Dhinakaran Chelliah : கருத்துக்கள் ( 3 )
Dhinakaran Chelliah
Advertisement
Advertisement
அக்டோபர்
16
2016
சிறப்பு பகுதிகள் ஏன் சைவ உணவு உண்ண வேண்டும்?
பனிப்பிரதேசத்தில் வாழும் மான் முதல் சில விலங்குகள் தாவர(புல்,இலை,lichen) உணவை உண்டு வாழ்கின்றன என்பது வாதத்திற்கு சரிதான், அதற்காக அவை உண்ணும் புல்லை மனிதர்கள் உண்கிறார்களா என்ன?. பொதுவாக பனிப்பிரதேசத்தில், மற்ற நிலப்பரப்புகளில் கிடைக்கும் மனிதன் உண்ணும் தாவர உணவு மிகக் குறைவே.அந்தப் பிரதேசத்தில் விலங்கினங்களை உண்டு வாழ்வது என்பது இயல்பானது.   05:04:44 IST
Rate this:
3 members
2 members
7 members
Share this Comment

அக்டோபர்
16
2016
சிறப்பு பகுதிகள் ஏன் சைவ உணவு உண்ண வேண்டும்?
சைவச் சாப்பாடுடென்று ஒன்று உண்டா?. சீனர்கள் ஏன் தாவரங்கள், விலங்குகள் உயிரினங்கள் ஒன்று விடாமல் (including human umbilical cord - மனித நஞ்சுக்கொடி) சாப்பிடுகிறார்கள் என்பதை ஆராய்ந்தபோது அறிந்த உண்மை இதுதான், சீனாவில் மக்கள்தொகை அளவிற்கு விளையும் நிலங்கள் இல்லை தவிர தமிழகம் போல் வித விதமான காய்கறிகள்,பழ வகைகள் பயிரிடவும் முடியாது.காய்கறிகள், பழங்கள், தானியங்கள் தேவையான அளவில் கிடைக்காதபோது, உணவிற்காக மற்ற உயிரினங்களின் தேவை ஏற்படுவது இயற்கை.சீனா போன்று நிலைமை இங்கிருந்தால், நாம் ஈயைக் கூட விட்டுவைத்திருக்க மாட்டோம். அலாஸ்காவில் வாழும் மனிதர்களுக்கு மானும்,பனிக் கரடியும்,மீனும் தான் தினசரி உணவு.அதே போல north pole யை ஒட்டி வாழும் அனைவரும் நினைத்தாலும் அவர்களுக்கு தாவர உணவு கிடைக்காது.ஆக, நாம் உண்ணும் உணவு என்பது நாம் வாழும் நிலப்பரப்பையொட்டி அமைகிறது.இது புரிந்தால் சைவம் அசைவம், வேறுபடுத்திப் பார்க்கும் மனப்பான்மை அற்றுவிடும். உணவில் சேர்க்கும் கடல் உப்பு(கடல்வாழ் உயிரினங்களின் கழிவும் நுண்ணுயிர்களும் இதில் அடக்கம்) முதல்,பால்(பால் என்பது மாட்டின் இரத்தம்தானே),சர்க்கரை(விலங்குகளின் எலும்பு கலக்கப் படுவது அறிந்ததே),நெய்(நெறு நெறுவென இருந்தால் அதில் கண்டிப்பாய் மாட்டின் எலும்பு கலந்துள்ளது - நம்மில் எத்துணை பேருக்கு இந்த விஷயம் தெரியும்) எல்லாவற்றிலும் விலங்குகள்,பிராணிகள் உயிரினங்கள் பங்கு உண்டு.இதைச் சொல்லி பிறர் மனதைப் புண்படுத்துவது நோக்கமல்ல, ஆனால் இதுதான் உண்மை. தவிர, இன்று நாம் வாங்கும் காய்கறிகள், பழங்கள் (Genetically Modified)பல, விலங்குகளின் குணாதிசயம் வேண்டுமென விலங்குகள் DNA மூலம் மரபணு மாற்றம் பெற்றவை.உதாரணத்திற்கு தக்காளி.இதுபோல எத்தனையோ உயிரனங்களின் மரபணுக்கள் தாவரங்களில் சேர்க்கபடுவது இன்றைய காலத்தின் கட்டாயம். குழந்தைகளுக்கு vaccination போடுவதை தவிர்பதற்கு உண்ணும் காய்கறிகளில் சில விலங்குகளின் DNAக்கள் ஏற்றப்படுவது பரிசோதனையில் உள்ளது. தேன் எப்படி நமக்கு கிடைத்தாலும் அதில் அதன் புழுக்கள் இல்லாமல் இல்லை.ஆகவே தேன் சைவ (vegan) உணவு இல்லை.தவிர தேனிக்கள் உதவியால் நடைபெறும் மகரந்த சேர்க்கை(pollination) இல்லையேல் நமக்கு தாவர உணவே இல்லை.கலிபோர்னியாவில் தேனீக்களை சித்ரவதை செய்து பாதாம் பருப்பின் விளைச்சலை அதிகப்படுத்துவதால் பாதாம் பருப்பு சைவ (vegan) உணவில் இல்லையென பதிவு உள்ளது.(விபரம் ://almondsarenotvegan.com/) நம்மைப் போன்ற சிலர்தான் தாவர உணவு தவிர மற்றவை உண்பவர்களை வேறுபடுத்திப் பார்க்கிறோம். நானெல்லாம் மாமிசம்,மச்சம் சாப்பிடுவதில்லை என்று மற்றவர் முன்னிலையில் அடையாளப்படுத்திக்கொள்வதில் பெருமை வேறு. இப்படிச் சொல்லி தங்கள் இன,சாதீய, மத மேட்டிமையை இதன் மூலமாக வெளிக்காட்டுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஏனெனில் மாமிசம் உண்பவர்கள் மூர்க்கர்கள் என்பது விஷம் போல நம்மீது ஏற்றப்பட்டுள்ளது.நாம் மட்டுமே இதை விவாதப் பொருளாகவும்,சமுதாய உயர்வு தாழ்வு நிலை அளவுகோலாக இன்றும் வைத்திருக்கிறோம். நமது பார்வை விசாலமடயவில்லை என்பதையே இது உணர்த்துகிறது,இது ஒரு அறிவிற்குறை,ஒருவிதமான வியாதி. பால் கெட்டியாக இருப்பதற்காக, மாமிச உணவை மாடு சாப்பிடும் புல்லில் கலக்கும் காலம் இது.நாம் உண்ணும் ஐஸ் கிரீம் முதல் பிஸ்கட்,கேக்,உருளை சிப்ஸ்,நூடுல்ஸ் வரை விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பது உண்மை. பல தாவரங்கள் பூச்சிகளையும்,புழுக்களையும் ஈர்த்துக் கொள்கின்றன,உண்டும் வாழ்கின்றன.என்னதான் பார்த்துப் பார்த்து வாங்கினாலும் காய்கறியிலும்,பழங்களிலும் பூச்சி புழுக்களையும் தவிர்ப்பது கடினம், என்ன நம் கண்களுக்கு புலப்படுவதில்லை அவ்வளவுதான். இவை போக,நாம் அறிந்தும் அறியாமலும் நீர்,உணவு,காற்று வழியாக எத்தனையோ உயிர்களையும், நுண்ணுயிர்களையும் வாய் வழியாக வயிற்றில் நிரப்பிகொண்டுதான் இருக்கிறோம்.கண்களுக்கு புலப்படாத வகையில் எது நடந்தாலும் கேள்விகேட்காமல் வாங்கிச் சாப்பிடும் நாம், தெரியும் முறையில் நடந்தால் உடனே இது அசைவம், அது இது என ஒதுக்கிவிடுகிறோம். எத்தனையோ விலங்குகள்,பறவைகள்,உயிரினங்கள் கழிவின் மூலம்தான் தாவர இனமே வளர்கிறது,ஆகவேதான் இணையத்தில் ஒருவர் எழுதுகிறார், "மண்ணை உழும் ஏர் மடியும் உயிர் பல நூறு நட்ட நாற்று நன்றாக வளர சாகுபடி மேலும் வளர மூட்டை மூட்டையாய் எரு போயிற்று பல உயிர் தெரியாமல் உரு பயிர் வளம் உயர களை பல மடிய ஒவ்வொரு தானியமும் காயும் கனியும் உண்ண உணவும் ஆகிறது பயிரிட்டால் விளைச்சலையும் பெருக்குகிறது" இதற்கு பதில் என்ன சொல்வது, இப்போது சொல்லுங்கள் சைவச் சாப்பாடு என்று ஒன்று உண்டா?   09:46:12 IST
Rate this:
11 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2016
பொது மின் மயானம் பராமரிக்கும் பெண்ணுக்கு தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது
பெண் பணியாளர் மயானத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரியது.   07:35:29 IST
Rate this:
4 members
0 members
18 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X