Balasubramanian A : கருத்துக்கள் ( 274 )
Balasubramanian A
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
7
2021
அரசியல் மோடி குறித்து சர்ச்சை பேச்சு உதயநிதிக்கு நோட்டீஸ்
அரசியல் அனுபவமில்லாத இளைஞர். பேச்சில் கண்ணியம் வேண்டும். இனிமையாக பேச வேண்டும். இதை ஒரு தகப்பன் தனது மகனுக்கு கற்றுத்தர வேண்டும். ஆரம்ப காலத்திலேயே தெரியாத விஷயங்களில் பேசக்கூடாது.   18:19:36 IST
Rate this:
2 members
0 members
14 members

செப்டம்பர்
28
2020
பொது மதம் மாற்றுதல் ஏமாற்று வேலை!
இது ஓர் அனாவசிய சர்ச்சை. ஒருவர் மதம் மாறுவது என்ன காரணம் என்று அறியாமல் மற்ற மதத்தினவரை குறைசாற்றுவது தவறு. உதாரணமாக தென் தமிழகத்தில் பெரிய அளவில் மதம் மாறியது 1535-1538 ல் பரதவர், (பரத குல க்ஷத்திரியர்). இவர்கள் பாண்டியர் ஆட்சி காலத்தில் சிறப்புர வாழ்ந்து வந்த சமூகத்தினர். பாண்டியர் ஆட்சி முடிந்தவுடன் இந்த குலத்தினர் தமக்கு தெரிந்த கடல் சார்ந்த தொழிலில் இறங்கி மீன்பிடிப்பது, முத்துக்குளிப்பதில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வந்த அரேபிய வணிகர்கள் பரதவர்களுக்கு இடையூறு கொடுத்து வந்தனர். அன்று ஆண்டுவந்த இந்து குறுநில மன்னர் கள் பரதவர்களுக்கு உதவிசெய்ய முன்வரவில்லை. ஆகவே அவர்கள் வேறுவழியின்றி மலபாரில் புதிதாக வந்துள்ள போர்ச்சுகீசியரின் உதவியை நாடினர். அவர்களும் காரணம் இன்றி அரேபியருடன் சண்டையிட விரும்பவில்லை. அப்போது பரதவர் குலத்தினர் முழுவதுமாக கிருஸ்த்தவ மதத்திற்கு மாறினர். நமது இந்து மதத்தில் ஜாதி வித்யாசம் ஒழியும் வரை ஒடுக்கப்பட்டவர்கள் மற்ற மதங்களுக்கு மாறுவது நடந்து கொண்டுதான் இருக்கும். இதை அறிந்துதான் மகாத்மா காந்தி ஹரிஜன இயக்கத்திற்கு முக்கியம் கொடுத்தார். மதமாற்றத்தை வெறுப்பினால் தடுக்கமுடியாது, அன்பினால்தான் வெல்லமுடியும்.   08:07:06 IST
Rate this:
13 members
1 members
3 members

செப்டம்பர்
18
2020
அரசியல் துரைமுருகனுக்கு மாகதேவமலை விபூதி சாமியார் அருள்வாக்கு
இது ஓர் வரவேற்கத்தக்க மாறுதல் .மனிதன் வயதாக ஆக தனது உடல் நலம்கோறி ஆண்டவனை தேடுதல் இயற்கையே. இனி வரும் காலத்தில் இந்த கடவுள் மறுப்பு இயக்கம் தனது நிலைப்பாட்டை மாற்றி தீவிர பக்தி இயக்கமாக மாறினாலும் வியப்பில்லை.   08:27:24 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
18
2020
பொது அயோத்தி ராமர் கோவிலுக்கான மெகா மணியுடன் ராம ரதம்
இந்த நல்ல பணியை செய்த தமிழ்நாட்டு பக்தர்களுக்கு ஶ்ரீ ராமபிரான் அருள் என்றும் இருக்கும்.ஜெய் ஶ்ரீராம்.   10:34:59 IST
Rate this:
1 members
0 members
8 members

செப்டம்பர்
17
2020
அரசியல் பிரதமர் மோடி பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து
ஓர் நல்ல மனிதர் தனது வாழ்க்கையை தேசத்திற்கே அற்பணித்து மேல்வர எவ்வளவு தடை களைக் கடந்து வரவேண்டியுள்ளது என்பதை இவரது கடந்த வாழ்க்கை யில் காணலாம். ஆயினும் சாதாரண மக்களின் ஆதரவைப் பெற்று மேல் வந்த தலைவர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பல வருடங்கள் வாழ இறை அருளை வேண்டுவோமாக.   11:27:46 IST
Rate this:
2 members
0 members
7 members

ஆகஸ்ட்
26
2020
அரசியல் இ - பாஸ் ரத்தாகுமா? 29ல் அறிவிப்பு!
ஈ-பாஸ் மக்களுக்கு ஓர் அனாவசிய தொந்தரவே தவிர, இதனால் கொரோனா பரவுதலை தடுக்க எந்த உதவியும் இல்லை. அண்டைய மாநிலம் கர்நாடகத்தில் மக்களுடைய இயல்பான வாழ்க்கை திரும்ப வேண்டி எல்லா தடைகளையும் நீக்கிவிட்டனர். தமிழ் நாட்டிலும் இதை உடனே செய்ய வேண்டும்.   19:11:05 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
17
2020
சிறப்பு பகுதிகள் நாள் சம்பளம் ரூ.1 பென்ஷன் ரூ.1.8 லட்சம்!
வணக்கம் ஐயா. தங்களுக்கு நல்ல உடல்நிலையை அளித்து நீண்ட ஆயுளை அளிக்க இறைவனை வேண்டுகிறேன்.   07:27:06 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
15
2020
அரசியல் ராகுலா... கூகுளா!
பழைய கதையை நினைத்து காலம் கடத்துவது நாட்டிற்கு எந்த உபயோகமும் இல்லை. தாயார் உந்துதலினால் விருப்பமில்லாத மகன் ஏதோ மற்றவர்கள் சொல்வதை எழுதிக்கொண்டிருக்கிறார். கட்சியை இவர்களிடமிருந்து விடுவித்து நல்ல இளம் தலைவர்களை தேர்ந்தெடுத்து இந்திய அரசியலில் ஓர் புத்துணர்ச்சியை அளிக்கவேண்டும்.   09:41:16 IST
Rate this:
2 members
0 members
18 members

மே
22
2020
பொது தமிழகத்தில் பயணிகள் ரயில் சேவை எப்போது?
முதலில் ரயில்வே நிர்வாகம் ரயில்களின் பெயர்களை மக்களுக்கு புரியும் பாஷையில் மாற்ற வேண்டும். எந்த ஊருக்கு செல்லுகிறது என்று பெயர்களை படித்தவுடன் தெரியும்படி வைக்க வேண்டும். ரயில்களின் கால அட்டவணைகளை நிர்ணயித்து அதன்படி ரயில்கள் ஓட வேண்டும். ரயில்களை மக்களின் சேவைக்காக ஓட்டவேண்டுமே தவிர அரசு பணம் பண்ணும் கருவியாக இருக்கக்கூடாது.   08:27:35 IST
Rate this:
9 members
0 members
9 members

மே
12
2020
பொது முதல்வருக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். தாங்கள் நீடூழி வாழ்ந்து மக்கள் பணி செய்ய ஆண்டவன் அருளை வேண்டுகிறன்.   11:05:49 IST
Rate this:
2 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X