Pasupathilingam : கருத்துக்கள் ( 23 )
Pasupathilingam
Advertisement
Advertisement
ஜூன்
8
2018
பொது இன்றைய(ஜூன்- 08) விலை பெட்ரோல் ரூ.80.37, டீசல் ரூ.72.40
சில தினங்கள் முன்பு ஒரு வாட்ஸ் ஆப் வீடியோ வந்தது. அதில் ஒருவர் பெற்றோல் பங்க்கில் இரண்டாயிரம் ருபாய் கொடுத்து பைக்கு பெட்ரோல் போட சொல்வார். அவர் ஒரு இங்க பில்லரில் சொட்டு சொட்டாக விடுவார். பைக்குக்காரர் என்னம்மா இரண்டாயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போடச்சொன்னால் சொட்டுமருந்து போடுறீங்க என்று கேட்கும் கேள்விக்கு பங்க் பெண்மணி முகத்தை நொடித்து நீ கொடுத்த பணத்துக்கு இவ்வளவுதான் என்று சொல்வார். போகிற போக்கைப் பார்த்தால் விரைவில் அது நடக்கும் என்று தான் தோன்றுகிறது.   19:47:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
18
2017
அரசியல் குஜராத்தில், நோட்டாவுக்கு 5 லட்சம் ஓட்டு
நோட்டாவுக்கு அதிக வாக்கு பதிவாகி மற்ற வேட்பாளர்கள் குறைந்த வாக்கு பெற்றுவிட்டால் அந்த தொகுதிக்கு நின்ற வேட்பாளர்கள் யாரும் வெற்றிபெற்றவராக கருத மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் திருத்தம் கொண்டுவந்து தேர்தல் நடத்தினால் நோட்டவையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பது நிச்சயம்   17:54:03 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

ஏப்ரல்
24
2017
பொது தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை மத்திய அரசு விரைவில் அறிமுகம்
ஒரு சாதாரண குமாஸ்தா வேலைக்கு ஆள் போடுவதென்றாலே விண்ணப்பம் வாங்கி தேர்வு நடத்தி பரிசீலித்து சிபாரிசுகள் ஆராய்ந்து இட ஒதுக்கீடு பார்த்து வேலை உத்தரவு வழங்கவேண்டியுள்ளது. அப்படி இருக்கையில் ஒரு பெரிய மாநிலத்தின் ஆளுநர் என்றால் சும்மாவா. இன்னும் ஒரு ஆண்டு ஆனாலும் பரவாயில்லை நன்கு பரிசீலித்து உத்திரவிடுங்கள் நாங்கள் பொறுத்திருப்போம். இந்த லட்சணத்தில் மத்திய அரசு விரைவில் முழு நேர ஆளுநர் நியமிப்பார்களாம். மத்திய அரசின் வேகம் மிக அதிகம். அதிக வேகம் ஆபத்துக்கு அறிகுறி என்று சாலைகளில் எழுதியிருப்பது தங்களுக்கு என்று நினைத்து விட்டார்கள் போலும்.   08:28:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
20
2017
பொது இது யாருன்னு தெரிகிறதா..? கட்ஜு சொல்லாதது புரிகிறதா?
உள்ளாட்சி அமைப்புக்களில் பெண் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் முக்கால் வாசி அவர்களின் கணவர் அல்லது மகன்கள் தான் எல்லா வேலைகளையும் செய்து வந்தனர். கூட்டம் நடத்திய சம்பவங்கள்கூட உண்டு. அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. மக்களும் எதிர்க்கவில்லை. அப்படி இருக்கையில் முதல்வருக்கு துணையாக ஒருவர் எப்போதும் பக்கத்தில் இருந்தால் என்ன தப்பு. கவர்னருக்கு ஏ டி சி. போன்று எடுத்துக்கொள்ள வேண்டியத்துதான். அவரது ஆலோசனைப்படிதான் எல்லாம் நடக்கிறது என்று மக்கள் எடுத்துக்கொள்வார்கள்.   11:31:38 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
11
2017
சிறப்பு கட்டுரைகள் போராட்ட களம் போர்க்களம் ஆவது ஏன்?
வணக்கம், தங்கள் ஒவ்வொரு வரியும் மிக சரியாக உண்மையாக சொல்லப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால் இந்த கருத்துக்களை நான் சொல்லவே நினைத்திருந்தேன். எனது பணிக் காலத்தில் பல சட்டம் ஒழுங்கு பிரச்சினை நடந்த இடங்களில் வருவாய்த்துறை மற்றும் காவல் அலுவலர்களுடன் பணி செய்திருக்கிறேன். அதிலும் ஒரு சமயத்தில் ஒரு கலவரத்தின் பொது (உண்மையில் அது ஒரு கலவரமே அல்ல) ஒரு பிரிவினர் அடுத்த பிரிவினரை தாக்க துணிந்தார்கள். ஒரு பிரிவினர் அமைதிப்படுத்தியதும் ஒரே இடத்தில் உட்காரவைக்கப்பட்டார்கள். அடுத்த பிரிவினரே எப்படியேனும் கலவரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடந்துகொண்டார்கள். ஒரு இஸ்லாமியர் இரு பிரிவினருக்கும் இடையில் எவ்வளோவோ சமாதானம் பேசிவிட்டு சலிப்படைந்து போய்விட்டார். அதில் சப்கலெக்டர், டி,எஸ்,பி, உடன் சென்றவர்கள் அனைவருக்கும் கல்லடி கிடைத்தது. அந்த நேரத்திலும் இரண்டு அதிகாரிகளும் ரத்தம் வழிய அவர்களிடம் இருகரம் கூப்பி களைந்து செல்லும்படி கெஞ்சினார். அவர்களின் அந்தஸ்துக்கு இவர்களிடம் இப்படி கெஞ்சவேண்டுமா என்று என் மனம் துடித்தது. அப்போது அங்கு வந்த ஒரு போலீஸ் வேன் கலவர காரர்களால் சல்லடையாக துளைக்கப்பட்டது. அந்த பலமும் ஆயுதமும் வெறியும் அவர்களுக்கு இருந்ததது. திரைப்படங்களில் வருவதுபோல் ஒருதுப்பாக்கி ஏந்திய காவலரை தலையில் வெட்டி தெருவில் தூக்கி வீசினார்கள். பல போராட்டங்கள் இப்படித்தான் திட்டமிட்டு மாற்றப்படுகின்றன. கடைசியில் துப்பாக்கி சூட்டில் முடிந்தது. அதன்பின் இன்று வரை அத்தகைய கலவரம் நடக்கவில்லை. அதற்கு முன் சாவு விழுந்தால் கூட போய் காவல் காக்கவேண்டும். கொட்டினால் தான் தேள் என்று நினைக்கிறார்கள். இல்லை என்றால் காவல்துறை என்றால் அது ஒரு காமெடி துறை என்று எல்லா பாடும் படுத்துவர். இதில் ஊடகங்கள் திரைப்படங்கள் அனைத்தும் காவல் துறை என்றால் கேவலமாக தானே பார்க்கின்றனர். எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரர்கள் ஒருமணி நேரம் சும்மா இருந்துவிட்டால் இந்தியா என்ன ஆகும். அதேபோல் அனைத்து காவல்துறையினரும் ஒரு நாள் மட்டும் எதுவும் செய்யாமல் முடங்கி இருந்தால் மக்கள் என்ன ஆவார்கள் என்பதை யாரும் சிந்திப்பதில்லை. கீழ்நிலை காவல் துறையினரின் பல தவறுகளுக்கு மேல்நிலை அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் காரணம். அவர்கள் நேர்மையாக இருந்தால் எல்லாம் நேர்மையாக இருக்கும். எதிர்க்கட்சியினர் எல்லோரும் இது ஆளும் கட்சி போலீஸ் என்ற கண்ணோட்டத்தில் பேசி மக்களை தூண்டிவிடும் செயலை நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டும்.   18:02:16 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
11
2017
அரசியல் சசிகலாவுடன் பன்னீர்செல்வம் மோதலா?முதல்வர் நிகழ்ச்சி இடம் மாறியதால் சர்ச்சை
சரியாகி சொன்னீர்கள் அரசுக்கு எதிர்ப்பு கருத்து கொண்டவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு அரசின் முகத்தில் கரியைப் பூசுங்கள் அப்போது அரசும் தனது கடமையை நம்முடன் சேர்ந்து செய்யும்.   08:26:42 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
25
2016
பொது 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி
இதிலும் தவறு உள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை தொடக்க பள்ளியாகவும் அதற்க்கு மேல் உயர் துவக்கப் பள்ளியாகவும் பராமரிக்கப் படுகிறது. ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாய பாஸ் என்பதால் அந்த வகுப்பு வரை உள்ள ஆசிரியர்கள் சரிவர பாடம் நடத்தப்போவதில்லை. வேலை செய்யாமலே சம்பளம் வாங்கிக் கொண்டு போகப் போகிறார்கள் பெரும்பாலான பள்ளிகளில் இந்த கூத்து நடக்கிறது. வேண்டுமானால் எதிர் கருத்து உள்ளவர்கள் பத்து பள்ளிகளை போய் பார்க்கட்டும் எட்டு பள்ளிகளில் நடப்பது தெரியும். மாணவர்களும் படிக்காமல் பாஸாகி ஆறாம் வகுப்பில் வந்து உட்கார்ந்ததும் ஒன்றும் தெரியாமல் அந்த வகுப்பு ஆசிரியர்களை படுத்தப் போகிறார்கள். தற்போது இந்த நிலைதான் நிலவுகிறது. அதே நிலை சற்று கீழ் நிலையில் நிலவப் போகிறது. ஒன்பதாம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களை கேட்டுப் பாருங்கள் நிலைமையின் தீவிரம் புரியும். குறிப்பாக பல பள்ளிகளில் கட்டாய பாஸ் காரணமாக அடிப்படை வாய்ப்பாடு கூட தெரிவதில்லை. எனவே குறைந்த பட்சம் ஐந்தாம் வகுப்புக்கேனும் கட்டாய தேர்வு நடத்தவேண்டும். தேர்வு இருந்தால் தான் மாணவர்களுக்கு படிக்க வேண்டும் என்ற அக்கறை ஏற்படும். மேலும் இன்னொரு கொடுமை ஆறாம் வகுப்பு முதல் தணிக்கைக்கு வரும் SSA BSA இத்தியாதி அதிகாரிகள் மாணவர்களுக்கு கல்வித் திறன் இல்லாததற்கு மேல் நிலை ஆசிரியர்களைத் தான் கேள்வி கேட்கின்றனர். சாதாரணமாகவே தற்போது B.Ed. ஆசிரியர்களுக்கும் சீனியர் ஆசிரியர்களுக்கும் பிரச்சினை. அதைவிடவும் பழைய பென்சன் திட்டத்தில் உள்ள பழைய ஆசிரியர்கள் புதிய ஆசிரியர்களை கேவலமாக பார்க்கின்றனர். புதிய ஆசிரியர்கள் நாங்கள் மெத்த படித்தவர்கள். எங்களை விட குறைவாக படித்த நீங்கள் எப்படி எங்களுக்கு தலைமை ஆசிரியராக வருவது என்று பிரச்சினை. ஆக அடிப்படை பிரச்சினைகளை சீர் செய்யட்டும் முதலில்.   17:45:39 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
2
2016
பொது 27 வங்கி அலுவலர்கள் சஸ்பெண்ட் நிதித்துறை அதிரடி நடவடிக்கை
அட போங்க சார்... காசு வாங்காதவனை பொழைக்க தெரியாதவன் பத்து காசுக்கு பொறாதவன், தனக்கு மட்டும் இல்லாமல் தன தலை முறைக்கே துரோகம் செய்பவன் (இது ஒரு நேர்மை பத்திரிகை நிருபர் சொன்னது) நேர்ல வாங்கமாட்டான் ரகசியமா வாங்குவான், இவர்தான் வந்துட்டார் நாட்டை திருத்த, நாம குடுத்தாலும் வாங்க மாட்டேங்கறான் இவன் எங்க செய்ய போறான் நமக்கு, ... இப்படியெல்லாம் ஏகடியம் பேசி கேவலப் படுத்தும் மக்கள் வாழும் நாடு இது. அதிகாரிகள்கூட இவர்களை இளக்காரமாக நடத்துவார்கள். சகோ முத்துக்குமார் சொன்னதெல்லாம் நடக்க இன்னும் எத்தனை தலைமுறை ஆகுமோ. லஞ்ச ஒழிப்பு துறையில் மாட்டிவிட்டவனே நீதி மன்றத்தில் பிறழ் சாட்சி சொல்லி குற்றவாளிக்கு புனித பட்டம் கொடுக்கும் நிலை தான் இந்த நாட்டில் உள்ளது வருத்தப்பட வேண்டிய நிலை   05:07:16 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

டிசம்பர்
1
2016
பொது மாத சம்பளதாரர்கள் சிக்கலுக்கு தீர்வு ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை
மிக சரியாக சொன்னீர்கள். சாதாரண சற்றே விபரம் தெரிந்தவர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்குத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் இந்த சர்விஸ் சார்ஜ் தான் இடிக்கிறது. தொலைபேசி கட்டணம் மட்டும் கூடுதல் செலவில்லாமல் கட்டலாம் மின் கட்டணம் LIC பிரிமியம் போன்றவைகளுக்கு 3 .5 சதவீதம் பிடிக்கிறார்கள் அரசாங்க நிறுவனங்கள்கூட இப்படி நடந்தால் எப்படி. சொந்த வங்கி கிளையிலேயே பணம் போட்டாலும் பணம் பிடிப்பது என்ன நியாயம். பெரும்பான்மையானவர்கள் கணக்கு பார்த்து செலவு செய்யும் நிலையில் உள்ளவர்கள்தான். நியாயமான கட்டணங்கள் மட்டும் பிடிக்கட்டும் எல்லோரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வரத் தயார்தான். இவைகளை அரசு பரிசீலிக்கவேண்டும்.   18:21:00 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
23
2016
பொது வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது
அப்படியே தமிழ் நாட்டிலும் கொண்டுவந்தால் 90 சதவீதம் பேர் சம்பளமே வாங்க முடியாதவர்கள் ஆகிவிடுவார்கள். எந்த துறையிலும் சொந்த வசூலை தவிர வேறு வேலை நடக்கவில்லை.   08:16:11 IST
Rate this:
0 members
0 members
47 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X