vijayadhiraaj : கருத்துக்கள் ( 124 )
vijayadhiraaj
Advertisement
Advertisement
ஏப்ரல்
13
2018
கோர்ட் 24 மணி நேரத்தில் தீர்ப்பு திருத்தப்படும் சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதி வேதனை
காவிரி தீர்ப்பை பார்த்தால் அது யாரோ கட்டாயப்படுத்தி எழுதிய தீர்ப்பு போல் நன்றாக தெரிகிறது. இப்போது இருக்கும் தலைமை நீதிபதி நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். ஒரு நதியின் கடைமடை நிலம் தான் அந்த நதியின் அதிக தண்ணீரை பெறவேண்டும் என்பது சர்வதேச நதிகள் சட்டம் சொல்கிறது.அது இங்கு அப்பட்டமாக மீறப்பட்டது. 25 வருடங்களுக்கு முன்பு எடுத்த நிலத்தடி நீர் மட்டத்தை வைத்து இப்போது தீர்ப்பெழுதும் போது தமிழகத்தில் நிலத்தடி நீர் அதிகம் உள்ளதால் நீரின் அளவை குறைக்கிறோம் என்றார்.25 வருடங்களுக்கு முணுப்பு 20 % இருந்த நிலத்தடி நீர் இன்று 1 % கீழே போனது இந்த அறிவு ஜீவிகளுக்கு தெரியாது. தெரியும் அனால் தீர்ப்பை எழுதியது வேறு யாரோ. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்திலும் மிக தந்திரமாக வார்த்தை பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியா வரலாற்றில் ஒரு மாநிலம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எப்போதும் மதிக்காமல் தூக்கி குப்பையில் போட்ட பின்பும் வெட்கமே இல்லாமல் அதே தீர்ப்பை மீண்டும் மீண்டும் கொடுக்கும் இடம் இந்தியாவாகத்தான் இருக்கும்.இந்த தீர்ப்பை நீதிபதிகள்தான் எழுதினார் என்றால் அந்த நீதி தேவதை தூக்கு மாட்டிக்கொள்வார். இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டது. இது யாருக்கும் நல்லதல்ல   05:42:26 IST
Rate this:
10 members
0 members
27 members
Share this Comment

டிசம்பர்
21
2017
கோர்ட் ரூ.17,60,00,00,00,000 =0  2ஜி ஊழல் வழக்கில் அனைவரும் விடுதலை
100 % உண்மையானது. 2G யின் உண்மையான மதிப்பே 30000 கோடிகள் மட்டுமே என்று சிபிஐ அதிகார பூர்வமாக அறிவித்ததோடு அல்லாமல் வினோத் ராய் தோரயமாகத்தான் 170000 கோடி என்று கூறினார் என அதிகாரபூர்வமாக கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது.அவ்வளவு ஏன் உச்ச நீதி மன்றம் 2G அலைக்கற்றை மீண்டும் மறு ஏலம் விட்டபோது 6000 கோடிகளுக்குத்தான் விற்றது.நீதிபதி தெளிவாக சொன்னார். 7 வருடங்களாக யாரவது ஆதாரம் அளிப்பார்களா என்று காத்திருந்தேன்.கோடை விடுமுறைக்கு கூட செல்லாமல் கோர்ட்டுக்கு வந்தேன் அனால் யாரும் ஆதாரம் அளிக்கவில்லை.எப்படி அளிப்பார்கள்.அப்படி ஒன்று இருந்தால்தானே.   08:32:39 IST
Rate this:
20 members
0 members
55 members
Share this Comment

டிசம்பர்
21
2017
அரசியல் சி.பி.ஐ., சொதப்பியதால் நொண்டியடித்த வழக்கு ராஜாவின் அதிரடி வாதத்தால் கிடைத்தது பலன்
தம்பி வீட்டுல பெரியவங்க யாராவது இருந்தா கூட்டிடுவா. ஹார்வார்டில் பேராசிரியராக இருக்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் சுப்ரமணிய சாமியையே தன் குறுக்கு விசாரணையில் வாயடைத்துப் போய் உட்காரவைத்து விட்டார் ராஜா. சிபிஐ கேட்ட 1800 கேள்விகளுக்கு சளைக்காமல் ஒரே நாளில் பதிலளித்து வெளியே வந்தார். கணக்கு தெரியாத ஒருவன் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி என்றால் உடனே மீடியாக்கள் தீர்ப்பெழுதிவிட்டன. ஆனால் நீதி மன்றத்திற்கு தேவையானது ஆதாரமே. 4G அலைக்கற்றை 65 ஆயிரம் கோடிக்கும்,5G அலைக்கற்றை 125 ஆயிரம் கோடிக்கு தான் விலை போயின.அதெப்படி அதைவிட குறைவான 2G யின் விலையை 1 லட்சத்து எழுபதாயிரம் என்று CAG முடிவெடுத்தது? ராஜா கூறியது போல் கண் தெரியாதவர் யானையின் காலை தொட்டு தூண் என்று சொன்னது போல்தான் இது. 2G யின் உண்மையான விலை 30 ஆயிரம் கோடிகள் மட்டுமே என்று சிபிஐ அதிகார பூர்வமாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. அப்படி என்றால் யார் இப்படி வேண்டுமென்றே ஓவராக அதன் விலையை கூட்டி சொன்னது. வக்கீல் வண்டு முருகன் ராஜாவா இல்லை சுப்ரமணிய சாமியா என்று தீர்ப்பை படித்தால் தெரியும். தனக்கு வக்கீல் வேண்டாம் என்று தனியாக போராடி வென்றார் ராஜா. இதை பார்த்து பலருக்கு காண்டாகத்தான் தெரியும். அதற்க்கு காரணம் அனைவரும் அறிந்ததே. ஜாதி மட்டுமே. 30 ஆயிரம் கோடி உள்ள 2G விலை ஒரு லட்சத்து 70ஆயிரம் கோடி என்றவர்கள் நாளை 4G யை 65 ஆயிரம் கோடிக்கும், 5G யை 125 ஆயிரம் கோடிக்கும் விற்ற மோடி அரசின் மீது வழக்கு தொடுப்பார்களா? மண் பாண்டத்திற்கும், வெள்ளி பாண்டத்திற்கும்,தங்கத்திற்கும் வித்யாசம் இருக்கிறது. எதுவுமே தெரியாத CAG தலைவர் வினோத் ராயை கண்டிப்பாக தண்டித்தே ஆகவேண்டும்   08:19:11 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
6
2017
சினிமா உனக்கென்ன மேலே நின்றாய் ஓ கமலஹாசா : விசு கிண்டல்...
கமல் ஒன்றும் இந்துக்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று சொல்லவில்லை. இந்துக்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அது சரியான ஒரு கூற்றுதான். முஸ்லீம்களிலும், கிறிஸ்தவர்களில் கூட இருக்கிறார்கள். இதில் கோபப்பட என்ன இருக்கிறது. ஏங்கேயாவது குண்டு வெடித்தல் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், தீவிரவாதிகள் அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறுபவர்கள், மாட்டுக்கறி தின்பதற்காக மனிதர்களை அடித்து கொன்றது, தலித்துகளை கொன்றது, குஜராத்தில் அப்பாவி மக்களை கொன்றது எல்லாம் என்ன தீவிரவாத செயல்கள் இல்லையா திரு.விசு அவர்களே. கமல் கூறிய கருத்துக்காக அவரை சுட்டு கொல்ல வேண்டும் என்பது என்ன காட்டிய வழியா? இங்கு யாரும் பிராமணர்களை நாட்டை விட்டு போக சொல்லியோ, கைபர் போலன் கணவாய் வழியாவந்தவர்களை திரும்பி போக சொல்லி கூப்பாடு போடவில்லை. அவர்களும் தமிழர்கள்தான் என்று ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இவ்வளவு வருடமாக மேடைகளில் உத்தமனை போல் பேசிவிட்டு இன்று ஒரு ஆதிக்க சாதி தலைவனை போல் நீங்கள் பேசுவதை பார்த்தல் இன்று வரை நீங்கள் செய்தேதெல்லாம் நடிப்பே. அதில் சமூக நலன் ஒன்றும் இல்லை. உங்கள் மனதில் இப்படி ஒரு வக்கிரம் இருக்கும் என்று மக்கள் நினைத்திருக்கமாட்டார்கள்.   13:39:28 IST
Rate this:
97 members
1 members
107 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2017
பொது பேரறிவாளனை பரோலில் விட தமிழக அரசு உத்தரவு
மிக சரியாக சொன்னீர்கள். ஒரு பிரச்னையை மறக்கடிக்க அதை விட பெரிய விஷியத்தை மக்கள் மத்தியில் பேசவிடுவது அரசியல்வாதிகள் ஸ்டைல் அதைத்தான் இப்போது செய்திருக்கிறார்கள்.இதே சிபிஐ விசாரித்த சஞ்சய் தத்தை மூன்றே வருடத்தில் வீட்டிருக்கே நிரந்தரமாக அனுப்பிவைத்துள்ளனர் மகாராஷ்டிரா அரசாங்கத்தினர். அதிலும் அவருக்கு பல மாதங்கள் பரோல் வேறு.இங்கு ஒரு சாதாரண பரோலுக்கு இப்படி ஒரு அக்கப்போர்.காவிகள் உத்தரவின்றி இதை செய்திருக்க வாய்ப்பே இல்லை.இந்த சோலை கொள்ளை பொம்மைகளுக்கு இவ்வளவு அதிகாரம் எங்கே இருக்கிறது ?   20:05:53 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் எங்களை யாராலும் அசைக்க முடியாது பழனிசாமி
அந்த டெல்லி அதிகார மையங்களையே தன் வீட்டுக்கு வர வாழவைத்த ஜெயலலிதாவின் ஆளுமை எங்கே? அடிமைகளை விட கேவலமாக கட்சியை அடகு வைத்ததோடு அல்லாமல் ஒட்டுமொத்த தமிழக நலன்களையும் காவு கொடுத்துவிட்டு தாங்கள் கொள்ளை அடித்துவைத்திருக்கிற பணத்திற்கு வருமானவரித்துறை மூலம் எந்த பங்கமும் வரக்கூடாது என்று நினைத்து டெல்லியின் காலடியில் விழுந்து கிடக்கும் இந்த அடிமைகள் எங்கே?   07:01:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
25
2017
சம்பவம் ஏட்டை இம்சிக்கும் முதல்வரின் சகோதரர் இஷ்டத்துக்கு இடம் மாற்றி பந்தாட்டம்
இட ஒதுக்கீட்டை எதோ தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே அனுபவிப்பது போல் பேசாதீர்கள், அப்படி என்றால் MBC மற்றும் BC யில் இட ஒதுக்கீட்டை பெறுபவர்களை என்னவென்று சொல்வீர்கள். கலப்பு திருமணம் மட்டுமே இதற்க்கு ஒரே தீர்வு   16:45:40 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
11
2017
சம்பவம் சரத்குமார் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை
சித்தப்பு கட்சி நடத்துறதே பெட்டி வாங்குறதக்குத்தான் போல. கொஞ்சம் கூட வெட்கமே இல்லமா யாருடனும் கூட்டணி சேருவார். இவரே ஒரே டெபாசிட் வாங்காத டம்மி பீசு இவருக்கு போய் இப்படி பெட்டி கொடுத்து ஏமாந்தவன என்னனு சொல்றது.இதுல கொடும என்னனா இவர் என் வீட்டில் எதுவும் இல்லை. வருமானவரி துறை ஏதாவது வைத்துவிட்டு சென்றால் நலமாக இருக்கும் என்று நக்கல் பேட்டி வேறு கொடுத்தார் . இவர் வீட்டில்தான் 15 மணி நேரம் ஷிபிட் போட்டு ஆவணங்களை அள்ளினார்கள். ஆவணங்களை மறைப்பதற்காக சித்தி பாத்ரூம் போய் ஒளிந்திருக்கிறார். விடாமல் துரத்தி இருக்கிறார்கள். அதையும் ஒரு காரணாமாக சொல்லி சித்தப்பு அனுதாபம் தேட முயற்சித்தார். சோழியன் கும்மிடி சும்மா ஆடாது என்பார்கள். எதுவும் வாங்காமல் ஆதரவு தெரிவிக்க சித்தப்பு ஒன்றும் சாமியார் அல்ல   16:57:06 IST
Rate this:
1 members
0 members
35 members
Share this Comment

ஏப்ரல்
11
2017
அரசியல் விவசாயிகள் போராட்டத்திற்கு தூண்டுதல் காரணம் ஹெச். ராஜா
இவர் என்ன மனசுல என்ன நெனைச்சிகிட்டு இருக்காரு. எதோ பிரதம மந்திரி லெவல்ல பேசுறாரு. மூத்த அமைச்சர்கள் கோரிக்கைகளை பெற்றுவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா? தெளிவா சொல்லனும்னா சக்கரை என்று பேப்பரில் எழுதி நக்கி பாருங்க இனிக்கும் என்று சொல்றார்.விவசாயிகளின் கடனை ரத்துப்பண்ண சொன்னால் மந்திரி வந்து பார்த்தல் சரி ஆகிடும் என்கிறார். பழமொழி சொல்வார்கள், கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு ஓடைச்சது போல இந்தியாவிலே 2 வது அதிகமாக வரி காட்டும் மாநிலம் தமிழகம். நம் வரி பணத்தை எடுத்து பங்களாதேஷுக்கு 30 ஆயிரம் கோடி, கென்யா விவசாயத்திற்கு 2 ஆயிரம் கோடி என்று வாரி இறக்கிறார்கள். நம் விவசாயிகளுக்கு நாமம் போடுவார்களாம். எவன் அப்பன் வீட்டு சொத்தை எடுத்து யாருக்கு கொடுப்பது? அடானிக்கு அம்பானிக்கு கொடுக்கும் பணத்தை நீங்கள் வசூல் பண்ணிவிட்டேர்களா? மல்லையாவின் நிழலை கூட நெருக்கமுடியவில்லை. நாட்டை விட்டு தப்பிவிட்டதே நீங்கள்தானே. நாங்கள் கொடுக்கும் வரியை என் மக்களுக்கு பயனடைய மட்டுமே. தெருவில் போற வரவனுக்கெல்லாம் தூக்கி கொடுக்க அது ஒன்றும் மோடி வீட்டு பணமும் இல்லை. ராஜாவின் பாக்கட் மணியும் இல்லை.   16:51:41 IST
Rate this:
6 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
24
2017
அரசியல் பிரசாரத்திற்கு தலைவர்கள் வருகை கங்கை அமரன்
Mr அமரன் நீங்கள் சுயேட்சையாக நின்றாலே நாலு வோட்டு கிடைக்கு.இப்ப பாருங்க உங்க நிலைமை என்னவாக போகிறதோ   17:29:45 IST
Rate this:
8 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X