிங் ஆகிய காங்கிரஸ் பிரதமர்கள் மத்தியில் ஆண்ட காலங்களில், அவர்கள் நிகழ்த்திய பொருளாதார சீர்திருத்தங்களை ,தாராளமயமாக்கல் ,உலகமயமாக்கல் ,அந்நிய நேரடி முதலீடு , ,கார்ப்பரேட் கம்பெனி ஆதரவு ,மற்றும் விவசாய முதலீடுகள் குறைப்பு ஆகியவற்றை கடுமையாக எதிர்த்தவர்கள் தான் இந்த சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட்கள். காங்கிரஸ் பிரதமர்கள் ஆட்சிக்காலங்களில் இந்த போலிமதச்சார்பின்மை கம்யூனிஸ்ட்கள் அடிக்கடி அடிக்கடி உதிர்க்கும் சொற்கள் - நாடு மிக இக்கட்டான சூழலை கடந்து கொண்டு செல்கிறது .நாடு ஒரு நெருக்கடியான சூழலை எதிர் கொண்டுள்ளது.நாடு மீளமுடியாத தருணங்களை கடக்க முயல்கிறது, என உலகமயமாக்க கொள்கைகளை எதிர்த்து பிரசாரங்கள் செய்து வந்தனர் .அப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட கட்சி இல்லாத ஹிந்து மதவாதத்தை எதிர்க்கிறேன் என்று காங்கிரஸ் கட்சியுடனும் ,முஸ்லீம் லீக் கட்சி உள்ள அணியிலும் இருப்பது அபத்ததிலும் அபத்தம்.ஐம்பது வருடம் நாட்டை சீரழித்த காங்கிரெஸ்ஸை உயர்த்தி ஐந்து வருட மோடிஜி அரசை குறைகூறுவது கம்யூனிஸ்ட்கள் நிகழ்த்தும் பிறழ்முரண் பிழைகள் .இதில் கொடுமை என்னவென்றால் உலகில் உள்ள எந்த ஒரு முஸ்லீம் நாடுகளிலும் சரி - பாகிஸ்தான் ,ஈரான் ,ஈராக் ,சிரியா,சவூதி அரேபியா ,ஆப்கானிஸ்தான் ,எகிப்து ,நைஜீரியா ,மொராக்கோ ஆகிய நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் (வலது /இடது -அரிவாள் /சுத்தியல் ) தடை செய்யப்பட கட்சி .ஆம் முஸ்லீம் நாடுகளின் வரலாற்றில் கம்யூனிஸ்ட்களுக்கு இடமில்லை .ஆம் நாடிலி ,குணமிலி ,கொடியிலி ,இனமிலி ,மரபிலி என கம்யூனிஸ்ட்கள் அடையாளங்களும் /எச்சங்களும் உலகில் உள்ள எந்த ஒரு முஸ்லீம் நாடுகளிலும் கிடையாது .ஏனென்றால் கம்யூனிஸ்ட்களுக்கு மதத்தை /மத மரபுகளை மதிக்க தெரியாது .உதாரணம் சீனாவில் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் சின்ஜியாங் மாகாணத்தில் ரமலான் நோன்பு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அதிகம் உள்ள மாநிலமான ஜின் ஜியாவ்கில் முஸ்லிம் குழந்தைகளுக்கு சதாம், ஜிகாத் என்ற பெயர்களை வைக்கக் கூடாது என்று சீன அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் தேசியக்கொடியை பறக்க விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை போலிமதச்சார்பின்மை வாதம் பேசும் அனைவரும் புரிந்து கொள்ளட்டும் .கம்யூனிஸ்ட்களை மக்கள் இந்த தேர்தலில் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.   10:44:51 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

பிப்ரவரி
23
2019
அரசியல் சுலப வெற்றியை எதிர்பார்த்த தி.மு.க., கலக்கம்!
Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ மிக மிக சரியான பதிவு .பாடலாசிரியர் கண்ணதாசன் வனவாசம் எனும் தனது சுயசரிதையின் மூலமாக புரட்டு திராவிட தலைவர்களின் முகத்திரையை கிழித்து, அந்த தலைவர்களின் அசிங்க அந்தரங்கங்களையும், அவர்கள் அரங்கேற்றிய அரசியல் அவலங்களையும் நார் நாராக தொங்க விட்டிருப்பார்.தற்போது அதனை நீங்கள் செய்துவுள்ளீர்கள். இவர்கள் தான் RSS தான் வெள்ளையர்களை ஆதரித்ததாக பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதனையும் தமிழக மக்கள் நம்புகிறார்கள் . இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக, துக்ககரமான தினமாக அனுஷ்ட்டிக்க சொன்ன இந்த திராவிட கூட்டங்களை நம்பி ஏழை பங்காளன் கர்ம வீர்ர் பாரத ரத்னா காமராஜரை தமிழக மக்கள் என்று தோற்கடித்தனரோ அன்று தான் திராவிட கெட்ட சனி தமிழகத்தை பீடித்தது /பிடித்தது - அது இன்னும் வாரிசு அரசியல் எனும் இழி படைகலன் ஏந்தி தமிழக மக்களை இன்னும் சோதிக்கிறது /வாட்டுகிறது /வதக்குகிறது .எல்லாநாளும்திராவிட பீடைகள் பிடித்த கிரகண நாட்கள் தான்.சூரியனுக்கு பிடித்த /சூரியன் பிடித்த கிரகணம் . தமிழகத்தில் திராவிட கலிபுருஷன் நிகழ்த்திய சோதனை நாட்கள் இன்னும் வாரிசு அரசியல் மூலமாக தொடர்கிறது .யானை தனது தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்ட கதை தான் தமிழக மக்களின் செயல் .மிக்க நன்றிகள்   09:23:02 IST
Rate this:
4 members
1 members
29 members
Share this Comment

பிப்ரவரி
22
2019
அரசியல் திருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம்
கனிமொழி பிறந்த போது கருணாநிதி அடித்த டூப் தான் டாப் டக்கர் .இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அந்த காலகட்டத்தில் 'ஜவகரிஸ்ட்'என்ற பத்திரிக்கை வெளிவந்து கொண்டிருந்ததுஅதன் ஆசிரியர் என்.கே.டி.சுபிரமணியம் மறைந்த கருணாநிதியின் நெருங்கிய நண்பர் . அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..? என்ற ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்.அந்த செய்தி முதல்வராக இருந்த மறைந்த கருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது.முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைத்தது .அரசியலில் நேர்மை, தூய்மை,அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் கொண்டவராயிற்றே .ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு யாரையும் தெரியாது.எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை''என்று கூறி பரபரக்க வைத்தார்.இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தியல்லவா..? விட்டுவிடக்கூடாது...என்று நீதிமன்றத்துக்கும் போனார்...பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே தெரியாது என்றார்.. பிறகு நடந்தது என்ன .செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க,பத்திரிக்கை ஆசிரியருக்கு ஆறு மாத சிறை தண்டனை வாங்கி தந்தார் கருணாநிதி .ஒரு நேர்காணலில் இந்த உண்மை சம்பவத்தை போட்டுடைத்தவர் காங்கிரஸ்காரரான திருச்சி வேலுசாமி. எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ...எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ..., அந்த மகள் கனிமொழிக்காகத்தான் டூ ஜி வழக்கில் சிக்கி தனது தன்மானத்தோடும் மணிமுடியையும் இழந்தார் மறைந்த கருணாநிதி. இப்போது அப்பாவின் வழியில் ஹிந்து விரோத பேச்சுக்களை பேசி வருகிறார் கனிமொழி .ஹிந்துக்கள் அனைவரும் இதனை புரிந்து கொள்ள வேண்டும் .   19:16:47 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
22
2019
அரசியல் திருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம்
நாத்திக கட்சியான திமுகவில் இருந்தபோது திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனை இகழ்ந்து /கொச்சைப்படுத்தி திருப்பதி சென்ற கணேசா திரும்பி போ ,திருப்பதி சென்ற கணேசா திரும்பி போ என்று இளிவரல்கள் /பகடிகள் /எள்ளல்கள் பேசிய திராவிட கூட்டங்கள் ராகுலின் திருப்பதி பயணத்தை விமரிசிக்க தயாரா ? பிரதமர் மோடிஜியின் வருகையின் போது கருப்பு பலூன்களை காட்டி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யும் திமுக, மதிமுக, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், தமிழ் புலிகள், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதுவரை லட்சக்கணக்கான இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜ பக்ஷே அரசுக்கு உதவிய காங்கிரஸ் தலைவர்கள் மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் ராகுலின் தமிழக வருகையின் போது கருப்பு பலூன்களை பறக்க விட்டிருக்கிறார்களா ? தமிழகத்திற்கு காவேரியில் உரிய பங்கு தண்ணீர் தர மறுத்து,மேகதாதுவில் அணைகள் கட்ட முயற்சித்து ,அநீதி செய்யும் கர்நாடக முதலவர் குமாரசாமியை கண்டித்து ,அவரது தமிழக வருகையின் போது கருப்பு பலூன்களை பறக்க விட்டிருக்கிறார்களா ?இல்லையே அதுமட்டும் அல்ல முல்லைப்பெரியாறு அணை விஷயத்தில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் கேரளா முதல்வர் பினராயி விஜயனை கண்டித்து ,அவரது தமிழக வருகையின் போது கருப்பு பலூன்களை பறக்க விட்டிருக்கிறார்களா இந்த திராவிட கூட்டங்கள் ?இல்லையே .அவ்வளவு ஏன் செம்மரம் கடத்தினார்கள் என்று மொத்தமாக கொள்ளையர்கள் என தமிழர்களை சுட்டு கொன்ற ஆந்திர அரசின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் செயலை கண்டித்து ,அவரது தமிழக வருகையின் போது கருப்பு பலூன்களை பறக்க விட்டிருக்கிறார்களா ?இல்லையே .இது தான் போலிமதச்சார்பின்மை வாதம் .ஆம் இது தான் போலிமதச்சார்பின்மை வாதம்.இதனை தமிழக மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.   18:57:21 IST
Rate this:
6 members
1 members
47 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X