போலீஸ், ராணுவம் (சீருடை அணிந்த), விவசாயம், போன்ற துறைகளில் நான் இவர்களை பார்த்ததில்லை. சீருடை அணியாத சிவிலியன் ராணுவ வேலைகளில், (குறிப்பாக உயர் பதவிகளில்) இருப்பர். படிப்பில் சிறந்தவர்களும் அதிகம் உண்டு, அவர்கள் எளிதாக உயர் பதவி, அல்லது எதோ ஒரு வேலைகளில் வந்து விடுவர். படிப்பில் மிக சுமாரான பிராமணர்களையம் பார்த்திருக்கிறேன். ஆனால், அவர்களும் நோகாமல் செய்யும் வேலைகளை விரும்புவார்கள் தவிர, ஒரு சில துறைகளில் சேர்வதில்லை. இவர்கள் தான் கஷடப்படுகின்றனர்.
அதே போல சாதி பார்க்காமல் இளம் தலைமுறை பிராமணர்கள் பலர் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். இவர்கள் சாதி மறுப்பு காதல் திருமணம், வெளி நாட்டவர் திருமணம் போன்றவற்றை செய்தால் ஒதுக்கி வைக்கப் படுகின்றனர். இப்படி சாதியை முன்னிறுத்த வேண்டிய அவசியம் என்ன?
26-ஜூன்-2022 15:42:05 IST
எம் பி க்கள் தான் காரணம் எனில் கர்நாடக மாநிலம் ஏன் கேரளாவை விட பின்தங்கி உள்ளது? அங்கு பி ஜெ பி அரசு தான் பல ஆண்டுகளாக உள்ளதே? கேரளா முன்னேறியதற்கு காரணம் மத்திய பணியில் உள்ள கேரளா அதிகாரிகள் பல தில்லு முள்ளு வேலைகளை செய்து கேரளாவிற்கு அதிக நிதி கிடைக்கும் படி செய்தது. அதில் ஒன்று கோவையை பாலக்காடு கோட்டத்துடன் இணைத்தது. இணைத்த பின் கூட கோவையில் ரயிலை நிறுத்தாமல் போத்தனூரில் நிறுத்தி கோவை மாநகர பயணிகளின் சீட் எண்ணிக்கையைக் குறைப்பது (கோவையில் ரயில் நின்றால், மாநகராட்சி எனில் அதிக சீட் ஒதுக்க வேண்டும்), இது போல இன்னும் பல. ரயில் விஷயத்தில் 1900-களுக்கு பின் தான் தமிழகம் விழித்துக் கொண்டது.
21-மே-2022 19:35:37 IST
போரையும், அதில் கிடைக்கும் வெற்றியையும் மிகவும் விரும்பியவர்கள் இலங்கை சிங்கள மக்கள். ராஜபக்சே சகோதரர்களை மறுபடி, மறுபடி தேர்ந்தெடுத்தது அவர்கள் தான். சீனாவிடம் இருந்து கடனாக வாங்கப் பட்ட பேரழிவு ஆயுதங்களே வெற்றியை உறுதி செய்தன. இப்போது குத்துதே குடையுதே என்று அழுவது ஏன்?
06-ஏப்-2022 14:30:22 IST
இதே உக்ரைன் ஈழப் போரின் பொது 100-க்கும் மேற்பட்ட, இன்று ரஷ்யப் படைகள் பயன்படுத்தும் அதே வாக்யூம் பாம் ஏவுகணைகளை - களை இலங்கை அரசுக்கு விற்றது. அவை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்தன.
போரும், வலியும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தால் உலகமே பதறுகிறார்கள். அவர்களுக்கு வந்தால் ரத்தம், நமக்கு வந்தால் தக்காளி சட்னி தான் போல ....
01-மார்ச்-2022 18:24:42 IST
நீங்கள் கருத்து போட்ட உங்கள் கணிணி அல்லது மொபைல், நான் கருத்துப் போடும் கணிணி இவை அனைத்தும் சீனாவில் தயாரானது என்பது தான் நித்ஹர்சன உண்மை. கொரியாவில் தயாராகும் போன்களின் பல பாகங்களும் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப் படுகின்றன. அம்பானி குறைந்த பட்சம் இந்தியாவில் அசெம்பிள் செய்வார் என நம்புவோம்.
20-ஜூலை-2020 15:57:46 IST
பிரம்மாஸ் ஹைப்பர்சானிக் இல்லை. சூப்பர்சானிக். ரஷ்யா ஏற்கனவே ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை சோதனை செய்து விட்டது. நமது பிரம்மாஸ் ஏரோ-ஸ்பேஸ் கம்பெனியிடம் புதிய ஹைப்பர்சானிக் ஏவுகணை தயாரிப்பதற்கான வடிவமைப்பு புளூபிரிண்ட் தயாராக இருப்பதாக சிவதாணுப்பிள்ளை சொல்லி இருந்தார். இது ரஷ்யாவிடம் இருந்து கிடைத்தாக இருக்கலாம். முதல் ஏவுகணை சோதனைக்கான பணிகளை இந்நேரம் ஆரம்பித்திருப்பர். விரைவில் எதிர்பார்க்கலாம்.
17-ஜூலை-2020 17:51:29 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.