பள்ளி வாரியாக தரவுகள் வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் எவ்வளவு, அரசின் உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எவ்வளவு, சிறுபான்மையினர் நடத்தும் பள்ளி மாணவர்கள் எவ்வளவு என்று தரவு வேண்டும். இதில் அரசின் உதவித்தொகை எவ்வளவு என்று கணக்கு காட்ட வேண்டும். Plus 2 என்பதால் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவே ஒன்று முதல் 11வகுப்பு என்றால் சுமார் 2 முதல் 3 லட்சம் மாணவர்கள் என்று கணக்கு வைத்தால் கூட, அரசின் பணம் உதவித்தொகை என்ற பெயரில் எங்கே செல்கிறது,யார் உண்மையான பயனாளிகள் என்று மாண்புமிகு தமிழ்நாடு நீதபதிகள் தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் உச்சநீதிமன்றம் செல்லவும் தயக்கம் கூடாது.2 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது இந்த அரசு.அது எந்த பணிக்காக செலவு செய்து உள்ளனர் என்று வெள்ளை அறிக்கையின் வாயிலாக வெளியிட வேண்டும்.
இதுவே எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி என்றால் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பெறும் போராட்டம் நடத்தி ஊடகங்கள் மூலம் அவர்களது கருத்தினை தெரியப்படுத்தி இருப்பார்கள்.தினமலர் மட்டுமே நாள்தோறும் இச்செய்தியை வெளியிட்டு வருகிறது.COVID காலத்தில் 4 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளி சேர்ந்தனர் என்று கணக்கு காட்டிய கழக கண்மணிகள் இப்போது கணக்கினை காட வேண்டும்.
ஒரு மாணவனுக்கு சுமார் 50000 என்று வைத்தால் கூட பல கோடி ரூபாய் செலவு செய்து உள்ளனர்.ஆனால் அந்த எங்கே என்றால் தேர்வு பயம் என்று அமைச்சர் கூறுகிறார்.இவரின் வாதத்தை உதாரணமாக எடுத்துக்காட்டி நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூற வேண்டும்
.இதுக்கு அனைத்து பள்ளிகளையும் தனியார் மயம் ஆக்கினால் அரசிற்கு ஏற்படும் செலவு பெருமளவு குறையும். தரம் உயரும்.வீணாக மக்களின் வரிப்பணம் விரயம் ஆவது குறையும்.இது குறித்து கூட்டணி கட்சிகள் வாய் திறக்க முடியாமல் திராணியற்ற நிலையில் உள்ளனர்.
19-மார்ச்-2023 08:20:01 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.