Advertisement
    தினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துக்களையும் வாசகர்கள் தெரிவிக்க விரும்பினால் இந்த பகுதியில் தெரிவிக்கலாம். நன்றி.
வாசகர் கருத்து
பக்கம் - 19
Muniyandi V - pondicherry,இந்தியா
2016-04-23 06:18:52 IST
புதுச்சேரி பொதுபணித்துறை பாண்டி விழுப்புரம் சாலையில் பவளகாரன் சாவடியில் உள்ள இந்தியன் வங்கி எதிரே உள்ள சாலையில் பள்ளம் தோண்டிமூடிவிட்டார்கள். ஆனால் அந்த இடத்தில கடந்த 3 நாட்களாக குடிநீர் சாலையில் வீணாவதுடன் சாலையில் விரிசலாகிகொண்டே போகிறது..அதனால் வாகனத்தில் செல்வோர் சறுக்கி விழுந்து விபத்துகுள்ளகிறார்கள் இதனை உடனடியாக சரிசெய்து விபத்தை தவிர்த்து குடிநீர் வீணாவதை தடுப்பதுடன் சாலையை பாதுகாக்க தினமலர் மற்றும் புதுவைஅரசு போர்கால அடிபடையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஆவணம் செய்யவேண்டும் ....
sennkumar - coimbatore,இந்தியா
2016-04-22 17:58:52 IST
தினமலரில் வரும் கனவு இல்லம் மிகவும் பயன் உள்ளது. கனவு இல்லம், முதல் பிரசுரம் இருந்து போன வாரம் வரை சேகரிக்க என்ன வழி முறை கூறவும். மின்னஞ்சல் acshaysen@gmail.com...
Jamal Eha - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2016-04-21 23:23:05 IST
உம்மையோ எம்மையோ தேர்தல் நேரத்தில் மட்டுமே சந்திக்கும் இந்த அம்மை... அவர் மக்கள்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காத மரபொம்மை... தீமை எனத் தெரிந்தும் மக்களை மாய்க்கும் செயல் பெருங்கொடுமை... மக்களை ஏய்க்கும் இந்த அம்மை நோய் அது பெரியம்மை... வாழ்க பாரத தேசம்... வளர்க மனிதகுல நேசம்... இ.ஹ.ஜமால் முகம்மது....
Jamal Eha - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2016-04-17 00:33:55 IST
கடையநல்லூரில் நேற்றைய தேர்தல் பிரசார பரப்புரையின் போது பிரேமலதா விஜயகாந்த் பேசிய பேச்சு, சதாம் ஹூசைனின் அமெரிக்க சர்வாதிகார நிலைப்பாட்டிற்கு அடிபணியாத அவரது வீரத்தை இழிவுப் படுத்தியதோடு மட்டும் அல்லாமல், தமிழகத்தின் இந்நாள் மற்றும் முன்னால் முதல்வர்களை அநாகரிகமான முறையில் சபித்தது என்பது தன்மானமுள்ள தமிழக மக்கள் யாராலும் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று... இது மிகவும் கண்டனத்திற்குரியது... பிரேமலதா தனது பேச்சின் மூலம், தான் புதிதாய் தமிழகத்தை கொள்ளையடிக்க வந்திருக்கும் அரசியல் கொள்ளைக்காரி என்பதை அம்பலப்படுத்தி விட்டார்... அரசியல் கொள்ளைக்காரியே உனக்கு வீரபாண்டிய கட்டபொம்மனின் சரித்திரம் தெரியுமா? தமிழகத்தின் புதிய தரித்திரமான உனக்கு அந்த சரித்திரம் தெரிந்திருந்தால் சதாமின் மரணம் இகழ்ச்சிக்குரியதல்ல புகழ்ச்சிக்குரியது என்று புரிந்து இருக்குமே... தமிழகத்தின் சரித்திரம் தெரியாத தரித்திரமே நாவை அடக்கு... வாழ்க பாரத தேசம்... வளர்க மனிதகுல நேசம்... இ.ஹ.ஜமால் முகம்மது....
Jamal Eha - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2016-04-13 03:22:39 IST
கருணாநிதி தான் மதுக்கடைகளை முதன்முதலில் திறந்தார் என்று அவர்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தும் ஒரு தரப்பினர்... அவர் 1974 ஆம் ஆண்டு அவற்றை மூடிவிட்டு மீண்டும் மதுவிலக்கை அமல் படுத்தியதையும், அதன்பின்பு எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் மதுவிலக்குத் தளர்த்தப்பட்டு மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன என்பதையும் மறைப்பது ஏன்? டாஸ்மாக் மூலம் அரசியல் பாஸ் மார்க்கை இழந்துவிட்ட பாவையின் பாதத்தில் கிடக்கும் அவர்கள் மக்களை எல்லாம் மாக்கள் என்று எண்ணிவிட்டார்கள் போலும்... நீங்களெல்லாம் 227 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தாலும், மக்கள் உங்களை ஏற்கத் தயாரில்லை என்பதை மே 19 இல் உணர்வீர்கள்... கருணாநிதிதான் முதலில் திறந்தார் என்று கூவும் சில கூமுட்டைகளுக்கு, அவர் ஏன் திறந்தார் என்ற சரித்திரம் தெரிந்திருக்குமா? அன்றைய மத்திய அரசு அந்த காலகட்டத்தில் ஒரு செயல்திட்டத்தை நடைமுறைப் படுத்தியது... அதாவது, எந்த ஒரு மாநிலம் மது விலக்கை (புதிதாக) அமல் படுத்துகிறதோ, அந்த மாநிலத்திற்கு திட்ட கமிஷன் ஒதுக்கீடு செய்யும் நிதியோடு அல்லாமல் கூடுதல் நிதியாக ஒரு குறிப்பிட்டத் தொகையையும் (மதுவிலக்கால் இழக்கும் வருமானத்தை ஈடுகட்டும் வகையில்) ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது... அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது... எனவே, முதல்வர் கருணாநிதி அன்றைய பாரத பிரதமர் இந்திரா காந்தியிடம் எங்கள் மாநிலத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருக்கிற காரணத்தால் எங்களுக்கும் அந்த வகையில் வருமான இழப்பு இருக்கிறது என்று கூறி எங்கள் மாநிலத்திற்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்... ஆனால், இந்திரா காந்தியோ, ஏற்கனவே மதுவிலக்கு அமலில் இருக்கும் மாநிலங்களுக்கு இல்லவே இல்லை என்று வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாக அடித்துக் கூறி விட்டார்... தமிழக அரசு நிதிப்பற்றாக் குறையால் கையை பிசைந்துக் கொண்டிருந்த நேரம் அது... முதல்வர் யோசித்தார்... மத்திய அரசு தமிழகத்தை உதாசினப்படுத்திய துக்கம் அவர் தொண்டையை அடைத்தது... மதுவிலக்கு ஏற்கனவே நடைமுறையில் இருப்பதால்தானே நம் மாநிலத்திற்குரிய சலுகை மறுக்கப் படுகிறது என்பது அவர் மனதை வெகுவாக நோகடித்தது...நிதிப் பற்றாக்குறையை சமாளித்தாக வேண்டும்... நம்மை நோகடித்த மத்திய அரசுக்கும் பாடம் புகட்ட வேண்டும்... யோசித்தார்... இறுதியாக தமிழத்தின் நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தார்... அதன்பின்பு தமிழகத்தில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டதாக அறிவிக்கப் பட்டது... இதுதான் கலைஞர் கருணாநிதி அன்று மதுக்கடையை திறந்த நிகழ்வுக்கான வரலாற்றுப் பின்னணி... தமிழகத்தின் சரித்திர நிகழ்வுகளை படித்து அறிந்தவர்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்கும்... வெற்றுக் கோஷமிடும் தரித்திரங்களுக்கெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை... வாழ்க பாரத தேசம்... வளர்க மனிதகுல நேசம்......
Chockalingam - Managiri - Karaikkudi,இந்தியா
2016-04-11 21:04:16 IST
மென்பொருள் பிரச்சினை. தற்பொழுது வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் மென்பொருள் மாற்றப்பட்டதால் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. சமீபத்தில் UIIC நிறுவனத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம். பெயர்களுக்கு மரியாதை நிமித்தம் போடப்படும் Mr./Ms போன்றவை இரண்டு முறை போடப்படுகிறது. இதேபோல் CUB வங்கியிலும் பெயர்களுக்குரிய initials இரண்டுமுறை போடப்படுகிறது. இவை எல்லாவற்றிற்குமே காரணம் மென்பொருள் மாற்றம். தவறைக் குறிப்பிட்டால், உடனடியான பதில் "இது குறித்து கடிதம் கொடுங்கள்". ஏன், இவர்கள் இந்த தவறுகளை தாங்களே கண்டுபிடித்து சரி செய்யக்கூடாதா? இவர்கள் நிறுவனத்தில் நடக்கும் தவறுகளுக்கெல்லாம் வாடிக்கையாளர்கள்தான் நடவடிக்கை எடுக்க கடிதம் கொடுக்க வேணுமா? காரணம் எதுவாக இருந்தாலும் வாடிக்கையாளர்களை அலைக்கழிப்பதே நிறுவனங்களின் வாடிக்கை ஆகிவிட்டது....
Jamal Eha - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2016-04-04 13:23:05 IST
தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு உடன்பாடு. காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம்... (செய்தி) - கலைஞருக்கு ரொம்பவும் தாராள மனசு... அதனால்தான் காங்கிஸுக்கு ஏராள சீட்டு ... நன்றிக் கெட்ட காங்கிரஸோ நாளை (தேர்தலுக்கு பின்பு) தமிழருக்கே வைக்கும் வேட்டு... So, Everything for வோட்டு... தமிழ்நாட்டு நலன் என்பதெல்லாம் வேஷ்ட்டு... தமிழா ஓட்டுச் சாவடியில் உன் முகத்தைக் காட்டு... தமிழர் நலனை நிலைநாட்டு... இ.ஹ.ஜமால் முகம்மது....
Jamal Eha - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2016-04-03 02:15:12 IST
தி.மு.க. தரப்பிடம் அதிக தொகுதிகள் கேட்டு அடம்பிடிக்கும் காங்கிரஸ் மேலிடம்... (செய்தி) - தமிழகத்தைப் பொருத்தவரையில், காங்கிரஸ் கட்சியில் தலைவர்களின் எண்ணிக்கை அதிகம்... ஆனால், அந்தக் கட்சியில் தொண்டர்களை வலைவீசிதான் தேட வேண்டி இருக்கும்... (சில பகுதிகளில் மட்டும் சில தலைவர்களின் தனி மனித செல்வாக்கின் காரணத்தால் அந்த பகுதிகளில் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை) அந்தக் கட்சியின் பலம் என்ன என்பது கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபொழுது வெட்ட வெளிச்சமானது... அதன்பின்பு (த.மா.க. பிரிந்து) கட்சியும் பிளவுப்பட்டு இன்னும் சுறுங்கிவிட்டது... காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர்களுக்கு இதெல்லாம் தெரியுமா? தெரியாதா? தி.மு.க. தரப்பில் கொடுப்பதாக கூறப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை என்பது கூட எனக்கு அதிகம் என்றே தோன்றுகிறது... அம்மையார் அணியில் சேர்ந்தால் அவர்களால் இந்த எண்ணிக்கையை எண்ணிப் பார்க்க கூட முடியாது... காணம், அம்மையார் 'வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு' என்று பேசக் கூடியவர்... காங்கிரஸுக்கு இஷ்டம் இல்லாது போனால் நஷ்டம் யாருக்கு? பேராசை பெருநஷ்டம்... அது காங்கிஸுக்கே ரொம்ப கஷ்டம்... வாழ்க பாரத தேசம்... வளர்க மனிதகுல நேசம்......
Jamal Eha - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2016-04-02 22:20:14 IST
1989 முதல் தமிழகத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் தமிழக மக்களுடைய எண்ண ஓட்டம் மாறிக் கொண்டே இருக்கிறது... அந்த மாற்றத்திற்கு தேர்தல் நேர சூழ்நிலை மற்றும் கூட்டணி போன்றவையும் காரணமாக அமைகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது... 1952 - 1967 காலகட்டத்தில் மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சி செய்ய வைத்து அழகு பார்த்தார்கள்... 1967 முதல் திராவிடக் கட்சியான தி.மு.க. பக்கம் திரும்பினார்கள்... அது 1976 வரை நீடித்தது... 1977 - ல் மற்றொரு திராவிடக் கட்சியான (தி.மு.க.வில் இருந்து பிரிந்த) அ.தி.மு.க. வை ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்தார்கள்... அது 1988 வரை தொடர்ந்தது... 1989 - ல் மீண்டும் தி.மு.க. வை அரியணையில் ஏற்றினார்கள்... அதன்பின்பு... 1991 - ல் அ.தி.மு.க. 1996 - ல் தி.மு.க. 2001 - ல் அ.தி.மு.க. 2006 - ல் தி.மு.க. 2011 - ல் அ.தி.மு.க. இப்படி மாற்றி மாற்றி கேரள அரசியல் பாணியில் தோசையை திருப்பிப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்... 1989 க்கு முன்பெல்லாம் அரசியல் ஆப்பம் சுட்ட தமிழக மக்கள்... 1989 லிருந்து தோசை சுட ஆரம்பித்து விட்டார்கள்... 2016 தேர்தலில் ஆப்பமா? அல்லது தோசையா? மே 19 ந்தேதி விடை தெரியும்......
Jamal Eha - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2016-03-28 02:48:54 IST
தி.மு.க. மற்றும் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுக்கு மேல் குற்றச்சாட்டாக கூறிக்கொண்டிருக்கும் வைகோ, தன்மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் பதில் கூற மறுப்பது ஏன்? வைகோ ஒருக்கிணைத்து இருக்கும் அணி 'அ.தி.மு.க. B அணி' என்றும், ரூ1500 கோடிகள் கைமாறு பெற்றிருப்பதாகவும் சில ஊடகங்கள் வாயிலாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் மெய்யோ அல்லது பொய்யோ யாமறியோம்... தி.மு.க. சார்பில் தே.மு.தி.க. விற்கு ரூ500 கோடிகள் ( மற்றும் 80 தொகுதிகள் ) தருவதாக பேரம் பேசியதாக கூறிய வைகோ... அதற்கு ஆதாரமாக ஊடகங்களை சுட்டிக் காண்பித்தார்... (பிரேமலதா தி.மு.க.வுடன் பேரம் பேசவில்லை என்று மறுத்துரைத்தார் என்பது வேறு விஷயம்) ஆனால், அதே ஊடகங்கள் அவர் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் பதில்கூட கூறாமல் எழுந்து ஓடுகிறார்... இதுதான் அவரின் அரசியல் நாகரீகமா? பிறர்மீது எழும் குற்றச்சாட்டுக்கள் மெய்... ஆனால், தன்மீது எழும் குற்றச்சாட்டுக்கள் மட்டும் பொய்... இது என்ன நீதி? 'மாமியார் உடைத்தால் மண்சட்டி' 'மருமகள் உடைத்தால் பொன்சட்டி' என்பதுதான் வைகோ தரப்பின் நியாயமோ?...
Rajendran P - madurai,இந்தியா
2016-03-25 15:21:07 IST
மக்கள் நல கூட்டணி உருவாகி உள்ளது அம்மாவின் மாபெரும் வெற்றிக்கு அருமையான சந்தர்ப்பம்எதிரணி நோந்துநூலகிகொண்டுள்ளது...
Vasanth - Chennai,இந்தியா
2016-03-24 01:10:11 IST
நான் பல மாதங்களுக்கு முன்பு சென்னை தி. நகரிலுள்ள ரங்கநாதன் தெரு வழியாக தினமும் அலுவலகம் செல்வேன். அங்கு சவுத் உஸ்மான் சாலையிலிருந்து, போலீஸ் குவார்டர்ஸ் ரோடு நுழையும் வழியில் நான்கு முனை சந்திப்பு உள்ளது. அருகே பேக்கரி, டீஸ்டால், இன்னும் பிற கடைகள் உள்ளன. அங்கு இடது புற சந்திப்பில் சற்று பெரிய மாநகர குப்பை தொட்டிகள் உள்ளன. அங்கு செல்லும் போதே எப்பொழுதும் நாற்றம் அடித்துக்கொண்டே இருக்கும். அதன் பின் பகுதியில் ஆட்டோக்களும் நிற்கும். அங்கு சிறுநீர் கழித்து மேலும் நாற்றமடிக்க வைக்கின்றனர். இதில், இவர்களை தடுக்க நடவடிக்கை ஏதும் செய்யாமல் அங்கே வரிசையாக பெரிய வண்ண சாமி படங்களை வைத்திருந்தனர். இதில் இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவர் சாமி படங்கள் சிலவும், இந்து சாமி படங்கள் அதிகமாகவும் நெடுகவும் வைத்திருந்தனர். சமீபத்தில், அந்த சாலை வழியாக மீண்டும் செல்ல நேரிட்டது. அப்போது பகல் 11 மணி இருக்கும். சாமி படங்கள் வைத்திருந்த இடம் குப்பையாகவும், நாற்றமடித்தும் இருந்தது. ஒரு படத்தின் மேல் எவனோ ஒருவன் சிறுநீர் கழித்து ஈரம் கூட காயாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றேன். தெருவில் பலர் நடமாடும் இடத்தில் சிறுநீர் கழிப்பவர்கள் சமூகத்தை பற்றிய சித்தனை இல்லாதவர்கள். இவர்களுக்கு சுவரும் ஒன்றுதான் அங்கு எந்தப்படம் இருந்தாலும் ஒன்றுதான். தண்டிக்க வேண்டியது இவர்களைத்தான். ஆனால், இவர்களை விட இதைபோன்ற இடங்களில் சாமி படங்களை வைப்பவர்களைத்தான் முதலில் தண்டிக்க வேண்டும். தவிரவும், அங்கிருந்த இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவர் சாமி படங்களை ஏற்கனேவே அகற்றிவிட்டனர். அவர்களிடம் உள்ள பற்றும் அக்கறையும் இந்துகளிடம் இல்லை. உண்மையில் அவர்கள் அந்தப்பற்றினால்தான் உடனே தங்கள் மத படங்களை அகற்றிவிட்டனர். இந்த பற்று இந்துக்களுக்கும் வேண்டும். இவ்வாறு மனிதர்களால் மாசு படும் இடங்களில் சாமி படங்களை வைப்பது தமிழகத்தில் பல இடங்களில் பார்க்கலாம். படம் வைப்பவர்களே, அங்கு வந்து அசுத்தம் செய்பவர்கள் குடி போதையில் உள்ளவர்களோ, இறை நம்பிக்கை இல்லாதவர்களோதான். எனவே தயவுசெய்து இப்படிப்பட்ட இடங்களில் எந்த மதத்தினர் சாமி படங்களையும் வைத்து எங்களைப்போன்ற பக்தர்களின் நெஞ்சங்களை காயப்படுத்தாதீர்கள்....
Chockalingam - Managiri - Karaikkudi,இந்தியா
2016-03-03 19:22:09 IST
ஆதார் அட்டை எங்கள் பகுதியில் 2012ம் ஆண்டே ஆதாருக்காக பதிவு செய்யப்பட்டு, அந்த ஆண்டே ஆதார் அட்டையும் கிடைக்க பெற்றோம். அப்போழுது கொடுக்கப்பட்ட அட்டைகளில் எல்லாம் பிறந்த தேதிக்குப் பதிலாக பிறந்த வருடம் மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, ஆதார் ஒரு அடையாள சின்னமாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். சமீபத்தில் ஒரு வங்கியில் ஆதார் அட்டையை அடையாளத்திற்காக காண்பித்த போது அந்த வங்கியிலுள்ள அதிகாரி என்ன அய்யா உங்கள் அட்டையில் பிறந்த தேதியே குறிப்பிடப்படவில்லை என்று கூறினார். பின்னர் அவருடைய அட்டையையும் காண்பித்தார். அதில் தெளிவாக பிறந்த தேதி குறிப்படப் பட்டிருந்தது. ஏன் இந்த வேறுபாடு. இது குறித்து UIDAI அலுவலகத்தை மின்னஞ்சல் மூலம் அணுகியபோது, அவர்களும் மேற்கண்ட வேறுபாட்டை சுட்டிக் காட்டியதற்கு நன்றி, மேலும் நான் என்னுடைய ஆதார் அட்டையை தகுந்த ஆதாரத்துடன் அப்டேட் செய்யுமாறு தெரிவித்தனர். ஏற்கனவே 2012ல் பதிவு செய்தபோது பிறந்த தேதியை ஆதாரத்துடன் கொடுத்திருந்தும், அவர்களுடைய தவறுக்கு மீண்டும் எங்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயம். மேலும், அவர்கள் கொடுத்த ஒப்புகை சீட்டீல் பிறந்த தேதியை verify செய்ததாக வேறு குறிப்பிட்டுள்ளார்கள்....
Ramakrishnan - Madurai,இந்தியா
2016-03-02 18:51:25 IST
நான் கடந்த 23ம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டருக்கு புக் செய்தேன். 29ம் தேதி காலை 10:30 மணி அளவில் என்னுடைய புக்கிங் ஸ்டேட்டஸ் பற்றி கேட்ட போது, பிப்ரவரி 9ம் தேதி வரை டெலிவரி ஆகியிருப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால் 29ம் தேதி 11 மணி அளவில் சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டது. பின்னர் மார்ச் 2ம் தேதி 09:24 மணிக்கு என்னுடைய மான்யத் தொகை பாங்க் கணக்கில் செலுத்தப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது. தொடர்ந்து 09:25க்கு என்னுடைய சிலிண்டருக்கான கேஷ் மெமோ எடுக்கப்பட்டுவிட்டதாகவும் விரைவில் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் என்றும் எஸ்எம்எஸ். வந்தது. 09:26க்கு சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டு விட்டதாக எஸ்எம்எஸ் வந்தது. 09:55க்கு மான்யத் தொகை செலுத்தப்பட்டு விட்டதாக மீண்டும் ஒருஎஸ்எம்எஸ் வந்தது. இ–நிர்வாகம் என்று மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் ஏன் இந்த குழப்பம்?...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-02-24 06:21:46 IST
இன்று பிறந்த நாள் காணும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மக்களின் சார்பில் ,வாகர்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....
Ramaswamy Sundaram - madurai,இந்தியா
2016-02-21 12:09:22 IST
கும்பாபிஷேகம் நடந்து முடிந்த ராமேஸ்வரம் கோவிலுக்கு நண்பர்கர்களோடு போனேன். வழக்கம் போல எல்லா விதமான கஷ்டங்களையும் எதிர்பார்த்துதான் போனோம். ஊருக்குள் போதும் முன்பே பாம்பன் பாலத்துக்கு என்று ரூபாய் 30 வசூல் செய்தார்கள். ரசீது என்ன ரூபம் என்று ஆராய்ச்சி செய்யும் முன்பே ராமேஸ்வரம் ஊருக்குள் செல்ல ரூபாய் 100 காருக்கு வசூல் செய்தார்கள். இன்னும் உள்ளே போனதும் கார் பார்கிங் செய்ய குறிப்பிட்ட இடத்துக்கு செல்லும்படி ஒரு வித கட்டாயத்துக்கு உள்ளாக்கி ரூபாய் 20 (இரண்டு 10 ரூபாய் டிக்கெட்கள்) வசூல். கோவிலுக்கு உள்ளே சிறப்பு தரிசன கவுன்ட்டர் மூடியிருக்க அதே அமௌண்டுகு உள்ளே கூடி செல்ல ஆட்கள் தயார். வேண்டாம் என்று தர்ம தரிசன வரிசையில் நின்று முன்னேற சுவாமியின் முன்னாள் நின்று (அரசு ஊழியராம்) எங்களை சுவாமிய பார்க்க விடாமல் மறைத்து நின்று ஏதோ யாரிடமோ வாக்கு வாதம் செய்து கொண்டே இருந்தார். இதனிடையில் இன்னொரு நபர் திரை போட போகிறார்கள் சீக்கிரம் பொங்கல் என்று ஆட்களை கையால் இழுத்து விட பக்தர்கள் டென்ஷன் ஆகி விட்டார்கள். ஆயிரகணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து வந்து சுவாமிய தரிசனம் பண்ண விடாமல் இப்படி பண்ணுகிறீர்களே என்று கேட்டதற்கு உன் வேலை என்னவோ அதை பார்த்து போய்யா என்று ஒருமையில் திட்ட மனசு கஷ்ட பட்டு பக்தர்கள் நொந்து வெளியேறினர். இதுதான் கோவில்களில் நடந்து கொள்ளும் முறையா. அரசு இப்படித்தான் நடந்து கொள்ள இவர்களுக்கு அறிவிப்பு கொடுத்துள்ளதா. ஆடை கட்டுப்பாடு எல்லாம் பற்றி கவலை கொள்ளும் நீதி துறை இவர்களின் அத்து மீறல்களை ஏன் கண்டு கொள்ள வில்லை. அப்பாவி ஜனங்களின் உணர்வுகளை எப்போதுதான் இவர்கள் புரிந்து கொள்வார்களோ....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-02-18 13:11:18 IST
அரியலூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையும்,அரியலூர் மற்றும் தஞ்சை செல்லும் சாலையும் பல இடங்களில் குண்டும் குழியுமாக இருப்பது குறிப்பாக பல இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எமனாகி வருகிறது. பல்லாங்குழி சாலைகளில் பல வாகனங்கள் விபத்து இன்றி பாதுகாப்பாக செல்வது இமாலயச் சாதனையாகவே கருதப்படுகிறது .அரியலூர் மாவட்டச் சாலைகளுக்கு விமோசனம் எப்போது கிடைக்கும் ???.அதுதான் மக்களுக்குத் தெரியவில்லை....
Ramesh RK - Theni,இந்தியா
2016-02-18 12:01:51 IST
அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நிர்வாகம் அமையவும், லஞ்சம் மற்றும் சிபாரிசின் பேரில் திறமை அற்றவர்களை பணியமர்த்தாமலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்க உத்தரவிட கோரியும், லஞ்சம் வாங்குபவர்கள், பணம் லஞ்சமாக கொடுத்து வேலைக்கு சேர்ந்தவரகள், மற்றும் திறமை அற்றவர்களை பணிநீக்கவும், இல்லை என்றால்அனைத்து அரசு மற்றும் கல்வி துறைகளையும் தனியாரிடம் ஒப்படைக்கவும் என்று மக்களுக்கு நன்மை தரகூடிய பல நல்ல கோரிக்கைகளை வலியுறுத்தி மிகவும் ஏழை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீவிர போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். மேலும் அரசு வருவாயில் 90% அரசு ஊழியர்கள் சம்பளத்திற்கே அரசு செலவழிப்பதால் அரசு கடனில் தத்தளிப்பதால் தங்களுக்கு 50% சம்பளம் குறைக்க கோரிக்கை வைத்து உள்ளார்கள். அவர்கள் போராட்டம் வெற்றி பெற பொது மக்கள் ஆகிய நாம் ஆதரவு அளிப்போமாக....
Chockalingam - Managiri - Karaikkudi,இந்தியா
2016-01-24 11:58:41 IST
சென்ற வாரம் தினமலர் இணையதளத்தில் PACL குறித்து ஒரு செய்தி வந்தது. இந்த நிறுவனத்தின் சுமார் 40,000 கோடி ரூபாய் மோசடி குறித்து வடஇந்திய பத்தரிகைகளில் செய்திகள் வருகின்றனவே தவிர, நம் பகுதிகளில் வருவதில்லை. தினமலர் இந்த நிறுவனத்தின் மோசடி குறித்து ஆதியோடந்தமாக, தற்சமய நிலவரங்கள் வரை ஒரு விரிவான செய்தி வெளியிட்டால் இப்பகுதியனருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....
sri.m - chennai,இந்தியா
2016-01-22 12:42:28 IST
மிகவும் பாராட்ட, போற்ற வேண்டிய உள்ளம்மிக்கவர்...
Nrk Dasan - CHENNAI,இந்தியா
2016-01-13 15:21:30 IST
அரசுக்கும் கல்வியாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள், எந்த மொழி வழி கல்வியாக இருந்தாலும், அந்த மொழியை முற்றிலும் எழுத படிக்க பேச கற்று தந்த பின்புதான் மற்ற பாடங்களை கற்று தரவேண்டும், இதனை விரைவாக சட்டமாக்கி அமல்படுத்த வேண்டும்....
SPR SANKAR - CHENNAI,இந்தியா
2016-01-13 08:48:34 IST
I think the SC judgment on Sabarimalai temple is a typical example of Judicial overreach. How can the SC arrogate to itself to change age-old , centuries old customs prevailing in a temple? Tomorrow, somebody may enter the temple with shoes and claim it as his fundamental right Another guy may smoke inside the temple. Shud not the SC respect the sanctity and rituals of temples? Religious customs and rituals are being followed by the faithful without questioning. This is valid for other religions also. The Hindu majority India is a unique country where the Govt and the Courts tamper with the affairs of temples only and safely refrain from commenting on the practices in Churches and Mosques. The other two religions are highly doctrinaire and will not allow the slightest deviation from their existing practices. What is the need for HR&CE dept, by which Govt controls the Hindu temples? Is this Secularism? It is exactly the opposite of the meaning of Secularism which is defined as the policy of the State refraining from Religions. It is also an undeniable fact that the Govt will not dare to poke it's nose into the affairs of other two religions, knowing fully that the consequences will be disastrous One can't forget an incident in Kerala. When the Communists were ruling the State, the Govt reconstituted the Devaswam Board by nominating two CPM Members, who are nonbelievers and confirmed Atheists, to the Dewaswam Board Instead of being mute spectators, Hindus have to voice their protest unitedly against all authoritarian Diktats of the Courts and the Governments in the temple rituals and practices which can't be subjected to "secular scrutiny" and compliance with flippant, imprudent and injudicious Orders. It will be still better if girls and women voluntarily refrain from breaching the temple customs which are being followed since time immemorial. - SPR SANKAR...
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
2016-01-13 08:16:50 IST
நம் நாடு கலாசாரம் எல்லோருடைய நன்மைக்காகவே உருவாக்கப்பட்டது.இது நாள் வரை காத அதை இப்போது காற்றில் பறக்க விடவேண்டியதில்லை. உள்ளாடைகளை மட்டும் அணிந்து திருமணத்திற்கு போகலாமே வீட்டிலும் அரைகுறை ஆடைகளை அணியலாமே கோவில் தானா கிடைத்தது?மதம் என்பதே மனிதனை வழிப்படுத்ததான். இனி எல்லாமே சீரழிவுக்குதான் போலும்...
Nagendran - Chennai,இந்தியா
2016-01-13 07:25:25 IST
சல்லிக்கட்டும் உலக அரசியலும் : இந்த பதிவு சற்றே பெரிதாக இருக்கும், ஆனால் இதன் முடிவில் தமிழர்கள் சந்திக்கப்போகும் பேராபத்தினை நிச்சயம் உணர்வீர்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை உணவான பால் இரண்டு வகைப்படும் (2 types of protein) இவை A1 மற்றும் A2 என்று வகையருக்கப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து பாலூட்டிகளும் இயற்கையாக A2 வகை பாலையே சுரக்கின்றன. மனிதனின் தாய்பாலும் இந்த A2 வகை பால் தான். இயற்கையாக A2 வகை பாலை தான் மனிதர்களால் செரிக்க இயலும். ஆகவே நம் முன்னோர்கள் இதே வகை பாலை சுரக்கும் நமது பசுவினங்களின் பாலை நம் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் பால் வியாபாரம் வர்த்தக மயமாக்கப்பட்டதற்கு பிறகு ஐரோபாவில் அதிகமாக பால் கறக்கும் மாடுகளை மட்டுமே தேர்வு செய்து அவற்றை மட்டுமே இனப் பெருக்கம் செய்ய அனுமதித்தனர் (ive breeding)  இவ்வாறு செய்தமையால் இவ்வகை மாடுகளில் மரபணு மாற்றம் ஏற்ப்பட்டது(mutation).  இதன் விளைவாக A1 என்ற பால் வகை உருவானது. சுவையற்ற இப்பால் உடலுக்கு தீங்கு செய்யக்கூடியது. சக்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு இந்த A1 வகை பாலும் ஒரு முக்கிய காரணமாகும். குழந்தைகளுக்கு இந்த A1 வகை பாலை செரிக்கும் ஆற்றல் இல்லை. இப்பால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்க செய்யும். சரி, இது இந்த அளவுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்க கூடியது என்று நினைத்தால், இப்பாலை உற்பத்தி செய்யும்முறை இதைவிட கொடூரமான தீங்குகளை ஏற்ப்படுதக்கூடியது. அதாவது ஒரு மாடு பால் சுரக்க வேண்டுமென்றால் அது கன்று ஈன்று இருக்க வேண்டும். அந்த கன்றைப் பார்க்கும்போது தாய்மாட்டுக்கு இயக்குநீர்(hormone) சுரந்து அது பாலை சுரக்க தூண்டும். ஆனால் இது பல மாடுகள் இருக்கும் பண்ணையில் சாத்தியமில்லை. ஆகையால் மாட்டுப் பண்ணையாளர்கள் செயற்கையாக இயக்குநீர்களை மாட்டின் உடம்பில் ஊசியின் மூலமாக செலுத்தி பால் சுரக்க வைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் மாட்டின் பாலிலும் இந்த இயக்குநீர்களின்(hormone) அளவு அதிகமாக இருக்கிறது. இந்த இயக்குநீரின் பெயர் ஈத்திரோசன் (Estrogen). இது பெண்ணிய இயல்பை தூண்டும் இயக்குநீராகும். இந்த ஈத்திரோசன் (Estrogen) கலந்த A1 பாலை உண்ணும் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள், மற்றும் தமிழர்கள் போற்றிக் காக்கும் கற்ப்பொழுக்கத்தையும் கெடுக்கும் விதமாக பிற பாலின ஈர்ப்பு தூண்டலை இயல்பு நிலையிலிருந்து அதிகப்படுத்தும் அதுமட்டுமின்றி ஆண் குழந்தைகளுக்கு சோம்பேரித்தனத்தையும், பாலின சம நிலை மாற்றத்தையும் (திருநங்கைகளாக மாறுதல்) ஏற்ப்படுத்தும். இது ஒரு சமுதாய பிரச்சனையே தூண்டிவிடும் அளவிற்கு கொடியது. தமிழகத்திலுள்ள அனைத்து நாட்டு மாட்டினங்களும் A2 பாலை சுரக்கக்கூடியது. இவைகள் பாலை கம்மியாக சுரந்தாலும் அது உடலுக்கு எந்த வித தீங்கையும் உண்டாக்குவதில்லை. மனிதர்களுக்கு உகந்த பாலும் இந்த A2 பாலே. சரி, சல்லிக்கட்டுக்கும் உலக அரசியலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்க்கிறீர்களா? கொஞ்சம் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் தமிழகத்திலுள்ள நாட்டு மாட்டினங்களின் சாணத்தில் இருந்து பெறப்படும் பொருட்களின் மூலத்திலிருந்தே இயற்க்கை விவசாயம் (natural farming) செய்ய பயன்படும் பூச்சுக்கொல்லி, உரம், பஞ்சகாவியா, போன்ற விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் செய்ய முடியும். இது சர்சி(jersey) வகை மாடுகளின் சாணத்திலிருந்து செய்தாலும் பயன்தராது. ஆகவே மோன்சண்டோ (Monsanto) போன்ற பெரிய நிறுவனங்கள் இயற்க்கை விவசாயத்தை செய்ய உதவும் மாட்டினங்ககளை அழிப்பதற்காக இந்தியா முழுவதும் வெண்மை புரட்சி என்ற திட்டத்தை செயல்படுத்தி கிராம கிராமங்களாக சென்று சர்சி(jersey) மாடுகளை வினியோகித்தனர். இது படிப்படியாக இந்தியா முழுவதும் இருந்த நாட்டு மாடுகளை அழித்தே விட்டது. நமது கிராம மக்களுக்கு கூட நாட்டு மாட்டுக்கும் சர்சி மாட்டுக்கும் வித்யாசம் தெரியாமல் போய்விட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏறு தழுவுதல் (சல்லிக்கட்டு) என்ற வீர விளையாட்டு இருந்தமையால் நமது ஆண் மாடுகள் காப்பாற்றப் பட்டு வந்தது. ஆண் மாடுகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பெண் மாடுகள் சேர்ந்தே காப்பாற்றப்பட்டு வந்தது. இது ஆரம்பத்தில் மோன்சண்டோ போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ஒரு தடையாக இல்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் வரும் இயற்க்கை வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு அவர்களை கதிகலங்க செய்துவிட்டது. இந்தியா முழுவதும் காணாமல் போன நாட்டு மாடுகள் தமிழகத்தில் மட்டும் மிஞ்சி இருப்பது எப்படி என்று அவர்கள் தேடியபோதுதான் தமிழகத்தில் மட்டுமே உள்ள தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) நாட்டு மாட்டினங்களை வளர்ப்பதை ஒரு கடமையாகவே கொண்டுள்ளனர் என்பது புலப்பட்டது. இதை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக தான் சல்லிகட்டிற்கு தடை செய்ய முயற்சி செய்கின்றனர். தமிழர்களே ஏறு தழுவுதல் என்பது நமது இனத்தின் இறையாண்மை சார்ந்தது. இது கிட்டத்தட்ட ஒரு மதம் போன்றது. ஏனெனில் மாட்டை பிடிக்கும் வீரர்கள் விரதமிருந்து அம்மாட்டினை பிடிக்கிறார்கள். ஆகவே இது ஒரு சமயம் சார்ந்த நம்பிக்கையாகவே நம் மக்களால் கருதப்படுகிறது. இதை மாற்றும் அதிகாரம் இந்தியாவிற்கே இல்லை. ஆகவே, நமது அடையாளமான எதையும் இனி இழக்க வேண்டாம். அறிவுசார் தளத்தில் ஒன்றாக நின்று நம்மினத்தை காப்போம்....
SPR SANKAR - CHENNAI,இந்தியா
2016-01-12 07:30:01 IST
Smriti Irani speech is wonderful. The Khngrs is the main.culprit in abusing and vilifying Iranian. They conveniently forget the fact that their honourable President can't even speak for five minutes without the help of a Madam Sonia who lied about her educational qualification was exposed by Swami, who revealed that Sonia has studied only up to 5th standard Madam accepted Swami's statement and ly apologized. The son Rahul is also equally dull. The Times Now interview was a roaring joke. The Social media lampooned him for his comical interview. Again, he became a laughing stock when he wrote a simple condolence msg in the Visitors book by looking at his mobile phone where he had already ed it with the help of his ghostwriter Swami rightly called him a "joker" These are the credentials of the Mother and Son who are heading a National Party. It is absolutely shameful. But Khngrs has gone beyond any sense of shame or remorse. It has bcm shameproof Is the Khngrs competent to talk about Smriti Irani who has proved her debating ss in the Parliament and elsewhere. She is as good an orator as Modi or Vajpayee. I have enjoyed all her speeches and interviews in YouTube. Known for her immaculate presence of mind and witty or barbed repartees every interviewer will be flummoxed by Irani's counter attacks Such is her power of diction and eloquence Even IITs and IIMs are inviting her as Chief guest to address them. The real truth is that both the Mother and son as well.as their.Party are jealous of.Smriti Irani for her innate capabilities Nothing but jealousy Irani is a real asset to the Parliament as well as the BJP. This is the unpala truth which many can't digest - SPR SANKAR...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.


» தினமலர் முதல் பக்கம்
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X