suriyanila : கருத்துக்கள் ( 6 )
suriyanila
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
19
2019
அரசியல் ஹிந்திக்கு எதிராக தி.மு.க., போராட்டம்
அரிய பொக்கிஷங்கள் நிறைந்த மொழி சமஸ்கிருதம் உனக்கு வேண்டாம் என்றால் விட்டுவிடு. சமஸ்கிருதம் பாதுகாக்க வேண்டிய மொழி .   20:40:21 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
19
2019
அரசியல் ஹிந்திக்கு எதிராக தி.மு.க., போராட்டம்
ஆந்திராவில் அரசு பள்ளிகளில் ஹிந்தி இருக்குது - தெலுங்கு அழியவில்லை .தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்தியை கொண்டுவந்தால் தமிழ் எப்படி அழிந்துவிடும். தமிழ் தாய்மொழியாக இல்லாமால் வேற்றுமொழியை தாய்மொழியாக கொண்ட போலி தமிழ் தலைவர்கள் தமிழர்களை, தமிழை அழிப்பதற்கான முயற்சி இது . ஹிந்தியை கற்பதற்காக எவ்வளவு தமிழர்கள் நிறைய பணம் செலவு செய்கிறார்கள். வசதி இல்லாதவர்களால் ஹிந்தி கற்க இயலவில்லை . தமிழர்களுக்கு இலவசமாக ஹிந்தி கற்க கிடைக்கும் வாய்ப்பை தடுக்கும் போலி தலைவர்கள் ஒழிக .   20:17:26 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
19
2019
அரசியல் ஹிந்திக்கு எதிராக தி.மு.க., போராட்டம்
ஹிந்தி உனக்கு வேண்டாம் என்றால் படிக்காதே . திமுக வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கும் . அரசு பள்ளிகளில் ஹிந்தி இருக்கக்கூடாதா? ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் திமுக விளையாடக்கூடாது. ஹிந்தி வேண்டாம் என்று உங்களை யாரும் போராட சொல்லவில்லை . எங்களுக்கு ஹிந்தி வேண்டும் . மாநில அரசும் மத்திய அரசும் கண்டிப்பாக தமிழக அரசு பள்ளிகளில் ஹிந்தியை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் இது தமிழக மக்களின் எதிர்பார்ப்பு .   16:12:44 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

ஜூன்
12
2018
பொது பள்ளி பொது தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு ரிசல்ட் தேதியும் முன்கூட்டியே வெளியீடு
மாண்புமிகு அமைச்சர் அவர்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது. தேர்வு அட்டவணைகள், அனைத்து தரப்பு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மிகவும் நல்ல முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றம் தேவையில்லை. ஒவ்வொரு தேர்வுக்கும் உள்ள இடைவெளி அவசியம். மாணவர்களுக்கு போதிய ஒய்வு அவசியம். மனநல மருத்துவரே நீங்கள் நன்கு பயிற்சி எடுக்கவேண்டும். ஏசி அமர்ந்துகொண்டு முடிவெடுக்காதீர்கள். தேர்வு தொடர்ச்சியாக இருந்தால் தான் சோர்வடைவார்கள்.   12:16:06 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
14
2017
கோர்ட் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாதுதமிழக அரசு
இங்கு கருத்து எழுதுபவர்கள் அரசு பள்ளிகளின் நிலை என்ன என்று அறியாமல், ஒரு சிலர் செய்யும் தவறுகளை கருத்தில் கொண்டு ஒட்டு மொத்த ஆசிரிய சமுதாயத்தையே குறை கூறுவது தவறு. (1) அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தரமும், குடும்ப சூழ்நிலையும் - தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தரமும், குடும்ப சூழ்நிலையும் வேறு. (2) அரசு பள்ளிகளில் 6 – ம் வகுப்பில் எழுத்துக்களும் எண்களும் தெரியாத மாணவர்களை சேர்த்துக் கொள்வார்கள். – தனியார் பள்ளிகளில் இத்தகைய மாணவர்களை சேர்த்துக் கொள்வார்களா? (3) பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஆசிரியர்களுக்கு கூடுதலான பணிச்சுமை. அதனையும் மகிழ்வுடன் ஏற்று பணி செய்யும் ஆசிரியத் தெய்வங்கள் (4) அரசு பள்ளிகளில் 10 – ம் வகுப்பு பாடங்களை எட்டாம், ஒன்பதாம் வகுப்பில் நடத்துவதில்லை. (5) சம்பளத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ஒன்றுமே அறியாமல் எங்கோ அமர்ந்துகொண்டு காழ்ப்புணர்ச்சியுடன் கருத்து எழுதாதீர்கள். (6) ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என அரசாணை பிறப்பித்ததினால் வந்த விளைவு தான் கல்வித் தரம் குறைந்ததற்கான காரணம். (7) எல்லாத் தடைகளையும் மீறி அரசு பள்ளிகளில் 10 – ம் வகுப்பில் 485 மதிப்பெண்களுக்கு மேல் மாணவர்களை கல்வி கட்டணம் இலவசம் என்று தன் பக்கம் இழுக்கும் தனியார் பள்ளிகள். இதில் தனியார் பள்ளிகள் தரமான கல்வித் தருகின்றன என மொக்க சான்றிதழ் வேறு. (8) தனியார் பள்ளிகள் NEET – தேர்வில் என்ன கிழித்தன. (9) என் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் படிக்கின்றனர். அங்கு மிகவும் சிறப்பாக சொல்லித்தருகின்றனர். 9 ஆசிரியர்கள் இருக்கவேண்டிய பாலூர் அரசு உயர் பள்ளியில் (பேர்ணாம்பட்டு) 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்(தமிழ் மீடியத்துக்கு மட்டும்). (அ) இதில் தமிழ் மீடியம் 6 முதல் 10 – ம் வகுப்பு வரை 5 வகுப்புகள், (ஆ) ஆங்கில மீடியம் 6 முதல் 9 – ம் வகுப்பு வரை 4 வகுப்புகள் மொத்தம் 9 வகுப்புகள் இருக்கும். 9 வகுப்புக்கு 5 ஆசிரியர்கள் போதுமா? (10) ஒரே வகுப்பில் கூட்டல் கழித்தல் கற்காமல் வரும் மாணவர்களை வைத்துக்கொண்டு தமிழ் மீடியத்துக்கும் ஆங்கில மீடியத்துக்கும் ஒரே ஆசிரியராக பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் திறமைசாலிகள்தான். இதற்கு சான்றாக நிறைய பள்ளிகளை காட்டுவேன்.   01:37:19 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
27
2017
கோர்ட் அரசு பள்ளிகளின் செயல்பாடு குறித்து உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
எங்கு தவறு என்பதை அறியாமல் ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்தையே கொச்சைப்படுத்தகூடாது 1. தவறுகள் தொடக்கப்பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. பெரும்பாலான துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் பாடம் ஒழுங்காக நடத்துவதில்லை. சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருவதில்லை. 2 . .. 6 - ம வகுப்புக்கு வரும் பெரும்பாலான மாணவர்கள் தமிழ் எழுத்துக்கள் தெரியாத நிலையில் உள்ளனர். இவர்களை வைத்துகொண்டு உயர்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் படும் துன்பம் அளவில்லாதது.பாலூர் ( பேர்ணாம்பட்டு) அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்றுமே தெரியாமல் வரும் மாணவர்களை வைத்துக்கொண்டு துவக்கப்பள்ளியில் கற்பிக்கவேண்டியதை 6 - ம் வகுப்பிற்கு மேல் கற்பிற்கிறார்கள், க்டுமையாக உழைக்கிறார்கள். நல்ல தேர்ச்சி விகிததை அளிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் இந்த மாணவைகளை சேர்க்கவேமாட்டார்கள். தவறுகள் தொடக்க கல்வி முறையில் தான்.. அப்பா அம்மா படித்தவர்களாக இருந்தால் தான் அவர்களின் பிள்ளைகளை சேர்க்கும் பள்ளிகளும் இருக்கின்றது. திறமையான மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் தனியார் பள்ளிகள் ஒன்றும் அரசு பள்ளியை விட ஒன்றும் சிறந்தவை அல்ல. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களை சிறந்தவர்களே.   03:30:13 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X