chinnathambi 2 : கருத்துக்கள் ( 817 )
chinnathambi 2
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
19
2020
சினிமா நடிகைகளை மதிக்காத போக்கு: மலையாள நடிகர் சங்கத்திற்கு ரேவதி, பத்மப்ரியா கடிதம்...
இந்த விஷயம் கொஞ்சம் ஊதி பெரிதாக்க படுகிறதோ என்ற எண்ணம் வருகிறது எந்த ஒரு இயக்குனரும் பொது வெளியில் இப்படி "இறந்தவர்களை" என்று கூறியிருக்க மாட்டார் என்றே கருதுகிறேன்/விரும்புகிறேன். பிறகு அவர் கொடுத்த விளக்கத்தில் அவர் அவ்வாறு அர்த்தத்தில் சொல்ல வில்லை என்று கூறியிருக்கிறார். சில விஷயங்கள் பழமொழிகள் கூட வேறு வேறு பாஷைகளில் அர்த்தம் ஒன்றாக இருந்தாலும் வார்த்தைகள் கொஞ்சம் கடுமையாக இருக்கும். உதாரணம் - கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல . இதை விட்டு விட்டு வேறு வேலை இருந்தால் பாக்கலாம். அந்த நடிகைக்கு என்ன நிர்பந்தமோ விளம்பரத்திற்காக கூட பெரிதாக்க முயற்சிக்கலாம்.   10:14:21 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
19
2020
சினிமா துாது வந்தாலும் வரலாம்...
ரசனைக்குறைவான பதிவு   10:08:42 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
19
2020
அரசியல் தமிழக பா.ஜ.,வில் சலசலப்பு!
பாஜக வில் சலசலப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் இருப்பது மாதிரி தான் கூறவேண்டும். திடீரென்று எதிர்பாராத விதமாக குஷ்பூவை போன்றது அதிகமாக விமர்சித்தவர்கள் கூட கட்சி யில் சேர்ந்து விடும்போது,பாஜக கட்சியை ஒரு அரசியல் போட்டியாக யாருமே நினைக்ககூட தயங்கிய நிலையில் தமிழக அரசியல் காட்சிகள் கொஞ்சம் கலங்கித்தான் போயிருக்கின்றன. வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் கட்சியை வளர்த்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை தான். ஆனால் தமிழகத்தில் உள்ள இரு பெரும் திராவிடக்கட்சிகள் அவ்வாறு நினைக்கவில்லை என்பது யதார்த்தம். அதனால் அவர்கள் தங்களது வேலையை விட்டு விட்டு பாஜகவில் சலசலப்பு அதிதடி சண்டை என்றெல்லாம் செய்தியை பரப்ப முயற்சி செய்வார்கள். அதுபோதும் அவர்களின் பதட்டத்தை மக்கள் அறிந்து கொள்ள.   09:08:53 IST
Rate this:
5 members
0 members
17 members

அக்டோபர்
18
2020
உலகம் தேர்தலில் தோற்றால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன் டிரம்ப்
இந்தியாவுக்கு வந்து விடாதே ஏற்கனேவே இங்கு நிறைய ...கள் இருக்கின்றன.   16:52:21 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
18
2020
கோர்ட் தியாகியை 23 ஆண்டுகளாக பென்ஷனுக்காக அலைய விட்ட அதிகாரிகள் உயர் நீதிமன்றம் கண்டனம்
உண்மையான தியாகிக்கு பென்சன் கொடுக்க தாமதமாக கூடாதுதான். ஆனால், அரசு ஊழியர்களில் சிலரும், அரசியல்வாதிகளில் (கடைநிலை) சிலரும் சேர்ந்து தியாகம் என்றால் என்ன என்றே தெரியாதவருக்கு எல்லாம் விண்ணப்பித்து பென்ஷன் வாங்கிக்கொடுக்கப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன. அப்படி தவறு ஏதேனும் நடந்தால் பென்ஷன் தவறாக கொடுத்த அதிகாரியை காப்பாற்ற எவரும் வரமாட்டார்கள். அதனால் முழு சுதந்திரம் இருந்தும் அவற்றை பயன் படுத்த தயங்கும் போக்கு அதிகாரிகளிடம் இருக்கிறது.   09:50:47 IST
Rate this:
1 members
0 members
7 members

அக்டோபர்
18
2020
உலகம் தேர்தலில் தோற்றால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன் டிரம்ப்
இந்தியா அமெரிக்கா மாதிரி வல்லரசு நாடாகும் என்று கூறிவரும் அரசியல்வாதிகள் இங்கிருந்து குரல் கொடுத்து வந்தார்கள். அது கொஞ்சம் நேரமாகும் என்று தோன்றியதால் அதிபர் டிரம்ப் அமெரிக்காவை அரசியலில் இந்தியா போல் ஆக்கிவிடுவதற்கு புறப்பட்டு விட்டார். அவர் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.   09:45:10 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
17
2020
பொது நீட் தேர்வில் ஒரே மார்க் வேறு வேறு ரேங்க் டிரெண்டிங்கில் விவாதம்
எல்லோருக்கும் திறன் உண்டு என்பதில் மாற்று கருத்து இல்லை ஆனால் முதல் மார்க் எடுத்தவன்தான் புத்திசாலி என்பதில்லை என்று கூறினால் முதல் மதிப்பெண் எடுத்தவன் புத்தி சாலி இல்லையா? முதல் மதிப்பெண் எடுக்காதவர்கள் புத்திசாலி அல்லாதவர் அல்ல அவ்வளவுதான். முதல் ரேங்க் என்பது வேண்டித்தான் இருக்கிறது. குறிப்பிட்ட அளவு இடங்களுக்கு அதிகம் பேர் போட்டி போடும் போது நமக்கு பிடிக்காவிட்டாலும் இவைகள் தேவைதான்.   16:40:03 IST
Rate this:
1 members
0 members
5 members

அக்டோபர்
17
2020
பொது நம்பகமான செய்திகளை தருவதில் அச்சு ஊடகம் முதலிடம் ஆய்வில் தகவல்
உண்மைதான் அச்சு ஊடகங்களில் உள்ள சுவாரஸ்யம் காட்சி ஊடகங்களில் இல்லை தான் ஒரு புத்தகத்தையோ அல்லது செய்திதாளையோ படிக்கும் மன நிறைவு காட்சி ஊடகங்களில் இல்லை. ஏனென்றால், அச்சு ஊடகங்களில் வரும் கருத்துக்கள் செய்திகள் மற்றும் கலை படைப்புகளை காட்சி ஊடகங்களில் உணர முடியாது. அது படைப்பாளியின் தவறு என்று சொல்ல மாட்டேன். அச்சு ஊடகங்களில் ஒரு கட்டுரை அல்லது ஒரு கதையை படித்தால் படிப்பவரின் மன நிலைக்கு ஏற்றவாறு கற்பனை செய்து சுவாரஸ்யமாக படித்து மகிழலாம். ஆனால் தொலைக்காட்சிகளில் படிப்பவரின் மனநிலைக்கு ஏற்றவாறு காட்சிப்படுத்த படுவதால் காண்பவரின் மனநிலையுடன் ஒத்து போகாவிட்டால் உடனடியாக வேறு ஒரு தொலைக்காட்சியின் பக்கம் போய் விடுவார்கள். மற்றொன்று விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் இல்லாவிட்டால் தொலைக்காட்சிகளை நடத்த முடியாது என்பது யதார்த்தம். அவை திணிக்க படுகின்றன. ஆனால் புத்தகத்திலோ அல்லது செய்தித்தாள்களிலோ வரும் விளம்பரங்கள் வாசிப்பவர்களின் விருப்பத்திற்கேற்ப தவிர்க்கப்படுகின்றன/தவிர்த்து விடலாம். . ஆனால் இளைய தலைமுறையினர் எல்லாவற்றையும் வேகமாக தேவை படுவதால், புத்தகங்கள் மற்றும் செய்தி தாள்களின் வாசகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது என்பது கசப்பான உண்மை.   08:00:45 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
15
2020
பொது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள் பிரதமர் மோடி வாழ்த்து
உண்மை தான் இந்தியாவிலும் கூட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டும் தான் இறந்த பிறகு பிறந்தநாள் கொண்டாட்டமும் அதற்கான வாழ்த்தும் கேள்விப்படுகிறோம். மேலும் இஸ்லாமிய சமுதாயத்தின் வழக்கம் என்னுடைய நெருங்கிய இஸ்லாமிய நண்பர் கூறியது படி பிறந்தநாள் என்பதற்கு கொண்டாட்டம் இல்லவே இல்லை என்பதாகும். அதேபோல முஸ்லீம் லீக் கட்சியின் எந்த ஒரு தலைவருக்கும் பிறந்தநாள் விழா போஸ்டர் நான் பார்த்ததே இல்லை. ஏதாவது ஒரு காரணம் வைத்து போஸ்டர் அடிக்கவேண்டும். அதில் நம் போட்டோ வரவேண்டும் என்பதற்காக இங்கு கழகங்கள் ஆரம்பித்து வைத்து தான் இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள். அப்துல் கலாம் போன்றவர்கள் வாழ்ந்த எளிமையான வாழ்க்கையை பின்பற்ற முயற்சி செய்தாலே அது அவருக்கு செய்யும் மரியாதை ஆகும். அதை விட்டு விட்டு அரசே இதெல்ல்லாம் செய்வது கொஞ்சம் பொருந்தாத செயல்.   21:00:04 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
13
2020
அரசியல் பா.ஜ.,விற்கு பிரபலங்கள் படையெடுப்பு திராவிட கட்சிகள் கலக்கம்
அரவோனை விட குஷ்பு பிரபலமானவர்தான்.   15:22:22 IST
Rate this:
1 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X