Advertisement
    தினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துக்களையும் வாசகர்கள் தெரிவிக்க விரும்பினால் இந்த பகுதியில் தெரிவிக்கலாம். நன்றி.
வாசகர் கருத்து
பக்கம் - 17
g.s,rajan - chennai ,இந்தியா
2016-07-22 16:46:02 IST
ரயில்வே துறை பற்றி பல முறை கரடியாகக் கத்தியாகி விட்டது. ரயில் நிர்வாகம் ஒரு சேவைத் துறை, இது மக்களுக்கான சேவை. இதில் லாப நஷ்டம் பார்க்க முடியாது. பெரும்பாலும் நஷ்டம் வர வாய்ப்பே இல்லை. ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதைத் தடுத்தாலே போதும் , ரயில்வே லாபத்தில் கொழிக்கும்...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-07-22 16:17:54 IST
இந்த கபாலி படத்துக்கு என்ன ஒரு அடிதடி ,இந்த ரஜினி ரசிகருங்க எல்லாம் உருப்படாத பசங்க ,இவர்கள் வருங்காலத் தூண்களா??மறைந்த மாமேதை அப்துல் கலாம் அவர்கள் கண்ட கனவு இந்தியா வல்லரசு 2020 வெறும் கனவுதானா ???கானல் நீர்தானா ???...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-07-22 12:14:08 IST
மக்களிடம் செல்போனில் அளவுக்கு அதிகமாகப் பேசுவது வெகுவாக அதிகரித்து வருவது மிகவும் வேதனை அளிக்கும் விஷயம்.பொதுவாக தற்போது இது ஒரு பெரிய வியாதியாகி வருகிறது .ரொம்ப நேரம் பேசினால் அது ஒரு பாஷனோ இல்லை அது ஒரு பெருமை என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை .தேவை இல்லாமல் பேசுவதால் நேரமும் பணமும் வீணாவதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் ....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-07-22 12:09:54 IST
பல வேகத்தடைகள் ஒட்டகத்தின் திமில் இருப்பத்தைப் போல மிக மிக உயரமாக மலை போல உள்ளது.பல வேகத்தடைகள் உரிய முன் எச்சரிக்கைப் பலகைகள் (Sign Boards) இல்லாமல் இருப்பது பல வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ,குறிப்பாக இரு சக்கர வாகனங்களுக்கு மிகவும் ஆபத்து ,மேலும் பல வேகத்தடைகள் உரிய வெள்ளை நிற ஒளிரும் பட்டை இல்லாமல் இருப்பதை பல இடங்களில் காண முடிகிறது ,யாராவது சரி வர கவனிக்காமல் வேகத்தடைகள் மீது மோதினால் தூக்கி எறிந்துவிடும் ,இதனால் ஓட்டுனருக்கு கபால மோட்சம் தான் கிடைக்கும் பலர் தலைக்கவசம் அணிவதே இல்லை ,கிராமப்புறங்களில் பலர் தலைக்கவசம் அணியாமல் தான் வாகனத்தை ஓட்டுகின்றனர். ,தலைக்கவசம் போட்டு இருந்தால் உயிருக்கு ஆபத்து இருக்காது ஆனால் வாகனங்கள் சேதம் அதிகம் அடைய வாய்ப்பு உள்ளது .மேலும் இரவு நேரங்களில் வேகத்தடைகள் தெளிவாகத் தெரிய ஒளி பட்டால் பிரதிபலிக்கும் ரிஃப்ளெக்டர்கள் அமைக்க கட்டாயம் மீது நீதி மன்றங்கள் உத்தரவு இட வேண்டும்.மேலும் வேகத்தடைகள் அமைக்க சரியான நீளம் ,அகலம் ,உயரம் கட்டாயம் வரையறுக்கப் படவேண்டும் ,மேலும் அந்த வரைமுறையை எல்லா இடத்திலும் பின் பற்ற வலியுறுத்த வேண்டும் ,மேலும் ஆபத்தான முறையில் தமிழகத்தில் பல சாலைகளில் நகரங்களில் ,கிராமங்களில் ,தெருக்களில் அமைக்கப் பட்டு இருக்கும் வேகத்தடைகளை உடனடியாக அகற்றவும் நீதி மன்றம் அரசுக்கு விரைவாக ஆணை இடுமா ???இல்லையேல் பலருக்கு முதுகுத் தண்டுவடம் சில நாட்களில் கண்டிப்பாக காலியாகி விடும் ,மேலும் அது நிச்சயம் ஒருவரைப் பலவகையில் முடக்கிவிடும்....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-07-22 11:59:31 IST
குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தற்போது உள்ள 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவிக்க வேண்டும் .பிறகு 100 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவிக்க வேண்டும் ,200 மற்றும் 300 ரூபாய் நோட்டுக்களை புதிதாக அச்சடிக்கலாம் .10 ரூபாய் நோட்டுக்கள் மட்டும் சிறிதளவு கால அவகாசம் கொடுத்து பிறகு அவற்றையும் 20,50 ரூபாய் நோட்டுக்களை பிறகு செல்லாது என்றும் அறிவித்தால் கறுப்புப் பணம் அறவே இந்தியாவில் ஒழிக்கப் பட்டு விடும் ,கள்ள நோட்டுக்களையும் அறவே ஒழிக்கமுடியும் .நோட்டுக்களை வேலிடிட்டி மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் என அதில் குறிப்பிட்டால் பதுக்கி வைக்கும் எண்ணம் தானாகவே மக்களிடம் குறைந்து விடும் , ஊழல்வாதிகளிடம், அரசியல்வாதிகளிடம் பணம் சேர்க்கும் போக்கு கண்டிப்பாக குறையும் ....
kala - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2016-07-18 15:26:21 IST
I am an NRI staying in Dubai for more than 16 years. I am always facing problem from Customs Authorities in Madurai Airport while coming for my vacation. Our Customs Act stays that a female passenger can bring gold jewellery up to 40 gm (maximum value of Rs. 1,00,000) It does not include our normal regular use jewellery. The customs Authorities will be very vigilant when Spice Jet flight arrives in the Air Port to take bribe from the passengers for whatever they wear (whether it is new/regular use). If really the passenger brings excess gold they can collect duty with due receipts. Please bring it to the notice to concerned authorities to stop happening this in future for the convenience of the NRI passengers to arrive in Madurai Airport....
Seshathiri Iyengar - upparpatty ,theni,இந்தியா
2016-07-16 18:49:29 IST
க .விலக்கு அரசு மருத்துவமனையில் எனது அக்காவின் மகளுக்கு நலமாய் பெண் குழந்தை பிறந்து இன்று மருத்துவ மனையில் இருந்து வீட்டிற்கு செல்லலாம் என்று சொல்லியபடியால் மதியம் சரியாக மூன்று மணியளவில் தேனி க .விலக்கு அரசு மருத்துவமனைக்கு எனது காரில் மேற்படி பிரசவமான பெண்ணையும் குழந்தையையும் அழைத்துவரச் சென்றேன். மருத்துவமனை வாயிலில் ஒருவர் வண்டியை மறித்து வண்டி உள்ளே செல்ல கட்டணம் ரூபாய் பத்து வேண்டுமென்று சொல்லி இரண்டு ஐந்து ரூபாய்க்கான சீட்டுக்களை கொடுத்தார் .அந்த சீட்டில் வாகன அனுமதி என்று மட்டுமே இருந்தது .மேலும் அவரிடம் கேட்டதற்கு காருக்கு பத்து ரூபாய் என்றால் காருக்கான பாசைக்கொடு என்று கேட்கவே எனது ஓனர் இப்படித்தான் வசூல் செய்ய சொல்லியுள்ளார் என்று விவகாரம் பேசவே உங்களது ஓனரை வரச்சொல் என்று சொல்லிவிட்டு நான் உள்ளேசென்று தாயையும் குழந்தையையும் காரில் ஏற்றிக்கொண்டு வரும்வரை யாருமே வரவில்லை.அடாவடியாக வசூல் செய்வதுடன் பதினைந்தாம் தேதி சீட்டை திருத்தி பதினாறாம்தேதி என்று எழுதி வண்டி எண் நேரம் எதுவுமே இல்லாமல் அடாவடி வசூல் செய்வதை தடுத்து நிறுத்துவதுடன் உள்ளே லிப்டில் என்ற இறங்க பிரசவித்த பெண்களிடம் தயவில்லாமல் பணம்கேட்டு பெறுவது, படுக்கை மாற்றும் வேலை செய்பவர்கள் ரூபாய் இருபதிலிருந்து பலித்த மட்டும் பணம் கேட்டு பெற்றுத்தான் படுக்கை மாற்றுவதையும் தடுத்து ஏழை மக்களுக்கு உதவவேண்டும்...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-07-07 13:25:14 IST
திருச்சி சமயபுரம் டோல்கேட் அதாவது நம்பர் 1 டோல்கேட் முதல் லால்குடி வரை உள்ள சாலை போதுமான அகலம் கொண்டதாக இல்லை ,ஆனால் வாகனப் பெருக்கத்தினால் இச்சாலை அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது . இச்சாலை டால்மியா , அரியலூர் ,ஜெயங்கொண்டம் ,நெய்வேலி ,சிதம்பரம் போன்ற ஊர்களுக்குச் செல்லும் மிக முக்கிய சாலையாகும் ,இது தவிர சர்க்கரை மற்றும் அரசு மற்றும் தனியார் சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிக அளவில் இப்பகுதியில் இயங்குவதால் 24 மணி நேரமும் பல வகை லாரிகள் ,சுண்ணாம்புக் கல் லாரிகள் ,கல் ,மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் ,மற்றும் இதர லாரிகள் ,நகரப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன.ஆனால் சாலைகளின் அகலமோ மிகவும் குறைவு ,எல்லா வாகனங்களும் தாறுமாறாக முந்திச் செல்ல முயல்வதால் இச்சாலையில் அடிக்கடி பல விபத்துக்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது .உயிர் இழப்புக்களும் பெருகி வருவது மிகவும் கவலைக்கு உரியது .நகரப் பேருந்துகள் எனப்படும் டவுண் பஸ்கள் சாலையில் ஓரமாக நிறுத்தப் படாமல் ஆங்காங்கே சாலையில் நிறுத்தப்படுவது விபத்துக்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது .சாலையின் இருபுறம் ஆக்கிரமிப்புக்களால் மிகவும் சுருங்கி உள்ளது,எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் இந்தச் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட வேண்டும் .லாரிகள் தனியாகச் செல்ல புறவழிப்பாதை அமைத்து லால்குடி ,புள்ளம்பாடி ,டால்மியா,கல்லகம் மற்றும் கீழப்பழூர் வரை ஊருக்கு உள்ளே லாரிகள் ,பேருந்துகள் செல்லாதவாறு புறவழிச் சாலைகள் அதாவது பைபாஸ் அமைத்தால் பயண நேரமும் குறையும் ,ஊர்களுக்கு உள்ளே செல்லும் சாலைகளில் ஏகப்பட்ட வேகத்த தடைகள் தற்போது அமைத்து இருக்கின்றனர்.இதனால் பேருந்துகள் மற்றும் மற்ற வாகனங்களில் செல்லும் போது பயண நேரம் அதிகரிப்பது கொடுமை மேலும் வேகத்தடைகள் மிகவும் உயரமாக இருப்பதால் அனைவருக்கும் முதுகு வலியும் ஏற்படுகிறது ,இதனால் பயணத்தில் அசதியும் ,சோர்வும் ,வெறுப்பும் ஏற்படுகிறது .கல்லகம் அருகே ரயில்வே கேட் இருப்பதால் சென்னை ,திருச்சி மற்றும் மதுரை செல்லும் ரயில்கள் ,கூட்ஸ் ரயில் ,பாசஞ்சர் ரயில்கள் வரும் போது கேட் போடப்படுவதால் மேம்பாலம் இல்லாமல் இருப்பதால் மிகவும் சிரமமாக உள்ளது .எனவே தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை ,மத்திய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இச்சாலையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்கவேண்டும் .செய்வார்களா ???. ஜி.எஸ்.ராஜன், சென்னை....
விமல் ஆனந்த்.செ - tenkasi,இந்தியா
2016-07-07 02:11:20 IST
நான் நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகா சேர்ந்தவன், எங்கள் ஊரின் குறை நீங்கள் சரி பண்ணுவிங்க என்று நம்புகிறேன் குறிப்பு .செங்கோட்டை காவல் நிலையம் அருகில் அதாவது செங்கோட்டை அர்ச்சி பக்கத்தில் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. குண்டும்குழியுமாக உள்ளது.செங்கோட்டை காவல் நிலையம் முதல் பிரனூர் காளிஸ்வரி திரை அரங்கு வரை மின் விளக்கு ஒன்னு கூட இல்லை.அந்த செங்கோட்டை ஆத்து பாலம் பகுதி மின் விளக்கு இல்லாமல் வாகனம் ஒட்டி நாங்கள் ரொம்ப சிரம்ப படுகிறோம் அடுத்து பிரனூர் டூ இலஞ்சி சரியான மின் விளக்கு இல்லை, கொட்டகுளம் டூ இலஞ்சி அபாயகரமான வளையு ஒன்று உள்ளது. அந்த இடத்தில் பல காலமாக மின் விளக்குகள் எரிவதே இல்லை.அந்த பகுதியில் நிறைய விபத்துகள் நடக்குகின்றன. உங்கள் பத்திரிகை வழியாக வெளிபடுத்தி உரிய அதிகாரி கவனத்துக்கு கொண்டு செல்ல தாழ்மையுடம் கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு விமல் ஆனந்த்...
perumal - thiruvaalur,இந்தியா
2016-07-06 08:19:53 IST
கல்லம்பேடு ஊராட்சியில் உள்ள அங்கன்வாடிகளில் நடக்கும் முறைகேடுகளை அதி காரிகள் சோதனைகள் செய்ய வேண்டி...
perumal - thiruvaalur,இந்தியா
2016-07-06 08:16:12 IST
கல்லம்பேடு டூ பூவனுர் ரோடு சீரமைக்க வேண்டி...
perumal - thiruvaalur,இந்தியா
2016-07-06 08:14:11 IST
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கல்லம்பேடு ஊராட்சியில் உள்ள கல்லம்பேடு கிராம குள வரவு கால்வாய் அகரற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டி...
Anantha Baskar - chennai,இந்தியா
2016-07-05 20:56:02 IST
மந்தைவெளி ராஜா தெருவில் இன்று இரவு சுமார் ஏழுமணி அளவில், மோட்டார் சைக்கிளின் வந்த இரண்டு ஆசாமிகள் ஒரு வயதான மூதாட்டியிடம் இருந்து இரண்டு முறை சங்கிலி பறிக்க முயன்றனர். இதற்கு முக்கிய காரணம் இந்த தெருவில் தெரு விளக்குகள் மிகவும் மங்கலாக இருப்பதே. இந்த சம்பவம் மிக சமீபத்தில் அருகாமையில் உள்ள சாந்தோமில் இரண்டு பெண்மணிகள் உயிர் இழந்த நேரத்தில் நடந்து இருப்பது மக்களிடம் மிகுந்த அச்சத்தை உருவாக்கி உள்ளது. அதிகாரிகள் உடனடியாக இந்த தெருக்களில் மெரசுரி விளக்குகள் பொருந்துமாறு பொதுமக்களின் சார்பாக கேட்டு கொள்கிறேன் பாஸ்கர் ராஜா ஸ்ட்ரீட் மந்தைவெளி சென்னை 600028....
Jamal Eha - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2016-07-04 08:06:23 IST
ஒரு இளம்பெண் காரிருள் சூழ்ந்த நடுஇரவில் கூட ஆபத்து இல்லாமல் தனியாக சென்றுவரும் நிலையையே நான் சுயராஜ்யம் என்பேன் - காந்தி (நவஜீவன் 14-8-1921) மேற்கண்ட காந்திய சிந்தனை நம் தேசத்தில் நிறைவேறியதா? இல்லை, என்பதே உண்மை... மாறாக, பெண்கள் பட்ட பகலில் கூட தனியாக செல்வதற்கு பாதுகாப்பற்ற சூழலை கொண்ட தேசமாக மாறிய மோசமான நிகழ்வுகள் தொடா்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன என்பதே நிதா்சமான உண்மை... இது இந்தியா்கள் அனைவருக்கும் கவலை தரும் விஷயம். குற்றவாளிகள் கடுமையான முறையில் தண்டிக்கப்படாமல் போவதும் குற்றங்கள் அதிகாிக்க ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை... இவ்விஷயத்தில் ஆளும் அரசுகள் உாிய சட்டத் திருத்தங்கள் மூலம் துாித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்... அப்பொழுதுதான் மேற்கண்ட காந்திய சிந்தனை உயிா் பெற்று நமது தேசத் தந்தையான மகா ஆத்மாவின் ஆத்மா சாந்தி அடையும்... வாழ்க பாரத தேசம்.. வளர்க மனிதகுல நேசம்... இ.ஹ. ஜமால் முகம்மது....
sivaramakrishnanr - CHENNAI,இந்தியா
2016-07-02 16:27:01 IST
சார், தினமலர் நாளேடு மக்களுக்கு அவசியமான பல பாலம்,ரயில்வே புஸ் வேண்டி பல செய்திகளை வெளியிட்டு வருகிறது.இருப்பினும் மெட்ரோ ரயில் கோயம்பேடு அண்ணாநகர் ,ஏர்போர்ட் சின்னமலை மார்க்கத்தை விட பரங்கிமலை-வேளச்சேரி மார்க்க வேலையை துரிதப்படுத்தினால் மிகஅதிக அளவில் பயணிகள் பயன்படுத்துவார்கள்.தினமலர் நாளேடு இது சம்பந்தமாக அடிக்கடி செய்தி வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.இந்த மார்கத்தில் முடிக்கவேண்டிய வேலை குறைவாகவே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-06-29 16:03:21 IST
திருச்சியில் இருந்து அரியலூர்,ஜெயங்கொண்டம் போன்ற பகுதிகளுக்கு காலை நேரங்களில் 5 மணியில் இருந்து 6.30 மணிக்குள் செல்ல போதுமான அரசுப்பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.அதே போல மாலை வேளைகளில் போதிய அரசு பேருந்துகள் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் போன்ற பகுதிகளில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படுவது இல்லை என்பதால் பொதுமக்கள் ,தினசரி தொழிற்சாலைகளுக்குப் பணி நிமித்தமாக வருபவர்கள் மற்றும் போவோர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தனியார் பேருந்துகளில் புளி மூட்டைப் பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கல்லக்குடி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப் படுகின்றன. ஆனால் கல்லக்குடி எல்லைக்குப் பிறகு நகர பேருந்துகள் அரியலூர் வரை எதுவுமே இல்லை ,எனவே கல்லக்குடியில் இருந்து அரியலூர் வரை டவுன் பஸ்கள் உடனடியாக இயக்கப் பட வேண்டும்.இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் பயன்பெறுவார்கள்.இது தவிர லால்குடியில் பணி மணி உள்ளதால் அங்கு இருந்து அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம்,நெய்வேலி ,சிதம்பரம் ,திருவையாறு ,திருமானூர் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் மற்றும் டவுண் பஸ்கள் இயக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.சம்பந்தப் பட்ட அரசு அதிகாரிகள் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் இப்பகுதிகளை ஆய்வு செய்து மக்களின் தேவை அறிந்து அவர்களின் தேவைக்குத் தகுந்தாற்போல் சாதாரண ,விரைவுப் பேருந்துகள் ,நகர பேருந்துகளை பேருந்துகளை போதுமான அளவில் இயக்கி பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும்.இப்பகுதிகளை நன்கு ஆய்வு செய்து சாலைகளை அகலப்படுத்த வேண்டும். விபத்துக்களை ,உயிர் இழப்புக்களைத் தடுக்க சாலைகளை நன்கு அகலப்படுத்த ,போவதற்கும் வருவதற்கும் வழி ஏற்படுத்த வேண்டும் ,சாலை தடுப்புக்களை அமைத்து விபத்துக்களை வெகுவாகக் குறைக்க வழிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும்.மேலும் no 1 டோல் கேட் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதியில் இருந்து அதிகாலை ,காலை மற்றும் மாலை நேரங்களில் சில பேருந்துகள் பக்தர்களின் வசதி கருதி அடிக்கடி இயக்க அரசு முன் வர வேண்டும் ,இதனால் சத்திரம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் கட்டாயம் குறையும்.கவனிக்குமா மாநில அரசு ???....
Ilango Krishnan - Ramanathapuram,இந்தியா
2016-06-25 10:28:25 IST
I Ilango K From A.Manakudi , Ramanathapuram டிஸ்ட் write this on the interest of public and to avoid further deterioration of Hotel Tamil nadu located on the by pass road ,Mandapam, Ramanathapuram டிஸ்ட் The hotel is under the tamilnadu tourism development corporation, has been shut for the past 3 years. As there was no maintenance carried out for the past several years ,the condition of the building is totally collapsed. Roof of kitchen and restaurant are already fallen down. Since it is located at seashore ,the rate of corrosion on the steel and structure of building is serious concern. Best part of this hotel is It is location, All room are sea facing this is the only hotel in this area which located at the seashore. This attracts foreigners and tourist from other part of state. Tariff was cheaper than any hotel in Rameswaram area. This hotel had marriage Hall inside the campus which was used by the local people for their family functions and business meetings.restaurant was earning good from traveller passing this hotel . This hotel was very famous because of its location and low tariff. Government has to take necessary action to repair the building and run again without further delay . more they delay,extent of damages has been increasing.As it is shut for several years the building is being misused by locality.though there is watch man they don't maintain proper watch and rare presence. Inspite of good earning from above hotel ,Money of People of tamil nadu is being wasted by paying salary to the watchman and other expenses like electricity, etc...
soundkee - Madurai,இந்தியா
2016-06-25 06:42:39 IST
இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் சாலை தோண்டப்பட்டு கேமரா வைப்பது மக்களுக்கு பயனளிக்கவே. ஆனால் அருகில் உள்ள கிழககு தெரு சாக்கடை 24 மணி நேரமும் வீடுகள், தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பக்தர்கள் நீராடும் இடத்தின் அருகிலேயே கலக்கிறது. இதில் அக்கரை செலுத்தி சுற்று சூழலை மேம்படுத்தலாமே....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-06-21 16:18:25 IST
மக்கள் எல்லாரும் நித்தம் தவறாம யோகா பண்ணுங்க,விஷம் போல எகிறிவரும் விலைவாசி உயர்வைப் பற்றிக் கவலையே இருக்காது. மூன்று வேளை"பசி"கூட எடுக்காது,பசிப்பதால் தானே ஏகப்பட்ட பிரச்சினைகள் மனிதனுக்கு ஏற்படுகிறது.என்ன சரிதானே ???....
Bhuvaneswaran G - Chennai,இந்தியா
2016-06-20 23:50:41 IST
Dear sir, I am Bhuvaneswaran G. I am staying in Thiruverkadu, Chennai - 77. First thing i would like to thank you for your support for the velappanchavadi bridge work has restarted. Here i would like to notice one thing that is near velappanchavadi there is a road called Vada Noombel Salai. Every day 1,000 people using this salai (Including two Private schools students). But the road condition in too bad and in this salai near S.P. Homes Pvt. Ltd the road size (width) is just 6 feet only. There are two big digs in left & right sides as well. So the school students, parents and public are very fear to pass this road. Kindly do the need full to solve this issue as soon as possible. Thank you very much....
abishek - madurai,இந்தியா
2016-06-17 20:04:51 IST
நான் மதுரையிலுள்ள தனியாா் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன். என் நண்பா்கள் வருமானம் இருப்பிடம் சாதி மற்றும் பட்டதாாியில்லா சான்று பெற அலைவதையும் இ சேவை மையங்களில் கூட்டம் அலை மோதுவதையும் பாா்க்க முடிகிறது. ஒரு சான்றிதழ் பெற இரண்டு மூன்று நாட்களாக மக்கள் வாிசையில் நிற்பதையும் பாா்க்க முடிகிறது. ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் அரசு கேபிள் டிவி சேவை மையங்கள் இயங்குகின்றன. இதை தவிர வேறு ஏதேனும் இ சேவை மையங்கள் உள்ளனவா. நான் வடக்கு தாலுகாவை சோ்ந்தவன். வடக்கு தாலுகாவிலுள்ள அரசு கேபிள் டிவி இ சேவை மையத்தை தவிர வேறு எங்கும் விண்ணப்பிக்க முடியாதா. முடியுமானால் நமது தினமலா் நாளிதழில் அந்த மையங்களின் விவரத்தை வெளியிட்டால் என் போன்ற மாணவா்களும் இரண்டு மூன்று நாட்களாக வேலைக்கு விடுமுறை எடுத்து சம்பளத்தை இழந்து வாிசையில் நிற்கும் தந்தைகளும் வீட்டில் உணவு சமைக்காமல் தானும் சாப்பிடாமல் வாிசையில் நிற்கும் தாய்மாரும் சான்றிதழ்களுக்காக காத்திருக்கும் மாணவா்களும் பயன் பெறுவாா்கள். இலவசமாக பெற வேண்டிய சான்றிதழ்களை பெற 50 கட்டணத்தை செலுத்தி வாிசையிலும் காத்திருக்க வைக்கும் இ சேவை மையங்கள் மக்களுக்கு வரமா சாபமா...
rk nataraj - madurai,இந்தியா
2016-06-16 18:43:28 IST
தோல்விக்கு காரணம் மக்கள். இரண்டு கட்சிகளுமே ஊழல் என்று சொல்லிவிட்டு தனித்து தானே நிற்க வேண்டும், பின்பு எதாவது ஒரு கட்சி கூட்டு என்று சொன்னால் என்ன அர்த்தம். லாஜிக் இல்லையே...
Ram Sridhar - Singapore,சிங்கப்பூர்
2016-06-12 21:16:58 IST
சென்னை ராமாபுரம் குறிஞ்சி நகர் பகுதியில் அமைந்துள்ள ராஜலக்ஷ்மி பள்ளி அருகே ஒரு சிறிய திடல் உள்ளது. மழை நாட்களில் இங்கு தண்ணீர் தேங்கி அதன்மூலம் கொசு தொல்லை அதிகம். மற்ற நாட்களில், இந்தத் திடலில் அனைத்து வித கட்சிக் கூட்டங்களும், கலைநிகழ்ச்சிகள் மற்றும் கபடி போட்டிகள் ஆகியவை நடை பெறுகின்றன. இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு இதனால் மிகப் பெரிய தொந்தரவு. எந்த நிகழ்ச்சி என்றாலும் பெரிய ஒலி பெருக்கிகளின் மூலம் பாடல்களைப் போடுவதும், கபடி போட்டிகள் நடைபெறும் பொது அதில் பங்கு பெறுபவர்கள் இருக்கும் எல்லா வீதிகளிலும் அவர்களுடைய இரு சக்கர வாகனங்களை நிறுத்தி பெரும் இடைஞ்சல் தருவதோடு இல்லாமல், இப்போது இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக (இரவு/பகலாக) கபடிப் போட்டிகளை நடத்தி பெரும் அளவில், ஒலி பெருக்கிகளின் மூலம் வார இறுதியில் நிம்மதியாக ஓய்வு எடுக்க முடியாதபடி செய்திருக்கிறார்கள். வயதானவர்கள் தூங்க முடியவில்லை. இதற்கு தீர்வு ஏதாவது கிடைக்குமா என்று தெரியவில்லை....
srivatsan - chennai,இந்தியா
2016-06-11 16:35:30 IST
மேன்மை மிகு மயிலை கபாலி கோவிலில், 'சுற்றுப்புற தூய்மை' என்ற கொள்கையின் அடிப்படையில் சில வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட 'பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்' என்று துவங்கிய நிகழ்வு, சில நாட்களிலேயே அறிவிப்பில்லாமல் 'திரும்ப பெற்றது', பெரிதும் ஏமாற்றத்தை தருகிறது. சிறிது காலத்துக்கு நுழைவிடத்தில் காவலாளி ஒருவர் பக்தர்களை அன்புடன் வரவேற்று பிளாஸ்டிக்கினால் ஆன கைப்பைகளை சிறிய மூங்கில் கூடைகளை மாற்றி வந்தனர். அனால், இப்போதோ பழயபடி பிளாஸ்டிக் குதூகலத்துடன் ஆண்டவர்கள் சந்நிதிகளில் உலா வருவது வருத்தப்பட வேண்டிய ஒரு நிகழ்வு. அடிப்படையில் ஆலய அதிகாரிகளின் 'பொறுப்பற்ற ' மற்றுமொரு நிகழ்வாக பக்தர்களால் பார்க்கமுடிகிறது....
L R K Krishnan - Chennai,இந்தியா
2016-06-10 10:15:02 IST
To the Editor, Dinamalar, Chennai: I am a resident of Sobha Meritta Apartment, Pudupakkam, Vandaloor-Kelambakkam Main Road, opp Butterfly factory, Chennai 6013103. We are suffering in the absence of BSNL Landline and Broadband connections. Repeated visits to BSNL office with application has gone in vain. We are being told that there is no OFC cable and the area is not serviceable. How can residents suffer for lack of telecom infrastructure in Chennai. Your support is required by publishing this plea. regards, Dr. L.R.K. Krishnan PhD lrkkrishnan@gmail.com...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.


» தினமலர் முதல் பக்கம்
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X