ராம.ராசு : கருத்துக்கள் ( 257 )
ராம.ராசு
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
22
2021
சம்பவம் பழனிசாமிக்கும் செக்! அ.தி.மு.க., மீது தொடர்கிறது தாக்குதல்
அது என்ன விஞ்ஞான ரீதியாலான ஊழல்? விஞ்ஞானம் என்பது திமுகாவிற்கு மட்டுமே தெரியுமா? அல்லது நீதிமன்றத்திற்கு விஞ்ஞான ரீதியிலான ஊழலை விசாரிக்கத் தெரியாதா? திமுகவினர் மீதான ஊழலை முறையாக நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லத் தெரியவில்லை அல்லது வெறும் ஊழல் குற்றச்சாட்டு மட்டுமே வைக்கப்படுவதால், குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை. அப்படித்தானே சொல்ல வேண்டும்? பத்து வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்த கட்சி அதிமுக. மத்தியில் இருக்கும் கட்சியோடு கூட்டணி வேறு. திமுகாவினர் மீதான குற்றச்சாட்டை நிரூபித்து தண்டனை பெற்றுத் தந்து இருக்கவேண்டும். அதற்க்கு போதுமான திறமையில்லாமல், விஞ்ஞான ரீதியில் குற்றம் செய்ததாக சப்பைக் கட்டுவது அபத்தமானது. முந்தைய திமுக தலைமை மீது ஊழல் குற்றச் சாட்டுக்காக எந்த நீதிமன்றமும் தண்டனை கொடுக்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த முன்னாள் அதிமுக தலைமை நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டு சிறை தண்டனையும் கொடுக்கப்பட்டது. தனி நீதிமன்றம், உயர் நீதிமன்றம். பிறகு உச்ச நீதி மன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் திமுக மீது விஞ்ஞான ரீதியில் ஊழல் என்று குற்றச்சாட்டு வைப்பது நாட்டின் அரசியல் சட்டத்தையே அவமதிப்பது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது ஊழல் செய்தால்... அதை வெளியே கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்து, உண்மையை நிரூபித்து தணடனை வாங்கித் தருவதுதான் அடுத்து வரும் கட்சியின் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள் என்பதற்காக, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாதே. '   16:59:20 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
22
2021
அரசியல் உள் நாட்டு தயாரிப்புகளையே வாங்குங்கள் மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
எந்தெந்தப் பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன என்ற பட்டியல் கொடுக்கப்பட்டால் மக்கள் வாங்குவதற்கு வசதியாக இருக்கும். கைபேசி, மகிழுந்து, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், தொலைக்காட்சிப் பெட்டி, கணிப்பொறி, மடிக்கணினி, பற்பசை, இப்படி வெளி நாட்டுத் தயாரிப்புக்களே ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும்போது, உள்நாட்டுத் தாயாரிப்புகளை வாங்கி என்ன செய்வது என்று புரியவில்லை.   15:57:08 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
22
2021
சம்பவம் பழனிசாமிக்கும் செக்! அ.தி.மு.க., மீது தொடர்கிறது தாக்குதல்
"ஊழல் செய்தவர்களின் மீது ஒரு அரசுத் துறை நடவடிக்கை எடுக்கிறது என்றால், அது எப்படி அ.தி.மு.க.,வினர் மீது தி.மு.க., அரசு தாக்குதல் தொடுப்பது என்பதாகும்?   15:47:00 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
10
2021
பொது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்? டில்லி போலீசார் உஷார்!
பயங்கரவாதிகள் தாக்குதல் ஒருபுறம் இருக்கட்டும். அதற்காக முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைள் அரசு எடுத்துக்கொண்டுதான் இருக்கும். ஆனால் நாட்டுக்குள் மக்களோடு மக்களாக இருந்துகொண்டு, போராட்டம் செய்பவர்கள் மீது வாகனத்தை ஏற்றும் நெஞ்சை பதை பதைக்க வைக்கும் காட்சியைப் பார்க்கும் போது, பயங்கரவாதிகளை எதிர் கொள்ளுவதைவிட கூடவே இருப்பவர்களை எதிர் கொள்வதற்கே போதுமான முன் எச்சரிக்கை தேவையாக இருக்கும்போல தெரிகிறது. ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட காட்சி உண்மையாக இருக்குமேயென்றால் குற்றவாளிகள் மீதான தண்டனை என்பது உடனடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால்... அதற்க்குக் கூட, நடவடிக்க எடுக்க போராட்டம்தான் என்றால்... பயங்கரவாதிகளுக்கும் மற்றவர்களுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.   19:58:47 IST
Rate this:
2 members
0 members
1 members

அக்டோபர்
8
2021
பொது ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடாவிடம்...
"நஷ்டத்தை சமாளிக்க, அரசு இந்நடவடிக்கை' எடுத்துள்ளது என்பது வெறும் சமாளிப்பு என்றுதான் சொல்லவேண்டும். நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டுக்கழகம் அதிக அளவில் நாட்டிற்கு வருமானம் தந்து கொண்டு இருப்பதுதான். அது தனியாருக்கு மாற்றப்பட இருக்கிறது என்பதற்கு இது சரியான உதாரணம். ஒரு பொதுத்துறை நிறுவனம் இழப்பில் இயங்குகிறது என்றால் கண்டிப்பாக அதில் நடக்கும் ஊழல் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஊழல் கீழ் நிலை ஊழியர்களால் ஏற்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை. அவர்களைக் கட்டுப்படுத்த உயர் மட்ட அதிகாரிகள் உண்டு. உயர் மட்டத்தில் நடக்கின்ற, அரசியல் தலையீடுகளால்தான் பொதுத் துறையில் ஊழலும் அதனால் இழப்பும் ஏற்படுகிறது. ஆனால் பாதிக்கப்படுவது என்னவோ கீழ்மட்டத்தில் இருக்கும் ஊழியர்கள்தான். அரசு நினைத்தால் பொதுத் துறை நிறுவனத்தை மீட்டு எடுக்க முடியும். அரசால் முடியாதது ஒன்றுமே இல்லை. தனியார் துறைகள் லாபத்துடன் நடைபெறுகிறது என்பது ஒரு பிம்பம்தான்... கூடவே பொதுத்துறை மீதான எதிர் கருத்து ஏற்படும். எத்தனையோ தனியார் நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. தனியாருக்கு சொந்தமான கிங் பிஷர் நிறுவனம் கூட இழப்பு என்பதாகச் சொல்லி மொடப்பட்டுவிட்டது. அரசு பொதுத் நிறுவனங்கள் அதிகப்படியாக கடனைப் பெற்றுக்கொண்டு, முறையாக நடத்தாமல், இழப்பு என்று சொல்லி மிக எளிதாக மூடிவிட்டது. அந்த நிறுவனத்திற்கு பெருமளவில் எப்படி கடன் கொடுத்தது பொதுத் துறை நிறுவங்கள்... கண்டிப்பாக அந்த பொதுத் துறை நிறுவனங்களில் இருந்த உயர் அதிகாரிகளும், அவர்களுக்கு அழுத்தம் கொடுத்த அரசியல் தலையீடுகளுமே காரணமாக இருக்கும். ஆனால் இத்தனை காலங்கள் பல பொதுத் துறை நிறுவனங்கள் அதிகமான வேலை வாய்ப்பைக் கொண்டு இருப்பது மட்டுமல்ல அரசுக்கும் அதிகமான ஈவுத் தொகையை கொடுத்துக் கொண்டுதான் இருந்தன. என்றாலும் ஆட்சியாளர்களின் கொள்கை முடிவுதான் பொதுத் துறை நிறுவனங்களை இப்படித் தனியாருக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன என்றால் மிகை ஆகாது. ஒன்றைக் கொடுப்பது எளிது. ஆனால் உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. என்றாலும்...   08:50:48 IST
Rate this:
16 members
1 members
6 members

அக்டோபர்
8
2021
அரசியல் செய்வதோ மத பிரசாரம் இருப்பதோ ஹிந்து சான்று உமாசங்கர் மீது அர்ஜுன் சம்பத் புகார்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சரத்து 25 - 28 சொல்லுகிறது நாட்டின் எந்த ஒரு குடிமகனும் •மனசாட்சி படி செயல்படவும் சுதந்திரமாக வேலைகளில் ஈடுபடவும் மற்றும் "விரும்பும் சமயத்தை பின்பற்றவும் மத பிரச்சாரம் செய்யவும் உரிமை" என்று. திரு.உமா சங்கர் செயல்பாடு அரசியல் சாசனப்படி தவறு இல்லை. FC, BC, MBC பிரிவைச் சேர்ந்தவர்கள் எவரும் அவர்கள் விரும்பும் மதத்திற்கு மாறிக்கொள்ளலாம். இந்து முதலியார், வன்னியர்கள், பிள்ளைகள், நாடார்கள், கவுண்டர்கள் தான் விரும்பும் மதத்திற்கு, கிருஸ்துவ மதத்திற்கு மாறலாம். அதில் தவறு இல்லை. அவர்கள் சான்றிதல் மாற்றிக்கொண்டார்களா என்ற கேள்வியை யாரும் கேட்பது இல்லை. அவ்வளவு ஏன்... கிருஸ்துவ பிராமிணர்கள் கூட உண்டு. SC பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே தாங்கள் விரும்பும் மதத்திற்கு மாறக்கூடாது. அவர்கள் மட்டுமே சான்றிதழை மாற்ற வேண்டும். ஏனென்றால்.... அவர்கள் இட ஒதுக்கீட்டு சலுகையை (சலுகையா அது, பிரதிநிதித்துவம்) பெற்றுக்கொண்டு இருக்கிறார்களாம். அப்படியாக அரசியல் சட்டம் சொல்லவில்லை. இட ஒதுக்கீடு என்பது நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை கொஞ்சம் அறிவு கொண்டு சிந்திந்தால் புரியும். ஒரு புள்ளி விவரம் சொல்லுகிறது "OBC population in the country at 40.94%, the SC population at 19.59%, ST population at 8.63% and the rest at 30.80%." என்று. இட ஒதுக்கீடு என்பது Scheduled es (SCs), Scheduled Tribes (STs) and Other Backward Classes (OBCs) at the rate of 15%, 7.5% and 27%,. மீதமுள்ள 50.5% முழுவதும் 30.80% உள்ளவர்களுக்கு தரப்படுகிறது. அதிலும் கூட ஒரு குறிப்பிட்ட சமூகம்தான் பெற்றுக்கொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை. ஆக இந்திய நாட்டில் அனைவருமே இட இட ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொண்டு தான் உள்ளார்கள். ஆனால் இட ஒதுக்கீடு என்பது SC பட்டியலில் இருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது என்ற புரிதலில் அவர்கள் மீது அடவடியான இழிவு வைக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஏதோ கீழ் நிலையில் உள்ள பணியில் மட்டுமே SC பட்டியல் இனத்தவர்களை பணி அமர்த்திவிட்டு, உயர் பொறுப்பில் உள்ள, முடிவு எடுக்கும் அதிகாரத்தை அனைத்தும் OBC மற்றும் FC பட்டியலில் உள்ளவர்களே வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் SC பட்டியல் இனத்தவர்கள் மீதான காழ்புணர்வு போகவே இல்லை என்பது வருத்தமானது.. வேதனைத் தரக்கூடியது. இந்த மன நிலை மாற வேண்டும்.   09:19:01 IST
Rate this:
14 members
1 members
6 members

அக்டோபர்
8
2021
பொது அக்.,08 தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை
தமிழ் நாடு அரசு ரூபாய் மூன்று விலை குறைப்பு செய்திருக்கா விட்டால் இப்போது அது 103.75 என்றாய் இருக்கும். தமிழக அரசின் அந்த விலை குறைப்பு விழலுக்கு இறைத்த நீராகிப் போய்விட்டது.   06:54:22 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
2
2021
சிறப்பு பகுதிகள் ஈ.வெ.ரா.,வுக்கு மட்டுமே சொந்தமானதா சமூக நீதி?
"ஈ.வெ.ரா.,வுக்கு மட்டுமே சொந்தமானதா சமூக நீதி?" என்றால் கண்டிப்பாக இல்லை. “யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே” என்றும் சொன்னவர். இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு பாடுபட்டவர்கள் முகம் தெரியாத, பெயர் தெரியாத பல ஆயிரக்கணக்கானோர். ஆனால் பொதுவில் சொல்லுவது, பெரும்பாலும் எல்லோருமே ஏற்றுக்கொள்வது இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர் மகாத்மா காந்தி என்று. அதை இன்னும் சுருக்கி மகாத்மா என்றே சொல்லப்படுகிறார். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற அவரது பெயரை யாருமே சொல்லுவது இல்லை. அந்தப் பெயர் பலருக்கும் தெரியுமா என்றுகூட சந்தேகமே. தமிழ் நாட்டில் மிகப் பலரால் அறியப்படுகின்ற பெரியாரை "ஈ.வெ.ரா" என்று எழுதுவதிலிருந்தே அவரைப்பற்றிய குற்றச்சாட்டு சொல்லுவதற்கே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது என்றே தெரிகிறது. கண்டிப்பாக அவர் பிராமிணர்கள் என்ற சமுதாயத்திற்கு முழுவதுமாக எதிராகச் செயல்படவில்லை. அதற்க்கு உதாரணமாக அவர் திரு.ராஜ கோபால ஆச்சாரியரிடம் கொண்டிருந்த நடப்பைச் சொல்லலாம். இராஜாஜி 1972ம் ஆண்டு இறந்தபோது, பெரியார் குலுங்கி குலுங்கி அழுததாய் சொல்வார்கள். அப்படிப்பட்டவர் அன்றைய காலக்கட்டத்தில் இருந்த சாதியத் துவேசத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது பிராமிணிய சமுதாயம் வைத்திருந்த சாஸ்திர சம்பிராதயங்கள், கோவில் வழிபாட்டு முறைகள். சுதந்திரம் பெற்றும் எழுபது வருடங்களுக்கு மேலாகியும், இப்போது கூட "பிராமிணர்கள்" உசத்தி என்று பொதுவில் வெளிப்படையாக பேசுபவர்கள் பலர் உண்டு. என்றால் ஈ.வே.ரா வும் ராஜாஜியும் வாழ்ந்த அந்தக் காலக்கட்டத்தில் எந்த அளவுக்கு சாதி ஏற்றத்தாழ்வுகள், சமூக நீதி என்பது இருந்து இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. சமூக நீதிக்காக பல பேர் போராடி இருந்தாலும், எப்படி சுதந்திரத்திற்காக பல ஆயிரக்கணக்கானோர் தங்களது உயிரையும் கொடுத்து இருந்தாலும், மகாத்மா காந்தி மட்டுமே சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததாக சொல்லப்படுகிராரோ அப்படி ஈ.வெ.ரா வும் தமிழ் நாட்டில் "பெரியார்" என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டார். பெரியாரை "ஈ.வெ.ரா" அடையாளப்படுத்துவதே அவர்மீதான காழ்புணர்ச்சியின் வெளிப்பாடுதான் என்று சொன்னால் மிகையாகாது. அவரை இப்படி குற்றச்சாட்டுவதற்க்கான முக்கியக் காரணம் அவர் சமூக நீதி பேசியதற்கு மட்டுமல்ல..... காலம் காலமாக தங்களுக்கு மட்டுமே உரித்தானதாக வைத்து இருந்த, சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு எதிராக, பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு எதிராக, குலத் தொழிலுக்கு எதிராக, அதற்க்கு அடிப்படையாக இருக்கிற கடவுள் நம்பிக்கைக்கு எதிராக பேசியதுதான். ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர் என்று சொன்னாலும், வெறும் ஈ.வெ.ரா என்று சொன்னாலும், அவர் தமிழ் நாட்டில் மிகப் பெரிய சீர்திருத்த எண்ணங்களை ஆழமாக, மிக ஆழமாக பதித்தவர் என்பதை மறுக்க முடியாது. எந்த ஒரு அரசியல் கட்சியும் வளர்ச்சி பெறுவதற்கும் பலபேர் காரணமாக இருப்பார்கள். ஆனால் காங்கிரஸ் என்றால் இந்திரா காந்தி, திமுக என்றால் கருணாநிதி, அதிமுக என்றால் எம்ஜிஆர், பாமக என்றால் ராமதாஸ், நாதக என்றால் சீமான், மநீம என்றால் கமலஹாசனும் முன்னிறுத்தப்படுகிறார்கள். அதைப்போலவே பலரும் சமூக நீதிக்காகப் போராடினாலும், பெரும்பாலான தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் ஈ.வெ.ரா என்கிற ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர் என்பதை அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாது. ஈ.வெ.ரா என்று சொல்லுவதிலிருந்தே இன்னும் பெரும்பாலோனோர் சமூக நீதி என்றால் என்ன என்று தெரியாமல், அதற்கு எதிரான கருத்தை வைத்துகொண்டு இருப்பதாகவே தெரிகிறது. அவர்களுக்குப் புரிதல் அவ்வளவுதான்.   20:30:37 IST
Rate this:
5 members
0 members
7 members

அக்டோபர்
2
2021
சிறப்பு பகுதிகள் தமிழ் மொழி டி.வி.ஆர்., உயிருக்கு நேர்!
ஏதோ இந்தக் கட்டுரையில் மட்டுமே ஆங்கிலம் கலப்பு இல்லாமல் முழுவதுமாக எழுதப்பட்டு உள்ளது. ஆனால் "கண்டக்டர்கள், சுப்ரீம் கோர்ட், போலீசார், லுக் அவுட் நோட்டீஸ், ரெட் அலெர்ட்" இதுபோன்ற சுத்த தமிழ் மற்ற செய்திகளில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. பேரு என்னமோ தமிழ் பத்திரிக்கை. ஆனால் "கண்டக்டர்கள், சுப்ரீம் கோர்ட், போலீசார், லுக் அவுட் நோட்டீஸ், ரெட் அலெர்ட்" போன்றவற்றுக்கு தமிழ் வார்த்தைகளே இல்லாமல் போய்விட்டது.   14:44:14 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
2
2021
பொது அக்.,02 மீண்டும் ரூ.100ஐ நெருங்கும் பெட்ரோல் இன்றும் விலை உயர்வு
ஏதோ தமிழக அரசு தனது பங்கிற்கு ரூபாய் 3 ஜக் குறைத்ததால் இவ்வளவு நாட்கள் நூறு ரூபையைத் தொடாமல் இருந்தது. இதோ இப்போது கூடிய விரைவில் 100 தொட்டுவிடும். தமிழ் நாடு அரசின் அந்த விலைக்கு குறைப்பு வெறும் விழலுக்கு இறைத்த நீரைப் போல ஆகிவிட்டது.   14:37:02 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X