ராம.ராசு : கருத்துக்கள் ( 211 )
ராம.ராசு
Advertisement
Advertisement
Advertisement
மே
11
2021
பொது ஜீயரா, டைப்பிஸ்டா, அலுவலக உதவியாளரா? அறநிலைய துறை அத்துமீறல்!
மக்களாட்சி நாட்டில் அனைத்துமே அரசுக்கு கட்டுப்பட்டது என்பதைச் சொல்லவேண்டியது இல்லை. ஒரு இந்துக்கோவிலில் ஜீயராக இருக்க கண்டிப்பாக அவர் ஒரு இந்துவாக இருக்கவேண்டும். இந்து கடவுள்கள் மீது முழு நம்பிக்கை உள்ளவராக இருக்கவேண்டும். மற்றபடி காலம் காலமாக இருக்கும் வழக்கங்கள் இப்போது இருக்க வேண்டும் என்பது இல்லை. எத்தனையோ ஆகம விதிகளை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுக் கொண்டுதான் உள்ளது. கோவில்களின் இருந்த நாதஸ்வர இசை இப்போது மின்சாரத்தில் இயக்கப்படுகிறது போன்ற எத்தனையோ மாற்றங்கள். கொரோனா வைக் காரணம் காட்டி காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த எத்தனையோ ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளன இல்லை இல்லை மாற்றப்பட்டுள்ளன. அரசு கண்டிப்பாக ஒரு இந்து மதத்தைச் சேர்ந்தவரைத்தான் அரசு தேர்வு செய்யும் என்பது கொஞ்சமும் சந்தேகமே இல்லை. இதற்க்கு எதற்க்காக எதிர்ப்பு இருக்கவேண்டும் என்று தெரியவில்லை. அனைத்துத் தொழிலையும் அனைவரும் செய்வது என்பது இப்போது நடைமுறையாகிப் போய்விட்டது. என்கிறபோது கோவிலின் தலைமைப் பொறுப்பில் இருப்பதற்கு அனைத்து இந்துக்களுக்கும் உரிமை உள்ளது என்பதை மறுக்க முடியாது... கூடாது. பெரும்பாலான இந்துக்கள் அரசின் இந்த முடிவை பாராட்டவே செய்வார்கள். ஏனென்றால் கடவுளை மதத்தில் இருக்கின்ற ஒரு பிரிவினர் மட்டுமே உரிமை கொண்டாடுவது சரியானது அல்ல. அரசின் இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டால் இந்துக்கள் ஒற்றுமை என்பது இன்னும் பலப்படும். எதிர்ப்பது என்பது மற்ற இந்துக்களோடு இணைந்து வாழ்வதற்கான மனப் போக்கு இல்லாத நிலையைக் காட்டுவதாகவே இருக்கும். அந்த விளம்பரம் கூட "ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர், 51வது பட்டத்துக்கு காலியாக உள்ள பதவிக்கு நியமனம் செய்ய, ஹிந்து தென்கலை தென்னாச்சார்ய சம்பிரதாயத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்" என்றுதான் உள்ளது. அனைத்து இந்து மதத்து சமுதாயத்தினரும் அல்ல. கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அதிகாரியாக பதவி வகிப்பவர் பெயரில் விளம்பரம் செய்ததுதான் பெரிய குற்றமாகப் பார்க்கப்படுகிறது. அவர் கூட இந்துதான். அரசால் நியமிக்கப்பட்ட அந்த அதிகாரியோடு கலந்து ஆலோசிப்பதில் இருக்கின்ற மன சுருக்கம்தான், இந்து மதத்தையே, மதத்தினரையே புண்படுத்துவதாக ஊதி பெரிதாக்கப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும்.   22:22:57 IST
Rate this:
4 members
0 members
3 members

மே
10
2021
அரசியல் அதிமுக.,வின் 2 ராஜ்யசபா எம்.பி.,க்கள் ராஜினாமா
எந்த மாதிரியான தேர்தல் விதிகளோ ஒரு அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டுத்தான் தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால் ஏற்கனவே பாராளு மன்ற உறுப்பினராக இருப்பவர், உறுப்பினராக இருந்துகொண்டே சட்ட மன்றத் தேர்தலிலும் போட்டியிடலாம் என்பது எப்படி? இப்போது வெற்றி பெற்று, பிறகு ராஜினாமா செய்வார்களாம். அதற்க்கு அரசு செலவில், மக்கள் வரிப்பணத்தில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமாம். எந்த மாதிரியான தேர்தல் விதிகளோ   21:21:22 IST
Rate this:
1 members
0 members
10 members

ஏப்ரல்
16
2021
பொது தொற்று தவிர்க்க இரட்டை மாஸ்க் அணியலாம் இ.எஸ்.ஐ., டாக்டர் பரிந்துரை
இந்திய உணவுக்கு கலாச்சாரம். அதில் மருத்துவக் குணம் நிரம்பி உள்ளது. உண்ணுகின்ற ஒவ்வொரு காய்கறியில் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் நிரம்பி உள்ளது. நமது பாரம்பரிய மருத்துவத்தில் தீர்க்க முடியாத நோய்கள் இல்லை. அத்தனை நோய்களுக்கும் நமது முன்னோர்களும், சித்தர்களும் மருந்துகளை கொடுத்துள்ளார்கள். மஞ்சளில் மருத்துவம். சீரகத்தில் மருத்துவரும். கீரைகளில் மருத்துவம். வேப்பிலையில் மருத்துவம். வெங்காயத்தில் மருத்துவம். இரண்டு மிளகு இருந்தால் போதும் பகைவன் வீட்டிலும் உண்ணலாம். இதை அத்தனையையும் விட "கோமியத்தில்" அத்தனை நோயும் கட்டுப்பட்டுப் போகும். மாட்டுச்சாணம் (பசுஞ்சாணம்) அற்புதமான கிருமி நாசினி. இப்படியெல்லாம் நமது பாரம்பரியத்தைச் சிலாகித்திக்கொண்டு இரும்தொம். ஆனால் ஒரு வைரசுக்குத் தீர்வாக முக கவசம் அதுவும் இரட்டை முக கவசம் மிகவும் நல்லது என்று மிகப் பெரிய செய்தியாக்குகிறோம். உண்மையிலேயே நமது பாரம்பரிய உணவிலும், சித்தர்கள் சொன்ன மூலிகை மருந்துகளும் சரியான தீர்வு தரும் என்றால் அதுபற்றிய விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இரட்டை முக கவசத்திற்கும், தடுப்பூசிக்கும் விளம்பரம் செய்துகொண்டு இருக்கிறோமே என்று நினைக்கத் தோன்றுகிறது. முக கவசம் கட்டாயம். சமூக இடைவெளி கட்டாயம். சானிடைசர் கட்டாயம். அடிக்கடி கைகளைக் கழுவவேண்டும். இவை அனைத்தும் நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களுக்காவே சொல்லப்படுகிறது. அவைகளை மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்கவேண்டியுள்ளது. மக்கள் எப்போதும் அரசின் அறிவுறுத்தல்களை முடிந்த அளவு பின்பற்றவே செய்கிறார்கள். வாழ்வாதாரத்திற்கு வழியில்லாதவர்கள் மட்டுமே சில வேலைகளை அரசு சொல்லுகின்ற கட்டுப்பாடுகளை மீறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறார்கள். மக்கள் வைரசுக்கும் அரசின் கட்டுப்பாடுகளுக்கு பயந்து பயந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். சுந்தந்திர நாட்டில் சுதந்திரமாகக் கூட சுவாசிக்க முடியவில்லையே என்ற நிலை. என்ன சொல்ல....   15:01:35 IST
Rate this:
1 members
0 members
2 members

ஏப்ரல்
10
2021
பொது இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 1.45 லட்சம் பேருக்கு தொற்று
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.சி.ஆர்.எச்) அறிவியல் ஆலோசனைக் குழுவின் கூட்டம் ஜனவரி 2020 இல் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட ஆலோசனை சொல்லப்பட்டு உள்ளது என்பது பத்திரிக்கை செய்தி: “கொரோனா வைரசுக்கு மருந்து ஹோமியோபதி மருந்தான, Arsenicum album 30 என்பதை, தினமும் காலை வெறும் வயிற்றில் 3 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது, கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும். ஒருவேளை, பாதிப்பு தொடர்ந்தால், இதே மாதிரியில், தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும். இன்ப்ளூயென்சா போன்ற நோய்த் தொற்றுக்கும், இதே மருந்தை இதே பாணியில் உட்கொண்டு நலம் பெறலாம்”. இவ்வளவு எளிதான குறைந்த விலையில் மருந்து உள்ளது என்பதை ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில் உறுதிபடச் சொல்லுகிறது. ஆனால் தடுப்பூசி என்பதை மட்டுமே அரசு வலியுறுத்தி சொல்லிக்கொண்டு உள்ளது. தடுப்பூசிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஜனவரி 2020 லிருந்தே Arsenicum album 30 மருந்துக்கு கொடுத்து, மக்கள் அனைவருக்கும் கிடைப்பதற்கான, சாப்பிடக் கொடுக்கப்பட்டு இருந்தால், இப்போது 2 அலை என்ற நிலை உருவாகி இருக்காது. மிகக் குறைவான விலையுள்ள, எளிதாகக் கிடைக்கும் Arsenicum album 30 இப்போதுதாவது தாராளமாக, இலவசமாக மக்களுக்கு கிடைப்பதற்கான வழியை மத்திய மாநில அரசுகள் செய்தால், நாட்டில் அமைதியான, நிம்மதியான நிலை உருவாகும். ஒன்றுமட்டும் புரியவில்லை. இந்த வைரஸ் தொற்று தடுப்பதற்கான, அரசுகளே ஒத்துக்கொண்ட கபசுர குடிநீர் மற்றும் Arsenicum album 30 இரண்டையும், ஏன் மக்களுக்கு பரிந்துரைப்பதில் சுணக்கம் காட்டுகிறது என்பது. கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்துகொண்டு இருப்பதாகவே தெரிகிறது. என்ன சொல்ல...   12:13:10 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
9
2021
பொது மறந்து போனதேன் சுகாதாரத்துறையே மக்காத பிளாஸ்டிக் கையுறை வழங்கலாமா?
இப்போது "கேள்வி எழுந்து" என்ன செய்வது? மக்கள் செய்தால் தான் அவர்களுக்கு அபராதம், தண்டனை. அரசு என்று சொல்லி எதைச் செய்தாலும் அதற்க்கு எதிர் கருத்து கூட சொல்லக் கூடாத நிலை மக்களுக்கு. சானிடைசர் போடப்படுகிறது பிறகு எதற்காக கையுறை.. அதுவும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில். வருமுன் தடுப்பதும், முன்னெச்சரிக்கையாக இருப்பதும் மிக அவசியம்தான். அதே சமயம் இந்த அளவிற்கு முன்னெச்சரிக்கை தேவைதானா என்ற எண்ணமும் எழுகிறது. சாமானியர்கள். தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டால் அவர்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று அவர்கள் சொல்லுவதை அனைவரும் கேட்டாக வேண்டிய கட்டாயம். என்ன சொல்ல...   10:41:47 IST
Rate this:
0 members
0 members
5 members

ஏப்ரல்
5
2021
சிறப்பு பகுதிகள் தைரியமாக எடுத்துக் கொள்ளுங்கள் தடுப்பூசியை!
தடுப்பூசி என்பது நூறு சதவிகிதம் நம்பிக்கை அளிப்பதாக இருக்கவேண்டும். "100 பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டால், 80 பேருக்கு இந்த நோய் வராது 20 பேருக்கு இந்த நோய் வர வாய்ப்புண்டு." என்பது எந்த அடிப்படையில் சொல்லுகிறாரோ தெரியவில்லை. ஏதோ ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில் இருந்தால் பரவாயில்லை. ஆனால் அந்த இருபது பேர்களில் நாமும் ஒருவரவாக இருந்துவிடக் கூடாது என்ற பயம் இருக்கத்தானே செய்யும். அதுமட்டுமல்ல மற்ற தடுப்பூசி போல அல்லாமல் பக்கவிளைவுகள் என்பது அதிகமாக உள்ளது என்ற பரவலான செய்திகளும் மக்கள் பயப்படுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. செய்தி ஊடகங்களில் தடுப்பூசி பக்க விளைவுகள் பற்றி முழுமையாகச் செய்தியாக்கப்படாவிட்டாலும், சமூக ஊடகங்களில் அதுபற்றிய செய்திகளுக்கு மக்கள் ஆதரவு நிலையைக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. கொரோனா வைரஸ் பற்றிய பயத்தைவிட, அதுபற்றிய செய்தி ஊடகங்களில் வரும் புள்ளி விபரங்கள்தான் மக்களை பத்தற்றத்தில் வைத்துகொண்டு இருந்தது. ஆனால் அந்த பயம் அன்றாட வாழ்க்கையை முடக்கிப்போட்டது என்பதுதான் எதார்த்தமான உண்மை. பயந்து பயந்து வாழ்வதைவிட துணிந்து வாழ்ந்துவிடலாம் என்ற எண்ணத்தில் கொரொனோ பற்றிய அச்சத்திலிருந்து மக்கள் மீண்டு வந்துவிட்டார்கள் என்பதை மக்கள் இயல்பாக இருப்பதை வைத்தே புரிந்துகொள்ள முடியும். தடுப்பூசியால் பக்க விளைவுகள் என்ற செய்திகளால், மக்கள் அதற்க்கான ஆதரவைக் கொடுக்காமல் தவிர்த்து விடுகிறார்கள் என்பது நடைமுறையில் தெரிகிறது. காலம்தான் பதில் சொல்லவேண்டும்.   11:13:34 IST
Rate this:
3 members
0 members
2 members

மார்ச்
25
2021
பொது அழிந்துவரும் தமிழக கோவில்கள்! சத்குருவுக்கு பிரபலங்கள் ஆதரவு
"அழிந்துவரும் தமிழக கோவில்கள்" - இது வெறுமனே தனக்கான ஆதரவை பெருக்குவதற்கான ஒரு தந்திரம் என்றுதான் சொல்லவேண்டும். தமிழ் நாட்டு அதற்காக "இந்து அறநிலையத்துறை" என்ற ஒன்றை உருவாக்கி, மிகச் சிறப்பாக பராமரித்து வந்துகொண்டுதான் உள்ளது. இவருக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமென்றால், கோடிகளைக் கொட்டி புதிதாக ஒரு சிலையை உருவாக்காமல், இவர் சொல்லுவதுபோல சிதிலமடைந்த கோவில்களை பராமரிக்கலாம். இதோ சமீபத்தில் கூட மஹா சிவராத்திரி என்று ஆயிரங்களில் கட்டணம் பெற்று மிகப் பெரிய நிகழ்வாக காட்டப்பட்டது. திரு.சுகி சிவம்தான் சொல்வார், அத்தி வரதர்தான் நல்லது செய்வாரா... ஏற்கனவே உள்ள அங்கெ உள்ள பெருமாள் நல்லது செய்ய மாட்டார் என்று. பழையன கழித்தல் என்பது இயற்கையில் இயல்பு. பெருங்கோவில்களை ஆங்காங்கே இருக்கின்ற தர்மக்கர்த்தாக்கள் பரம்ப்பரையாக கோவில் சொத்துக்களை ஆண்டு அனுபவித்து வந்ததால்தான், அதைத் தவிற்பதற்காக அரசே அதற்கென்று துறையை உருவாக்கி பராமரித்து வருகிறது. அதை செய்பவர்களும் இந்துக்கள்தான். ஆனால் அது இவர்களைப் போன்றவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்ச்சிதான் இப்படி "அழிந்துவரும் தமிழக கோவில்கள்" என்று சொல்லி பரபரப்பை உருவாக்குகிறார்கள். அற நிலையத்துறையில் நிர்வாகத்தில் இருப்பவர்கள் மெத்தப்படித்த, நமது நாட்டைச் சேர்ந்த இந்துக்கள்தான். கடவுள் பெயரைச் சொல்லி இவரைப்போன்றவர்கள் மனிதர்கள் மீது, ஆட்சியாளர்களை குறை சொல்லுகிறார்கள். கோவில்களை பழுதாக இருந்தால், ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்து, சீர் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதைவிட்டு தனி மனிதர்களிடம் அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும் என்று சொல்வது..... துறவி என்று சொல்லிக்கொண்டு ஆட்சி அதிகாரத்தில் தலையீடு செய்வதே. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கோவில்கள் வேண்டாம் என்று சொல்வது.... ஏமாற்றுபவர்களின் கூடாரமாக அது ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே. சும்மா கொண்டுவரப்பட்டு இருக்காது "இந்து சமய அறநிலையத்துறை". நன்கு ஆய்ந்து ஆராய்ந்துதான் கொண்டுவந்து இருப்பார்கள். இப்படியான ஏற்பாடுகள் குட்டையைக் குழப்புவது என்றுதான் சொல்லவேண்டும்.   21:06:38 IST
Rate this:
2 members
0 members
1 members

மார்ச்
18
2021
பொது தமிழகத்தில் மேலும் 989 பேருக்கு கொரோனா பாதிப்பு
மருத்துவம் என்றாலே அலோபதி மட்டுமே என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. தடுப்பூசிக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஒரு வகையில் சரியே என்றாலும், கொரோனா பாதிப்பிற்கு முக்கியக் காரணம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்றுதான் சொல்லப்படுகிறது. தடுப்பூசி போடுவதால் சில பாதிப்புகள் வருவதாக பரவலாகப் பேசப்படுவதால் பெரும்பாலானவர்கள் அதை போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது. என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று அரசு பரிந்துரை செய்தால், வசதி உள்ளவர்கள் வாங்கி பயன்படுத்துவார்கள். வசதி இல்லாதவர்களுக்கு அரசே நேரடியாக கொடுக்கலாம். அதே சமயம் சித்தாவில் பரிந்துரை செய்யப்படுகின்ற "கப சுர குடிநீர்" மற்றும் ஹோமியோபதியில் பரிந்துரை செய்யப்படுகின்ற "Arsenicum Album- 30 போன்ற மருந்துகளை இலவசமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகம் செய்யலாம். தடுப்பூசிகள் பற்றி கிடைக்கப் பெறுகிற எதிர்மறையான தகவல்கள், மக்களுக்கு அதன் மீதான பயத்தை அதிகரிக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். எனவே, தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், அதைவிட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை மக்களுக்கு கொடுப்பது மிகப் பயன் உள்ளதாக இருக்கும். அதற்க்கு அரசும், முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளும் மனசு வைக்க வேண்டும்.   21:57:01 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
7
2021
பொது மார்ச்.,7 இன்றைய பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்
எரிபொருட்களின் விலையைப் பொறுத்தமட்டில் இன்ற மத்திய ஆட்சியாளர்கள் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். “டீசல் விலை திடுக்கிட வைக்கிறது.” “பெட்ரோல் விலை பயமுறுத்துகிறது.” “கேஸ் விலை கவலைப்பட வைக்கிறது.” “மண்ணெண்ணெய் விலையோ மரண அடி கொடுக்கிறது.” எதுகை முனையோடு முன்னால் தமிழக பாஜக தலைவர் போராட்டம் செய்த போது …… “பெட்ரோல் ரூபாய் 58” “டீசல் ரூபாய் 42” “கேஸ் ரூபாய் 350”. “கச்சா எண்ணெய் விலை 120 USD”. தற்போது “பெட்ரோல் ரூபாய் 95” “டீசல் ரூபாய் 88” “கேஸ் ரூபாய் 830” “கச்சா எண்ணெய் விலை 64 USD.” ஒரு அமெரிக்க டாலரின் மீதான இந்திய ரூபாயின் மதிப்பு 60. அது தற்போது 73 என்ற அளவில் மதிப்பு குறைந்து போயுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது எரிபொருட்களின் விலை உயர்வுக்கு அப்போதைய பிரதமர் திரு.மன்மோகன்சிங் என்று சொன்ன தற்போதைய அந்தத் துறைக்கான அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் சொன்னார். ஆனால் அவரே தற்போதைய விலை ஏற்றத்திற்கு எண்ணெய் நிறுவனங்கள்தான் காரணம் என்று சொல்லுகிறார். மக்களாட்சி நாட்டில் தனிப்பெரும்பான்மை கிடைத்துவிட்டால் எப்படியும் பேசலாம், செய்யலாம் என்ற நிலையில் இருக்கிறது இன்றைய ஆட்சியாளர்களின் நிலைப்பாடு. ஒன்று மட்டும் நிச்சயம். சிலரை சிலகாலம் ஏமாற்றலாம். பலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.   20:47:23 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
16
2021
கோர்ட் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி செல்லும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஆனாலும் நீதிமன்றத்திற்கு இவ்வளவு வேகம் கூடாது. "தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி. அது மட்டுமல்ல, இழைக்கப்பட்ட அநீதியும்கூட" அதை அப்படியே நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒருவேளை தேர்தல் வெற்றி செல்லாது என்றால்...? அரசு ஊதியம் பெரும் அனைவருக்கும் கட்டுப்பாடு, நிபந்தனைகள் உண்டு. ஆனால் நீதிமன்றத்திற்கு மட்டும் அது வைத்தது மட்டுமே சட்டமாக உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட தேர்தல் வெற்றி பற்றி வழக்கு உள்ளது. ஆனால் விசாரணை முடிந்தும் தீர்ப்பு இன்னமும் கொடுக்கப்படவில்லை. இதோ அடுத்த சட்டமன்றத் தேர்தல் கூட வந்துவிட்டது. தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பு என்று சொல்லுவார்கள். அது பெயரளவில் என்றுதான் சொல்லவேண்டும். சுதந்திரமான, நேரமையான அமைப்பாக இருந்தால்... அது சொல்லுவதற்கு நீதிமன்றம் கூட தடை விதிக்கக் கூடாது. ஒருவேளை தேர்தல் ஆணையமும் நீதிமன்றத் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என்றால் தேர்தல் ஆணையமே இல்லாமல் நீதிமன்றத்தின் கண்காணிப்பிலேயே தேர்தலை நடத்திவிடலாம். வீணடிக்கப்பட்ட மக்கள் வரிப்பணம், மனித நேரம்,. இத்தனை பெரிய மக்களாட்சி நாட்டில் இருக்கும் தேர்தல் ஆணையத்திற்கு இவ்வளவுதானா மதிப்பு வலிமையுள்ளவர் வச்சது எல்லாம் சட்டமாக இருக்கக் கூடாது. பிறர் வாழ நினைப்பவர்கள் நினைப்பதுதான் சட்டமாக இருக்க வேண்டும் என்பது போலவே நமது அரசியல் அமைப்புச் சட்டம் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் நடைமுறையில், பல திறப்புகளை பார்க்கும் போது தீர்ப்பு போக்கை இப்படித்தான் சொல்லவேண்டி உள்ளது. அதாவது சொல்லுவார்கள்... "நீதிமன்றத்தின் தீர்ப்பு சாட்சிகளின் அடிப்படையில், குற்றத்தின் அடிப்படையில், வழக்கறிஞரின் வாதத்தின் அடிப்படையில் இருக்கவேண்டும். குற்றவாளியின் அடிப்படையில் அல்ல" என்று. ஆனால் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே சட்டம். ஆனால் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு உயர் நீதிமன்றத்தால் மாற்றப்படுகிறது. இன்னும் சில வழக்குகளில் உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மாற்றிவிடுகிறது. அப்படியென்றால்... முந்தைய தீர்ப்புகள் தவறானவை என்றுதான் சொல்லவேண்டும். அப்படி உண்மையிலேயே தவறான தீர்ப்பாக இருந்தால்... நீதிபதியின் மீது தவறு சொல்ல முடியாது. ஆனால் பாதிக்கப்பட்டவர், அவரது குடும்பம் எந்த அளவிற்கு மன உழைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கும். மக்களாட்சித் தூண்கள் ஒவ்வொன்றும் அதனதன் நிலையில் சுதந்திரமாக செயல்பட்டால்.... நாட்டில் குழப்பமும், போராட்டங்களும் இல்லாமல் போகும்.   21:55:56 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X