அந்த காலத்தில் 20 - 20 ஆட்டம் நடந்து இருந்தால் அப்போது இவர்தான் ORANCE CAP தொடர்ந்து வாங்கி இருப்பார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எந்த ஸ்டாண்டிலிருந்து அதிக WE WANT FOUR/WE WANT SIX என அதிக அளவில் வருகிறதோ அந்த ஸ்டாண்ட்டில் பந்தை அடிப்பார். அதிக ரன் குவித்ததில்லை ஆனால் ஆட்டத்தை சுவாரஸ்யமாக ஆக்க கூடிய திறமை பெற்றவர். ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லமல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
02-ஏப்-2023 13:21:52 IST
திமுக இவர்களுக்கு வரும் லோக் சபா தேர்தலில் இரண்டு சீட் கொடுத்தாலே ஆச்சர்யம்தான். அதிமுக பக்கம் வந்தால் ஒரு நாலு இல்லை ஐந்து வரை கிடைக்கலாம்.
27-மார்ச்-2023 13:10:38 IST
அடாடா. இவரை உள்ளே முதலில் அனுமதித்து இருந்தால் மத பிரசாரம் கண்டிப்பாக செய்து இருப்பார். அதன் பின்னர் இவரை கைது செய்து பாஸ்ப்போர்ட்டையும் பறிமுதல் செய்து இருக்கலாமே. கோட்டை விட்டு விட்டார்களே.
26-மார்ச்-2023 11:38:46 IST
அவதூறு வழக்கு தொடுப்பதற்கு ஒரு காலவரை சட்டத்தில் வரையறுக்கப் பட்டிருக்கிறது. நஷ்ட ஈடு கோரப்படா விடில் ஓராண்டுக்குள்ளும் நஷ்ட ஈடு கூறப்பட்டால் மூன்று ஆண்டுக்குள்ளும் வழக்கு தொடுக்கப் பட வேண்டும்.
இந்த சிறிய விஷயத்தை கூட தெரிந்து கொள்ளாமல் இவர்கள் அறிக்கை விடுவது கேலியாக உள்ளது. இதில் வேறு இவர்கள்தான் நம் நாட்டின் சட்டத்தை மக்கள் சார்பாக அங்கீகரிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள்.
25-மார்ச்-2023 10:31:42 IST
ஆறு சதவிகிதம் வோட்டு கண்டிப்பாக சீமான் கட்சிக்கு விழுகிறது. ஆனால் கூட்டணிக்கு திரு சீமான் சரி என்பாரா? முதலில் எல்லா அரசியல்வாதிகளும் தனித்து போட்டியிடுவோம் எங்கள் கட்சியை நிலை நாட்டுவோம் என வீம்பாக நின்றதை பார்த்து இருக்கிறோம். பிறகு வோட்டு சதவீதம் வந்தாலும் அதே விகிதத்தில் சீட் வராமல் போகும். பிறவு மெல்ல மெல்ல கட்டெறும்பாகும் அவர்களது கொள்கைகள். ஆனால் திரு பழனிசாமி அவர்களுக்கு நிச்சயம் இது நல்ல பலன் அளிக்கும் என நம்பலாம். 2024 தேர்தல் ஒரு புது சுவாரஸ்யமான கணக்கு.
22-மார்ச்-2023 13:58:42 IST
அப்போ வரும் லோக் சபா தேர்தலில் பணக்காரர்கள் மட்டுமே போட்டியிட முடியும் போல இருக்கே? அல்லது உண்மையான கம்யூனிஸ்ட் கொள்கையை பின்பற்றுபவர்கள் போட்டி இடலாம் போல.
22-மார்ச்-2023 09:36:29 IST
தனித்து போட்டி என்பது விதையை மண்ணில் உண்ணுவதை போன்றது. அது ஒரு நாள் முளைத்து, செடியாகி, மரமாகி காய் கனிகளை நிச்சயம் தரும். என்ன அதற்கு சில காலம் எடுக்கும். வருகின்ற லோக் சபா தேர்தலில் BJP தமிழ்நாட்டில் தனியாக அல்லது தலைமை கட்சியாக இருந்து அமுமுக, பாமக, தேதிமுக, தமாகா மற்றும் திரு பன்னீர் செல்வம் அவர்கள் அல்லது திருமதி சசிகலா அவர்கள் தனி கட்சி துவங்கினால் அந்த கட்சியுடனும் சேர்ந்து தலைமை தாங்கி தேர்தலை BJP குறைந்த பட்சம் 15 இடங்களிலாவது போட்டி இட வேண்டும். வெற்றி தோல்வி என்பது இங்கே கணக்கு இல்லை. செடி வேர் விட்டு முளைக்க வைக்கத்தான் இந்த கணக்கு. தேவை பட்டால் தேர்தலுக்கு பின்னர் கூட்டணி பற்றி யோசிக்கலாம் என்பது என்னை போன்ற BJP ஆதரவாளர்களின் சிலரது கருத்து என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.
21-மார்ச்-2023 09:07:54 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.