Advertisement
    தினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துக்களையும் வாசகர்கள் தெரிவிக்க விரும்பினால் இந்த பகுதியில் தெரிவிக்கலாம். நன்றி.
வாசகர் கருத்து
பக்கம் - 1
g.s,rajan - chennai ,இந்தியா
2023-01-03 17:50:33 IST
Introduce Suburban Trains in cities like Trichy ,Salem, karur,Coimbatore, Salem,Erode,Thanjavur etc..to reduce the traffic congestion. Will the Railways kindly look into this ???...
Yasotha - Kovilpatti ,இந்தியா
2022-12-26 22:54:45 IST
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, இந்த கடிதம் 2023 க்கான வேண்டுதளாக சமர்ப்பிக்கிறேன். அன்புள்ள இறைவனுக்கு, பசுமையான இயற்கை எழில் தந்து, எமைச் சுற்றி பல்லுயிர் அமைப்பை உருவாக்கி எனக்காக பார்த்து பார்த்து அத்துணையும் செய்தாய் . உமக்கென நான் என்ன செய்குவேன். விஞ்ஞானம், கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் என்று என் ஆறறிவை ஆக்கம் என்றெண்ணி ஆழிவிற்கு வித்திட வைத்துவிட்டேன் . உம்மை அன்றி வேறொன்றும் அறியாத வாழ்க்கை அடடா சொர்க்கம். என் கண்டுபிடிப்புகள் என்னை தொலைத்து விட்டது. தேடுகிறேன் என்னை பின்னோக்கியே. நான் என் பிள்ளைகள், என் குடும்பம் அனைத்தும் ஒரு சான் மொபைலுக்குள் அடிமையாகிப்போனோம். தேடுவதெல்லாம் கிடைக்கிறது என்று இது தேவை தேவையில்லை என்று அறியாமல் தேடுகிறோம் . ஒருமுறை தேடிவிட்டால் அது எங்களைத் தேடித் துரத்தி வருகிறது வயதுக்கு மீறிய விஷயங்கள், தெரிந்து கொள்ள தேவை இல்லாத விஷயங்கள் என என் வாசலில் கொட்டிக்கிடக்கிறது. என்ன செய்குவேன். அருவருப்பாய் தான் இருக்கிறது. நான் தொடங்கிய கண்டுபிடிப்புகள் என்னை முடிக்கப்பர்க்கின்றன. இறைவா இறைவா கதறுகிறேன் அய்யா என்னை காக்கவும். நான் வாழ காடுகள் அழித்து, பல உயிர்கள் அழித்து இயற்கை வளங்கள் என அனைத்தையும் அழித்து நான் சேர்த்த பாவம் தான் என் உள்ளங்கைகளில் இருக்கின்றதுவோ. இறைவா போதும் எனக்கு ஆறறிவு வேண்டாம், நான் சிந்திக்கவும் வேண்டாம், சிறு புல்லாய் நான் வாழ வரம் கொடும் போதும்... வாழும் காலம் சிறிதெனினும் மண்ணுக்கு உரமாய் வாழ்ந்து சாதல் பெரிது. உணர்ந்து விட்டேன் “ வாழு வாழவிடு “ என்பதை. இனியொரு கண்டுபிடிப்பு இருப்பின் இன்று மாறி நேற்று என்பது நாளையாகி விடட்டும் இனி வரும் அந்தம் என்பது ஆதியாகட்டும். அருள்வாய் இறைவா அருள்வாய் இப்படிக்கு உன் அன்பு கண்டுபிடிப்பு, மனிதன்...
Vijayalakshmi Srinivasan - Chennai,இந்தியா
2022-12-23 09:13:39 IST
அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம் பல. சென்ற இரண்டு ஆண்டுகளைப் போல, இந்த ஆண்டும் எனது புத்தாண்டு கவிதை இதோ: புத்தாண்டு 2023 புத்தாண்டு என்றாலே வரும் உவகை மக்கள் நோக்குவது வளர்ச்சிப் பாதை நம் கொடி எட்டா உயரம் பறப்பதை காணுதல் ஒவ்வொரு இந்தியன் கொள்கை அமைந்தால் நல்லதோர் தலைமை நாட்டிற்கு தரும் என்றும் நன்மை போராடிக் களைந்தார் நம் அடிமை காப்போம் நம் முன்னோர் பெருமை இயற்கைச் சீற்றம் ஒரு வகை நாடுகளுக்குள் வருவது பகை நோயும் தரும் அச்சம் வேறு வகை திண்டாடுவது மக்கள் தொகை உறுதி கொள்வது நம் கடமை தட்டிக் கேட்போம் நியாயத்தை நிலை நாட்டி நம் தர்மத்தை உயர்த்துவோம் நம் புகழை. பிரசுரித்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். நன்றி விஜயலக்ஷ்மி...
g.s,rajan - chennai ,இந்தியா
2022-11-13 23:07:00 IST
இசைஞானி இளையராஜாவிற்கு டாக்டர் பட்டம் பெற்றதற்கு ரசிகர்களின் சார்பில் மனமார்ந்த வாழுத்துக்கள், அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள், இசை மருத்துவர் இளையராஜா வாழ்க...
g.s,rajan - chennai ,இந்தியா
2022-11-07 21:12:10 IST
பூலோக வைகுண்டமாக விளங்கும் ஸ்ரீரங்கத்தில் மாடுகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகளில் திரியும் மாடுகளால் பொதுமக்கள், பாதசாரிகள், இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலையில் செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர். சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்துக்களும் அன்றாடம் நிகழ்கிறது. குறிப்பாக காய்கறி மார்க்கெட்டுகளில் மாடுகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் காய்கறி வியாபாரிகள் மிகவும் கிலி அடைந்து வருகின்றனர். பல மாடுகள் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதால் பொதுமக்களுக்கும் கிலி ஏற்படுகிறது, மேலும் சாலைகளில் ஆங்காங்கே படுத்து ஓய்வு எடுக்கும் மாடுகளால் விபத்துக்களுக்கான சாத்தியக் கூறுகள் அதிகரிக்கின்றன. இரவு நேரங்களில் மாடுகள் இருப்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஸ்ரீரங்கத்தில் பல தெருக்களில் போதிய விளக்கு வெளிச்சம் இல்லாமல் இருப்பதால் மாடுகள் இருப்பது பலரின் கண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளை சாலையில் திரிய விட்டு மக்களை இன்னலுக்கு உள்ளாக்குகின்றனர், உரிமையாளர்கள் வீட்டில் மாடுகளைக் கட்டிப்போடாமல் சுதந்திரமாக ஸ்ரீரங்கம் நகர சாலைகளில் உலவ விடுவதால் மற்ற அனைவருக்கும் பாதுகாப்பற்ற சூழல் உருவாகிறது. வீடுகளில் வைத்து இருந்தால் சாணம் போடும், கொசுத் தொல்லை அதிகரிக்கும்,சுத்தமாக வீட்டை வைத்துக்கொள்ள முடியாது என்பதால் மாடுகளை சாலைகளில் திரிய விடுகின்றனர், வீட்டை விட்டு விரட்டி விட்டு விடுகின்றனர். சாலைகளில் உள்ள பாலிதீன் பைகளையும் மாடுகள் தின்று விடுகின்றன, இலை, தழைகளைத் தின்றால் பரவாயில்லை மற்ற குப்பைகளையும் தின்று உயிருக்கு ஆபத்தை வரவழைத்துக் கொள்கின்றன இந்த வாயில்லா ஜீவன்கள் , பாவம். திருச்சி மாநகராட்சி சாலையில் சுற்றித் தீரும் மாடுகளைக் கைப்பற்றி அதன் உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். இதையும் மீறி மாடுகளைத் தெருக்களில் திரிய விட்டால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.ஆடு,மாடுகளால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பு இல்லாமல் தடுக்க வேண்டும் .எனவே திருச்சி மாநகராட்சி சாட்டைகளைக் கையில் எடுக்க வேண்டும் .உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா??? ஸ்ரீரங்கத்தில் ஆடுகள் மாடுகள் தெருக்களில் சுதந்திரமாக திரிவதற்கு முற்றுப்புள்ளி எப்போது ???...
g.s,rajan - chennai ,இந்தியா
2022-11-07 17:23:47 IST
பூலோக வைகுண்டமாக விளங்கும் ஸ்ரீரங்கத்தில் பிச்சைக்காரர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பக்தர்களுக்கும் ,பொதுமக்களுக்கும் மிகுந்த வேதனை அளித்து வருகிறது .ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அடுத்தபடியாக அதிகமாக பக்தர்கள் புனித நீராட வரும் அம்மா மண்டபம் படித்துறை நுழைவாயிலிலேயே திருநங்கைகளால் மிகுந்த தொல்லை ஏற்படுகிறது ,மேலும் பணம் கேட்டு விடாமல் நச்சரிப்பதால் பக்தர்கள் மிகுந்த மன வேதனை அடைகின்றனர் .புனித நீராட வரும் பக்தர்களிடமும் ஆசீர்வதிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் அதிக பணம் கேட்டு நாள்தோறும் தொந்திரவு செயகின்றனர் .இதனால் பக்தர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். ராஜகோபுரத்தில் இருந்து அரங்கநாதர் கோயில் வரை செல்லும் வழி நெடுகிலும் பிச்சைக்காரர்கள் இரு புறமும் உட்கார்ந்து கொண்டு கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் பிச்சை கேட்டு இடையூறு செய்வது ,கத்துவது அனைவருக்கும் வேதனையாக இருக்கிறது ,மன அமைதியைக் குலைக்கிறது ,பிச்சைக்காரர்கள் இருக்கும் இடங்களில் துர்நாற்றமும் வீசி வருவதால் சுத்தம் ,சுகாதாரம் சுற்றுப்புறம் சீர் கெடுகிறது .இந்த அவலத்தை மாநகராட்சியும் ,காவல்துறையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது .இதே போல அம்மா மண்டபம் முதல் ஸ்ரீரங்கம் கோயில் வரை உள்ள மேற்கூரையுடன் கூடிய நிழற்குடைக்கு கீழே பிச்சைக்காரர்கள் பகல் நேரங்களில் படுத்து உறங்குவதால் பக்தர்கள் அந்த பாதையைப் பயன்படுத்த முடியவில்லை .மேலும் மூட்டை முடிச்சோடு ஆங்காங்கே உட்கார்ந்து கொண்டு இருப்பதால் அம்மா மண்டபத்தில் இருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நடைப்பயணம் மேற்கொள்ளும் பாத சாரிகள் நடை பாதையை பயன்படுத்த முடியவில்லை .பல இடங்களில் நடைபாதை சேதம் அடைந்து மிகவும் மோசமாக பராமரிப்பு இல்லாமல் காணப்படுவது வேதனையாக உள்ளது ,இதனையும் மாநகராட்சி கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்து வருகிறது .பிச்சைக்காரர்களால் சுத்தம் .பொது சுகாதாரம் சுற்றுப்புற சூழல் மிகவும் சீர் கெடுகிறது .இதே போல அம்மா மண்டபத்திற்கு மிக அருகில் அமைந்து உள்ள அமலாசிரமம் வாசலில் பிச்சைக்காரர்கள் குடும்பம் ,குடும்பமாக வசித்து வருகின்றனர் .ஸ்ரீரங்கத்தை சுற்றி உள்ள பகுதிகளில் ,பல பேருந்து நிறுத்தங்களில் பிச்சைக்காரர்கள் குடும்பம் நடத்துவதால் பொது சுகாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி விட்டது பேருந்து பயணிகளும் பேருந்து நிறுத்தங்களில் உள்ள இருக்கைகளை பயன்படுத்த முடியவில்லை . ஸ்ரீரங்கம் பகுதிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு முகம் சுளிக்கின்றனர் .இதனால் திருச்சி மாநகரத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது எனவே இந்த அவலத்தைக் கட்டுப்படுத்த திருச்சி மாநகராட்சியும் ,காவல்துறையும் இணைந்து செயல்படவேண்டும் .இது குறித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருச்சி மக்களின் நீண்ட நாள் கனவு , ஜி.எஸ்.ராஜன் சென்னை . ....
g.s,rajan - chennai ,இந்தியா
2022-11-07 15:53:08 IST
திருச்சியில் இருந்து அரியலூர் செல்ல காலை ஐந்து மணி முதல் ஏழுமணி வரை போதுமான எக்ஸ்பிரஸ் பேருந்துகள் இல்லை .ஒரே ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுகிறது ,இது போதாது ,இந்த நேரத்தில் தனியார் வாகனங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது ,இதனைத் தவிர்க்க காலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரையிலும் போதுமான பேருந்துகளை விட திருச்சி மற்றும் அரியலூர் மாவட்ட போக்குவரத்துக் கழகங்கள் முன் வர வேண்டும் ,இதேபோல மாலை ஐந்து மணி முதல் ஏழுமணி வரையிலும் போதுமான எக்ஸ்பிரஸ் பேருந்துகள் இல்லை ,இதனால் பயணிகள் வேறு வழி இன்றி தனியார் பேருந்துகளில் புளி மூட்டைப் பயணம் மேற்கொள்கின்றனர்,மேலும் பொதுமக்கள் சிரமம் இன்றி பயணம் செய்ய போதுமான எக்ஸ்பிரஸ் பேருந்துகளை விட சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் முன் வரவேண்டும் , ஜி.எஸ்.ராஜன் சென்னை ,...
g.s,rajan - chennai ,இந்தியா
2022-11-06 21:48:42 IST
ட்விட்டரை இந்தியர்கள் அனைவரும் பயன்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும், ட்விட்டரை இழுத்து மூடிவிட்டு உலகத்தை விட்டே ஓடட்டும், கோடிக்கணக்கில் லாபம் அடைந்த பிறகு நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது என்று கூறி பல இந்தியர்களை, பெரும் லாபத்தில் நடக்க காரணமானவர்களை தயவு தாட்சண்யம் இன்றி சர்வாதிகாரி போல உடனடியாக பணி நீக்கம் செய்த ஏளன எலான் மஸ்க் ஒழிக ஒழிக ஒழிக...
g.s,rajan - chennai ,இந்தியா
2022-11-03 12:59:42 IST
சாமானிய மக்களிடம் சல்லிக்காசு கூட கையில் தங்க மாட்டேங்குது.எல்லாமே சுத்தமா துடைச்சுக் கிடக்கு . ஜி.எஸ்.ராஜன் சென்னை ....
g.s,rajan - chennai ,இந்தியா
2022-11-01 23:40:30 IST
சிமெண்ட் சிட்டி என்று சொல்லப்படும் அரியலூர் நகரத்தில் இருந்து பல இடங்களுக்கு போதிய புறநகர் பேருந்து வசதிகள் தற்போது இல்லை என்பது மிகவும் வேதனையான ஒன்று, மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே தற்போது அரியலூரில் இருந்து பல பகுதிகளுக்கு புறநகர் பேருந்துகள் எனப்படும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரியலூர் மற்றும் திருமானுர் ,திருவையாறு ,திருமழபாடி வரை,அரியலூர் மற்றும் கல்லக்குடி என்று அழைக்கப்படும் டால்மியா வரையும் அரியலூர் மற்றும் உடையார்பாளையம் (குறிப்பாக கீழப்பழூர் வழியாக) செல்ல போதிய அரசு புறநகர் பேருந்துகள் இல்லை .இதனால் இப்பகுதியில் உள்ள பொது மக்கள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் தவிர அறியலூரை சுற்றி உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு வருபவர்கள் மேலும் அரசின் டான்சம் சிமெண்ட் தொழிற்சாலை செல்பவர்கள் இது தவிர தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் மற்ற நபர்கள், தினசரி மிகவும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். போதிய புறநகர் அதாவது டவுன் பஸ்கள் இல்லாததால் பலரும் நீண்ட தூர பேருந்துகளில், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் தனியார் பேருந்துகளில், சாதாரண பேருந்துகளில் ஆடு மாடுகளை போல அடைக்கப்பட்டு நரகவேதனை பயணத்தை தினமும் மேற்கொண்டு வருவது வேதனை. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு டவுன் பஸ்கள் புதிதாக விட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு பயணத்தில் கட்டணத்தில் சலுகையும் அளித்தால் நல்லது, மாதாந்திர பாஸ் முறையில் அனுமதி அளித்தால் இந்த சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். தற்போது மற்ற பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய சூழலுக்கு அனைவரும் தள்ளப்பட்டு உள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு போகும் போதும் வரும் போதும் மாணவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. காலை ஆறு மணியில் இருந்து கிட்டத்தட்ட ஒன்பது மணி வரை மதியம் மூன்று மணி முதல் கிட்டத்தட்ட ஆறு மணி வரையில் எல்லா பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறைந்த தூரம் பயணம் செய்ய வேண்டியவர்கள் நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளில் கால் வைக்கக் கூட இடம் இல்லாமல் மரண அவஸ்தையோடு பயணம் செய்து வருவது நித்தம் வாடிக்கையாகி விட்டது. அரியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் படிக்கட்டுப் பயணம் சர்வசாதாரணம் என்றும் அடித்துக் கூறலாம். பேருந்துகளில் இடம் இல்லாமல் பலர் படிக்கட்டுகளில் மிகவும் ஆபத்தான முறையில் காலை மற்றும் மாலை வேளைகளில் தொங்கியபடி பயணம் செய்வது நித்தம் தொடர்கதையாகி வருவது வேதனை. எனவே போக்குவரத்துத் துறை அமைச்சர் ,சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள், திருச்சி அரியலூர், கும்பகோணம், ஜெயங்கொண்ட கோட்ட அதிகாரிகள், வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள் இது குறித்து உடனடியாக ஆய்வுகளை மேற்கொண்டு கூட்ட நெரிசல்களால் ஏற்படும் விபத்துக்களையும், உயிர் இழப்புக்களையும் தடுக்க உரிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும், விபத்துக்களைத் தடுக்க முன் எச்சரிக்கையாக செயல்பட்டு அரியலூர் சுற்று வட்டாரத்தில் போதிய நகர்ப்புற பேருந்துகளை இயக்க ஆவண செய்ய வேண்டும், திருச்சி, தஞ்சை, திருமானுர், திருவையாறு, ஜெயங்கொண்டம் போன்ற பகுதிகளுக்கு இடையே உள்ள கிராமங்களுக்கு செல்ல,அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்ல உரிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் ,தற்போது உள்ள பேருந்துகளின் எண்ணிக்கை நிச்சயம் போதாது ..எனவே விபத்துக்களை வருமுன் காக்க,விபத்துக்கள் நடக்காமல் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் முன் வருவார்களா??...
g.s,rajan - chennai ,இந்தியா
2022-11-01 22:45:47 IST
ஜிஎஸ்டி வரி வசூல் சும்மா பிச்சுக்கிட்டு போகுது கூரையைப் பொளந்துக்கிட்டு கொட்டுது அப்படி இப்படின்னு பெரிய பில்டப் கொடுக்குது ..இப்போது பல லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது என்று மத்திய பீத்திக்கொள்வதால் மாநில அரசுகளுக்கு பெரிதாக என்ன பயன் கிடைத்து விடப்போகிறது?? பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை மாநிலங்களுக்கு இந்த வருமானத்தில் இருந்து தம்பிடி கூட கிடைக்காது, மத்திய அரசு மனம் வந்து எக்காலத்திலும் எந்த மாநிலத்திற்கும் தரவும் போவதில்லை. எதற்கு இந்த வரி வசூலை வீண் தம்பட்டம் அடிக்க வேண்டும்??தேவையே இல்லை ஏன், எதற்கு இந்த செய்தி??? வெட்டி விளம்பரம். மாநிலத்தில் உள்ள மக்களிடம் இருந்து ஜிஎஸ்டி வரி வசூல் மட்டும் வேண்டும் ஆனால் அந்த மக்களுக்கு இதனால் எந்த நன்மையும் இல்லை .இது என்ன நியாயம் ???இது என்ன அக்கிரமம் ....
g.s,rajan - chennai ,இந்தியா
2022-10-30 15:28:39 IST
பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் இருந்து அருகில் உள்ள புண்ணியத் தலங்களான திருவெள்ளறை ,அன்பில்,கோவிலடி ,குணசீலம் ,திருப்பைஞ்சலி ,உத்தமர் கோவில் ,லால்குடி ,சமயபுரம் மாறி அம்மன் கோவில் ,வயலூர் முருகன் கோவில் , ,மண்ணச்சநல்லூர் ,திருப்பட்டூர் ,சிறுவாச்சூர் ,அழகிய மணவாளன் கோவில் ,திருவாசி ,துவாக்குடி ,வீரப்பூர் போன்ற இடங்களில் இருக்கும் கோவில்களுக்கு செல்ல நேரடியாக பேருந்து வசதி இல்லை ,ஸ்ரீரங்கம் வரும் பக்தர்கள் மற்ற கோயில்களுக்கு செல்ல சத்திரம் பேருந்து நிலையம் வரை சென்றுதான் பேருந்துகளை பிடிக்கவேண்டி உள்ளது ,இது இங்கு வரும் பக்தர்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது ,வயதானவர்கள் ,பெண்கள்,குழந்தைகள் போன்றவர்கள் ஸ்ரீரங்கத்தில் இருந்து மற்றொரு கோவில்களுக்கு செல்ல மற்ற பேரூந்துகளைப் பிடிப்பதற்கு பக்தர்களுக்கு கடும் பண விரயமும் ,மிகுந்த கால தாமதமும் ஏற்படுகிறது , எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் இது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் ,ஸ்ரீரங்கத்தில் இருந்து அருகில் உள்ள திவ்ய தேசங்களுக்கும் குறிப்பாக திருவெள்ளறை ,அன்பில் ,கோவிலடி,ஜீயபுரம் ,குணசீலம்,திருவெறும்பூர் ,இரட்டை மலை ,விராலிமலை முருகன் கோவில் போன்ற இடங்களுக்கும் பேருந்து வசதி செய்து தர வேண்டும் இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுப்பார்களா ???...
g.s,rajan - chennai ,இந்தியா
2022-10-25 22:16:11 IST
பண்டிகைக்காலங்களில் அரசு சிறப்பு பேருந்துகளை விடுகிறோம் பேர்வழி என்று கூறிக்கொண்டு மற்ற மாவட்டங்களில் உள்ள தினசரி பேருந்துகள் மற்றும் விரைவு பேருந்துகளை அந்த வழித் தடத்தில் செல்லாமல் நிறுத்தி விட்டு அவற்றை சென்னைக்கு விட்டு விடுகின்றனர், இதனால் மற்ற மாவட்டங்களில் பயணம் செய்யும் பண்டிகை முடிந்து செல்லும் பயணிகளுக்கு திண்டாட்டம் தான் ,மேலும் ஓரளவு புதிய பேருந்துகள் என்றால் அதை கட்டாயம் சிறப்பு பேருந்து என்று ஸ்டிக்கர் ஒட்டி அவற்றை சென்னைக்கு அனுப்பிவிடுகின்றனர். சிறப்பு பேருந்துகள் என்று கூறி பிற மாவட்ட பேருந்துகளை சென்னைக்கு அனுப்புவதற்கு முடிவு எப்போது? தெரியவில்லை ஏற்கனவே பல மாவட்டங்களில் சாதாரண நாட்களில் கூட போதுமான பேருந்துகள் இல்லாமல் காசு கொடுத்து கால் கடுக்க நின்று கொண்டு மணிக்கணக்கில் பயணம் செய்ய வேண்டிய அவலம் பொதுமக்களுக்கு உள்ளது தனியார் பேரூந்துகளையோ கேட்கவே வேண்டாம். எப்பவும் வசூல் வசூல் என்பதே அவர்களின் தாரக மந்திரம் பயணிகளை புளிமூட்டை போல அடைத்து இன்னும் இடம் இருக்கு, இடம் இருக்கு, இன்னும் உள்ளே போ, உள்ளே போ என்று கத்திக் கத்தி பயணிகளுக்கு பெரும் தலை வலியை உண்டாக்கி விடுவார்கள், மேலும் வாள்வாள் அப்படின்னு சத்தம் போட்டு பயணிகளை இன்னும் எரிச்சல் அடைய வைப்பார்கள் கூட்ட நெரிசலில் பண்டிகைக் காலங்களில் பண்டிகைக்கு முன்னும். பண்டிகை முடிந்த பின்னும் பயணம் செய்வது பயணிகளுக்கு நிச்சயம் நரக அவஸ்தைதான்....
g.s,rajan - chennai ,இந்தியா
2022-10-25 22:11:04 IST
மத்திய மாநில அரசுகள் நல்ல பைபாஸ் சாலைகள் போட்டு, அதிக சுங்க கட்டணம் வசூலித்து என்ன பிரயோஜனம்? இயற்கை உபாதைகளைத் தணிக்க சரியான சுத்தம் சுகாதாரமான கழிப்பிடங்கள் இல்லவே இல்லை. இதற்காக தனியாரிடம் தஞ்சம் அடைகிறது வெட்கம் வெட்கம். பெரும்பாலும் மூத்திர துர்நாற்றம் வீசும் கழிப்பறைகளை, சரியான கதவுகள் கூட இல்லாத கழிப்பறைகள் பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது. நெளிய வைக்கிறது. பல இடங்களில் பாதுகாப்பு இல்லை, மின் விளக்குகள் போதுமானதாக இல்லை ஆனால் இதில் கழிவறைக் கட்டணக் கொள்ளை வேறு மக்களை பாடாய்ப் படுத்துகிறது கட்டணத்தை தாறு மாறாக எங்கு பார்த்தாலும் வசூலிக்கின்றனர் .அநியாயம், அக்கிரமம். இதை யார் தட்டிக் கேட்பது?? தெரியவில்லை. மேலும் இந்த சிறப்புப் பேருந்துகள் இருபுறமும் ஐந்து இருக்கைகள் கொண்டு இருப்பதால் கையைக் காலை ஒழுங்காக நீட்ட முடியாமல் மிக நீண்ட தூரம் செல்லும் பயணிகளுக்கு மிகவும் அவதிதான், சுகமாக இருக்க வேண்டிய பயணம் பெரும் சுமையாகவே இருக்கிறது .ஊருக்குச் சென்று இறங்கும் வரை மரண அவஸ்தைதான். என்ன செய்வது? நம் நாடு இருக்கும் நிலை அப்படி சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட எழுபத்தி ஐந்து ஆண்டு காலம் ஆன பிறகும் நாம் இருக்கும் இந்தியா இப்படி இருக்கிறது? யாரை நோவது? ஒன்றுமே புரியவில்லை....
g.s,rajan - chennai ,இந்தியா
2022-10-09 22:44:15 IST
தற்போது மழைக் காலம் மற்றும் குளிர் காலம் வர இருப்பதால் அதிவிரைவு ரயில்களில் ரயில் பயணிகள் முன் பதிவு செய்யப்பட்டு பயணம் செய்யும் இரண்டு அடுக்கு மற்றும் மூன்று அடுக்கு படுக்கை வசதி கொண்ட ,மற்றும் உட்காரும் வசதி கொண்ட சேர் கார் இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளில் அதிக குளிர் தட்பவெட்பம் நிலவுவதால் பயணம் செய்வது ரயில் பயணிகளுக்கு பகல் நேரங்களில் கூட மிகவும் அசௌரியமாக உள்ளது .இரவு நேரங்களில் கேட்கவே வேண்டாம் .குளிர் நடுங்குகிறது .ரயில் பெட்டிகளில் அதிக குளிராக இருப்பதால் பலருக்கு நோய்வாய்ப்படுகிறது ,சளி தும்மல் கை கால்களில் ரத்த ஓட்டம் குறைவதால் வலி ஏற்படுத்துடன் காய்ச்சலும் ஏற்படுகிறது .சிலருக்கு பயணத்தின் போதும் பலருக்கு பயணத்திற்குப் பிறகும் உடல் நிலை வாட்டி வதைக்கிறது ஒவ்வாமைப் பயணிகள் படும் பாடு சொல்லி மாளாது .,எனவே ரயில்வே அதிகாரிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு பயணிகளின் உடல்நலத்தை பாதிக்காமல் நிம்மதியாக சுகமாக பயணம் செய்வதற்கு ஏற்ற நிலையில் ஏசி இயக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி அதிகமாக குளிர் இல்லாமல் அளவான ஏசியில் பயணிக்க உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் ஏசி பெட்டியில் ,பயணம் செய்துவிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் மருத்துவர்களுக்கு தண்டம் அழவேண்டுமா ???வேலைக்கு செல்பவர்கள் தேவையே இல்லாமல் பணிக்கு அனாவசியமாக விடுப்பு எடுக்க வேண்டுமா ???அதுதான் மக்களுக்கு தெரியவில்லை .கவனிக்குமா ரயில்வே ??அதிகாரிகள் மக்கள் உடல் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா ?? ஜி.எஸ்.ராஜன், சென்னை. ....
g.s,rajan - chennai ,இந்தியா
2022-10-09 22:03:00 IST
தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரயில் பாதைகள் மின் மயம் ஆக்கப்பட்டு மின்சார என்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன .ஆனால் சென்னை நகரில் இருப்பது போல பயணிகள் மின்சார ரயில்கள் இயக்கப்படாமல் இருப்பது மிகவும் வேதனையாகி இருக்கிறது.பல பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது மக்களின் தேவைக்கு ஏற்ப போதுமான நகர பேருந்துகளை இயக்க முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது .குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல முடியாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது ,பள்ளி கல்லூரி ,தனியார் மற்றும் அரசாங்க அலுவலகத்துக்கு செல்லும் நபர்கள் திண்டாடி வருவது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் உள்ளது .காதாமதம் ஏற்படுவதால் பலருக்கு மன உளைச்சல் அதிகரித்து வருவது மிகவும் வேதனை .போதுமான பாசஞ்சர் ரயில்களும் இயக்காமல் ரயில்வே மெத்தனம் காட்டி வருகிறது .மின் மாயம் ஆக்கப்பட்ட வழித்தடங்களில் பல பாசஞ்சர் நிறுத்தப்பட்டு விட்டன .காலை மாலை வேளைகளில் சரியான நேரத்திற்கு இயக்கப்பட்டால் தினந்தோறும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் தினசரி அலுவலகம் செல்லும் தனியார் மற்றும் அரசாங்க பணியில் இருக்கும் நபர்களுக்கும் ,அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பனி செய்யும் நபர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் ,மாதாந்திர மற்றும் சீசன் கட்டணம் எடுத்து பயணம் செல்வதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கான செலவுகள் குறையும் .பேருந்துகளில் பயணம் செல்வதால் அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்வது பல சாதாரண மக்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது .பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வருமானமும் மிகவும் குறைவாக இருப்பதால் அதிகமான பயணக் கட்டணம் அவர்களுக்கு பெரும் சுமையாகி உள்ளது .மாத சம்பளம் வார சம்பளம் வாங்கும் மக்கள் வாழ்க்கை நடத்த படாத பாடு பட வேண்டி உள்ளது .எனவே மின் மயம் ஆக்கப்பட்ட ரயில் வழித் தடங்களில் குறைந்த தூர மின்சார ரயில்களை பல பெட்டிகளைக் கொண்டு இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வரவேண்டும் .மக்கள் நெருக்கடி அதிகம் இருக்கும் பகுதிகள்,தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் இடங்கள் சுற்றுலாத்தலங்கள் பகுதிகளுக்கு இயக்கலாம் . கரூர் ,திருச்சி ,அரியலூர் ,தஞ்சை மதுரை ,சேலம் ,கோவை,திருப்பூர் ,ஈரோடு ,புதுக்கோட்டை போன்ற நகரங்களுக்கு இடையே சோதனை அடிப்படையில் மின்சார ரயில்களை அடிக்கடி இயக்க வேண்டும் .,அதிக அளவில் மின்சார ரயில்களை இயக்குவதால் சாலை விபத்துக்கள் வெகுவாகக் குறையும் ,சுற்றுப்புற சூழலுக்கும் கேடு ஏற்படாது .தனியார் வாகனங்கள் பயன்பாடு அதிகரிப்பதால் நமது நாட்டின் அன்னியச் செலாவணியும் அதிகரிக்கிறது .இதனால் நமது நாட்டின் பண வீக்கமும் அதிகரிக்கும் ,இந்தியாவில் கச்சாப்பொருள் இறக்குமதியால் விலைவாசியும் தாறுமாறாக உயரும் .பொதுப் போக்குவரத்தான ரயில்களை அதிகரித்தால் பெரும்பாலான மக்கள் குறைந்த கட்டணத்தில்.குறைந்த நேரத்தில் அதிக தூரம் பயணம் செய்ய முடியும் .ரயில்பாதைகளை மின் மயம் ஆக்கி அதில் அதி விரைவு ரயில்களை ,சரக்கு ரயில்களை மட்டும் இயக்குவதால் தொழில் மற்றும் பணிநிமித்தமாக குறைந்த தூரம் பயணம் செய்பவர்களுக்கு பெரிதாக என்ன லாபம் ??ஒன்றும் இல்லை.தனியார் பேருந்துகளில்,அரசாங்க பேருந்துகளில் காசு கொடுத்தும் கால் கடுக்க மணிக்கணக்கில் நின்று கொண்டு செல்வதால் பாதிப்பு யாருக்கு ??கட்டாயம் பொதுமக்களுக்குத்தான்..எனவே சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாக அதிகாரிகள் மற்றும் ரயில்வே அமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்தில் மக்கள் நெருக்கடி குறைய போதுமான பல ரயில்பெட்டிகள் பொருத்திய மின்சார பயணிகள் ரயில்களை அடிக்கடி இயக்க போதுமான வழி வகைகளை உடனடியாக ஆராய வேண்டும் ,மாநில அரசும் பொதுமக்களின் நலன் கருதி மத்திய அரசுக்கு போதிய ஒத்துழைப்பு தர வேண்டியது காலத்தின் கட்டாயம் . ஜி.எஸ் .ராஜன், சென்னை....
g.s,rajan - chennai ,இந்தியா
2022-10-09 17:06:06 IST
அனைவருக்கும் சிரமம் ஏற்படுகிறது மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜஸ் அதிவிரைவு ரயில் மற்றும் வைகை அதி விரைவு ரயில் ,பாண்டியன் அதிவிரைவு ரயில் கன்னியாகுமாரி அதி விரைவு ரயில் ,நெல்லை அதிவிரைவு ரயில் உட்பட பல தென் மாவட்ட ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் நிற்காமல் செல்வது பயணிகளுக்கு வேதனையாக இருக்கிறது .எனவே ரயில்வே நிர்வாகம் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் பக்தர்கள் மற்றும் பல ரயில் பயணிகளின் நலனைக் கருத்தில்கொண்டு ஸ்ரீரங்கத்தில் அனைத்து அதிவிரைவு ரயில்களையும் நிறுத்தி பயணிகள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏற்றி , இறங்கிச் செல்ல எதுவாக அதிவிரைவு ரயில்களை நிறுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ....
g.s,rajan - chennai ,இந்தியா
2022-10-09 16:16:41 IST
ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி ரயில் நிலையம் வரை செல்லும் பேருந்துகள் பெரும்பாலும் பாலக்கரை வழியாக செல்கின்றன .இதனால் பயணிகளுக்கு பயண நேரம் அதிகரிக்கிறது .மேலும் திருச்சி ரயில் நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் செல்லும் பயணிகள் அங்கு செல்ல அதிக நேரம் செலவழிக்க வேண்டி உள்ளது ,இதனைத் தவிர்க்க ஸ்ரீரங்கத்தில் இருந்து தஞ்சாவூர் புறவழிச்சாலை வழியாக பால் பண்ணை வழியாக மத்திய பேருந்து நிலையம் மற்றும் திருச்சி ரயில் நிலையம் செல்ல பேருந்துகளை அடிக்கடி இயக்க வேண்டும் .ஒரே வழித்தடத்தில் அதாவது பாலக்கரை வழியாகவே பேருந்துகளை இயக்கினால் பேருந்துகளின் நெரிசல் அப்பகுதியில் வெகுவாக உள்ளது ,இதனால் பேருந்துகளின் எண்ணிக்கையை சற்று குறைத்து அவ்வழியாக இய்யாக்க வேண்டும் ,பல பேருந்துகளின் வசூலும் குறைந்தே இருக்கிறது ,பல சமயங்களில்பயணிகளின் கூட்டம் குறைந்து காலியாகவே செல்கின்றன.எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் போக்குவரத்துத் துறை அமைச்சர் இது குறித்து ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுத்து பைபாஸ் சாலை அதாவது புறவழிச்சாலை வழியாக சில பேருந்துகளை ரயில் நிலையம் மற்றும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு இயக்கினால் பயணிகள் விரைவாக செல்ல வசதியாக இருக்கும்,சத்திரம் ,மெயின்கார்ட் கேட் ,பாலக்கரை வழியாக செல்வதைத் தவிர்க்கலாமே ,இதனால் இப்பகுதியில் நெரிசலும் குறையுமே,கவனிப்பார்களா,மக்களின் கோரிக்கை நிறைவேறுமா ??? ஜி.எஸ்.ராஜன் சென்னை ....
g.s,rajan - chennai ,இந்தியா
2022-09-20 23:56:46 IST
திருச்சியில் இருந்து அரியலூர் வரை செல்லும் பேருந்துகள் தஞ்சாவூர் கும்பகோணம் போன்ற இடங்களில் இருந்து அரியலூர் வரை இயக்கப்படும் அரசு எக்ஸ்பிரஸ் பேருந்துகள் ,தஞ்சாவூரில் இருந்து பெரம்பலூர் மற்றும் துறையூர் வழியாக சேலம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் கீழப்பழூரில் மட்டும் நிறுத்தப்படுகிறது .அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் ,அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் காவல் நிலையம் தவிர தனியார் சிமெண்ட் நிறுவனம் ஒன்றும் இவ்விடத்தில் அமைந்து உள்ளது ,தமிழக அரசாங்கத்தின் கும்பகோணம், திருச்சி,அரியலூர் கோட்டம் மூலம் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் பலர் அலுவலக வேலையாக வருபவர்களுக்கும் ,பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்க வரும் மாணவ மாணவிகளுக்கும் ,தனியார் சிமெண்ட் தொழிற்சாலைகளில் பணிக்கு தினசரி வந்து போகும் நபர்களுக்கு மிகுந்த வசதியாக இருக்கும் வகையில் பயணிகளை ஏற்றி விட்டும் ,இறக்கி விட்டும் சென்றால் அது அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் .தற்போது அரசாங்க எக்ஸ்பிரஸ் பிடிக்க பொதுமக்கள் இரண்டு கிலோமீட்டர் வரை உள்ள கீழப்பழூருக்கு மற்ற சாதாரண மற்றும் தனியார் பேருந்துகளை பிடித்து தடுமாற வேண்டி உள்ளது .இதனால் அனைவருக்கும் மிகுந்த சிரமமும் கால விரயமும் தினந்தோறும் ஏற்படுவது மிகவும் வேதனைக்கு உரியதாக இருக்கிறது ,பல எக்ஸ்பிரஸ் பேருந்துகள் காலியாகவே சென்றாலும் நிறுத்துவதில்லை .பயணிகள் கைகளைக் காட்டி நிறுத்தினாலும் எப்பொழுதும் பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன ,பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் இவ்விடத்தில்நிறுத்தா அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை என்று கூறி மறுப்பது மிகவும் வேதனையாக உள்ளது . இது தவிர மிகவும் எந்நேரமும் நூற்றுக்கணக்கில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வந்து செல்லும் பொது மக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுவதோடு வீண் அலைச்சலும் கட்டண விரயமும் ஏற்படுவது வேதனையாக உள்ளது.பள்ளி மற்றும் கல்லூரிமாணவிகளுக்கும்,ஆசிரியர்களுக்கும் நாள் தோறும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு குறித்த நேரத்தில் வந்து செல்வது மிக்க கடினமாக இருக்கிறது ,எக்ஸ்பிரஸ் பேருந்துகள் ஏற்றிச்செல்லாமல் அவர்களைத் தவிக்க விட்டுச்செல்வதால் அனைவருக்கும் நேரமும் வீணாகிறது இதனால் மன உளைச்சலும் ஏற்படுகிறது .எனவே திருச்சி ,கும்பகோணம் .பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூரில் இருந்து கீழப்பழுவூர் வழியாக அரியலூர் செல்லும் பேருந்துகள் அரியலூர் வட்டாரபோக்குவரத்து அலுவலகம் அமைந்து உள்ள இந்த இடத்தில எல்லா அரசாங்க எக்ஸ்பிரஸ் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் பொதுமக்கள் பள்ளி ,கல்லூரி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பேருந்து நிறுத்தி செல்ல உடனடியாக அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சரும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் ,எனவே போக்குவரத்துத் துறை அமைச்சரும் பொதுமக்கள் ,பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதியும் ,தனியார் சிமெண்ட் தொழிற்சாலைகளின் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதியும் இவ்விடத்தில் நிரந்தரமாக எல்லா எக்ஸ்பிரஸ் பேருந்துகளும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல அனுமதி அளிக்க உடனடியாக ஆவண செய்ய வேண்டும் .மேலும் இங்கு எக்ஸ்பிரஸ் பேருந்துகளை நிறுத்தினால் அவற்றின் தினசரி வசூலும் நிச்சயம் உயரும்.எக்ஸ்பிரஸ் பேருந்துகள் காலியாக ஓடுவதால் ஏற்படும் நஷ்டத்தையும் அரசால் கண்டிப்பாக தவிர்க்க முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது .எனவே இது குறித்து தமிழக அரசின் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கோட்ட அதிகாரிகள் ,தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ,வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க கால தாமதம் இன்றி செயல் பட வேண்டும் .பேருந்து நிறுத்தம் குறித்த மக்களின் குறைகள் விரைவில் தீர்க்கப்படுமா ???எக்ஸ்பிரஸ் பேருந்துகள் நிற்க நடவடிக்கை எடுக்கப்படுமா ???பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா ??தினமலரும் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டுகிறேன்.சிமெண்ட் சிட்டி அதாவது அரியலூர் செல்லும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் திருச்சி பிரதான சாலையில் உள்ள அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நின்று செல்லுமா ??? ஜி.எஸ்.ராஜன் சென்னை ....
vetriselvan - chennai,இந்தியா
2022-08-22 17:34:08 IST
வாழ்த்துக்கள், உங்களுடைய செய்தி தாளில் முடிந்த அளவு குறைவாக, ஏன் முற்றிலும் சீமான் நாம் தமிழர் செய்திகளை தவிர்க்க காரணம் என்ன? உங்களுடைய ஒத்துழைப்பு தேவை, நெருப்பை குப்பைகள் கொண்டு மூடிவிட முடியாது. நன்றி....
Ramarajan - Chennai,இந்தியா
2022-08-16 20:54:59 IST
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) இணையதளம் கடந்த மூன்று ஆண்டுகளாக புதுப்பிக்க படாமல் உள்ளது. இதனால் பிளான் அப்ரூவல், அங்கீகரிக்கப்படாத மனை வரன்முறை போன்ற இணையவழி சேவைகளுக்காக விண்ணப்பித்தவர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். முதல்வர் உடனடியாக கவனிப்பாரா?...
Ramarajan - Chennai,இந்தியா
2022-08-16 20:53:32 IST
தமிழ்நாடு மின் வாரியத்தின் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட 'Tariff-calculator.' (கட்டண கணிப்பு) இதில் 500 யூனிட் மின்சாரம் பயன்பாட்டிற்கு ரூபாய் ஆயிரத்து நூற்று முப்பது கட்டணமாக வருகிறது(1130). ஆனால் அதை விட ஒரே ஒரு யூனிட் கூடுதல் பயன்பாட்டிற்கு (501) சுமார் ரூபாய் ஆயிரத்து எழுநூற்றி எண்பத்தேழு கட்டணமாக வருகிறது(1787). அதாவது ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 657. ரூபாய் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? மின்சார கட்டண உயர்விற்கு மத்திய அரசின் மீது பழி போடுவதை விடுத்து தமிழக அரசு இந்த கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்துமா?...
Rajarajan - CHENNAI,இந்தியா
2022-08-14 17:20:36 IST
மிக அவசரம் அறநிலைய துறை பக்தர்கள் தரிசன இனைய வழி முன்பதிவு முழுவதுமாக முடங்கியுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது . உதாரணமாக....பழனி திருச்செந்தூர் போன்ற பக்தர்கள் அதிக அளவில் கூடும் தளங்களில் கூட எந்த ஒரு சேவையும் முன் பதிவு செய்ய முடியாது....மேலும் இது அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படும் நிலைமை உருவாக்குகிறது ....தினமலர் ஒரு பதிவை இதைகுரித்து வெளியிடவேண்டும் என கேட்டுகொள்கிறேன் . நன்றி...
kudanthai Raja - Chennai,இந்தியா
2022-08-06 18:48:58 IST
தனி மனித தகவல் பாதுகாப்பு சட்டம் - ஓரங்கட்டப் பட்டது ஒரு கதை கேட்போமா? இந்தியாவில் இது வரை தகவல் தொழில் நுட்பப் பாதுகாப்பு சட்டம் 2000 என்று ஒன்றும் அதன் சீர்திருத்த சட்டம் 2008 என்றும் ஒன்று தான் இருந்து வந்தது. 24 ஆகஸ்டு 2017-இல் தனியுரிமை (பிரைவஸி) என்பது ஒரு அடிப்படை உரிமை என்றும் அது பாதுகாக்கப் பட வேண்டும் என்றும் உச்ச நீதி மன்றம் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பில் கூறியது. 'தனியுரிமை' என்றால் என்றால் என்ன என்றும், பிரைவஸி என்னும் சொல்லுக்கான வரையறை என்ன என்றும் உச்ச நீதி மன்றம் அந்தத் தீர்ப்பில் சொல்ல வில்லை என்பது வேறு விஷயம். தனிமனித தகவல் பாதுகாப்பு சட்டம் ஒன்று இந்தியாவுக்கு வேண்டும் என்பது சென்ற சில ஆண்டுகாளகவே இருக்கும் கோரிக்கை. உச்ச நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) ஸ்ரீக்ருஷ்ணா வின் தலமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது, அது ஜூலை 2018-இல் தனி மனித தகவல் பாதுகாபு சட்டம் வரைவு ஒன்று உள்ளடங்கிய ஒரு விரிவான ரிப்போர்ட்டை வழங்கியது பிறகும் ஒரு வரை சட்டம் தயாரிக்க்ப் பட்டது, பாராளுமன்ற உறுப்பினர் மீனாக்ஷி லேகி-யின் தலைமையில் பல அமர்வுகளுக்குப் பிறகு அந்தக் குழு தன் சிபாரிசுகளையும் பாரளுமன்றத்தில் வைத்தது, சில பல காரணங்களால், சென்ற பாரளுமன்றத்தில் இதொ, இதோ என்று சொல்லிக் கொண்டே அந்தச் சட்டம் வராமலேயே காலாவதி யானது. பின்னர் இதே மோடி அரசும், மீண்டும் அதே ரவி ஷங்கர் பிரஸாத் பதவிக்கு வந்ததும் இந்த சட்டத்தைப் பற்றி மீண்டும் சர்ச்சை துவங்கியது. இந்தச் சட்டத்தின் பெயர் தனியுரிமை தகவல் பாதுகாப்பு சட்டம் என்பதிலிருந்து சற்று நீர்த்துப் போய் வெறும் தகவல் பாது காப்பு சட்டம் என்றெல்லம் பெயர் மாற்றம் ஆனது, பிறகு, பாரளுமன்ற உறுப்பினர் பி பி செளத்திரி (இவரே ராஜஸ்தானில் பிரபல வக்கீலாக பணி புரிந்தவர் தான்) தலைமையில் மீண்டும் ஒரு குழு அமைக்கப் பட்டது, மொத்தமாக இந்தக் குழுக்கள் இது வரை 78 முறை கூடி யிருக்கின்றன, 184 மணி நேர விவாதங்கள் நடந்திருக்கின்றன. பற்பல வல்லுனர்கள் தன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். Data Protection Bill 2021, Data Protection Bill 2022 என்றெல்லால் பெயர் மாறிக்கொண்டே வந்தது, இந்த சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதில் திரு ரவி சங்கர் பிரஸாத் (முன்னாள் தகவல் தொழில் நுட்ப அமைச்சர்) மிகவும் முனைப்புடன் இருந்தார் என்றும் சொல்லப் பட்டது, உண்மையில் அவர் சில பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுடன் சற்று உறுதியான நிலைப்பாடு தான் எடுத்தார் என்றும் கூறுவர், நம் தகவல் நம் நாட்டு சர்வர்களிலேயே தான் ப்ராஸஸ் செய்யப் பட வேண்டும் என்ற சில ஷரத்துகள் இந்த சட்ட வரைவில் இருந்தன. ஃபேஸ்புக் (இப்பொழுது மெடாவெர்ஸ்), ட்விட்ட்ர, கூகுள், மைக்ரோசாஃப்ட், போன்ற பல பெரிய பன்னாட்டு (அல்லது அமெரிக்க) நிறுவனங்கள் இந்திய வாடிக்கையாளர்களில் தகவலை இந்தியாவில் தான் வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற ஷரத்துகள் இந்த சட்ட வரைவில் இருந்தன. இது போன்ற கட்டுப்பாடுகள் அந்த நிறுவனங்களுக்கு சிரிதும் பிடிக்காது என்பது ஊரறிந்த விஷயம். தவிரவும் மத்திய அரசு, (குறிப்பாக செக்ஷன் 35) தகவல் பரிமாற்றத்தை கண்காணிப்பதற்கு சில சிறப்பு அதிகாரங்களையும் இந்த சட்ட வரைவில் கொண்டு வந்திருந்தது. முதலிலிருந்தே இந்த அனைத்து பன்னாட்டு நிறுவனங்க்ளும் இந்த சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் இறங்கின. இதற்கு நாஸ்காம் போன்ற வர்த்தக கூட்டமைப்புகளும் துணை போயின. சில பன்னாட்டு நிறுவனங்களிடன் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார் என்பதற்காகவே (அதிலும் குறிப்பாக ட்விட்டரிடம் மசிய வில்லை) என்பதற்காகவே திரு ரவி சங்கர் பிரஸாத் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்திலிருந்து மாற்றப் பட்டார் என்றும் கூட ஒரு பேச்சு வந்தது. எனினும் திரு அஸ்வினி வைஷ்ணவ் அமைச்சராக வந்த பிறகும் கூட இந்த சட்டம் கண்டிப்பாக வந்து விடும் என்று பேசப் பட்டது, அதுவும் இதோ, ஓரிரு மாதங்களிலேயே, இந்தப் பாரளுமன்றத் தொடரிலேயே என்றும் கூட சொல்லிக் கொண்டிருந்தனர், ஆனால், இபொழுது வந்திருக்கிறது, செய்தி, இந்த சட்ட வரைவு பாரளுமன்றத்திலிருந்து நீக்கப் பட்ட தாம். (withdrawn). மொத்தமாக 99 செக்ஷன்கள் உள்ள இந்த சட்ட வரைவில், 81 திருத்தங்கள் - சிபாரிசுகள் வந்து விட்டன என்றும் புதியதாக முதலிலிருந்து மீண்டும் இது எழுதப் படும் என்றும், வரும் பட்ஜெட் தொடரிலேயே வரும் என்றும் சொல்கின்றனர். உண்மையில் நடந்தது என்ன? ஆண்டவனுக்கே வெளிச்சம். பெரிய நிறுவனங்கள் தாம் யார் என்பதை காட்டி விட்டனவா? மிகவும் முனைப்புடன் இருந்தால், ரவி சங்கர் பிரஸாத் வழியிலேயே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-உம் சென்று விடுவாரா? அல்லது வேறு ஏதாவது தயக்கமா? இதுவரை விவரம் இல்லை....
Sundaram - Chennai,இந்தியா
2022-07-16 18:02:50 IST
இப்பொழுது வார்த்தைக்கு வார்த்தை ஆளுங்கட்சியினர் திராவிட மாடல் என்கிறார்கள். திராவிடம் என்ற சொல் பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்தது. ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்யா லஹரியில் அம்பாளிடம் திராவிட சிசுவாக்கிய தனக்கு அருள் புரிய வேண்டுகிறார். இது குறித்து பல விவாதங்கள் நடந்திருந்தாலும் அறிஞர்கள் ஒப்புக்கொள்வது என்ன என்றால் திராவிடம் என்றால் பிராம்மணர் என்பதே. சிங்காரவேலு முதலியார் இயற்றிய தமிழ் கலைகளஞ்சியம் "அபிதான சிந்தாமணி"யில் பஞ்ச திராவிடர் என்பது "குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு" என்று இந்த ஐந்து இடங்களில் வசிக்கும் பிராம்மணரைக் குறிக்கும் என்று காணப்படுகிறது. எனவே திராவிடர் கழகம் உண்மையில் பிராமணர் கழகம் என்றே பொருள். திராவிட முன்னேற்ற கழகம் என்றால் பிராமணர் முன்னேற்ற கழகம் என்று அர்த்தம். திராவிட மாடல் என்றால் பிராமண மாடல் என்று பொருள். அவர்களுடைய நோக்கத்தின் படி " திராவிடர் கழகம்" என்பதை திராவிடர் ஒழிப்புக் கழகம்" என்று பெயர் மாற்றுவதே உசிதம். அதேபோல் திராவிட முன்னேற்ற கழகம் என்பதை திராவிட பின்னேற்ற கழகம் என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும். திராவிட மாடலை " திராவிட எதிர்ப்பு மாடல்" என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்....

« First « Previous 1 2 3 4 5 6 ....  
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.


» தினமலர் முதல் பக்கம்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X