S.Subramanian : கருத்துக்கள் ( 33 )
S.Subramanian
Advertisement
Advertisement
Advertisement
மே
19
2021
பொது தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு 3 மாதத்துக்கு பின் தடுப்பூசி அரசு
தடுப்பூசி மருந்து அவ்வளவாக கையிருப்பில் இல்லை. அதனால் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை மூன்று மாதங்கள் கழித்து போடலாம் என்றார்கள். இப்போது கொரானா வந்து குணமானவர்களும் மூன்று மாதங்கள் கழித்து தான் தடுப்பூசி போடவேண்டும் எங்கிறார்கள். என்னமோ... நடக்கிறது. எதுவும் நல்ல விஷயமாகத் தெரியவில்லை.. ஆண்டவன் தான் நம்மை காப்பற்ற வேண்டும்.   10:37:52 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
19
2021
பொது இ - பதிவு உதவிக்கு இலவச எண் அழைத்தால் பேச ஆளே இல்லை
அரசு அலுவலர்களை குறை சொல்லக்கூடாது. இ-பாஸ் பற்றி அவர்களுக்கே இன்னும் சரிவர தெரிந்திருக்காது. ஏதாவது தனக்கு தெரிந்த ஒரு பதிலை சொல்லி வைக்க, அது வில்லங்கமாகிவிடக்கூடாது அல்லவா........ . இ-பாஸ் மட்டும் அல்ல.... பெரும்பாலும் கட்டணமில்லா அழைப்புகள் இப்படித் தான் இருக்கும். ஒரு தகவலும் சரிவர தெரிந்து கொள்ள முடியாது.   10:26:30 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
18
2021
பொது புதிதாக ரேஷன்கார்டு பெற்றவர்களுக்கு ரூ.2,000 வழங்க ஸ்டாலின் உத்தரவு
அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே அரசாங்கம் எல்லா நலத்திட்ட உதவிகளையும், இலவசங்ககளையும் கொடுக்கின்றன.. சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் பெரும் பணக்காரர்களா? அவர்கள் கொரானாவினால் பாதிக்கப்படவில்லையா? கொஞ்சம் மனிதாபிமானத்தோடு, அரசு எல்லோருக்கும் நிவாரண உதவி கிடைக்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். செய்வீர்களா....... முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே.......   12:16:35 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
19
2021
அரசியல் விஜயகாந்துக்கு மூச்சு திணறல் மருத்துவமனையில் அனுமதி
நேர்மையானவர்களுக்கு கொஞ்சம் அதிகப்படியான கோபம் வரும் என்பார்கள். திரு. விஜயகாந்த் அவர்கள் கோபக்காரராக இருந்தாலும் நல்ல மனிதர். நலமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்   12:04:22 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
13
2021
சினிமா உதயநிதி படத்தில் ஷிவானி ராஜசேகர்...
இனி அண்ணன் கூட நடிக்க கடும் போட்டி நிலவும்.   12:13:56 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
15
2021
வீடியோ படுக்கை வசதி கோரி மன்றாடினர்
இப்போது உங்கள் பதவியைப் பயன்படுத்தி அவர்களுக்கு எந்தவகையிலாவது உதவுங்கள். செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.   12:11:20 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
14
2021
சம்பவம் ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணை படுக்கைக்கு அழைத்த கொடூரன்
நாடு எங்கே போய் கொண்டிருக்கிறது? இந்த செய்தி உண்மையாயின், அந்த நபர் மீது பாலியல் வன் கொடுமை சட்டத்தின் கீழ் உடனடி நடவடிக்கை தேவை. ஆண்டவா........ என் தேசத்தை காப்பாற்று............   11:20:06 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
13
2021
பொது ஜூன் 3-ல் கொரோனா நிவாரண மளிகை பொருட்கள் விநியோகம்
நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணினால், அதனை உடனே செய்ய வேண்டியது தானே. ஏன் ஜூன் மூன்றாம் தேதி வரை காத்திருக்க வேண்டும். மளிகைப் பொருட்கள் பேக்கிங், மற்றும் இதர வேலைகள் முடிந்தவுடன், உடனே விநியோகத்தை ஆரம்பிக்க வேண்டியது தானே. அவர் பிறந்தநாள், இவர் பிறந்தநாள் வரட்டும் என ஏன் காத்திருக்கவேண்டும்? நல்ல செயல்களை ஆறப்போடாமல் உடன் செய்வது தான் நல்ல அரசுக்குப் பெருமை.   11:49:41 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2021
அரசியல் கருணாநிதி சமாதியில் சபாநாயகர், துணை சபாநாயகர்
சபாநாயகராக பதவி ஏற்பதற்கு முன் அண்ணா, கருணாநிதி சமாதிகளுக்கு சென்று வந்தால், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர் என்று எண்ணிக் கொண்டு சாதாரண விஷயமாக விட்டு விடலாம். சபாநாயகராக தேர்ந்தெடுத்த பிறகு, அவர் கட்சி சார்பற்ற ஒரு பொதுநபர் என்றாகி விடுகிறார். அனைத்து சமாதிகளுக்கும் சென்று ஒரு வணக்கம் போட்டு வந்து, தன்னை ஒரு பொதுநபர் என்று காட்டியிருக்கலாம். அதைவிட்டு ஒரு குறிப்பிட்ட, தான் சார்ந்திருந்த கட்சியை சார்ந்த தலைவர்களின் சமாதிக்கு மட்டும் சென்று மரியாதை செலுத்தி வந்தவர், எப்படி எல்லா கட்சினருக்கும் பொதுவானவராக இருந்து சட்டசபையை நடத்திச் செல்வார் ?. முதல் கோணல் முற்றும் கோணலா?   11:09:50 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2021
பொது நடிகர் சிவகுமார் ரூ.1 கோடி நிதி
சிறுதொகையாக ஒரு கோடி வழங்கியிருக்கிறோம். உங்களுக்கு ஒரு கோடி சிறுதொகை எனில், நீங்கள் எத்தனை கோடி வைத்திருப்பீர்கள்? இந்த நேரத்தில் ஏழை, எளிய மக்களுக்கு மேலும் உதவி செய்யலாமே?   10:43:17 IST
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X