muthu Rajendran : கருத்துக்கள் ( 761 )
muthu Rajendran
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
24
2019
அரசியல் தவறே செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவது நியாயமா?
ஒரு சில சின்ன கட்சிகளைத் தவிர மற்ற முக்கிய கட்சிகள் எல்லாமே பணம் பொடுத்திருக்கிறார்கள் என்று தொலைக்காட்சி விவாதங்களில் சொல்கிறார்கள்.கெட்டிக்காரத்தனமாக கொடுத்தவர்கள் அல்லது உரிய பாதுகாப்பு ஏற்பாட்டோடு கொடுத்தவ ர்கள் மாட்ட வில்லை யாரு பணம் கொடுத்தாலும் அது குற்றமே ஒரு வகையில் கொடுக்கும் தொகையும் கொடுக்கும் கட்சிகளுக்குள் போட்டியும் ஒரு உச்சத்தில் செல்லும் நிலையில் வாங்கும் மக்களுக்கே இதில் வெறுப்பு வரும் என்றைக்கு தனது வாக்கை விற்க கூடாது என்ற நிலைக்கு மக்கள் வருகிறார்களோ அது வரை இது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்.என்னை கேட்டால் வாங்குபவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை பாய வேண்டும். லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் போதிய அளவிற்கு வெற்றி பெறாததற்கு காரணமே லஞ்சம் கொடுத்தவர்களையும் பிடிக்காதது தான்   16:14:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
24
2019
சம்பவம் ஆதரிக்க ஆளில்லாத சோகம் மூத்த தம்பதி தற்கொலை
ஆதரவில்லாத முதியவர்களை காக்க அரசு மாவட்டம் தோறும் காப்பகங்கள் அமைக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. தேவையில்லாத வசதி படைத்தவர்களுக்கே இலவசங்களை கொடுக்கும் திட்டங்களுக்கு பதிலாக இது போன்று ஆதரவற்ற முதியவர்கள் , குழந்தைகள் , மாற்று திறனாளிகளை ஆதரிக்க அவசியம் திட்டங்கள் அதாவது காப்பகங்கள் அமைக்க வேண்டும் தேவையானால் நிதியுதவியை மக்களிடம்கோரலாம் அந்நன்கொடைகளுக்கு வருமானவரி விலக்கு கொடுக்கலாம். தாமே முன்வந்து உதவ வரும் அமைப்புகளை நபர்களையும் பயன்படுத்தி கொள்ளலாம் ஆதரவு இல்லை உணவு இல்லை என்பதற்காக யாரும் இறக்க கூடாது. இதை அரசு முன்வந்து செய்தால் அவர்களுக்கு கோடானகோடி நன்றிகள்   15:54:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
20
2019
சம்பவம் புதுக்கோட்டையில் பஸ்கள் நிறுத்தம்
தேர்தலுக்காக மதத்தை சொல்லி பிரித்தார்கள் பின்பு மதத்திற்குள் சாதி சொல்லி பிரிக்க பார்க்கிறார்கள் அரசியல் வியாதிகள்.ஆண்டாண்டு காலமாக அறிவியல் ரீதியாக எந்த ஒரு வித்தியாசமும் இல்லாத மனிதர்களை சாதி என்று பிரித்து பார்ப்பது எவ்வளவு கொடுமை .நாம் கற்ற கல்வியும் பண்பும் இதை கற்றுத்தரவில்லை என்றால் நாம் மனிதர்கள் என்று சொல்வதற்கே தகுதி இல்லாதவர்கள். காக்கை குருவி எங்கள் சாதி என்று பாரதி உயிரினங்களை எல்லாம் ஒன்றாய் பார்த்தான். ஆனால் நாமோ? வேதனைப்பட வேண்டிய விஷயம்   16:16:47 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
20
2019
சம்பவம் புதுக்கோட்டையில் பஸ்கள் நிறுத்தம்
ஜாதிகள் இல்லையடி பாப்பா -குலத்தில் தாழ்ச்சி உயர்வு சொல்தல் பாவம் என்று பாரதி சொன்னது பாப்பாவுக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்கும் தான். ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்வோம்   16:58:01 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
17
2019
பொது வித்தியாசமான தேர்தல்
தேர்தல் செய்தி, ஆய்வு கட்டுரை ,ஜோதிடர் கணிப்பு என்று ஒரு சார்பு செய்திகளை வெளியிட்டு நடுநிலைமையுடனும் செயல்படும் தினமலருக்கு வாழ்த்துக்கள்.   23:22:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
பொது மோடிக்கு ஓட்டளியுங்க தமிழக பத்திரிகையாளர்கள் வேண்டுகோள்
நடுநிலை என்று மீடியாக்கள் பத்திரிக்கைகள் சொல்வது இது தான் போலிருக்கு   08:42:55 IST
Rate this:
12 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
14
2019
அரசியல் ஊழலும், சர்வாதிகாரமும் தான் ஜனநாயகத்தின் பாதைகள்!
ஆங்கிலத்தை தவறாக படித்ததை /பேசியதை எழுதுகிறீர்கள். தமிழையே முன்னாள் தலைமை உள்பட தமிழ் உரையை எழுதியைத்தான் படித்தார்கள். இப்போது தவறான தகவலையும் சரியென்று படிக்கிறார்கள். அது தான் வித்தியாசம். ஆனால் மொழி அறிவை விட பொது அறிவு அவசியம். அதிகம் பேசாத காமராஜர் தான் நிறைய சாதித்தார். நேர்மையாகவும் இருந்தார்   23:53:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
அரசியல் ஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம் தி.மு.க.,வுக்கு நெருக்கடி தரும் பிரசாரம்
சாதாரண மனிதன் ஒரு அன்றாட தேவைக்காக எப்படியெல்லாம் அரசு அலுவலகங்களில் அலைகழிக்க படுகிறான் தெரியுமா ?சான்றாக சத்திய மூர்த்தி என்பவர் இறந்துவிடுகிறார். அவரது வாரிசுகள் அவரது ஓய்வூதியம் , சொத்து வங்கியில் உள்ள வைப்பு நிதி ஆகியவற்றை பெற சில அலுவலகங்களில் சான்றிதழ் பெற முயல்கின்றனர் ,.சத்திய மூர்த்தி என்ற தமிழ் பெயர் ஆங்கிலத்தில் ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒவ்வொரு மாதிரி சான்றாக moorthi, murthi, moorthy, murthy எழுதுகிறார்கள் இதை வைத்துகொண்டு தமிழ் பெயரை விட்டு விட்டு ஆங்கிலத்தில் பெயர் தவறாக உள்ளது என்று அலைக்கழிக்கபடுகிரார்கள். இத்தனைக்கும் தமிழ் நமது மாநில ஆட்சி மொழி. இதெல்லாம் கொடுப்பதை கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும். மனித இரக்கம் இல்லாமல் எல்லோரையும் ஏன் ஏழைகளையும் கசக்கி பிழிந்து காசு பார்க்கின்ற மனிதர்களை நினைத்து கொண்டுதான் பாதிக்கபட்டவன் வாக்கு சாவடிக்கு போவான். கஷ்ட படுகிரவனுக்கு கடவுள் கூட கஞ்சி வடிவத்தில் வந்தால் தான் அவனுக்கு தெரியும்.எனவே இறைவனை வைத்து அரசியல் செய்யாதீர்கள். நேர்மையானவர்களை ஒழுக்கமானவர்களை திறமையனாவர்களை தேர்வுசெய்தால் நாடு நலம் பெரும்.மதம் இனம் சாதி தாண்டி சரியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்   17:01:54 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
அரசியல் தமிழகத்தில் ஓட்டுப்பதிவு எப்படி இருக்கும்?
மக்கள் தேவைக்காக அணுகும் அரசு மாநகராட்சி குடிநீர் வாரிய மின் வாரிய அலுவலகங்களில் கையூட்டு பெறுவதை முற்றிலும் ஒழிப்போம் என்று ஆளும் கட்சியும் சரி மற்ற கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு அலுவலகத்திலும் அரசியல் அலுவலக ஊழியர் கூட்டணி வலுவாக உள்ளதால் தான் லஞ்ச ஒழிப்பு துறை கூட அதிகம் பிடிக்க முடியவில்லை போலும் மீடியாக்கள் கூட இந்த கூட்டணி பற்றி ஏனோ எழுதுவது இல்லை.   16:18:20 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
அரசியல் வேலூர் தேர்தல் ரத்து கூடாது அமைச்சர்
சோதனை எல்லாக்கட்சியினரையும் தொட்டால் தான் இவர்கள் அத்தனை பெரும் உத்தமர் தானா என்று தெரியும்.,   13:28:21 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X