Rajasekar : கருத்துக்கள் ( 206 )
Rajasekar
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
12
2020
பொது இந்தியாவின் வளர்ச்சிக்கு வரி செலுத்துங்கள்
ஒரு காலத்துல ரோடு முழுக்க முழுக்க அரசு ஏற்படுத்தி கொடுத்தது இப்போ அதுக்கு டோல் வரி. சரி 10 வருடம் கட்டியச்சி அதையும் தாண்டி வசூல் நடக்குது இது தவறு. 10 வருடத்திற்கு முன்பு ஏற்படுத்திய தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பை அரசு ஏற்று கொண்டு புதிய தேசிய வழித்தடங்கள் அமைத்து அதற்க்கு வரி கேட்டால் வளர்ச்சி இருக்கும் மக்கள் நம்பிக்கை இருக்கும். எல்லா வழியிலும் பொது மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். வரி மட்டுமே அரசின் வருமானம் என்ற தவறான புரிதலுக்கு இன்றைய ஆட்சியாளர்கள் வந்துவிட்டார்கள். சிறந்த பொதுத்துறை நிறுவனங்களும் முறையான நியாயமான முறையில் நாட்டின் இயற்கை வளங்களை பயன்படுத்தினால் வரி சுமை குறையும் மாறாக அனைத்து இயற்க்கை வளங்களும் (பெட்ரோல், துறைமுகம், தொலைத்தொடர்பு, நிலக்கரி, மணல், கல் குவாரி போன்றவை) தனியார் நிறுவனங்கள் (ரிலையன்ஸ், அம்பானி, அதானி, போன்ற நிறுவனங்கள்) மற்றும் அரசியல் வாதிகளால் சுரண்டப்படுவதால் மக்கள் வஞ்சிக்க படுகிறார்கள். பி.ஜெ.பி மக்களின் தேச பக்தியை ஆயுதமாக பயன்படுத்தி மக்களை சுரண்டுகிறது. தற்போதுள்ள வரிவிதிப்பு முறை சிறு குறு தொழிலை முடங்கியுள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஒவ்வொருவரும் நாம் சம்பாதிக்கும் பணத்தில் 30% முதல் 50% வரை நேர்முக மற்றும் மறைமுக வாரியாக செலுத்துகிறோம். ஆனால் நாட்டின் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் அந்தளவுக்கு மேம்படவில்லை மக்கள் பணம் பலவழிகளில் கொள்ளை போகிறது என்பது நிதர்சனமான உண்மை.   16:09:35 IST
Rate this:
0 members
0 members
8 members

பிப்ரவரி
11
2020
பொது பெட்ரோல்,டீசல் விலை 7வது நாளாக குறைவு
திரு ராஜா அவர்களே, தங்கத்தின் விலையை குறைப்போம் ஆனால் அதுக்கு முன்னாடி நல்லா கூட்டிக்குவோம் பரவா இல்லையா???   16:48:40 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
11
2020
பொது பெட்ரோல்,டீசல் விலை 7வது நாளாக குறைவு
டெல்லி தேர்தல் ஓவர் ஓவர் …..   16:44:40 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
29
2019
பொது காதல் கடிதம் எழுதிய 3ம் வகுப்பு சிறுவன் கட்டிவைத்து தண்டித்த பள்ளி
சிறு குழந்தைகள் தவறு செய்யும் போது ஆசிரியர்கள் சில தண்டனைகள் கொடுக்கலாம் அது குழந்தைகளை கொடுமைப்படுத்துவதாக அல்ல திருத்துவதற்காக… சமூக ஆர்வலர்கள் தங்களின் கடமையை உணர்ந்து செயல்படவேண்டும் விளம்பரத்திற்காக செயல்பட கூடாது. தற்போது எந்தபெற்றோரும் குழந்தைகளை தண்டிப்பது இல்லை ஆசிரியர்களும் தண்டிப்பதில்லை எனவே குழந்தைகளுக்கு சரி எது தவறு எது என்று நாம் சரிவர கற்றுத்தராதபோது சமூகத்தில் எப்படி ஒழுக்கமுள்ளவனாக அந்த குழந்தை வளரும்? இது பின்னாளில் எண்ணிலடங்கா குற்றங்களுக்கும் கணக்கிலடங்கா வழக்குகளுக்கும் வழிவகுக்கும். ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சியும் தண்டனை அளவுகளும் மாவட்ட கல்வித்துறையால் விளங்கவைக்க பட வேண்டும். மேலும் ஆசிரியப்பணி என்பது சேவை என்றும் எதிர்கால இந்தியாவின் சிற்பிகள் என்றும் ஒவ்வொரு மாணவனையும் அவரவர் திறமைக்கேற்ப செதுக்குவது அவர்கள் கடமை என்றும் புதிதாய் ஆசிரிய பணிக்கு வருபவர்களுக்கு கல்வித்துறை தகுந்த தொடர் பயிற்சிகள் கொடுக்க வேண்டும். சரி இந்த விஷயத்தில் தனியார் பள்ளிகள் இதுபோல் ஆசிரியர் திறன்மேம்பாடு எப்படி மேற்கொள்ளும்? இதற்கும் பள்ளி கல்வித்துறை தனியார் பள்ளிகளில் கட்டணம் வாங்கி ஒவ்வொரு தனியார் பள்ளி ஆசிரியருக்கும் திறன் மேம்பாடு கட்டாயம் என்று அதை செயல்படுத்தினால் இது போன்ற வதந்திகளை தவிர்க்கமுடியும் மேலும் ஆசிரியர்கள் மேல் மக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.   16:06:57 IST
Rate this:
0 members
1 members
8 members

ஜனவரி
12
2019
முக்கிய செய்திகள் தமிழக அரசு மீது தேசிய பசுமை தீர்ப்பாயம்... அதிருப்தி! நீர்நிலைகளை தூர்வாரியதில் திருப்தியில்லை
பசுமை தீர்ப்பாயம் தான் இருப்பதாக காட்டிக்கொள்வதற்காக செய்யும் நாடகம் 6 ஆண்டுகள் இல்லாத அக்கறை இப்போது ஏன்??? ஸ்டெர்லைட் ஆலைத்திறப்பதில் தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்காததால் பசுமைதீர்பாயம் தமிழக அரசை கேள்விகேட்கிறது இது ஒருவகையில் மக்களுக்கு நல்லதுதான்.   19:02:18 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
11
2019
கோர்ட் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்க...அனுமதி!
எந்தமக்கள் பொங்கல் பரிசு வேண்டும் என்று அரசிடம் கேட்டது??? மக்கள் கேட்பது போக்குவரத்து, குடிநீர், வேலைவாய்ப்பு இதற்குத்தான் போராட்டம் செய்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் தான் செயல்படுத்திய புதிய திட்டம் என்று இதுபோல் எந்தவித பலனும் இல்லாமல் அரசு கஜானாவை காலி செய்கிறார்கள். பண்டிகைக்காலங்களில் கொடுக்கப்படும் பணம் 90 சதவீதம் டாஸ்மாக் மூலம் வசூலிக்கப்பட்டு விடும். இந்த ஆண்டு பொங்கலில் டாஸ்மாக் வரலாறு காணாத சாதனை படைக்க காத்துகொண்டு இருக்கிறது.   18:54:02 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
7
2019
அரசியல் மீண்டும் யார் ஆட்சி? கருத்து கணிப்பில் பகீர்
பா.ஜ 253 தொகுதியில் வெற்றி பெறும் என்பது தவறான கருத்து 120 இடங்கள் வரை பெறவே வாய்ப்பு உள்ளது அதே போல் காங்கிரஸும் 120 வரை தான் பெற முடியும் மாநிலக் கட்சிகளின் துணையுடன் தான் அடுத்த மத்திய அரசு. மக்கள் நலன் யோசிக்காமல் கார்பொரேட் நலனுக்காக பாடுபடும் இரண்டு தேசியக் கட்சிகளும் வரும் தேர்தலின் முடிவைப்பொறுத்து தங்களின் கார்பொரேட் ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்குவது தான் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.   18:29:25 IST
Rate this:
16 members
1 members
13 members

ஜனவரி
1
2019
எக்ஸ்குளுசிவ் பிளாஸ்டிக்கை ஏன் தடை செய்ய வேண்டும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள் ஏராளம்
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மைதான் மாற்றங்கள் எல்லாவற்றையும் ஒரேநாளில் செய்துவிடமுடியாது பிளாஸ்டிக் பயன்பாடு தொடக்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன அதை படிப்படியாகத்தான் குறைக்கமுடியும். தங்களுக்குள் சில மாற்றங்களை முயற்சி செய்துபாருங்கள் அல்லது ஒருவாரம் நீங்கள் கடந்துவரும் பிளாஸ்டிக் பொருட்களையும் நீங்கள் தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்களையும் சேமித்து பாருங்கள் அதன் தீவிரம் புரியும். இந்திய சட்டங்கள் காசுக்காக வளைந்து கொடுப்பவை அதனால் உங்கள் கோபம் புரிகிறது அனால் நமது நலனை நாம்தான் காக்கவேண்டும். எங்கள் தெருவே குப்பையாக கிடக்கிறது நான் எதற்கு எனதுவீட்டை சுத்தம் செய்யவேண்டும் என்று எண்ணக்கூடாது அது நமக்குத்தான் கேடு.   12:56:35 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜனவரி
1
2019
எக்ஸ்குளுசிவ் பிளாஸ்டிக்கை ஏன் தடை செய்ய வேண்டும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள் ஏராளம்
நான் கடந்த ஆறு மாதங்களாக பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்தளவு குறைத்து வந்துள்ளேன் அலுவலகம் செல்லும் எனது தோள்பையில் தவறாமல் 2 துணிப்பை வைத்துள்ளேன் ஒவ்வொரு பொருளுக்கும் கடையில் பிளாஸ்டிக் கொடுக்கும்போது மறுத்துவிட்டு எனது துணிப்பையில் வாங்குவேன். இருந்தபோதும் சிலநேரங்களில் அதிகப்படியான பொருள்வாங்கும்போதும் என்னை போன்றபொருட்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் வருவதால் தவிர்க்க முடியவில்லை. மேலும் சூப்பர் மார்க்கெட்டில் காய்கறி வாங்கும்போது பிளாஸ்டிக் பைகளில் போட்டு எடைபோட சொல்வதால் தற்போது நாங்கள் முடிந்தவரை சூப்பர்மார்கெட் போவதை தவிர்த்து வருகிறோம். பிளாஸ்டிக் பொருட்களை பொருட்களை முழுமையாக தவிர்க்க சில ஆண்டுகள் ஆகலாம் எனவே அனைவரும் தங்களால் இயன்றளவு தவிர்த்து வந்தால் எளிதில் பிளாஸ்டிக் என்ற அரங்கனிடம் இருந்து விடுபடலாம். இதற்க்கு அரசு எடுத்துவரும் முயற்சி பாராட்டத்தக்கது. இதுதொடரவேண்டும் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்க விடக்கூடாது. பெப்சி போன்ற குளிர்பானங்களை முற்றிலும் தவிர்த்துவருகிறேன். எனது அடுத்தமுயற்சி பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் பயன்பாட்டை தவிர்த்து நகராட்சி நீர் மற்றும் நிலத்தடி நீர் பயன்படுத்த உத்தேசித்துள்ளேன்.   10:45:17 IST
Rate this:
0 members
0 members
12 members

டிசம்பர்
20
2018
பொது பிரிட்ஜ் விலை குறையும்!
பாவம் கஷ்டப்படுறவங்கத்தான் ஏ.சி, பிரிட்ஜ் வாங்குவாங்க அவங்க துயர்துடைத்த மத்தியஅரசுக்கும் GST கவுன்சிலுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்…...   09:33:53 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X