G.Loganathan : கருத்துக்கள் ( 108 )
G.Loganathan
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
5
2020
உலகம் லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்
லெபனான் ஒரு ப்ரென்ச் நாட்டினரால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த நாடு. அரபு மொழியும் பேசுவார்கள். இந்த நாட்டு மக்களிடம் தேசப்பற்று என்பது கிடையாது. ஒரு நாட்டு பிரஜை எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதை இங்கே கற்றுக்கொள்ளலாம். அரசாங்கத்திற்கு தெறியாமலே 2750 டன் நய்ட்ரேட் வெடி பொருள் ஒரு தீவிரவாத கும்பலால் இறக்குமதி செய்யப்பட்டு சரியான பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நாட்டு பிரஜை களுக்கும் இந்த நிலை வரக்கூடாது. ஒரு காலத்தில் வளைகுடா பகுதியில் மிக மிக செல்வம் கொழித்த நாடு. இப்போது பலரின் தீவிர்வாத நடவடிக்கைகளுக்கு அரங்க மாக உள்ளது. கடவுளால் கூட காப்பாற்ற இயலாது. தேசப்பற்று ஒன்றுதான் வழி.   11:01:48 IST
Rate this:
1 members
1 members
25 members

ஆகஸ்ட்
4
2020
பொது இந்து கோவிலுக்கு நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்
திரு.அப்துல் காதர் அவருடைய காருண்யத்தை கடமையாக செய்துவிட்டார். அதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?. தமிழ்நாடு அரசு அவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரலாமே. நல்லவர்களுக்கு நல்லது செய்தால் நன்மைகள் தொடரும்.   15:27:59 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
4
2020
பொது பல கோடியில் பங்களா சசிகலா தடபுடல்
கொஞ்சம் பொருங்க, ஊடகங்கள் எப்படி எல்லாம் ஆடப்போகின்றன என்று பார்க்கலாம். சசி அடித்த கொள்ளை எல்லோருக்கும் தெறியும் அப்படிப்பட்ட நபரை எப்படி நடத்தப்படப் போகிறார் என்பதை பார்க்கலாம். பிறகு சூடு,சொரனை எல்லாம்.....   15:15:31 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
4
2020
பொது வங்கி ஊழியர்கள் ஆக.,20ல் வேலை நிறுத்தம்
ரொம்ப நல்லது. எல்லோரையும் வீட்டுக்கு போகச்சொல்லுங்க அங்கே உட்கார்ந்து "விஜய் மல்லையாவுக்கு" எப்படி கடன் கொடுப்பது என்று யோசிக்கட்டும். ஒரு தொழில் செய்பவர் கடன் கேட்டால் ஏளனப்பேச்சு பேசும் வங்கிகளை மூடுங்கள். ஏற்கனவே இவர்கள் நிர்வாகத் திறமையால் நஷ்டத்தில் தானே நடக்கிறது என்வே மூடுவதில் ஒன்றும் சிரமமிருக்காது.   15:02:57 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
4
2020
சம்பவம் இலங்கை தாதா இறந்தது எப்படி? கோட்டை விட்ட கோவை போலீசார்
கோவை காவல்துறை ஏமார்ந்து விட்டாதா? இது என்ன புது கதை. கோவை அரசு மருத்துவமனை வாசலில் ஆவின் பாலகம் உள்ளது. அங்கே ஒரு கும்பல் "இறப்பு சான்றிதழ்" விற்பனையில் கல்லா கட்டிக்கொண்டுள்ளனர். வீட்டிலிருந்து அலை பேசி மூலம் கூறினால் போதும் "இறப்பு சான்றிதழ்" தயார். ஒரு ஆதார் அட்டை நகல் மட்டும் கொடுக்க வேண்டும். அவர்களிடம் ஏற்கனவே மருத்துவர் கைஎழுத்திட்ட விபரங்கள் நிரப்பப்படாத "இறப்பு சான்றிதழ்" நிறைய உள்ளது. இவையெல்லாம் கோவை காவல் துறைக்கு தெறியாது என மக்கள் காதில் பூ சுற்ற வேண்டாம். ஒரு அவசரத்திற்கு 108 ஐ அழைத்தால் வருபவர்கள் நோயாளியை பார்த்துவிட்டு இதயத்துடிப்பு இல்லை என்று கூறி மருத்துவமனைக்கு எடுத்து செல்ல மாட்டார்கள். பிறகு "இறப்பு சான்றிதழ்" "குளிர்பதனப்பெட்டி" ஆகிய சேவைகளுக்கு மருத்துவ உதவியாளர் உங்களுக்கு உதவி செய்ய முற்படுவார், இந்த நிகழ்வுகள் எதுவுமே கோவை காவல் துறைக்கு தெறியாது என்று பூ சுற்ற வேண்டாம்.   14:53:00 IST
Rate this:
0 members
0 members
20 members

ஆகஸ்ட்
3
2020
பொது பயணியருக்கு வழிமுறைகள் மத்திய உள்துறை அறிவிப்பு
ஆக மொத்தம் இந்தியாவில் கொரோனா பெயரில் கொள்ளை, உடல் உறுப்புகள் கொள்ளை அரங்கேறுவதாக செய்திகள். 2019 நவம்பரில் இருவழி பயணச்சீட்டுடன் அமெரிக்கா சென்றவர்கள் திரும்பி வர வழியின்றி தவிக்கிறார்கள். ஏர் இந்தியா என்பது அரசுக்கு சொந்தமான - மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் நிறுவனம் இந்த ஆபத்தான காலத்தில் மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து இரண்டு அல்லது மூன்று மடங்கு விலை பயணச்சீட்டுக்கு விதித்துள்ளது. இருவழி பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு ஏதாவது அறிவிப்பு உண்டா?. மாண்புமிகு அமைச்சர் திரு.பூரி அவர்களுக்கு எங்கோ யாரோ மசாலா கொடுக்கிறார்களா? மற்ற வெளி நாட்டு விமான நிறுவனங்கள் சாதாரண போக்குவரத்தை நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் இன்னும் "வந்தே பாரத்" என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்த லட்சணத்தில் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்கப்போகிறாராம். அய்யா மாண்புமிகு அமைச்சர் திரு.பூரி அவர்களே தமிழில் ஒரு சொல் உள்ளது. "கேப்பையில் நெய் வடிகிறது என்றானாம், கேட்பவனோ நான் ஒன்றும் கேனையன் இல்லை என்றானாம்". இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு சேவை செய்யுங்கள். தனிமைப்படுத்துகிறோம் என்ற பெயரில் பயனிகளை கட்டாயப்படுத்தி விடுதிகளுக்கு அனுப்பி அடிக்கு கொள்ளை எவ்வளவு?. பயணியர் தனிமைபடுத்தப்படும் விடுதிகள் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டதா?. அப்படிப்பட்ட விடுதிகளில் அவசர கால உதவிக்கு மருத்துவர் உண்டா?. ஆனால் பயணியர்களிடம் பணம் மட்டும் கொள்ளை அடிக்கப்படுகிறதாக சென்றவர்கள் புலம்பி சாபமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.   23:33:56 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
28
2020
சிறப்பு பகுதிகள் கலெக்டராக நினைத்தேன் ஆட்டோ ஓட்டுறேன்!
வாழ்க வையகம் வாழ்க வளமுடன். திரு.நாகராஜ் அவர்களே, தாங்கள் இப்போதும் ஒரு உயர் அதிகாரிதான். சம்பளம் வாங்காத உயர் உயர் அதிகாரி. உங்கள் சேவை தொடரட்டும். மனம் தளர வேண்டாம்.   16:24:55 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
28
2020
நலம் புதிய சீசாவில் அடைக்கப்பட்ட பழைய மருந்து!
வாழ்க வையகம் வாழ்க வளமுடன். தினமலருக்கு நன்றி. மருத்துவர், எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. அமிர்தமும் அளவை மிஞ்சினால் விஷம் என்பதை தெளிவாக கூறியுள்ளீர்கள். வளர்க உங்கள் தொண்டு.   16:16:25 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
10
2020
பொது வந்தேபாரத் திட்டத்தில் இதுவரை தாயகம் திரும்பிய 5.80 லட்சம் இந்தியர்கள்
ஏர் இந்தியா ஒரு அரசு பொது உடமி நிறுவனம். பிரதி பலன் இல்லாமல் இடர்ப்பாடு நேரங்களில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஆனால் நடந்திருப்பது என்ன? மூன்று மடங்கு பயணத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. திருச்சி போன்ற விமான நிலையங்களில் ரூ,70,000/- வரை வசூலிக்கப்பட்டுள்ளது.   18:43:18 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
8
2020
அரசியல் இலவச மின்சார திட்டம் தொடர வேண்டும் முதல்வர் இ.பி.எஸ்., வலியுறுத்தல்
ஒரு வீட்டில் இரண்டு தளம் இருந்தால் அந்த வீட்டிற்கு இரண்டு மின் இணைப்பு. ஏனெனில் 100 யூனிட் இலவசம். இதற்கு ஆலோசனை மினசார வாரிய அதிகாரிகளிடமிருந்து கிடைக்கும். மின்சார வாரியம் சம்பளம் கொடுக்க கடன் வாங்குகிறது ஏன்?. மின் மாற்றிகள் வாங்குவது, 100 யூனிட் இலவசம், புதிய இணைப்புகளுக்கு மீட்டர் வாங்குவது போன்ற எல்லா நடவடிக்கைகளிலும் ஊழல். ஒவ்வொரு முறை பழுது ஏற்படும் போதும் பயனாளிகளிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. ஏனினில் மின்சார வாரியத்தில் பராமரிப்பு வேலை செய்வதே கிடையாது. நாங்கள் இலவசமாக சூரிய ஒளி மின்சாரம் ஏற்றுமதி செய்கிறோம் - முடியாது அனுமதியில்லை. ஏனெனில் மின்சாரம் வாங்குவதில் ஊழல், இப்படியாக தமிழக மின்சார வாரியம் ஊழல் வாரியமாக உள்ளது. எனவே மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குங்கள்.   02:20:39 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X