Bala Sreenivasan : கருத்துக்கள் ( 21 )
Bala Sreenivasan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
2
2021
சினிமா
இருளர்களின் நிலைக்கு பிராமணர்கள்தான் காரணம் என்று வழக்கம்போல் சொல்லாமல் விட்டதற்காவே படக்குழுவினரை பாராட்டலாம் அது மாதிரி லாக்கப் வன்முறை விவரங்களுடன் காட்டி இருப்பது போலீஸ் மீது ஒரு அச்சத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்துகிறது என்பது உறுதி. உண்மையில் நடந்தது என்பதற்காக இவ்வளவு வெளிப்படையாக காட்டினால் சட்டம் ஒழுங்கை சிவகுமார் குடும்பமா வந்து காப்பாற்றப் போகிறது? நேர்மையான காவல் துறை அதிகாரிகள் மத்தியில் ஒரு சோர்வு ஏற்பட்டால் அது சமுதாயத்திற்கு நல்லதல்ல பிரச்சினை என்னவென்றால் எஸ். ஐ குருமூர்த்தி பாத்திரத்தை நினைவு வைத்துக்கொள்வது போல பிரகாஸ்ராஜ் கதாபாத்திரம் மக்கள் மனதில் நிற்காது என்பதுதான்   09:06:04 IST
Rate this:
4 members
0 members
4 members

ஆகஸ்ட்
3
2021
சினிமா அப்பா சொத்தை அழித்தேனா? : எஸ்.பி.பி சரண் கோபம்...
இன்னொரு திரைப்பட பிரபலத்தின் வாரிசுகளுடன் இவர் சேர்ந்து விளையாடிய விளையாட்டுக்களால் ஒரு நடிகைக்கு கோடிக்கணக்கில் பணம் செட்டில் செய்தது பற்றி எல்லாம் பேசுவது சரியாக இருக்காது.   07:28:45 IST
Rate this:
2 members
2 members
19 members

மார்ச்
21
2021
Rate this:
1 members
0 members
1 members

டிசம்பர்
2
2020
அரசியல் கட்சி துவக்கம் எப்போது? ரஜினி மீண்டும் ஆலோசனை
எனக்கென்னமோ ஆட்டம் காட்டிவிட்டு ஒரு வழியாக அரசியலுக்கு வந்துவிடுவார் என்றுதான் படுகிறது. வரவில்லை என்றால் எதற்கு இத்தனை சுற்று ஆலோசனை கூட்டங்கள் களையெடுப்பு பணிகள் ?   09:40:48 IST
Rate this:
2 members
0 members
5 members

அக்டோபர்
19
2020
சினிமா புத்தம் புதுக் காலை - வெளுத்து வாங்கிய நட்டி...
நட்டி கருத்து நூறு சதவிகிதம் சரி ஒரு படைப்பாளியின் படங்கள் பேசவேண்டும் படைப்பாளி அல்ல இந்த சுகாசினி, ராஜீவ் மேனன் படங்களையும்விடஅவர்கள் பேசுவதுதான் அதிகம் தெரியாமல்தான்தான் கேட்கிறேன் இவர்கள் தனியே இயக்கிய படங்களில் பார்க்கிற மாதிரி ஏதாவது ஒரு படம் சொல்லுங்களேன்? இதில் ராஜீவ் மேனன் பேசியே கொல்கிற டைப் காமிராவை கையாண்டால் மட்டும் போதாது கூடவே கதையும் சொல்லவேண்டும் என்கிற அடிப்படை விஷயத்தை இன்னும் இவர் புரிந்து கொள்ளவில்லை   08:05:31 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
8
2020
பொது சென்னை - புதுச்சேரி - கன்னியாகுமரி இடையே வாட்டர்போர்ட்!
அடாடா இதென்ன கூத்து ஏதோ நல்ல திட்டம் மாதிரி இல்ல தோணுது? அப்போ தமிழ்நாடு உறுப்ப்டுடும்னா சொல்றீங்க?..நம்பவே முடியலீங்க... ஏதாவது காரணம் சொல்லி தடுத்து நிறுத்தாட்டி தமிழனா பொறந்து பிரயோஜனம் இல்லாம போயிரும் இல்ல? ரூம் போட்டு யோசிப்போம்   12:17:31 IST
Rate this:
2 members
0 members
10 members

அக்டோபர்
8
2020
சினிமா "இரண்டாம் குத்து" படம் எடுத்தவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா? - பாரதிராஜா கண்டனம்...
அரிசி குத்தும் அக்கா மகளே பாட்டு யாரு படத்தில் வந்தது? யாராச்சும் கேட்டு சொன்னீங்கன்னா நல்லாருக்கும்   08:17:03 IST
Rate this:
1 members
1 members
15 members

செப்டம்பர்
14
2020
பொது நீட் தேர்வு பற்றி சூர்யா டுவிட்டரில் ட்ரெண்டிங்
தெரியாமத்தான் கேட்கிறேன்...இது என்ன ஊரு..என்ன அரசியல் இது?..நீதி மன்ற அவமதிப்பு என்று நீதிபதி சொல்றதுக்கு எதிரா அஞ்சு நீதிபதிங்க நடிகர் நெறைய நல்ல காரியம் பண்ராருன்னு காரணத்துக்காக நடவடிக்கை எடுக்கக்கூடாது ன்னு வேண்டுகோள் வைக்கிறாங்கலாம்? உறுப்பட்டுவிடும் போங்க வெட்கக்கேடு   10:46:59 IST
Rate this:
1 members
0 members
6 members

செப்டம்பர்
14
2020
பொது நீட் தேர்வு பற்றி சூர்யா டுவிட்டரில் ட்ரெண்டிங்
கோடிக்கணக்கில் மாணவர்களுக்கு தனது அறக்கட்டளையின் மூலம் நிதிஉதவி தருகிறார் என்பதற்காக மாணவர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் கையில் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாரோ இந்த நடிகர்? முன்பு இப்படித்தான் இந்தநாளிதழை சார்ந்த ஒரு செய்தி சேகரிப்பாளர், முன்னணி சினிமா நடிகைகள் பற்றி இன்னொரு நடிகை சொன்னதை செய்தியாக வெளியிட்டதற்காக சினிமாக்காரர்கள் நடத்திய கண்டனக் கூட்டத்தில் அருவெறுப்பான வார்த்தைகளில் வசை பாடினார் என்பது நினைவு கூறத்தக்கது. இந்த கலை குடும்பத்தினருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.. வேற்று மத பிரச்சாரத்துக்கு விலை போய் விட்டார்களோ என்னவோ என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது இவர்களது அறிக்கைகளும் நடத்தையும் அல்லது அரசியல் ஆர்வமோ தெரியவில்லை. மரியாதையை இழக்க ஆரம்பித்திருக்கிறார்கள்   10:33:20 IST
Rate this:
2 members
0 members
5 members

செப்டம்பர்
7
2020
பொது திமுக வேணாம் போடா வைரலான ஹேஷ்டேக்
இப்படித்தான் 1965 இல் இவர்கள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்ததில் எதோ வட நாட்டிலிருந்து நமது மொழிக்கும் பாரம்பரியத்துக்கும் வேட்டு வைக்க ஒரு பெரிய கூட்டம் கிளம்பி வருகிறது என்று நினைத்து கையில் தார் சட்டியுடன் வீதி வீதியாக ஹிந்தி பெயர் பலகைகளை அழித்து அசிங்கப்படுத்தினாலே தமிழ் வளர்ந்துவிடும் என்று அலைந்து திரிந்தவர்களில் நானும் ஒருவன். "தமிழ் தாய்-இந்தி பேய் ..தமிழுக்கு மேடை- இந்திக்கு பாடை .தமிழுக்கு தாலாட்டு -இந்திக்கு ......தமிழ் உயிர்-இந்தி .....என்று அருவருக்கத்தக்க வாசகங்களை எழுதி இறும்பூது எய்திய பல இளைஞர்களில் நானும் ஒருவன். எங்கள் பள்ளியில் ஹிந்தி கற்பித்த ஆசிரியரின் வேட்டியை பிடித்து இழுத்து அவமரியாதை செய்து தமிழ் வாழ்ந்துவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தேன். பிறகு திராவிட கட்சிகளின் ஆட்சியில் இங்கு வேலை கிடைக்காமல் வட மாநிலங்களுக்கு போனதில் நாய் படாத பாடு பட்டு அவர்கள் மொழியை கற்று மனம் விசாலமாகி மூடி இருந்த கதவுகள் திறந்து இது ஒரு நாடுதான் என்கிற ஒருமைப்பாடு வளர்ந்து வேரூன்றி இன்று எதோ வாழ்கையை ஒட்டிக் கொண்டிருக்கிறேன். திராவிட அரசியல் தமிழனை படு குழியில் வீழ்த்தியது அடிப்படைகளையே நாசம் செய்தது. நாகசாலைட்டுகள் மற்றும் இதர தீவிரவாதிகளை போல தடை செய்யப்பட வேண்டிய பாசிஸ்ட் இயக்கங்கள். இதை சொல்ல ஒரு மா.போ.சியோ, சின்ன அண்ணாமலையோ, நெல்லை ஜெபமணியோ கண்ணதாசனோ போதாது. என் பங்கும் இருக்கட்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு 80 வயதை நெருங்கி கொண்டிருக்கும் இந்த வேளையில் என் அனுபவங்களை பகிர்வதை நான் ஒரு சேவையாக நினைக்கிறேன்.வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் ..வாழிய பாரத மணித்திருநாடு வந்தே மாதரம்   08:38:46 IST
Rate this:
1 members
0 members
27 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X