Varun Ramesh : கருத்துக்கள் ( 722 )
Varun Ramesh
Advertisement
Advertisement
Advertisement
மே
13
2020
அரசியல் கொரோனாவை தடுப்பது மக்களின் கையில் உள்ளது முதல்வர் இ.பி.எஸ்.,
அப்படியே, இந்த டாஸ்மாக்கை மீண்டும் திறவாமல் தடுக்கும் ஆற்றல் எவரிடம் உள்ளது என்பதையும் தெரிவித்துவிடுங்கள் முதல்வரய்யா   13:33:54 IST
Rate this:
5 members
0 members
8 members
Share this Comment

மே
13
2020
உலகம் நிரவ் மோடி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை வக்கீல் வாதம்
ஆதாரம் இல்லை என்றால் அவர் நாடு விட்டு நாடு ஓடி வந்ததேன்? தலைமறைவாக இருப்பதேன்? உலகம் முழுவதும் வக்கீல்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்களோ?   13:25:12 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
19
2020
சினிமா ஆளாய் பறக்கும் நடிகை...
அது ......   07:26:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
18
2020
சம்பவம் கைதிகளுக்கு கைமாறு வார்டன், டிஸ்மிஸ்
ஒட்டு மொத்த தமிழ் நாட்டில் இந்த வகை குற்றத்திற்க்கிலக்கானவர் இவர் ஒரே ஒருவர் மட்டும் தானா? வேறு யாருமே இல்லையா? அவர்கள் மீதெல்லாம் இதே போன்ற நடவடிக்கை கிடையாதா? காவல் துறையில் களைகள் அதிகம். களையெடுப்பு அவசியம்.   08:47:35 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
17
2020
சம்பவம் பெண் போலீசிடம் பாலியல் சீண்டல் எஸ்.பி., அதிரடி கைது
அது என்னய்யா குற்றச்செயலிலீடுபடுகிற அனைத்து காவல் துறை அதிகாரிகளும் இப்படி மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள், வருமானவரித்துறை ரெய்டின் போது நெஞ்சுவலி வரும் அரசியல்வாதிகளைப்போல்? உண்மை என்றே வைத்துக்கொண்டால் கூட, அவரை பணிக்கு சேர்க்கும் போது அவர் சரியான மனநிலையில்தான் இருக்கிறாரா என்பதை சோதிக்கவில்லையா? விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லையா? ஒருவேளை, பணியில் சேர்ந்த பின்னர்தான் மனநிலையில் பாதிப்பு என்றால், அவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்யும் விதிமுறை காவல்துறையில் இல்லையா? இவர் மனநிலை சரியில்லாதவர் என்ற கருத்தை பாதிக்கப்பட்ட பெண் காவலர் ஏற்றுக்கொள்கிறாரா? அல்லது ஏற்றுக்கொள்ளும்படி நிர்பந்திக்கப்படுகிறாரா?   08:43:27 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
21
2020
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
15
2020
பொது பணிக்கு வராத அதிகாரிகள் விடுவிக்கப்படுவர் மத்திய அரசு
பணிக்கு வர விருப்பமில்லை என்று எப்படி ஐயா சொல்லுவோம்? வேலைக்கு வரலைன்னாலும் சம்பளம் கிடைத்துவிடும் கவலையில்லை. வேலைக்கு வராததனால் லஞ்ச வருமானமல்லவா நின்னு போச்சு நாங்களும் வருத்தத்தில்தான் இருக்கிறோம். இந்த ஊரடங்கு உத்தரவால் லஞ்சம் வாங்குகிற வாய்ப்பையே பறிச்சுட்டீங்களே   10:05:55 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
8
2020
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
21
2020
சிறப்பு கட்டுரைகள் ஆங்கில ஆதிக்கத்தை அகற்றுவோம்
"ஸ், மொபைல், பிளாஸ்டிக்" போன்ற ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து தமிழில் சுத்தமாக எழுத, ஏனோ முடியாமல் போன குலசேகரன் அவர்களே ஆங்கிலத்தின் மீது ஏனிந்த கோபம் வெறுப்பு?. சரித்திரத்தை பின்னோக்கிப்பாருங்கள். இந்த தேசம் சுமார் 100 வருடங்கள் ஆங்கிலம் பேசுகிற ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இருந்ததால், அம்மொழி ஒரு பெரிய ஆதிக்க மொழியாக இருந்தது காலத்தின் கட்டாயம். எனவே, பிரிட்டிஷ் இந்திய ஆட்சிக்காலத்தில் வளரத்தொடங்கிய கல்விக்கு, ஆங்கிலமே போதனை மொழியாக அமைந்தது. மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி எதனையும் ஆங்கிலம் தவிர்த்த வேறொரு மொழியில் கற்கும் வாய்ப்பு அமையவே இல்லை. சுதந்திர இந்தியாவில், 14 மொழி பேசுகிற இந்திய மொழிவாரி மாநிலங்கள், உயர்கல்வி பாடங்களை தங்கள் தங்கள் மொழியிலேயே கற்கும் விதமாக பாட நூல்களை தயார் செய்யும் வாய்ப்பு இன்று கூட சாத்தியமில்லை என்பது நிதர்சனம். உங்களை தவிர வேறு மொழி பேசுகிற வேறெந்த மாநிலமும் தங்கள் தாய் மொழியிலேயே கல்வி கற்கவேண்டுமென்ற கோரிக்கை உடையவர்களாக இருக்கிறார்களா? அவர்களுக்கெல்லாம் தாய் மொழிப்பற்று இல்லை என்று அர்த்தமா? 'தமிழில் மருத்துவம் படித்தால், அவரது மருத்துவ அறிவே மருத்துவப்பணி செய்ய பயன்படப்போகிறதேயல்லாமல் அவர் எந்த மொழில் மருத்துவம் படித்தார் என்பது பிரச்சனைக்குரியதல்ல', என்ற உங்களது வாதம் ஏற்புடையதே. ஆனால், தமிழில் மருத்துவ படிப்பு சாத்தியமா? அதற்கான முயற்சி இன்றுவரையில் தொடங்கப்பட்டிருக்கிறதா? ஜப்பானியர்களும், ஜெர்மானியர்களும், சீனர்களும் அவரவர் தாய் மொழியிலேயே அனைத்தையும் கற்கிறார்கள். நம்மால் என் முடியாது என்று நீங்கள் கேட்கலாம். அந்த நாடுகள் தங்கள் தாய் மொழி தவிர வேறொரு மொழியை அறியாதவை. எவரிடத்தும் அடிமையாய் இருந்திராத நாடுகள். அவர்களுக்கு தாய்மொழிக்கல்வி சாத்தியம். எத்தனையோ வேற்று நாட்டுக்காரர்களின் அறிவியல் கண்டுபிடிப்புக்களை, அவற்றின் எண்ணற்ற பயன்பாட்டுக்கருவிகளை பயன்படுத்துவதை உங்களாலும் தவிர்க்க முடியவில்லை. வேற்று மொழிக்காரர்கள் கண்டுபிடித்ததென்று எதையாவது நாம் ஒதுக்கி வைக்கிறோமா? அப்போதெல்லாம் நம் தாய் மொழி பற்றும் அதன் மீதான தீராத காதலும் எந்த குறுக்கீடும் செய்வதில்லையே ஏன்? காகிதத்தையும், அச்சுக்கலையையும் அச்சு எந்திரங்களை நாமா கண்டுபிடித்தோம். மேற் சொன்ன மூன்றையும் பயன்படுத்துகிற பத்திரிகை துறையில் நீங்கள் ஒரு பத்திரிக்கையாளராக இல்லையா? கணினியை நாமா கண்டுபிடித்தோம்? பயன்படுத்தவில்லையா? தமிழ் வளர்வதற்கு எவரும் எதிரியல்ல. அதற்காக, இங்கே வேரூன்றி இருக்கிற, அழிக்க முடியாத ஆங்கிலத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வானேன்? தாய் மொழியில் உயர் கல்வி என்கிற இலக்கை நோக்கி பயணம் செய்ய விரும்புகிற அதே நேரத்தில் இங்கே அதற்காக ஒரு சிறு துரும்பு கூட நகர்த்தப்படவில்லை என்பது கசப்பான உண்மை. இறுதியாக ஒன்று. நம் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவர்கள், தொகுத்து வழங்குபவர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், பேச்சரங்கங்களில், விவாதங்களில் பங்கேற்பவர்கள், பத்திரிகைகளில் கருத்து தெரிவிப்பவர்கள், சில பத்திரிகைகள், முக நூல், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள், மீம்ஸ் போடுபவர்கள் என ஒரு முடிவற்ற பட்டியலில் இடம் பெருகிறவர்கள் வல்லின, மெல்லின இடையின பேதங்களின்றி தமிழை பிழையின்றி எழுதவோ பேசவோ இயலாத காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதனை சற்று கவனத்தில் கொள்க அப்படியானால் இவர்களெல்லாம் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களா என்றால், அதுவுமில்லை.   22:45:45 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
24
2020
முக்கிய செய்திகள் மெத்தனம்! யாருக்கு என்ன ஆனால் எங்களுக்கென்ன ... கொரோனா விபரீதத்தை உணராமல் அதிகாரிகள்
30 - 35 வருட பணிக்காலம் முழுவதும் எந்தப்பணியும் செய்யாமலிருந்தால் ஊதியமும் செய்கிற வேலைக்கு லஞ்சமும் வாங்கிப்பழகிய வர்க்கம் இன்று திடீரென வந்துவிட்ட கொரோனாவிற்காக வேலை செய்யுமா?   21:54:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X