Kanagaraj Easwaran : கருத்துக்கள் ( 51 )
Kanagaraj Easwaran
Advertisement
Advertisement
செப்டம்பர்
6
2018
விவாதம் ஓரின சேர்க்கை குற்றமல்ல என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு சரியா?
ஓரினச்சேர்க்கை குற்றம் என்பது ஐரோப்பியக் காலனியாதிக்கவாதிகளின் மனோபாவம். அது பாவம் என்பது மனித நேயமற்றக்கிறிஸ்தவ நம்பிக்கை. அது மரபியல் சார்ந்த ஒன்று என்பதே அறிவியல். பாரத நாடு அன்னிய ஆதிக்கத்துக்கு கீழே வரும் வரை மாற்றுப்பாலினத்தவரும் சரி ஓரினச்சேர்க்கையாளர்களும் இயல்பாகவே வாழ்ந்தனர். அன்னிய ஆட்சியிலேதான் அவர்கள் ஒடுக்கப்பட்டனர், அழித்தொழிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியே ஓரினச்சேர்க்கை குற்றம் என்ற சட்டப்பிரிவு ஆகும். மனிதனுக்கு முழுமையான ஆன்மிக சுதந்திரம் அளிக்கிற பாரதப்புண்ணிய பூமிக்கு இந்த சட்டம் ஒத்துவராத ஒன்று. மாற்றுப்பாலினத்தை இந்திய மரபு பன்னெடுங்காலமாக அங்கீகரித்துவந்தே இருக்கின்றது. அதனை உணர்வதாகவே உச்ச நீதிமன்றத்தீர்பு அமைகின்றது. நமக்கு மாறான காம உணர்வு நிலை உள்ளவர்களை நம்மைப்போல மாறக்கட்டாயப்படுத்துவது என்பது அதர்மமாகும். ஒவ்வொருவருக்கும் தமக்குப்பிரியமான தெய்வத்தையும் வழிபாட்டுமுறையையும் தேர்ந்தெடுக்க பூரண சுதந்திரம் அளித்த இந்தியாவிற்கு ஏற்றது பொருத்தமானது இந்த உச்ச நீதிமன்றத்தீர்ப்பாகும்.   17:02:08 IST
Rate this:
9 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2018
விவாதம் குற்ற தண்டனை பெற்றவர்களின் கட்சி சின்னத்தை ரத்து செய்யலாமா?
கேள்வியையே சரியாக எழுதமுடியவில்லை. அதைப் பொதுவிலே விவாதத்துக்கு விடுகின்றீர்கள். என்ன சொல்வது. குற்ற தண்டனை பெற்றவர்கள் தேர்தலிலே போட்டிபோடுவதையே தடைசெய்யலாமா என்று கேட்காமல் கட்சி சின்னத்தை ரத்து செய்யலாமா என்று கேட்பதன் உட்கிடக்கைதான் என்ன? சட்டப்பூர்வமாக குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் சுயேச்சையாக நிற்க வழி இருக்கட்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் போலும். அதுவும் சரியில்லை. கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு கூட போட்டியிட அனுமதிக்கப்படக்கூடாது.   11:29:49 IST
Rate this:
0 members
1 members
18 members
Share this Comment

மே
21
2018
விவாதம் கர்நாடகாவில் நிலையான ஆட்சி நடக்குமா ?
காங்கிரஸ்கட்சி வேறு எந்தக்கட்சியையும் ஆளவிட்டதாக வரலாறே கிடையாது. சரண்சிங், சந்திரசேகர், தேவே கவுடா, குஜ்ரால் என்று ஆதரவு தருவதாகசொல்லி ஏமாற்றியே வந்துள்ளது. இந்த முறையும் அப்படியே குமாரசுவாமி கவுடரையும் ஏமாற்றும். தேவே கவுடரும் சரி குமாரசுவாமியும் சரி பாஜகவை அதேமாதிரி சொன்னவாக்கைக்காப்பாற்றாமல் ஏமாற்றிய பெரியமனிதர்கள்தான். அவர்களும் விடாக்கண்டர்கள்தான். இருவருக்கும் பொது எதிரியாக எடியூரப்பா அவர்களின் தலமையில் பாஜக சட்டமன்றத்தில் இருப்பதால் வேறுவழியில்லாமல் ஒன்று சேர்ந்துக்கின்றார்கள். இந்த காங்கிரஸ் -மஜத ஆட்சி எத்தனை மாதங்களுக்கு நீடிக்கும் என்று சொல்வது கடினம். ஆனால் இந்த ஆட்சி நிலைக்காது என்பது உறுதி.   15:57:01 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

மே
5
2018
விவாதம் தேர்தல் பிரசாரத்தில் சிறந்தவர் யார்?
பாரதப்பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோதி சிறந்த செயல்வீரர் மட்டுமல்ல. ஆழ்ந்த சிந்தனையாளர். தெளிவாகவும் அழுத்தம் திருத்தமாகவும் பேசவல்லப்பேச்சாளர் ஸ்ரீ மோதி என்பது அவரது உரைகளைக்கேட்டவர்கள் உணரலாம். ஸ்ரீ மோதிஜியையும் நேரு குடும்ப அரசியல் வாரிசையும் ஒப்பிடுவது மலையையும் மடுவையும் ஒப்பிடுவது போன்றது. மக்களுடைய பிரதமர் மக்களுக்காக வாழும் பிரதமர் பாரத தேசத்தில் தர்மமும் பண்பாடும் முன்னேற்றமும் ஓங்க வந்த பிரதமர் மோதி தன்னிடத்திலே உள்ள உண்மை ஒளியால் உலகையே ஈர்க்கின்றார். இதுவரை ஆண்ட காங்கிரசின் ஊழல், வஞ்சம் துரோகம் ஆகியவற்றை மக்களுக்கு சொல்லி மாற்றத்துக்கு வழிவகுக்கின்றார் உன்னத தலைவர் ஸ்ரீ மோதிஜி பெரும் சுடரொளி முன்னே விட்டில் பூச்சி என்ன செய்யும்.   10:41:15 IST
Rate this:
28 members
0 members
24 members
Share this Comment

மார்ச்
29
2018
பொது மாஜி துணைவேந்தர் ராஜாராம் குவித்த சொத்து விபரங்களை ஆராயுது போலீஸ்
துணைவேந்தர்கள் இவ்வளவு சொத்து சேர்த்திருக்கின்றார்களே. உயர்கல்வித்துறை அமைச்சர் எவ்வளவு கோடிகள் குவித்திருப்பார்? எவ்வளவு கற்பனை செய்தாலும் கணக்கிடமுடியாது. இதுவரை தமிழக கவர்னர்களாக இருந்தவர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக பொறுப்பிலே இருந்தும் இந்த அ நியாயத்தைக்கேட்கவில்லையே என்ற வருத்தம் மேலிடுகின்றது. இப்போது தமிழகத்தின் ஆளுனராக இருக்கும் மேதகு புரோகித் அவர்கள் இதிலே கவனம் செலுத்துவது ஒரு ஆறுதலனாவிடயம். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலே தமிழகப்பல்கலைக்கழகங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகின்றது. இந்த காலக்கட்டத்தில் தமிழகப்பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள், உயர்கல்வித்துறை அமைச்சர்கள் எல்லோரையும் தீரவிசாரித்து ஊழல்வாதிகளை தண்டிக்க சிபி ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். தமிழகப்பல்கலைக்கழகங்களில் நடந்த ஆசிரியர் அலுவலர் பணி நியமனங்களைப்பற்றியும் தீவிர விசாரணை நடத்தப்படவேண்டும். யூஜிசி விதிமுறைகளை மீறி ஏதேனும் பணி நியமனங்கள் நடந்துள்ளன என்பதை விசாரிக்கவேண்டும். பல்கலைக்கழக பணியிடங்களை விற்பதற்கு செயல்படும் தரகர்க்ளையும் கண்டறிந்து தண்டிக்கவேண்டும். அறிவார்ந்த தமிழகம் ஊழல் மலிந்த பல்கலைக்கழகங்களாலும் தரமற்ற ஆசிரியர்களாலும் அவதியுறுகின்றது. பல்கலைக்கழகங்கள் தூய்மையாக்கப்பட தமிழத்திலே வளர்ந்துவரும் அகில பாரத வித்யார்த்திப்பரிஷத் மற்றும் பாஜக கவனம் செலுத்தவேண்டும். ஏபிவிபி இதைப்பற்றிய ஆய்வறிக்கைகளை மேதகு தமிழக கவர்னர் அவர்களுக்கு அனுப்பவேண்டும். தமிழகக்கல்வித்துறையை தூய்மைப்படுத்துவது தமிழக முன்னேற்றத்துக்கு உடனடியான தேவையாகும்.   19:24:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
17
2018
பொது வங்கிகளை தனியார் மயமாக்க சரியான நேரம் பொருளாதார ஆலோசகர்
வங்கிகளைத்தனியார் மயமாக்குதல் என்பது அபத்தமான யோசனை மட்டுமல்ல ஆபத்தான யோசனையும் ஆகும். இதைப்போன்ற ஆலோசனைகளைக்கூறுகின்ற ஐஎம் எப் இன் சிப்பாய் இந்த அரவிந்த் சுப்ரமணியனை மத்திய அரசின் தலமை பொருளாதார ஆலோசகர் பதவியிலிருந்து உடனியாக ஸ்ரீ நமோஜி அரசு நீகவேண்டும். தனியார் மயமாக இன்சூரன்ஸ் மற்றும் வணிக வங்கிகள் ஆகக்கூடாது. அப்படியானால் வங்கியிலே சேமித்ததை முதலீடு செய்வோருடைய பணத்துக்கு பாதுகாப்போ உத்திரவாதமோ கிடையாது. அமெரிக்காவில் மிகப்பெரியவங்கிகள் திவாலாயின. அந்த வங்கிகளை நடத்துகின்ற தனியார்களை அரசு நிறுவனம் கட்டுப்படுத்தமுடியும் என்றால் அந்தவங்கிகளை அரசே நிர்வகிக்கவும் முடியும். கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வங்கிகளிலிருந்து கொடுக்கப்பட்ட கடன்களை திரும்பவசூலிக்க்கமுடியவில்லை. விதிமுறைகள் படி கடன் கொடுக்கப்பட்டிருந்தால் அடைமானம் போதிய அளவிற்கு பெற்பட்டிருந்தால் அவற்றை ஜப்தி செய்து வசூலித்திருக்கமுடியும். அந்தமாதிரிகடன் கொடுக்கச்சொல்லி நிர்பந்தித்ததே காங்கிரஸ் ஆட்சியாளர்கள்தான். வராக்கடனை வசூல் செய்வதையும் தடுத்துக்கொண்டிருந்தவர்களும் அவர்கள்தான். அரசாங்கம் அரசுத்துறைகள் சரியாக செயல்படாது. தனியார் நிறுவனங்கள் மட்டுமே சிறப்பாக செயல்படும் என்பது ஐரோப்பிய மையவாத வலதுசாரிகள் அடிக்கடி கூசாமல் கூறுகின்ற பொய்யாகும். அரசினுடைய கட்டுப்பாட்டிலே வங்கிகள் இருப்பதால்தான் மக்களுடைய உழைப்பிலே வந்த சேமிப்பு பாதுகாப்பாக இருக்கின்றது. மக்கள் சேமிக்கவே கூடாது பன்றியைப்போல தின்று வாழவேண்டும் என்று கருதுகின்ற வலதுசாரிகள் இருக்கின்ற வங்கிகளையும் தனியாருக்குத்தாரைவார்ப்பதன் மூலம் இந்தியப்பொருளாதார வளர்ச்சியை தடுக்கமுயல்கின்றார்கள். சிறுதொழில்கள், விவசாயம் ஆகியவற்றுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதை தடுக்கப்பார்க்கின்றார்கள்.இப்போது வங்கிகளை ஏமாற்றிவருகின்றவர்கள் பெருமுதலாளிகள்தான். அவர்கள் கரத்துக்கு நேரடியாக வங்கிகளை அளித்துவிட்டு. வங்கியிலே ஊழல் நடக்காமல் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்பது ஊரை ஏமாற்றுகின்றவேலை. ஐரோப்பிய மையவாதிகளான வலதுசாரி அரசியல் பொருளாதார சிந்தனை என்பது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் பொருளாதார வல்லமையை நிலை நிறுத்துவதற்கே பயன்படும். ரகுராம் ராஜன் எதை செய்தாரோ அதையே இந்த அர்விந்த் சுப்ரமனியம் செய்யமுயல்கின்றார். அவரை விரட்டுவது தேசத்துக்கு நல்லது. இந்தியதேசம் தமது பொருளாதார அரசியல் சமூக சூழலுக்கேற்ற கொள்கைகளை தாமே உருவாக்கக்கற்றுக்கொள்ளவேண்டும். ஐரோப்பிய சிந்தனை இடதோ வலதோ நாசத்தையே விளைவிக்கும்.   20:05:37 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
15
2017
விவாதம் அரசியலிலிருந்து சோனியா ஓய்வு சரியா?
சோனியா காண்டி மட்டுமல்ல அவரது குடும்பமே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது காங்கிரசுக்கும் பாரத தேசத்துக்கும் மிகுந்த நலம் பயக்கும். உள்கட்சி ஜன நாயகத்தைக்குழி தோண்டிப்புதைத்த இந்திராவின் வம்சாவழியினர் காங்கிரசை ஆதிக்கம் செலுத்தும் வரை அதன் தலமைப்பீடத்தில் துதிபாடிகள்மட்டுமே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் மக்களுக்கு அணுக்கமாக இருந்து அவர்களது சிக்கல்களை உணரமாட்டார்கள். தில்லியில் இருந்து மானிலத்தலமைகளை நியமிக்கும் போக்கும், மானிலத்தலமை மாவட்டத்தலமைகளை நிர்ணயம் செய்யும்போக்கும் ஒழியும் வரை காங்கிரசுக்கு மீட்சியில்லை. அந்த மீட்சிக்கு ஒற்றைக்குடும்ப நேருபாரம்பரிய ஆதிக்கத்துக்கு முடிவுரை எழுதவேண்டும். இது நடக்க இன்னும் மூன்று பாராளுமன்றத்தேர்தல்களிலாவது காங்கிரஸ் படுதோல்வி அடையவேண்டும். ஹர ஹர அப்படியே ஆகக்கடவது சிவசிவ மஹாதேவா   12:42:25 IST
Rate this:
2 members
0 members
30 members
Share this Comment

நவம்பர்
21
2017
விவாதம் ராகுல் காங்கிரஸ் தலைவராகலாமா?
ராகுல் காண்டி அவர்களது குடும்பமே தியாகங்கள் பல செய்தது. அவர் தகுதிகள் பல நிறைந்தவர் என்று மன்னர் மானியத்தை ஒழித்த ஒற்றைக்குடும்ப ஆட்சியை ஆதரிப்போர் கூறுகின்றார்கள். இந்திராவோ அல்லது ராஜிவோ தியாகிகள் அல்ல. அரசியல் சுயலாபத்திற்காக அதர்மான அக்கர்மமான அரசியல் சூழ்ச்சிகளை செய்ததற்காக அதன் பின்விளைவுகளால் பலிகொள்ளப்பட்டவர்கள் என்பதே வரலாறு. தனது குடும்ப அரசியல் ஆதிக்கத்தினை நிலை நிறுத்தும்பொருட்டு காங்கிரஸ் கட்சியிலே உள் கட்சி ஜன நாயகத்தை அழித்தார் இந்திரா. பஞ்சாபில் அகாலிதளத்தின் செல்வாக்கைக்குறைக்க அதன் தலைவரான சந்த் லோங்கோவாலின் செல்வாக்கு பெருகுவதைத்தடுக்க பிந்தரன்வாலா என்ற தீவிரவாதியை வளர்த்தார் இந்திரா. பிந்த்ரன் வாலா ஹர்மந்தர் சாஹிப்பையும் அதன் புனித பீடமான அகால்தக்தை கைப்பற்றினார். அதைமீட்க ஆபரேசன் நடத்தி அவரது கூட்டத்தை ஒறுத்த இந்திரா அதனால் புண்பட்ட ராணுவ வீரர்களால் படுகொலை செய்யப்பட்டார். ஈழப்பிரச்சினையை புரிந்துகொள்ளாமல் தமது ஆதிக்கப்போக்கிலே ஒப்பந்தத்தை திணித்த ராஜிவ் அனுப்பிய அமைதிப்படை ஈழத்திலே செய்த தவறுகள் அவரது மரணத்துக்கு வழிவகுத்தன. இதே நேருகுடும்பமே எமெர்ஜென்சி மூலம் ஜன நாயகத்தை ஒடுக்கியது. காங்கிரஸ் கட்சி ஜன நாயகத்துக்கு எதிராக உள்ளது. அது தேங்கிவிட்டது. அதன் தலமைக்கு நுண்ணறிவோ ஆக்கத்திறனோ கிஞ்சித்தும் இல்லை. அதில் தலைவர்கள் மட்டுமே உள்ளனர். தொண்டர்கள் கிடையாது. ஒரு குடும்ப ஆட்சிக்குத்துதி பாடுவோர் தலைவர்கள். அந்தக்கட்சி அழிவது தேசத்துக்கு நல்லது அவசியம். அதை செய்யவல்லவர் ராகுல் வின்ச்சிதான். ஆகவே ராகுல் காங்கிரசுக்கு தலமை ஏற்பதை அனைவரும் வரவேற்கவேண்டும்.   08:43:41 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
21
2017
விவாதம் ராகுல் காங்கிரஸ் தலைவராகலாமா?
ஆங்கில ஆதிக்கத்தின் போது இந்தியமக்களின் அபிலாஷைகள் விருப்பு வெறுப்புக்கள் போன்றவற்றை பிரிட்டீஷ் அரசுக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஏஓ ஹியூம் என்ற வெள்ளையராலும் மேட்டுக்குடியினராலும் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் திலகர், பிபின் சந்திரபாலர், லாலா லஜபதி ராய் போன்ற தீவிர தேசபக்தர்களால் விடுதலைக்கான அரசியல் இயக்கமாக மாறியது. அந்த இயக்கத்தை உழவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினர் இயக்கமாக மாற்றினார் அண்ணல் காந்தியடிகள். அன்னை பாரதம் சுயராஜ்யம் பெற்றவுடன் காங்கிரஸின் பணி நிறைவு பெற்றதால் அதை கலைத்துவிடவேண்டும் என்று அண்ணல் காந்தி அடிகள் விரும்பினார். ஐரோப்பிய மோஸ்தரிலும் அதிகாரவேட்கையும் கொண்ட நேருவை அவர் அறிவித்ததால் அடிகளின் விருப்பம் நிறைவேறவில்லை. காந்தியடிகளின் சுதேசிய சுதந்திர இந்தியா என்றக்கனவிலிருந்து விதேசிய ஐரோப்பிய மய, தொழில்மய நகரமய வளர்ச்சிப்பாதைக்கு இட்டு சென்ற நேருவும் அவரது மகள், பெயரன் என்று தொடர்ந்த குடும்ப ஆட்சி லைஸென்ஸ் கோட்டா ராஜ் மூலம் இந்தியாவின் வளர்ச்சியை தடைசெய்தது. அதே காங்கிரஸ் நரசிம்மராவ் தலமையில் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்றபெயரில் மாற்றத்தைக்கொண்டுவந்தது. அதைத்தொடர்ந்துவந்த சோனியா நிர்வாகம் ஊழலில் தேசத்தை மூழ்கடித்தது. இன்றைக்கு காங்கிரஸ் நிர்வாக சீர்கேடு, ஊழல், குடும்ப அரசியல், உள்கட்சி ஜன நாயகமின்மை ஆகிவற்றால் மூழ்கிடும் கப்பலாக இருக்கின்றது. காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி ஜன நாயகத்தைக்குழி தோண்டிப்புதைத்த இந்திரா காண்டியின் பெயரர் ராகுல் வின்சி அந்த கட்சியையே முழுதும் ஆழக்குழி தோண்டிப்புதைக்கப்போகின்றார். இந்தியாவின் சமூகம் பண்பாடு நாகரிகம், அரசியல், பொருளாதாரம் எதையும் ஆழ்ந்து அறியாமல் தாத்தன் பாட்டி அப்பன் கவர்ச்சியை நம்பியே ராகுல் களம் இறங்குகின்றார். அவர் காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலமையை ஏற்பது காங்கிரசுக்கு கேடுவிளைவிக்கும். ஆனால் பாரத நாட்டினை ஐரோப்பாவைப்போல அமெரிக்காவைப்போல மாற்ற முயலும் காங்கிரஸின் வீழ்ச்சி நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது. ஆகவே சோனியா காண்டியின் புதல்வர் ராகுல் வின்ச்சி காங்கிரஸின் தலைவராவதை வரவேற்கின்றேன்.   13:19:46 IST
Rate this:
11 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
11
2017
அரசியல் சசி கும்பல் மீதான பிடி...இறுகுகிறது!
சசிகலா கும்பல் என்பது தவறானப் பதப்பிரயோகமாகும். கும்பல் - மாப் அல்ல இது ஒரு பெரிய உறவு நட்பு வளையம் என்றுதான் இதை சொல்லவேண்டும். சசிகலா குடும்பம், உறவுகள், நட்பில் உள்ளவர்கள் சேர்ந்தே படிப்படியாகத் திட்டமிட்டு பெரும் பொருள் குவித்திருக்கின்றார்கள். தமிழகத்தின் வளர்ச்சியும் முன்னேற்றமும் தடுக்கப்பட்டிருக்கின்றது. அதில் சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டியதை தமது சுய நலத்திற்குப்பயன் படுத்தியிருக்கின்றார்கள். சசிகலா உறவுகள் அவர்களது நண்பர்கள் வேலையாட்கள் இவர்களை ஒரு பெரும் வலையம் நெட்வொர்க் என்றே எழுதவேண்டுகின்றேன். இந்த நெட்வொர்க்கை டிஸ்மேண்டில் செய்ய இந்த ரெய்டுகள் பயன்படவேண்டும். தமிழகதின் அரசியல் பொருளாதாரத்தைக் கபளீகரம் செய்துவரும் இன்னும் பல நட்பு உறவு நெட்வொர்க்குகளையும் இதுபோன்ற சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் சிதைப்பதே அவர்கள் முறைகேடாக குவித்துள்ள செல்வத்தை நாட்டுக்கு பொதுவாக்குவதே இப்போது அவசியமானதாகும். தேசிய அளவிலும் இந்த தண்ட நீதி பயன்படுத்தப்பட வேண்டும். புதியத்தொழில் முனைவோர் பெருக இந்த கொடிய தீய அ நீதியான அதர்ம சக்திகள் வீழவேண்டும்.   09:01:46 IST
Rate this:
0 members
0 members
32 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X