இரா. பாலா : கருத்துக்கள் ( 226 )
இரா. பாலா
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2021
பொது ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் பெட்ரோல், டீசல்? இன்று கூடும் கவுன்சில் கூட்டத்தில் விவாதம்
மத்திய அரசு ஜி.எஸ்.டி தொடர்பாக தன்னிச்சயாக எதுவும் செய்ய முடியாது. அனைத்து மாநிலப் பிரநிதிகளும் உள்ளடக்கிய ஜி.எஸ்.டி கவுன்ஸில்தான் இதை முடிவெடுக்க முடியும். மத்திய அரசின் ஜிஎஸ்டி பிரதிநிதிகள் பல காலமாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி குள் கொண்டுவர தயார் எனச் சொல்லி வருகின்றனர். மாநில அரசின் பிரதிநிதிகள் அதற்கு ஆதரவு தெரிவித்தால் மட்டுமே செயல்படுத்த முடியும். பணபதிப்பிழப்பினைக் கொண்டுவந்தது வேறு இது வேறு. பண மதிப்பிழப்பினைக் கொண்டுவர எந்தக் கவுன்ஸிலின் ஒத்துழைபும் தேவையில்லை. ஒரு திட்டம் அல்லது சட்டம் எவ்வாறு அமலாக்கப்படுகிறது என்பது தொடர்பாக தெளிவான புரிதல் உங்களிடம் இல்லை. சில திட்டங்களை மத்திய அரசு பாராளுமன்ற இரு அவைகளின் மெஜாரிட்டியுடன் கொண்டுவரலாம். சில திட்டங்களை உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களால் கொண்டு வரலாம். சில திட்டங்களை மத்திய மாநில அரசுகள் இணைந்த கமிட்டி மூலம் கொண்டு வரலாம். பெட்ரோல் மற்றும் டீசல் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டால் அதை எதிர்த்து யாரும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டாலும் அத்ற்குப் பொருள் இருக்காது. ஏனெனில் ஜிஎஸ்டி கமிட்டியினால் நிறைவேற்றப்பட்ட ஒன்றை உச்ச நீதிமன்றம் ஒன்றும் செய்ய இயலாது. அடிப்படை வித்தியாசங்களைப் புரிந்து கொண்டீர்களானால் இன்னும் தெளிவாகத் துலங்கும்.   15:38:53 IST
Rate this:
1 members
0 members
5 members

செப்டம்பர்
8
2021
உலகம் இலங்கை உணவுப் பற்றாக்குறைக்கு இயற்கை உரம் காரணமா?
நிச்சயமாக அதுதான் காரணம். விவசாயம் பற்றி வீடியோக்களும், கட்டுரைகளும் படிப்பவர்களுக்கு வேண்டுமானால் இயற்கை விவசாயம் அமிர்தமாகத் தெரியலாம். இயற்கை விவசாயம் மூலம் ஒட்டு மொத்த மக்களுக்கும் உணவளிக்க இயலாது. அவ்வாறு உணவளிக்க வேண்டுமெனில் விவசாய நிலப்பரப்பினை அதிகரிக்க வேண்டும். நிலப்பரப்பு அதிகரிக்கப்படும் போது அதற்குரிய விதை, இடு பொருட்கள், மனிதவளம் அதிகரிக்கும். இவ்வாறு பெருவாரியான மனித வளம் விவசாயத்தின் பக்கமே செலவிடப்படுவதால் பிற பொருட்களின் உற்பத்தி பாதிக்கும். இயற்கை விவசாயத்தால் மன நிறைவும், உடல் ஆரோக்கியமும் பேனப்படலாம். ஆனால் உற்பத்தித் தன்ன்னிறைவை எட்ட இயலுமா? விவசாயி பன்னெடுங்காலமாக விவசாயம் செய்கிறான். அவனுக்கு இலாபம் ஈட்டும் வழி ரசாயன உரங்கள் பயன்படுத்துவதாலேயே கிடைக்கிறது. மண் மலடாகிறது எனும் வாதமெல்லாம் ஈடுகட்டவே இழக்கபட்ட சத்துகளுகுரிய ரசாயன உரத்தினைக் இடுகிறான். தொடர்ச்சியாக உற்பத்தி செய்கிறான். இந்தியாவின் உற்பத்திப் பெருக்கம் ரசாயன் ஔரங்களின் வருகைக்குப் பின்னரே உயர்ந்தது. பஞ்சமும் இல்லாமலாகியது. அறுபது எழுபதுகளின் பஞ்சங்களிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடத்தின் அடிப்படையில் உற்பத்தியை பெருக்கவே ரசாயன் உரம் பக்கம் சென்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கை வழி விவசாயத்தில் இலாபம் ஈட்ட இயலுமெனில் ஏன் விவசாயிகள் அதற்கு மாறுவதில்லை? மேலும் இயற்கை விவசாயம் செய்வதாகச் சொல்பவர்களெல்லாம் ஏற்கனவே வேறு துறையில் பணம் ஈட்டி ஓய்வு பெற்றவர்களாகவோ, வெளிநாட்டிலுருந்து திரும்பியவர்களாகவோ இருப்பர். சில விதிவிலக்குகளும் இருக்கலாம்.   06:54:42 IST
Rate this:
3 members
1 members
12 members

ஜூலை
7
2021
உலகம் சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் 3 மாதங்களுக்கு பின்னர் விடுவிப்பு!
கப்பல் மீட்கப்பட்டவுடனேயே போக்குவரத்து சீராகிவிட்டது. மீட்கப்பட்ட கப்பலை எகிப்து இழப்பீட்டிற்காக பிடித்து வைத்திருந்தது. பிடித்த வைத்திருந்தபோதும் பிற கப்பல்கள் தங்குதடையின்றி சூயல் கால்வய் வழியாகவே பயணம் செய்தன. எனவே ஏற்கனவே அந்த வழி தடத்தில் தங்குதடையின்றி கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது.   06:29:53 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
18
2021
பொது நீட் தேர்வு விரைவில் முடிவு மத்திய அரசு அறிவிப்பு
விவசாயிகள் எனும் பெயரில் கட்சித் தொண்டர்கள் போராட்டம் செய்கின்றனர். நானும் விவசாயிதான். இதுவரை இல்லாத அளவிற்கு தற்போதைய மத்திய அரசு வருடத்திற்கு ஆறாயிரம் ரூபாய் தருகிறது மேலும் பல்வேறு மானியங்கள் தருகிறது. சுதந்திரம் கிடைத்ததிலிருந்து இதுவரை எந்த அரசும் இதுபோல விவசாயிகளுக்கு மானியம் தந்ததில்லை.   07:39:01 IST
Rate this:
4 members
0 members
11 members

ஜூன்
19
2021
பொது ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த திட்டம்
ஏதோ ஐ.ஐ.டி முடித்தவர்களை பி எஸ் என் எல் வேலைக்கு எடுக்க மாட்டோம் என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவது போலல்லாவா பேசுகிறீர்கள். பி எஸ் என் எல் போன்ற மூழ்கும் கப்பலில் வேலையில் சேர ஐ ஐ டி முடித்தவன் என்ன முட்டாளா? பி எஸ் என் எல் லின் வீழ்ச்சிக்குக் காரணம் ஊழியர்களின் மெத்தனப் போக்கு மற்றும் அளவிற்கு அதிகமான ஊழியம். வருமானமே இல்லாமல் எப்படி போர் ஜி பைவ் ஜி களை ஏலம் எடுக்க முடியும். பி எஸ் என் எல் தரைதட்டிய கப்பல். எடைக்குப் போட்டுவிட்டு அரசு கையைக் கழுவுவது உத்தமம்.   07:36:49 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
16
2021
பொது டுவிட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கிய மத்திய அரசு
மக்கள் தீர்மானிக்க வேண்டுமா? எங்கோ காஷ்மீரில் நடந்ததாகக் கூறி ஒன்றை பதிவிட்டால் அத்தகவல் சரியானதா இல்லையா என தமிழகத்தில் வசிக்கும் ஒருவர் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?   17:43:39 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
16
2021
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
13
2021
கோர்ட் ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
இந்தத் தகவல்களெல்லாம் அடிக்கடி வெளியிடப்படுகின்றன.வெளிப்படையாகவே உள்ளது உங்களுக்குத்தான் தெரியவில்லை. கிட்டத்தட்ட நாலரை கோடி வழக்குகள் உள்ளன. கடந்த வருடத்தினைவிட பத்தொன்பது சதவீதம் அதிகம்.   16:51:12 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
13
2021
கோர்ட் ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாடுவதில்லை. அவர்களுக்கு ஏன் பொங்கல் பரிசு? பொங்கல் விவசாயிகளின் பண்டிகை, விவசாயம் செய்யாத தமிழனுக்கு ஏன் பொங்கல் பரிசு. ரேசன் பொருட்கள் மத்திய அரசின் தொகுப்பிலிருந்து வருகின்றன. முழுவதும் மாநில அரசு கொடுப்பதல்ல. நம் வரிப்பணத்தில் மெடிக்கல் காலேஜில் பதினைந்து சதவீதம் மட்டுமே இந்தியா முழுமைக்கும். அதுபோலவே பிற மாநிலங்களிலும் பதினைந்து சதவீதம் இந்தியா முழுமைக்கும். ஒரு நாடு ஒரு ரேஷன் உச்ச நீதிமன்றம் சொல்வது. இதை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை. வீரம் பேசும் தமிழன் ஏன் வட இந்தியனைக் கண்டு பயப்படுகிறான். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழகம் இன்று பிரிவினை பேசுகிறது.   16:48:18 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜூன்
11
2021
உலகம் விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப தயாராகும் சீனா
சீனா விண்வெளி ராக்கெட்டுகள் தொழில்நுட்பத்தில் சிறப்பாகவே உள்ளது. அவர்களின் லாங் மார்ச் ராக்கெட் நம் பி.எஸெல். வியை விட சிறந்தது. பல தசாப்தங்களாக பி.எஸ்.எல்.வி யை மட்டுமே நம்பியுள்ளோம். சுற்றுவட்டப்பாதை என்பது பெரும்பாலும் முன்னூறு முதல் ஐநூறு கி.மீ உயரத்திற்குள் இருக்கும்.   15:51:54 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X