ARUN : கருத்துக்கள் ( 948 )
ARUN
Advertisement
Advertisement
ஜூன்
23
2018
பொது இன்ஜி., கல்லூரிகளில் காலியாகும் இடங்கள்... 80 ஆயிரம்!
பன்னிமடையிலிருந்து,கும்பிடு போடும் நண்பரே ,அரசே சாராயத்தை ஊற்றி ஊற்றி கொடுக்கும்போது ,போதையில் அவன் தூங்குவானா ,குழந்தை பெற்றுக்கொள்வானா .சாராயக்கடையைவிட ,இன்ஜினியரிங் கல்லூரிகளில் ,அள்ளிவிடலாம் என அரசியல் கட்சிகள் நினைத்தன.அது இன்று கொள்வாரில்லாமல் ,இழுத்து மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கல்லூரிகளை தொடங்கிய அரசியல்வாதிகள் ,தொழிற்சாலைகளையும் தொடங்கியிருக்க வேண்டும். வாங்கியே பழக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு ,கொடுத்து பழக்கமில்லை.அதன் பலனை இன்று அனுபவிக்கிறார்கள். தொலைநோக்கு பார்வை இல்லாத அறிவு கெட்டமுட்டாள்கள்.   07:37:02 IST
Rate this:
0 members
1 members
18 members
Share this Comment

ஜூன்
19
2018
முக்கிய செய்திகள் மாநகர போக்குவரத்து போலீசாருக்கு...போடலாம் ஒரு சபாஷ்!குறைந்தது விபத்துக்களில் உயிரிழப்பு
போக்குவரத்து போலீசாரின்,கழுத்தில் மாட்டும் கேமரா திட்டம் , உடனடியாக செயல் படுத்த வேண்டும்.   13:07:19 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
19
2018
முக்கிய செய்திகள் மாநகர போக்குவரத்து போலீசாருக்கு...போடலாம் ஒரு சபாஷ்!குறைந்தது விபத்துக்களில் உயிரிழப்பு
சாலையில் மழையினால் ஏற்படும் பள்ளங்களும் விபத்துக்கு காரணமாக அமைகிறது.புரூக் பீல்ட் ரோட்டிலிருந்து அவிநாசி மேம்பாலம் ஏறும் இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது அதை சரி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு லைசென்ஸ் வழங்கும் போது ,போக்குவரத்து விதிகளை முற்றிலுமாக கற்பிக்கவேண்டும். லைசென்ஸ் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டினால் ,அதை பறிமுதல் செய்து அரசு கல்லூரியில் படிக்கும் லைசென்ஸ் வைத்துள்ள ஏழை மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.பொதுவாகவே இளைஞர்களில் பெரும்பாலானோர் ,சாலைவிதிகளை மதிக்காமலேயே வாகனங்களை ஓட்டுகிறார்கள்.குறுகிய கால வாகன ஓட்டுநர் உரிமை ரத்து போன்றவையும் நடை முறை படுத்த வேண்டும்.குறிப்பாக சட்ட கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கடுமையான விதிகளை பின்பற்றவேண்டும்.ஆதார் கார்டை போல வண்டியில் ஒரு ஸ்டிக்கரை ஒட்டவேண்டும்.அதை ஸ்கேன் செய்தால் ,வாகனம் ,வாகன ஓட்டுநர் ஆகியோரின் (உரிமம் சம்பந்தமான )மொத்த விவரமும் தெரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.புதிதாக போடப்பட்ட சாலையை குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு தோண்ட அனுமதிக்க கூடாது.ஒரே வருடத்தில் போட்ட சாலையில் சேதாரம் ஏற்பட்டு அதனால் விபத்தோ ,உயிர் பலியோ,ஏற்பட்டால் சம்பந்த பட்ட ஒப்பந்ததாரரிடம் ,நஷ்ட ஈடு,பெறுவதோடு ஓராண்டு கட்டாய சிறை தண்டனையும் விதிக்க வேண்டும்.   13:05:15 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
19
2018
அரசியல் மக்கள் ஆதரவில்லாத கட்சி ஆட்சி அமைப்பதா? நிபுணர்கள் கேள்வி
தமிழகத்தில் மெஜாரிட்டியுடன் தான் ஒரு கட்சி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இங்கே அனைவரும் திருப்தியோடுதான் இருக்கிறார்களா. நடைபெறுவது மெஜாரிட்டி அரசோ ,மைனாரிட்டி அரசோ, பணநாயக, ஜனநாயக ,எந்த ஆட்சியாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். மக்கள் நலன் பாதுகாக்க படுகிறதா? தொழில் துறைகள் வளர்ச்சி கண்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டியுள்ளது. ஆந்திராவில் நாயுடு கட்சி, BJP, காங்கிரஸ், இரண்டுக்கும் எதிர்ப்பு அரசியல் செய்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பீகாரில் நிதிஷ்குமாரின் ஆட்சி லாலு, காங்கிரஸ் கட்சிகளின் ஆட்சியை விட சிறப்பாகத்தான் உள்ளது. அதுபோல குமாரசாமியின் ஆட்சி இருக்கும் என்று யாராவது உத்திரவாதம் கொடுக்க முடியுமா? அப்படி பட்டவராக இருந்திருந்தால் இந்நேரம் வளர்ச்சியடைந்திருப்பார். மம்தாவே தனிப்பட்ட தலைவராக இருந்தாலும், எந்த அளவிற்கு மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.   09:12:28 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
17
2018
பொது தேர்வில் மகன் தோல்வி இனிப்பு வழங்கிய தந்தை
மிகவும் பொறுப்புள்ள தந்தை. மகனின், தோல்வியை விட வாழ்க்கை மிகவும் முக்கியம் என்பதை உ ணர்த்தி விட் டார்   03:23:49 IST
Rate this:
0 members
1 members
17 members
Share this Comment

மே
8
2018
சம்பவம் மனைவியின் உடலை தோளில் சுமந்த கணவன்
உ.பி. யில் இத்தனை காலம் சமூக நீதி காவலர்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. யானை சிலை வைத்த பணத்திற்கு எத்தனை ஆம்புலன்ஸ்கள் வாங்கியிருக்கலாம் என்பது விவரமறிந்தவர்களுக்கு தெரியும். முதலில் மாயாவதி ஆட்சி பிறகு அகிலேஷ் யாதவின் ஆட்சி. இப்போது யோகியின் ஆட்சி மக்கள் மிக தெளிவாக மாற்றி மாற்றி ஒட்டு போட்டு வந்திருக்கிறார்கள் .இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களுக்கு பிஜேபி அரசு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், மக்களின் புரட்சி பெரிய அளவில் வெகுவிரைவில் நடக்கும்.   00:15:18 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மே
8
2018
சம்பவம் மனைவியின் உடலை தோளில் சுமந்த கணவன்
மனிதாபமானமற்ற செயல்கள் இன்று சமூக பிரச்சினை ஆனதற்கு தனி மனிதனின் மனிதாபமானமற்ற செயலே ஆரம்ப புள்ளியாகும். இன்றைக்கு பெற்றோரை எத்தனை பேர் கவனித்து கொள்கிறார்கள்.. பணத்தை தேடி ஓடவேண்டிய நெருக்கடியை உருவாக்கியது யார். ஓட்டுபோடுவதற்கு பணத்தை கொடுக்கும்போது வேண்டாம் என்று தூக்கி வீசியவர்கள் யார். இங்கு கருத்து கூறுபவர்கள் அனைவருமே மனிதாபிமானம்,அரசியவாதிகளை பற்றி பேசுகிறார்கள். முதலில் நம்முடைய முதுகில் உள்ள அழுக்கை கழுவிவிட்டு, பிறகு அடுத்தவன் முதுகை பார்க்கலாமே? உருவாக்கியது யார்.   00:03:16 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
6
2018
பொது நீட் கபட நாடகம் ஆடிய கட்சியினர் மூக்குடைப்பு!
ஜெயசீலன் அவர்களே ,தனியார் கல்லூரியிலும் ,அரசு கட்டணமே எனும் நிலை வரும்போது ,தமிழகத்தில் உள்ள மாணவர்கள் அனைவருக்குமே இங்குள்ள கல்லூரிகளில் இடம் கிடைக்குமா ,கிடைக்காதா,?   11:01:06 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மே
6
2018
பொது நீட் கபட நாடகம் ஆடிய கட்சியினர் மூக்குடைப்பு!
RK நகரில் தினகரனிடம் டெபாசீட்டையாவது பெற்றிருந்தால் உங்களை கண்டு சற்று பயப்படுவார்கள்.   10:47:58 IST
Rate this:
1 members
0 members
35 members
Share this Comment

மே
6
2018
சம்பவம் தமிழக மாணவரின் தந்தை எர்ணாகுளத்தில் மரணம் நீட் தேர்வு எழுத சென்ற இடத்தில் சோகம்
அன்பு அவர்களே கருத்து எழுத ஆரம்பிக்கும்போது தெளிவாக இருந்துள்ளீர்கள். அதன் பிறகு தமிழகத்திற்குள்தான் இருக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். மோடி அரசு ஆயுசு அவுசாதி மருத்துக்கடைகளை திறந்து , நான் மாதம் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி கொண்டிருந்த மருந்துகளை இன்று வெறும் முன்னூறு ரூபாய்க்கு கிடைக்க வழி செய்திருக்கிறது. கருப்பு பணத்தை பிடிக்கவில்லை என்று கூறுகிறீர்கள்,கட்டுப்படுத்தியுள்ளார்கள்.அதன் விளைவே 200 ரூபாய்க்கு விற்ற துவரம்பருப்பு இன்று 70 ரூபாய்க்கு கிடைக்கிறது.ரூபாயின் மதிப்பு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.இதை ஏற்றுமதி,இறக்குமதியாளர்களிடம் கேட்டு பாருங்கள் தெரியும்.ரயில்நிலையங்களில் தூய்மை கூடியுள்ளது.GST வழிமுறையில் படிப்படியாக மாற்றங்கள் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது.NEET சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.கடந்த ஆண்டு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தவர்களிடம் இதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.   10:26:57 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X