நக்கீரன் : கருத்துக்கள் ( 1137 )
நக்கீரன்
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
4
2021
பொது நாளை! கவனாய் பார்த்து போடுங்கள் ஓட்டு காலை 700- இரவு 700 வரை
நண்பர்களே, சொந்தங்களே... தேர்தல் நெருங்கி விட்டது. கட்டாயம் அனைவரும் வாக்களியுங்கள். வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல நமது கடமையும் கூட. நாம் தேர்தெடுக்கும் அரசுதான் நம் தலைவிதியை நிர்மாணிக்கிறது. எனவே, நல்லவர்களை தேர்ந்தெடுங்கள். கற்றறிந்த நல்லவர்கள் வந்து நிரப்பாத அரசியல் வெற்றிடத்தை கயவர்கள் வந்து நிரப்புவார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே, நல்லவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் ஆதரவளியுங்கள். மாற்றம் வேண்டும் என்று வெறுமனே புலம்பாமல் அதை நாம்தான் கொண்டு வரவேண்டும் என்பதை உணருங்கள். மேலும், இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது. மற்ற உயிர்கள் இல்லையேல் மனிதனில்லை என்பதை உணர்ந்து இயற்கையை, நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை நேசிப்பவர்களை தேர்ந்தெடுங்கள். நாளைய நம் தலைமுறையை பற்றி யோசித்து வாக்களியுங்கள். இன்றைக்கு வாக்குக்கு காசு கொடுப்பவர்களை அடையாளம் கண்டு முற்றிலும் புறக்கணியுங்கள். நிச்சயம், அவர்கள் அந்த காசை நம்மிடமிருந்து வட்டியும் முதலுமாக ஊழல் செய்து கொள்ளையடிப்பார்கள். இந்த தேர்தல் நிச்சயம் ஒரு முக்கியமான தேர்தல். தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகிற தேர்தல் என்பதை உணருங்கள். மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறவர்களை கேலியும் கிண்டலும் செய்து புறந்தள்ளி விட்டு அப்புறம் புலம்பாதீர்கள். எனவே, கட்டாயம் வாக்களியுங்கள், நல்லவர்களை தேர்வு செய்யுங்கள். உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன். நம்மால் நிச்சயம் நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும்.   10:22:52 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
5
2021
அரசியல் உண்மையில் ஜெயித்தவர் யார்? தெரியாமலே அடுத்த தேர்தல்!
இதுதான் இந்தியாவில் சட்டம் நீதித்துறையின் லட்சணம். இதைத்தான் மாற்ற வேண்டியிருக்கிறது. நாம்தான் அந்த மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.   10:14:07 IST
Rate this:
0 members
0 members
13 members

மார்ச்
30
2021
அரசியல் நான் ஓட்டுக்காக நிற்கவில்லை நாட்டிற்காக நிற்கிறேன்
இதுவரையில் நம்மை ஆட்சி செய்து கொள்ளையடித்த இந்த திருட்டுக் கூட்டங்களின் மேல் கேள்வி எழுப்பாதவர்கள், சீமான் பேசும் அரசியல் மீது நியாயமற்ற குற்றச்சாட்டுக்களை வைக்கின்றனர். அவதூறுகளை பரப்புகின்றனர். இன்றைக்கு நான் அறிந்தவரையில் அனைத்து உயிர்களுக்குமான அரசியலை பேசுபவர் சீமான் மட்டுமே. அதற்காகவே அவருக்கு வாக்களிக்கலாம். ஏனென்றால், மற்ற உயிர்கள் இல்லையேல் மனிதன் இல்லை. இன்னும், சீமானை பி டீம், கைக்கூலி என்று கூறுபவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்கு பட்டால்தான் தெரியும். இன்றைக்கு தேவை சீமான் பேசும் அரசியல். அது தவிர்க்க முடியாதது. சீமானுக்கு ஒருமுறையேனும் வாய்ப்பளித்து விட்டு அவரை குறை இருப்பின் கூறினால் நலம்.   13:00:19 IST
Rate this:
5 members
0 members
13 members

மார்ச்
22
2021
அரசியல் பூமியின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்றுவேன் சீமான் உறுதி
தமிழ்நாட்டில் லஞ்சம் ஊழல் புற்றீசலாக பெருகி இருக்கிறது. குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை. சுத்தமான காற்று இல்லை. மருத்துவம் வியாபாரமாக்க்கப்பட்டிருக்கிறது. இது எல்லோருக்கும் தெரியும். இந்நிலை எதனால்? இங்கே திராவிடம் வேஷம் கட்டி நம்மை ஏமாற்றிய இந்த கொள்ளையர் கூட்டங்களால். இருந்தும் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டுவர தயங்குகிறோம். நல்ல அரசியல் பேசுவோரை இளக்காரமாக பேசுகிறோம். நாம் தமிழர் பேசும் அனைத்து உயிர்களுக்குமான அரசியலை இங்கே யாராலும் குறை கூற முடியாது. லஞ்ச ஊழல் அவலங்களை பொறுத்துக்கொள்ள பழகிவிட்ட நமக்கு நல்ல அரசியல் சற்று வித்தியாசமாக தெரிகிறது. அது சாத்தியமில்லை என்று நினைக்கிறோம். இது எவ்வளவு ஆபத்தானது? இங்கே நாம் தமிழர் கட்சிக்கு எதிராக கருத்து கூறுவோர் ஒரே ஒருமுறை அவர்களுக்கு வாய்ப்பளித்துவிட்டு பேச வேண்டும். நல்லவர்களை ஆதரிக்காது சமூகம் நாசமாகத்தான் போகும். அப்புறம் புலம்பி பயனில்லை.   11:01:36 IST
Rate this:
5 members
0 members
11 members

மார்ச்
20
2021
அரசியல் தேவேந்திர குல வேளாளர் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது
சொம்பு சத்தம் அதிகமா கேக்குதே திரு சேகர். அதிமுக சொம்பாக இருந்த நீங்க இப்படி மாற்றி அடிப்பது எதனாலோ?   11:03:11 IST
Rate this:
1 members
0 members
2 members

மார்ச்
19
2021
கோர்ட் ஓட்டு இயந்திரத்தில் சின்னங்கள் கூடாதுஉச்ச நீதிமன்றம் உத்தரவு
இதுதான் தேவை. இது போன்ற சீர்திருத்தங்களை கொண்டுவர எதற்கு தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. சின்னங்களை காண்பித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள்.   11:00:14 IST
Rate this:
1 members
0 members
3 members

மார்ச்
19
2021
அரசியல் ரயில்வேயின் உள் கட்டமைப்பு வசதிகள் தனியார்மயமாகாது
மோடிஜி வந்த பிறகு ரயில்வேயில் ஏகப்பட்ட முன்னேற்றங்கள் வந்துள்ளது உண்மைதான். வெறுமனே திட்டங்களை அறிவிக்காமல் அதை நிறைவேற்றுவது பாராட்டுக்குரியது. எனக்கு தெரிந்து நிறைய திட்டங்கள் வந்துள்ளன. ஆனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு போதுமான ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. இதன் மூலம், அதிகாரிகள் அரசியல்வாதிகளின் பினாமிகள் நடத்தும் ஆம்னி பஸ்களின் கொள்ளைகளுக்கு துணை போகிறார்கள். மேலும், பெட்ரோல் டீசல் பயன்பாட்டால் சுற்று சூழலும் கெட்டு, நாட்டின் அந்நிய செலாவாணியும் வீணடிக்கப்படுகின்றது. எனவே, பொதுப்போக்குவரத்தை, குறிப்பாக ரயில்கள் மூலம், ஊக்குவிக்க வேண்டும். தொடரட்டும் மோடிஜியின் சேவை.   10:58:01 IST
Rate this:
2 members
0 members
2 members

மார்ச்
20
2021
அரசியல் பழைய இபிஎஸ்., இல்ல.. இவரு...!
எல்லாம் சரிதான். ஆனால், ஊழல் கரைதான் போக மாட்டேங்குது. என்ன செய்வது?   10:51:06 IST
Rate this:
6 members
1 members
12 members

மார்ச்
20
2021
அரசியல் பா.ஜ.,வை வளர்த்து விட்டது தி.மு.க., தான் சீமான் குற்றச்சாட்டு
அனைத்து உயிர்களுக்குமான அரசியலே இனி காலத்தின் தேவை, கட்டாயம். மற்ற உயிர்கள் இல்லையெனில் மனிதனில்லை. எனவே, அதை முன்னெடுக்கும் நாம் தமிழருக்கு இந்த முறை வாய்ப்பளிக்கலாம் என்று தோன்றுகிறது. இங்கே வாய்ப்பே கொடுக்காமல் நாம் தமிழர் கட்சியை குறை கூறுவதை ஏற்க முடியாது.இவ்வளவு நாள் திமுக அதிமுக என்று மாற்றி மாற்றி வாய்ப்பளித்தோம். ஆனால், நம்மை தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கும் நடைமுறைக்கு ஒத்துவராத இலவசங்களை கூறி நம் ஓட்டுக்களை ஏமாற்றி வாங்க முயற்சி செய்கிறார்கள். எனவே, மாற்றம் வேண்டுமெனில் தமிழக மக்கள் இந்த திருடர்கள் இல்லாத ஒரு புதிய கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், நாம் தமிழர் மற்றவர்களை விட சிறப்பாக தெரிகிறார்கள். எதோ பிஜேபியை எதிர்த்தாலே நாம் தமிழரை புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் பேசும் அரசியல் நேர்மையானது. தூய்மையானது. நல்லவர்களை ஆதரிக்க வேண்டியது நமது கடமை. இதை தவிர வேறு ஒரு நல்ல அரசியல் பேசும் கட்சி இருந்தால் அவர்களையும் ஆதரிக்க நான் தயாராக இருக்கிறேன்.   10:47:02 IST
Rate this:
4 members
1 members
11 members

மார்ச்
19
2021
அரசியல் ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...3 கன்டெய்னரும் 570 கோடி ரூபாயும்!
ஜெயாவின் ஊழல் பணம்தான் அது என்பது அனைவருக்கும் தெரியும். அரசு பணம் என்றால் டிரைவர் பதில் சொல்லியிருக்க மாட்டானா? மேலும், அந்த வண்டியும் போலி பதிவு எண் கொண்டது என்பது கூடுதல் தகவல். எதோ மத்தியில் இருந்த பிஜேபியின் தயவால் ஜெயாவின் கொள்ளை கூட்டம் தப்பித்தது அன்று.   10:12:27 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X