S.BALASUBRAMANIAN : கருத்துக்கள் ( 2 )
S.BALASUBRAMANIAN
Advertisement
Advertisement
Advertisement
மே
24
2021
சிறப்பு பகுதிகள் நிர்வாக திறன் வெளிப்பட வேண்டும்!
நெல்லை தாமிரபரணியில் சுலோச்சனா முதலியார் பாலத்துக்கருகே மற்றொரு பெரிய பாலம் திறந்தாயிற்று. நூறாண்டுகள் தாண்டிவிட்ட பழைய பாலத்துக்கு மாற்று தேவைதான். அந்த தொலைநோக்கும் மதுரையில் வைகை ஆல்பர்ட் விக்டர் பாலத்தருகே மற்றொரு பாலம் கட்டப்பட்ட முன்மாதிரியை பின்பற்றியதும் பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை. அதேபோல மதுரையின் மற்ற முன்மாதிரிகளையும் பின்பற்றலாமே? வைகையின் குறுக்கே எத்தனை எத்தனை தரைப்பாலங்கள் செல்லூர், யானைக்கல், மதிச்சயம்ஓபுளா படித்துறை, குருவிக்காரன் சாலை என பல இருப்பதை நம் நெல்லை ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் காண மறுப்பதேன்? அவை போல நெல்லை தாமிரபரணியிலும் குறைந்த பட்சம் இரண்டு தரைப்பாலங்களாவது கட்ட முடியுமே சிந்துபூந்துறை வண்ணார்பேட்டை இணைத்தும் மீனாட்சி புரம் கொக்கிரகுளம் இணைத்தும் தரைப்பாலங்கள் சிமெண்ட் குழாய்கள் கொண்டு கட்டலாமே? அதன்மூலம் இந்த 4நகர்ப்பகுதிகளிலும் உளளோர் நெல்லை சந்திப்புக்கு வந்து பழம்பெரும் சுலோச்சனா முதலியார் பாலத்தில் நெருக்கடி உருவாக்குவதை தவிர்க்க முடியும். மேலும் இயற்கை யாகவும் தொற்று நோயாலும் ( கொரோனா) இறந்தவர் உடலை பாளை பகுதியிலிருந்து வருவோர் ஜனநெருக்கம் மிக்க நெல்லை சந்திப்பின் வழியாக சிந்துபூந்துறை மின்மயானம் கொண்டு செல்வதில் ஏற்படும் அபாயத்தை தவிர்க்கலாமே? மெதுவாக நகரும் சவ ஊர்வலத்தால் அங்கு ஏற்படும் போக்குவரத்து சிக்கலை முறியடிக்கலாமே? புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாளை, நெல்லை சட்டமன்ற உறுப்பினர்களும் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவன செய்வார்களா? ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி இல்லை என்றாலும் வேறு நிதி தமிழக அரசிடம் வாதாடி பெறலாமே? இவண் S.பாலசுப்பிரமணியன் முகாம்: 8/10 கார்த்திகை தெரு மூலைக்கரைப்பட்டி. 627 354 நெல்லை மாவட்டம் அலைபேசி: 9042962976   16:48:14 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
22
2021
வாசகர் கருத்து வாசகர் கருத்து
ஆசிரியர்க்கு கடிதம் நவீன சமூகம் தனித்தனி தீவுகளாகி விட்டது. ஓய்வு பெற்ற, உதவி தேவைப்படும் முதியவர்கள் மனக்கஷ்டம் சொல்லி மாளாது. பென்ஷன் இல்லாத தனியார் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பெரும்பான்மையோர் மகன் மகளை சார்ந்து வாழ்வது கடினமாகி வருகிறது. மருமகள்களின் அலட்சியத்தையும் மகன்களின் பாராமுகத்தையும் சகித்துக் கொண்டு ஏன்வாழ வேண்டும் என்ற விரக்தியில், தற்கொலை எண்ணத்தில் வாழ்வோர் அநேகம். ஓய்வு பெறும்வரை உழைத்து பணியாளர் சேமநிதியில் ஓரளவு சேமித்தவர்களின் கஷடத்தையாவது தீர்க்கமுடியும் அரசுகள் மனது வைத்தால். அவர்களின் மேற்படி சேமிப்புக்கு மட்டுமாவது 2, 3 சதவீதம் அதிக வட்டி கொடுத்தால் நாட்டின் பொருளாதாரம் தவிடுபொடி ஆகிவிடுமா என்ன? தற்போது சீனியர் சிட்டிஸன்களுக்கு வழங்கப்படும் கால் சதவீத அரை சதவீத அதிகப்படி வட்டி என்பது யானைப்பசிக்கு சோளப்பொரியே வெறும் கண்துடைப்பே சேமிப்புக்கான வட்டிவிகிதத்தை குறைத்துக் கொண்டே போகிறது அரசு. அதற்கு அரசு கூறும் காரணம், பணம் வெறுமனே சேமிப்புக் கணக்கில் முடங்காமல் தொழிலில் முதலீடு செய்யப்பட வேண்டும் என்பது. ஆனால் 60 வயதுக்கு மேல் நோய்களால் தளர்ந்து உடல் ஒத்துழைக்காது ஓய்வை விரும்புவதால் தான் சேமிப்பு தரும் வட்டி வருமானத்தில் வாழ்கிறார்கள் மூத்தகுடிமக்கள். அவர்களைப்போய் முதலீடு செய் ரிஸ்க்எடு என்பது நியாயமா? அவர்களை வஞ்சித்து என்ன சாதிக்கப் போகிறது மத்திய மாநில அரசுகள்? இதுதான் 30, 40 வருடம் சமுதாயப்பணி ஆற்றியவர்களுக்கு அரசு காட்டும் நன்றியா? அவர்கள் அப்படி என்ன சாதித்து விட்டார்கள்? ஒருநாட்டின் உண்மையான செல்வம் அந்நாட்டின் அறிவுசார் சொத்தும் மனிதவளமும் தான். அதன்படி எதிர்கால இந்தியா வாழ இன்றைய டாக்டர்களையும் பொறியாளர்களையும் தகவல் தொழில் நுட்பவல்லுனர்களையும் ஆசிரியர்களையும் இன்னபிற அலுவலர்களையும் தங்கள் சம்பாத்தியத்தில் உருவாக்கி நாட்டுக்கு அளித்திருப்பவர்கள் அவர்கள். அதற்காக தங்கள் தேவைகளை குறைத்து, குடும்பத்தைப் பிரிந்து, ஓவர்டைம் உழைத்து தியாகம் செய்தவர்கள் அவர்கள். இது வயதிலும் மனதிலும் முதிர்ச்சி அடையாத இளைய தலைமுறைக்குத்தான் புரியவில்லை எனில் அரசுகளுக்குமா புரியவில்லை? கோடிகளில் அந்நிய செலவாணி வருகிறது இந்தியாவுக்கு. யார் காரணம்? அதை அனுப்பும் இளைஞர்களை பெற்று வளர்த்து படிக்க வைத்தவர்கள் அல்லவா? சிந்தியுங்கள் ஆட்சியாளர்களே, சிலநூறு கோடி ரூபாய்கள் அதிகம் செலவாவதால் பல லடசம் கோடி பட்ஜெட் போடும் இந்திய பொருளாதாரம் சீரழிந்து விடாது என உணர்வீர்கள். ஆவன செய்யுமா அரசுகள்? அதற்கு நாளை ஓய்வு பெறப்போகும் அரசுஅதிகாரிகள் தமக்காகவும் பாவப்பட்ட தனியார் துறை ஊழியர்களுக்காகவும் முயற்சிப்பார்களா?   14:07:54 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X