ayyo paavam naan : கருத்துக்கள் ( 911 )
ayyo paavam naan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
19
2022
சிறப்பு பகுதிகள் ராஜன் கமிட்டி அறிக்கை ஒரு தலைப்பட்சமானது கற்பனை கலந்தது!
சாதாரண மக்களின் தேவை என்ன என்று புரியாமல், ஓட்டுக்காக வாக்குறுதிகளை வழங்கும் மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளும் மீண்டும் மீண்டும் இப்படித்தான் பொய் பிரச்சாரம் செய்வர். அவர்களின் பிரச்சாரத்தின் வீச்சு, திரு பாலகுருசாமியின் கருத்துக்கள் செல்வதை விட வேகமாகவும் ஆழமாகவும் செல்லும். மக்களின் தரத்திற்கேற்ப அரசின் தரம் அமையும் என்று ஒருவர் ஒரு முறை கூறியது ஞாபகம் வருகிறது. கல்வியில் மட்டும் அல்ல ஒவ்வொருத்துறையிலும், நடக்க முடியாததை ஒரு அரசியல் கட்சி கூறி வோட்டு கேட்கும்போது, என்ன மனநிலையில் இருந்தால் அவற்றை நம்புவர்? அவர்களது மனநிலைக்கு தக்க அரசு அமைந்து இருக்கிறது. கடவுள்/ இயற்கை காப்பாற்றட்டும்.   10:23:41 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
16
2022
பொது அண்ணாதுரை டேபிளில் திருவள்ளுவர் படம்! இணையத்தில் வைரல்
அண்ணாதுரை அவர்கள் நல்லாட்சி கொடுப்பதற்காக அலுவலகத்தில் இருந்ததால், அவருடைய மேஜையில் இருந்த திருவள்ளுவரோ அல்லது மற்றவரின் படத்திற்கும் அவரது மதத்திற்கும் அதிக கவனம் செலுத்தவில்லை. பின் வந்தவர்கள் திருவள்ளுவர், அண்ணா, பெரியார் மற்றும் பலரது பெயர்களை சொல்லி சொல்லியே நாட்களை கடத்துவதால் அவர்களுக்கு தான் இந்த கற்பனையெல்லாம் ஏற்படும்.   13:18:02 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
17
2022
பொது இது உங்கள் இடம் திட்டம் தீட்டுமா அரசு!
இதில் குற்றம் சாட்டப்படவேண்டியவர்கள், எம் எல் ஏக்களோ பதவியில் உள்ளவர்களோ அல்ல இவர்கள் தான் வேண்டும் என்று திரும்ப திரும்ப வோட்டை போடும் மக்கள் தான். அவரவர் தகுதிக்கும் திறனுக்கும் ஏற்ற வாழ்வு கிடைத்து இருக்கிறது. அவ்வளவுதான். இதை ஏற்றுக்கொண்டு அடுத்த தேர்தலுக்கோ அல்லது வேறு ஏதாவது நிகழ்வுக்கோ இலவசம் தருவார்களா என்று காத்திருக்கட்டும்.   13:14:05 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
17
2022
அரசியல் தமிழர் வாழ்வு சிறக்க, ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி வழியெல்லாம் நடக்க வேண்டாமா...
ஹிந்தி என்னமோ தகாத உறவு போல (தகாத உறவையே உரிமை )என்று கூறிக்கொண்டு இருக்கும் மொழி வெறியர்கள் தனக்கு தனக்கு என்றால்.....ம் என்ற பழமொழியை போல தாங்கள் நன்றாக ஆங்கிலமும் பிற மொழிகளையும் கற்று முன்னேறி விட்டார்கள். இவர்களை என்னவோ காக்கவந்த கடவுள் என்று நினைத்து தமிழை தான் படிப்பேன் என்று கூறி அதைக்கூட சரியாக படிக்கவோ பேசவோ அறியாத பொதுமக்கள் இருக்கும் வரை இவர்களுக்கு தினமும் பொங்கல் தான். தமிழர்களுக்கு வெறும் தமிழர் தின வாழ்த்துக்கள் தான்.   13:10:01 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
12
2022
அரசியல் இது உங்கள் இடம் கால் காசு பிரயோஜனம் இல்லை!
தேர்தல் வாக்குறுதியை கேட்டும் நம்பியும் மட்டும் தமிழக வாக்காளர்கள் வாக்களித்து விட்டதாகவும், அதை செயல் படுத்தமுடியாததால் ஆளுங்கட்சி சங்கடத்தில் உள்ளது போலவும் வரும் செய்திகளை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. முதல் முறையாக கழக ஆட்சி வந்ததில் இருந்து இன்றுவரை தேர்தல் அறிக்கை யை யாரவது சீரியஸாக எடுத்துக்கொண்டு இருக்கிறார்களா? திரைப்படங்களில் வரும் காமெடி சீன் மாதிரிதான் அரசியல் கட்சிகளும் சரி வாக்காளர்களும் சரி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் அவ்வப்போது எதிர்க்கட்சியில் இருக்கும் கட்சிகள் ஆளும்கட்சிகளின் வாக்குறுதியை நினைவு படுத்தும். அவ்வளவுதான். அப்படித்தான் இந்த நீட் தேர்வும் அதை வைத்து நடக்கும் அரசியலும்.   11:56:31 IST
Rate this:
5 members
0 members
6 members

ஜனவரி
12
2022
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
12
2022
Rate this:
0 members
0 members
14 members

ஜனவரி
8
2022
பொது இது உங்கள் இடம் கூட்டு களவாணிகள் தான்!
இருக்கட்டுமே இந்த அழுகிய நிலைக்கு யார் காரணம்? இவர்களுக்கு மாற்றி மாற்றி வோட்டு போட்ட மக்களாகிய நாம் தானே? இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நமக்கு எப்போது புரியும்?. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் புதிதாக தொடங்கிய கட்சிகள் மதிமுக முதல் இன்றைய கமலஹாசன் கட்சி வரை யாராவது வெற்றி பெற முடிந்ததா? வேறு கட்சி, மாற்று சிந்தனை என்று யாரையும் ஏற்க மக்கள் தயாராக இல்லை என்பது நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டுள்ள இந்த இரு பெரிய கட்சிகளும் ஏன் மாற வேண்டும்? தலையை காட்டுவதற்கு மக்கள் தான் தயாராக இருக்கிறார்களே இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்   09:59:45 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
2
2022
பொது வங்கிகளின் ஏ.டி.எம்., சேவைக் கட்டண உயர்வு நேற்று முதல் அமல்
சுந்தரமூர்த்தி அவர்களின் யோசனை சரியானது. எந்த ஒரு வங்கியின் வாயிலில் இருக்கும் ஏ டீ ம் வேலை செய்யாவிட்டால் அது அந்த வங்கியின் ஊழியர்களுக்கு பொறுப்பு இல்லை என்று கூறினால் அவர்களின் வேலை தான் என்ன? இந்த விஷயத்தில் வங்கி ஊழியர்கள் செய்வது மிகவும் அநியாயம். உள்ளே வரும் வாடிக்கையாளர்களை விரட்டுவதற்கு இவர்களை வேலைக்கு வைத்து இருக்கிறார்களா? வாடிக்கையாளர்களை வெளியில் அனுப்புவதற்காகவே சில வங்கிகளில் சிலர் வேலைக்கு வருகிறார்கள். இது எனது அனுபவம்.   14:44:44 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
2
2022
பொது வங்கிகளின் ஏ.டி.எம்., சேவைக் கட்டண உயர்வு நேற்று முதல் அமல்
எல்லாவற்றையும் இலவசமாகவே அனுபவித்து வந்து அதையே ஒரு முறையாக ஆக்கி பழகிவிட்டோம். எதெற்கெடுத்தாலும் அமெரிக்காவை பார் ஆப்ரிரிக்கவை பார் என்று கூறும் அறிவாளிகள், அமெரிக்காவில் டெபாசிட் மைண்டெனன்ஸ் சார்ஜெஸ் போடுவது தெரிந்து கொள்ளவேண்டும். இது வரை வங்கிகளின் செலவையெல்லாம் அரசு ஏற்றுக்கொண்டு மக்களின் வரிப்பணத்தை கொண்டு அடைத்துவந்தது. வங்கிகள் தங்களின் இஷடபடி வாரி வாரி இறைத்து பின்பு வாரகடனில் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லி வந்தனர். இப்போது நஷ்டத்திற்கு என்ன காரணம் என்று அறிய புறப்பட்டால் கொஞ்சம் மக்கள் சிரம பட வேண்டியிருக்கிறது. அது கஷ்டம் என்று பிடிவாதம் பிடித்தால், செந்தமிழன் சொன்னது கூட நடக்கலாம்.   14:41:00 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X