Advertisement
    தினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துக்களையும் வாசகர்கள் தெரிவிக்க விரும்பினால் இந்த பகுதியில் தெரிவிக்கலாம். நன்றி.
வாசகர் கருத்து
பக்கம் - 2
B Srinivasan - trichy,இந்தியா
2018-07-23 05:37:42 IST
திருச்சி மத்திய பேருந்து நிறுத்தத்தில் நடக்கும் அநியாயங்களை கேட்பாரில்லையா ? தள்ளுவண்டி மற்றும் சைக்கிளை வைத்துக்கொண்டு நுற்றுக்கணக்கானப்பேர் பழம் விற்கிறார்கள் கூழ் விற்கிறார்கள் ஆம்னி பேருந்துகள் அட்டகாசம் வேறு ....பொது மக்கள் பாதுகாப்பாக நடந்து உளளே செல்ல முடியவில்லை இதே போலத்தான் தெப்பக்குளம் பகுதியும் முழு ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கிறது மக்கள் நாடு ரோட்டில் தான் நடக்கமுடியும் . திருச்சி பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாம், திருடர்களுக்கும் , ஜேப்படி திருடர்களுக்கும், ஆக்ரமிப்புகாரர்களுக்கும் பொறுக்கிகளுக்கும் ஆன இடமாகியுள்ளது ......மத்திய பேரூந்துநிலையம் மற்றும் தெப்பக்குளம் பகுதிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது அக்கிரமிப்புக்காரர்களின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை ....கேட்க ஆளில்லை ..... போலிஸும் கார்பரேஷனும் ஏதும் செய்வதாக தெரியவில்லை .....இந்த நிலை மாறவேண்டும் மறுபடி சுரண்சிங் வரவேண்டும்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-07-05 16:43:52 IST
மதுரை மாநகராட்சி ஆணையாளர் அனீஸ் சேகர்.ஓய்வு பெற்ற 3-வது நாளில் 73 பணியாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.4.49 கோடி மதிப்பிலான பணப்பலன்களை வழங்கி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். அரசு துறைகளில் பணி ஓய்வு பெறும் பணியாளர்கள், தங்களுடைய பணப் பலன்களை பெறுவதற்கு பெரும் வாழ்நாள் போராட்டத்தையே சந்திக்க வேண்டியது வரும். அதுவும், முக்கிய வருவாய் தரக்கூடிய, அதிகளவு நிதியை கையாளக்கூடிய துறைகளில் ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு பண பலன்கள் கிடைப்பது இன்னமும் சிரமம். ஆனால் மூன்றே நாட்களில் ஓய்வுகால பலன்களுக்குரிய காசோலைகளையும், பணி நிறைவு சான்றிதழ்களையும் மாநகராட்சி ஆணையாளர் அனீஸ் சேகர் வழங்கி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும் நமது வாழ்த்துக்களை உரித்தாக்குவோம்....
R Sridhar - Chennai,இந்தியா
2018-07-01 12:43:57 IST
சிலை திருட்டு தடுப்பு துறை ஐ ஜி திரு பொன் மாணிக்கவேல் அவர்கள் ஆற்றி வரும் கடமைக்கு கைம்மாறு என்பது சிந்திக்க கூட முடியாது. தலையல்லால் கைம்மாறிலேனே என்பதை தவிர வேறு இல்லை. கடந்த ஐம்பது வருடங்களாக அரசியல்வாதிகளும், இந்து அறநிலைய துறையை சேர்ந்து அரசாங்க அலுவலர்களும் நமது வழிபாட்டு தலங்களை சீரழித்து வருவது மட்டுமில்லாமல், சிலை திருட்டு, கோயில் ஆபரணங்கள் திருட்டு போன்றவற்றை கண்டும் காணாமலும் இருந்து வந்தனர். கோவில் சொத்துகள் சரிவர பராமரிக்க படாமல் பகல் கொள்ளை அடிக்கப்பட்டு வருகின்றன. இந்த கால கட்டத்தில் நேர்மையாக, தைரியமாக திரு பொன்மாணிக்கவேல் அவர்கள் எந்த அரசியல் உருட்டல் மிரட்டல்களுக்கும் பயப்படாமல் தனது கடமையை செவ்வனே ஆற்றி கொண்டிருக்கிறார். இவர் நேர்மையாக வேலை செய்வது பொறுக்காமல் இவரை ரயில்வே துறைக்கு மாற்றினார். நீதிமன்றித்தின் தீர்ப்பால் இவருக்கு மீண்டும் சிலை திருட்டு தடுப்பு துறை கூடுதலாக தரப்பட்டது. அரசாங்கத்தால் இவருக்கு எண்ணற்ற இடைஞ்சல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆய்வு அறிக்கையை முடிப்பதற்குள் அதை பற்றி தகவல் கேட்டு வற்புறுத்தல் (சம்பந்தப்பட்ட திருடர்களை உடனே காப்பாற்றும் எண்ணமோ ??), அவரது துறையில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகளை இடம் மாற்றுதல் (சமீபத்தில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கில் சில முக்கிய புள்ளிகள் சிக்கலாம் என்பதனாலோ என்னவோ அந்த திருட்டை விசாரணை செய்த டி எஸ் பி ஆய்வு முடிக்கும் -15 நாட்களில் முடிவடைந்து விடும் - தருவாயில் இடம் மாற்றப்பட்டார்) போன்ற பணி இடையூறுகள் இருந்தும் தடைகளை உடைத்தெறிந்து கடமையை ஆற்றி கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த சிலை திருட்டை பிடிக்க உதவிய ஒருவருக்கு தனது சொந்த வருமானத்திலிருந்து 10000 ரூபாய் வழங்கினார். எப்பாடுபட்டாவது தனது கடமையை செவ்வனே ஆற்ற எண்ணம் கொண்டவர் என்பதை தெள்ளத்தெளிவாக காண்பிக்கின்றது. (இது தொடர்பாக வேண்டுகோள் திரு பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு - நீங்கள் ஒரு அறக்கட்டளை மாதிரி தொடங்கினால் தங்களது இந்த உயரிய சேவைக்கு பலரும் உதவ முன் வருவர்.) இவரின் செயல் திறத்தால் திருடு போன எண்ணற்ற சிலைகள் மீட்கப்பட்டன. திருட்டு கும்பல்கள் பிடிபட்டு வருகின்றன. இவரது நடவடிக்கைகளால் ஊழலில் ஊறிப்போயிருக்கும் சில துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் நிச்சயம் சிக்குவர். திரு பொன் மாணிக்கவேல் நமது சனாதன தர்மத்தின் காவலராக திகழ்கிறார். நமது முன்னோர்களின் கலாச்சாரத்தையும், கலைத்திறனையும் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகவும், நமது சமுதாய மேம்பாட்டின் அரண்களாகவும் இருக்கும் கோயில்கள் இவரால் நிச்சயம் புது பொலிவு அடையும் என்பதில் சந்தேகமில்லை. இவர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் பணியிலிருந்து ஓய்வடைய இருக்கிறார் என்பது கவலை அளிக்கிறது. நமது நீதிமன்றம் இதில் மீண்டும் தலையிட்டு இவரது பணியின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி இவரது பணிக்காலத்தை குறைந்த பட்சமாக 2 ஆண்டுகளாவது நீட்டித்தால் மேலும் பல சிலைகள் இவரால் மீட்கப்படும், குற்றம் புரிவோரும் கைதாவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவரின் தொண்டை கவுரவிக்கும் விதமாக எல்லாக் கோயில்களிலும் இவருக்கு முதல் மரியாதை (தீர்த்த மரியாதை போன்றவை) வழங்கினாலும் இவரது தொண்டிற்கு ஈடாகாது....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-06-28 20:18:06 IST
கல்விக்கு கடன் வாங்க தகுதி இல்லாதவர்களுக்கு கல்விக்கடன் மறுக்கலாம் என செய்திகள் கூறுகின்றன.சரிதான்-கடன் வாங்கிக்கொண்டு திரும்ப செலுத்தாமல் தலைமறைவாகிறவர்களுக்கு அவர்களது அரசியல் செல்வாக்கை வைத்துக்கொண்டு எத்தனை ஆயிரம் கோடி வேண்டுமானாலும் தரலாம்-அத்தகையவர்கள் தகுதியுடையவர்கள் அவர்களும் மீடியாவுக்கு அழகிகளுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.அவசியமான கல்விக்கு கடன் இல்லை தலைமறைவாகிறவர்களுக்கு கட்டாயம் கடன் உண்டு ....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-06-28 18:06:12 IST
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அலேபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் தேரோட்டம், 42 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. கடைசியாக தேரோட்டம் 1976ம் ஆண்டு நடந்தது. இதையடுத்து தேர் பழுது ஏற்பட்ட காரணத்தால், தேரோட்டம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு மற்றும் பொதுமக்களின் உதவியோடு 42 லட்சத்திற்கு தேர் புதுப்பிக்கப்பட்டு நேற்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இந்த ஆன்மீக திருப்பணிக்கு பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-06-28 18:05:39 IST
பிரதமர் நரேந்திர மோடி நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, ரூ.355 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்பது பற்றிய தகவல்களை தர வேண்டும் என்று பீமப்பா என்பவர் பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்தார். இதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், 4 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி 41 முறை வெளிநாட்டுப் பயணம் செய்து, 52 நாடுகளுக்குச் சென்றுவந்ததாகத் தெரிவித்துள்ளது....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-06-28 13:13:37 IST
புள்ளியியல் தினத்தை ஒட்டி குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு அவர்கள் புதிய ரூ.125 மற்றும் 5 ரூபாய் நாணயங்களை வருகிற ஜூன் இருபத்தொன்பதாம் தேதி வெளியிட உள்ளார்.வரவேற்கலாம் -எனினும் அந்த பத்து ரூபாய் நாணயம் மக்களிடம் சிக்கிக் கொண்டு பரிமாற்றம் செய்ய இயலாமல் இன்னமும் அவதிப்படுகிறதே அதற்கும் ஒரு வழி செய்யுங்களேன்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-06-27 07:39:28 IST
சமீபத்தில்-தேடப்படும் குற்றவாளியான விஜய் மல்லையா தான் செலுத்த வேண்டிய தொகையினை வங்கிகளுக்கு செலுத்தி விடுவதாக மட்டும்தான் கூறி இருக்கிறார்.அவர் இன்னமும் இந்தியா வந்த பாடு இல்லை சொத்துக்களை விற்ற பாடு இல்லை-விற்ற தொகையை வங்கிகளுக்கு செலுத்திய பாடு இல்லை.அதற்குள் "மோடிக்கு வெற்றி-இந்தியாவுக்கு வெற்றி" என கூவினால் எப்படி? அவர் இன்னமும் 17 இந்திய வங்கிகளில் பெற்ற ரூ.9000 கோடி கடனை வழிவகைகளை செய்து,நம் இந்திய வங்கியினர் தயார் நிலையில் இருந்து அந்த தொகைகளை வங்கி கணக்கில் வரவு வைத்த பிறகுதான் இந்த தேடப்படும் குற்றவாளி விஜய் மல்லையாவின் வாராக் கடன் வங்கிகளுக்கு வந்து சேர்ந்ததாக அர்த்தம்.இன்னும் அவர் அவரது சொத்துக்களை விற்பதற்கே எத்தனை நெளிவு சுளிவுகள் இருக்கும்.நாம் கைமாற்று வாங்குவதுபோல் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் கடனா என்ன?திருப்பி கொடுத்து விட்டேன் என கூறுவதற்கு? பாமர மக்களுக்கு லட்சம் என்பதே மிகப்பெரும் தொகை அதிலும் இது 9000 கோடி ரூபாய் என்பது எவ்வளவு பெரிய தொகை? இது வங்கிகளுக்கு வரப்பெற்றவுடன் பாஜக மட்டுமல்ல-மத்திய அரசுடன் இணக்கமாக செல்லும் அம்மாவின் ஆன்மா வழி ஆட்சி நடத்தும் எடப்பாடி அவர்களை வைத்தே கூட நம் தமிழகத்தில் வெற்றி விழா கொண்டாடலாம் தப்பில்லை....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-06-26 15:46:39 IST
தேடப்படும் தலை மறைவு குற்றவாளி சொல்வதை நம்புங்க வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.வங்கிகள் செய்த தவறு காரணமாக பொது மக்களுக்கு என் மீது கோபம் அதிகரித்தது. வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளேன். வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்து, இனி அது தொடரும் எனக் கூறியுள்ளார்...
mariappan - coimbatore,இந்தியா
2018-06-24 12:28:10 IST
ஏன்...........ஏன்.......ஏன்...... காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தகோரி மத்திய அரசுக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் தமிழகமே போர்க்களம் ஆகும் அளவிற்கு போராட்டம் நடத்திய தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இப்போது குமாரசாமியின் குரங்காட்டத்திற்கு எதிராக எழுந்து நின்று போராடாமல் பதுங்கு குழிக்குள் பயந்து முடங்குவது ஏன். ஒருவேளை தங்கள் வளர்ச்சிக்காகவும் தங்கள் சுயநலத்துக்காகவும் மக்களின் பலவீனத்தை பயன்படுத்திக்கொல்கிரார்களா? மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய கனவாண்களே கர்நாடகாவில் காங்கிரஸ் தயவில் ஆட்சி நடத்தும் குமாரசாமியின் கொக்கரிப்பை நிறுத்த வலியுருத்தி தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு இராஜினாமா செய்யும் வரை தமிழகத்தில் காங்கிரஸ் சார்பாக எந்த நிகழ்ச்சியையும் நடத்தவிட மாட்டோம் என பொங்கி எழாதது ஏன். ஒருவேளை பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் இன்று நாம் இவ்வளவு பிரபலம் பெற்றிருக்க மாட்டோம் பிரபாகரனை கொல்ல காரணமாக இருந்து உங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த காங்கிரசுக்கு நன்றிகாட்டவா/ ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய புனிதர்களே, குமாரசாமி அவர்களே காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு நீங்கள் கட்டுப்படாவிட்டால் உங்களுக்கான ஆதரவை வாபஸ் பெறுவோம் என சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் எச்சரிக்க வேண்டும் என்று போராட பொங்கி எழாதது ஏன். ஒருவேளை ஐபிஎல் போட்டியில்சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி சென்னையில் விளையாடக்கூடாது என்பதற்காக வேறு ஏதேனும் அணி செய்த சதியை நிறைவேற்றத்தான் பொதுமக்கள் என்ற போர்வையில் அந்த போராட்டத்தை நடத்தினீர்களா? விவசாய சங்கத்தின் விடிவெள்ளி நல்லக்கண்ணு அவர்களே காவிரி விவகாரத்தில் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு டெல்லியில் அரைநிர்வாண போராட்டம் வரை ஆர்ப்பரித்த நீங்கள் கர்னாடக முதல்வர் குமாரசாமியை எச்சரிக்க ராகுல் காந்தியை சந்திக்க அவர் வீட்டுமுன் போராட்டம் நடத்தாது ஏன். ஒருவேளை பணமதிப்பு நடவடிக்கையில் மத்திய அரசிடம் முறைகேடு செய்தவர்கள் பட்டியலில் நீங்களும் உங்களை சார்ந்த சிலரும் இருப்பதால்தான் காவிரிப்போர்வையில் மோடிக்கு எதிராக முழக்கமிட்டீரோ? விவசாய பெருமக்களுக்கு ஆதரவாக வீதிகளிலும் சமூக வலைதளங்களில் போராடிய இளைஞர் பட்டாளமே அறிவு ஜீவியான என்னிடம் ஆட்சியை கொடுங்கள் இருண்டுபோன உங்கள் வாழ்க்கை என்னும் வீட்டிற்கு விளக்காக ஒளிவீச்வேன் என்று அரசியலுக்கு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட கமலஹாசன் முப்பது ஆண்டுகளாக வருமான வரிகட்டும் வானளாவிய அறிவு படத்த கமலஹாசன் மூன்று ஆயிரம் சம்பளம் வான்கிய கமலஹாசனை இன்று மூன்று கோடி சம்பளம் வாங்கும் நிலைக்கு உயர்த்திய தன் ரசிகர் மன்றத்தில் வறுமையில் வாடி வருமானமில்லாமல் இருந்த எத்தனை இளைஞர்களுக்கு தொழில் அமைத்துக்கொடுத்தார், படிக்க வசதியில்லாத எத்தனை ஆயிரம் ரசிகர்களின் பிள்ளைகளுக்கு படிப்புக்கான செலவை ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை எப்போதாவது சிந்தித்ததுண்டா, இப்போதாவது சிந்திப்பாயா இதைமட்டுமல்ல காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குய பிறகும் கமலஹாசன் காவிரிக்காக கர்னாடக முதல்வரை சந்திக்கிறார் இருவரும் அளிக்கும் பேட்டியில் குமாரசாமி தமிழகத்துக்கு தேவையான தண்ணீர தருவோம் என்கிறார். சில தினங்களில் ராகுல் சோனியா இருவரையும் கமலஹாசன் சந்திக்கிறார். என்ன நடந்ததோ கர்நாடகாவில் குமாரசாமி செய்தியாளர்களிடம் தமிழகத்திக்கு தண்ணீர் தரமாட்டோம் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கிறார் இதையும் சிந்திக்க வேண்டும் தோழர்களே. மாரியப்பன். கோவை...
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-06-23 19:38:56 IST
கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் புனித அன்னாள் மேனிலைப்பள்ளி அருகில் பழுதடைந்த பயணியர் நிழற் கூடம் உள்ளது.வயதானவர்களும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.என்ன காரணத்திலோ இந்த நிழற் கூடத்தை செப்பனிட மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் அலட்சியம் காட்டுகிறது. மக்கள் நலம் பேணும் அம்மாவின் ஆன்மா வழி ஆட்சியில் இந்த பயணியர் நிழற்கூடம் போர்க்கால அடிப்படையில் சீர் செய்யப்படுமா?...
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-06-22 20:44:54 IST
எட்டு வழி சாலை விஷயத்தில் அம்மாவின் ஆன்மா வழி ஆட்சி நடத்தும் எடப்பாடியார் அவர்களின் கருத்தை பிரதிபலித்ததான தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களே சேலம் மாநகர எல்லைக்குள் பழுதடைந்து இருக்கும் குண்டும் குழியுமான சாலைகளையும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளால் பழுதடைந்துள்ள சாலைகளையும் செப்பனிட தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கூட உத்தரவிடலாமே?உங்களுக்கு புண்ணியமாவது கிடைக்கும்...
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-06-22 20:44:06 IST
மீடியா உள்ளிட்ட பல்வேறு வகையிலும் சுமார் மூன்று மாதங்களாக கிருஷ்ணகிரி நகராட்சி 19 வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணன் கோவில் சன்னதி தெரு விளக்குகள் ஒளிராமல் இருப்பதை ஒளிரச்செய்யும் எனது நமது நகராட்சி வழியிலான முயற்சி தோல்வியில் முடிந்தது.அதற்காக நான் இன்னமும்கூட மனம் தளரவில்லை-இருப்பினும் மத்திய மாநில அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் இது விஷயத்தில் முயற்சித்து மக்கள் பணி ஆற்றலாமல்லவா?இது நியாயமான அரசியல் சாயமற்றதாக கருதினால் முயற்சிக்கலாம்,...
thendralvelan S - karaikal,இந்தியா
2018-06-19 10:45:59 IST
• புதுவையில் 520 ஆசிரியப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், ஆசிரியர் பணிடங்களை நிரப்புவதில் தொடர்ந்து பி.எட். பட்டதாரிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது மிகவும் வருந்தக்க்கூடிய உண்மை. தமிழகத்தைப்போல புதுவையில் ஆசிரியர் தேர்வாணையம் என்ற ஒன்றே இல்லை. • வருடாவருடம் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை. • ஆகவே, புதுவையில் ஆசிரியர் வேலைவாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று எவரும் அறிந்திட வாய்ப்பு இல்லை. • பி.எட் சேர்க்கைக்கு(படிப்பதற்கு) வயது வரம்பு கேட்கப்படாமல், வேலை வாய்ப்பிற்கு மட்டும் 30வயதை வயது வரம்பாக கேட்கப்படுகிறது. • சிடெட் தேர்வில் தேர்ச்சியடைவது வேலைவாய்ப்பிற்க்கு கட்டாயமாக்க பட்டுள்ளது. • +2 முடித்து விட்டு டி.டி.எட். படித்தவர்களுக்கு 35 வயதை வயது வரம்பாக கேட்கப்படுகிறது. மாறாக, டிகிரி முடித்து விட்டு பி.எட். படித்தவர்களுக்கு 30 வயதை வயது வரம்பாக கேட்கப்படுகிறது. • டி.டி.எட். படித்தவர்கள் மட்டுமே அதிகமான ஆசிரிய வேலைவாய்ப்பை பெற்று அவர்கள் பணியில் உள்ளபோதே தொலைதூரக்கல்வியில் பி.எட். படித்து பணி உயர்வில் சென்று, பி.எட் பட்டதாரிகளுக்கான காலியிடங்களையும் பறித்து விடுகின்றனர். இது பி.எட். மற்றும் டி.டி.எட் படித்தவர்களுக்கிடையே வேலைவாய்ப்பில் சமநிலையற்ற சூழலை உருவாக்குகிறது. இது பி.எட். படித்தவர்கள் படித்துமுடித்துவிட்டு டி.டி.எட். படித்தவர்களை வேடிக்கை பார்க்கும் சூழ்நிலைக்கு தள்ளிவிட்டது. • வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு பணிகள் வழங்குவது புதுவையில் உறுதி செய்யப்படாத நிலை நிலவுகிறது. • கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட பி.எட். கல்லூரிகள் புதுவையில் இயங்கி வந்தாலும் அதில் தற்போது தமிழக மாணவர்களே அதிகம் படித்து வருகின்றனர். வருடாவருடம் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்பதாலும் புதுவையில் பி.எட். படித்தவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளாதாலும் அக்கல்லூரிகளில் மிக சொற்ப மாண்வர்களே படித்து வருகின்றனர். • புதுவையில் பி.எட். படித்தவர்கள் அதிகம் பெண்களே என்பதால் இந்த முரண்பாடுகளயும், உரிமை மீறலயும், வேலைவாய்ப்பில் வஞ்சிப்பையும் எவரும் கண்டுகொள்ளாத நிலை நீடித்து புதுவையில் வருகிறது. • முதல்வரும், ஆளுனரும் இதற்கு துரிதமாக ஏதாவது செய்தால் மட்டுமே பி.எட் படிப்பின் மீதும் அதனை படித்த ஆசிரிய சமுதாயத்தின் மீதும் மதிப்பு இருக்கும். ஏற்கனவே ஆசிரியராக பணிபுரிந்து ஆளுனராக உயர்ந்திருக்கும் மாண்புமிகு கிரண்பேடி அவர்களும், புதுவை முதல்வரும், கல்வி அமைச்சரும் இதற்கு தீர்வு கண்டு பி.எட். பட்டதாரிகளும் நியாயப்படி அரசுப்பணியில் அமர வழிவகை செய்திட வேண்டும். • அதற்கு, புதுவையில் ஆசிரியர் தேர்வாணையம் அமைக்கப்பட வேண்டும். • பி. எட் படித்தவர்களுக்கான பணி வயது வரம்பை தமிழகத்தில் உள்ளது போல 58 வயதாக உயர்த்த வேண்டும். • ஆசிரியர் தேர்வு முறையில் D.T.Ed மற்றும் B.Ed (Recruitment Rules) உடனடியாக திருத்தி சமநிலையை உறுதிப்படுத்த வேண்டும். வரம்பாக கேட்கப்படுகிறது. • வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரிய வேலைவாய்ப்பு பணிகள் வழங்குவது புதுவையில் உறுதி செய்யப்பட வேண்டும்....
parthasarathy - chennai,இந்தியா
2018-06-15 10:35:34 IST
நேற்றைய தினமலர் படித்து அதிர்ச்சியானேன். எஸ்விசேகர் பெரிய தவறிழைத்தார் என்பது உண்மையே. ஆனால் அதற்கு அவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியும் அதைப்பற்றி ஏன் எவரும் கணக்கெடுத்துக்கொள்ளவில்லை? பொதுமன்னிப்பு கோரிய பிறகும் ஒருவரை துரத்தி துரத்தி கஷ்டம் கொடுப்பதில் கொடூரமான இன்பம் காணும் சிலர் உண்மையிலேயே மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் தானா இந்த கேள்வி அவர்களுக்கு உறைக்காதா?...
g.s,rajan - chennai ,இந்தியா
2018-06-02 14:04:46 IST
Wish u a very Happy Birthday Isai Gnani Ilaiyaraja sir . g.s.rajan, Chennai....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-05-29 08:01:16 IST
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை பத்தொன்பதாம் வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணன் கோவில் சன்னதி தெருவில் இருக்கும் ஆறு தெரு விளக்குகளில் ஓன்று மட்டும்தான் ஒளிர்கிறது.ஏனைய ஐந்து தெருவிளக்குகளும் ஏறக்குறைய ஒரு மாத காலமாக பழுதடைந்து காணப்படுகிறது.மாலை ஆறு மணிக்கு மேல் பெண்கள் வெளியில் தலைகாட்ட அச்சப்படுகின்றனர்.மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகம் இந்த விளக்குகளை ஒளிர்ச்சி செய்ய ஆவண செய்ய வேண்டும்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-05-29 07:56:29 IST
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் அமைந்திருக்கும் மாவட்ட விளையாட்டு மைதானத்தின் வடக்கு புற சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.இச்சாலை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை.இந்த சாலை ராஜாஜி நகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் பிரதான சாலை ஆகும்.மாவட்ட நிர்வாகம் கட்டிகானப்பள்ளி ஊராட்சி நிர்வாகத்துக்கு தக்க அறிவுரைகள் வழங்கி அத்தியாவசியமான இந்த சாலையை சீரமைக்க முன் வர வேண்டும்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-05-28 08:25:28 IST
மழை பொழிவை வரவேற்போம் நண்பர்களேவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று(மே 28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கத்திரி வெயில் இன்றுடன் நிறைவடைவதால் வெப்பத்தின் தாக்கம் குறையும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது....
SARAVANAN - Chennai,இந்தியா
2018-05-20 12:53:06 IST
We are the residents of Korattur, East Avenue, Blocks from H18 to H25, consists of total 94 flats. More than 400 people living in these premises. For the last one year there is no metro water supply for all of us. Irrespective of our requests / complaints still no water supply to our blocks. The problem started due to the construction of rain water drainage one-year before. Even though the works completed for more than 9 months, the metro water supply was not resumed. Without metro water, we are forced to consume unsafe nate water sources and our health are spoiling. Kindly publish this in தினமலர் பிரிண்ட் media, so that the authorities will take immediate actions....
Poornima - Singapore,சிங்கப்பூர்
2018-05-19 01:53:03 IST
மதிப்பிற்குரிய பொறுப்பாசிரியர் அவர்களுக்கு, நான் 1990-இல் இருந்து சிறுவர்மலர் வாசகி. எழுத்துக்கூட்டி ஐந்து வயதில் படக்கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.சிந்துபாத்தின் பயணங்கள், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் முதலிய படக்கதைகளைப் புத்தகமாக பைண்டு செய்து வைத்து உள்ளேன்.முன்னர் வெளிவந்த பேய்ப்பள்ளி, எக்ஸ்ரே கண், பிரம்போ, சோனிப்பையன், லக்கிமேன் சொரிமுத்து போன்ற படக்கதைகளை வெளியிட்டமைக்கு நன்றி. இன்று வரை சிறுவர்மலர் வாசகியான என்னுடைய சில வேண்டுகோள்கள். சிறுவர்மலரில் வெளியான ராகினி எனும் பெண் வரும் பேய்க்கதை, ரூபிணி, குள்ளமாடன், கேசரிவர்மன் முதலிய கொண்ட தீவு வரும் அதிசயக்கதை "மாயக்கோட்டை" போன்ற அருமையான கதைகளை மறுபதிப்பு செய்யுங்கள்.அந்த தொடர்கதைகளை மறுபதிப்பும் செய்யலாம். இக்காலக் குழந்தைகள் படித்து மகிழ்வர். மேலும் "உயிரைத் தேடி" என்ற படக்கதையை வாசிக்க அக்காலக் குழந்தைகளும் ஆர்வமாக உள்ளனர். சிறுவர்மலர், கதைமலர், வாரமலர் முதலிய இதழ்களின் முதல் பிரதி முதல் பழைய வெளியீடுகளை டிஜிட்டல் ஆர்கைவ்களாக கட்டணம் செலுத்தி வாசிக்கும் முறையில் வைத்தால் பழைய இதழ்களை வாசிக்க விரும்பும் என் போன்ற வாசகர்கள் மகிழ்வர். ஆசிரியர் பூரணி எழுதப்போகும் "ஆவிகள் இல்லையடி பாப்பா" தொடருக்காக ஆவலுடனும் திகிலுடனும் காத்திருக்கிறோம். பல அருமையான கதைகளை சிறுவர்மலரில் எழுதிய கதாசிரியர் பூரணி அவர்களைப் பேட்டி கண்டு வெளியிட்டால் நன்றாக இருக்கும். அவரின் முகம் இதுவரை நாங்கள் அறியாதது. அவரின் கதைகள் எங்களை மகிழ்வித்து இருக்கின்றன. எங்கள் கருத்துக்களை ஏற்று வாசகர்களை மகிழ்விக்கும் சிறுவர்மலர் பொறுப்பாசிரியருக்கு நன்றிகள் பல வணக்கம்...
Manimaran - Madurai,இந்தியா
2018-05-11 11:10:32 IST
வணக்கம் இந்த செய்தியை மக்களுக்கு தெரிவிக்கவும் மேலும் நீங்கள் ஒரு முறை பார்த்துக்கொள்ளவும் ரயில் டிக்கெட்டில் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் உள்ளது ஆனால் பிரீமியம் தட்கல் என்று தென் மாவட்டமான தமிழ்நாடு, கேரளா, ஆந்திர மற்றும் கரநாடகாவில் மட்டும் இருக்கிறது ஆனால் வடமாநிலத்தில் 10 க்கு 1 வண்டியில் மட்டுமே உள்ளது ஆனால் நமக்கு 10 ரயில்களும் உள்ளது இதனால் நாம் சாதாரண வகுப்பில் கூட பழ ரூபாய் செலவு செய்து செல்வதாக உள்ளது . நாமும் மக்கள் தான் ஆனால் மத்திய அரசு நம்மை ஏமாற்றுகிறது கொள்ளை லாபம் சம்பாதித்து. பிரீமியம் தட்கல் தேவை இல்லை இந்த செய்தியை பகிரவும் நமது உரிமை மற்றும் நம் பணத்தை வீணாக செலவு செய்ய வேண்டாம்...
g.s,rajan - chennai ,இந்தியா
2018-04-14 15:15:21 IST
மோசமான வேகத்தடை அமைப்புக்களால் பலர் உயிரிழப்பதாக சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்து உள்ளது மிகவும் குறிப்பிட தக்கது .இந்த அரியலூர் திருச்சி சாலையில் பாக்கணுமே வேகத் தடைகளை ஒவ்வொண்ணும் மலை அளவு இருக்கு, கார், இரு சக்கர வாகனங்கள் ஏறி இறங்குவதற்குள் ப்ரம்மப் பிரயத்தனம் தான் இந்த வழியில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளின் ஓட்டுனர்கள் பயண நேரம் அதிகமாகி மிகுந்த கால தாமதம் ஆவதால் தாறுமாறாக வேகமாகச் சென்று பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் முதுகுத் தண்டு வடங்களைப் பதம் பார்க்கின்றனர் .போகிற வேகத்தில் பேருந்தின் மேற் கூரைகளில் சென்று இடித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை இந்த வழித் தடத்தில் மட்டும் சமயபுரம் டோல் கேட் வரை கிட்டத்தட்ட 100 வேகத்தடைகள் சிறியதும் பெரியதுமாக இருப்பதால் அனைவரும் பாதிப்பு அடைவது வாடிக்கையாகிவிட்டது .இந்த வழிப்பயணத்தில் பலரும் நொந்து நூடுல்ஸ் ஆகின்றனர் .எனவே திருச்சி மற்றும் அரியலூர் வழித்து தடத்தில் பை பாஸ் அதாவது புற வழி சாலை அமைத்து லாரிகள் மற்றும் குறைத்த நிறுத்தப் பேருந்துகளை புற வழியாக இயக்க வேண்டும் .சிமெண்ட் மற்றும் சுண்ணாம்புக்கல் லாரிகள்கரும்பு ஏற்றிச் செல்லும் லாரிகள் ஊருக்குள் வராமல் புறவழிப்பாதையில் சென்றால் இப்பாதையில் விபத்துக்கள் மற்றும் உயிர் இழப்புக்களும் குறையும். அரசாங்கம் மற்றும் போக்குவரத்துத் துறை உடனடியாக ஆய்வு செய்யுமா ?? முறையற்ற வடிவமைப்பு இல்லாத வேகத்தடைகள் உடனே அகற்றப்படுமா ??இதே நிலை நீடித்தால் அனைவருக்குமே மிகவும் ஆபத்து சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா,விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா ???.மிக மிக மோசமாக உள்ள இந்த திருச்சி அரியலூர் சாலை சரி செய்யப்படுமா ??சிமெண்ட் சிட்டி செல்ல சிறப்பான பாதை விரைவில் அமையுமா .??கல்லகம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்கள் சென்னை மற்றும் திருச்சி செல்லும் மார்கத்தில் ரயில்கள் வரும் போது அடிக்கடி ரயில் பாதை மூடப் படுவதால் அனைவரும் பாதிக்கப் படுகின்றனர் .எனவே இங்கு சுரங்கப் பாதை மற்றும் மேம்பாலம் அமைக்க சம்பந்தப் பட்டவர்கள் உடனடியாய் முன்வரவேண்டும் .ரயில்வே கேட் போடப்பட்டிருக்கும் போது இருசக்கர வாகனங்கள் மக்கள் தண்டவாளத்தைக் கடக்கின்றபடியால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வண்டிகள் எளிதாக செல்ல சுரங்க மேம்பால ஒன்று விபத்துக்களைத் தடுக்க விரைவில் அமைத்திட வேண்டும் . ஜி.ஏ.ராஜன் சென்னை ....
DHANARAJ P - CHENNAI,இந்தியா
2018-04-07 12:10:35 IST
ஏப்ரல் 7 ஆவடியிலிருந்து வேளச்சேரிக்கு புறப்பட்ட ரயில் கடற்கரை வரை நன்றாக வந்தது. பிறகு வேளச்சேரி புறப்பட்ட அந்த மின்ரயில் திருவல்லிக்கேணி தாண்டியதும் மிக மிக மெதுவாக ஊர்ந்தது. கடைசியாக கலங்கரை விளக்கம் தாண்டி முண்டகக்கண்ணியம்மன் கோயில் வந்து புறப்பட்ட ரயில் பாதி பெட்டிகள் நடைமேடைக்கு வெளியேயும் மீதி உள்ளேயும் இருந்தன. வண்டி ரிப்பேர் என்று எல்லோரும் இறங்கி நடங்கள் என ஊழியர் ஒருவர் கூறியதும் பள்ளிக்குத்தேர்வு எழுதச் சென்ற நிறைய மாணவர்கள் வண்டியிலிருந்து குதித்து மயிலாப்பூரை நோக்கி நடக்கத் துவங்கினர், பிறகுதான் தெரிந்தது. சொல்லி வைத்த மாதிரி 9.00 மணியிலிருந்து 9.15 மணி வரை ஸ்டேஷனுக்கு வெளியே நிறுத்தி இருபது நிமிடங்கள் கழித்து புறப்படும் என்று.... பாவம் இது தெரியாத அப்பாவி பயணிகள் சிலர் இறங்கி நடக்கத் துவங்கிவிட்டனர். இதே நிலைதான் மந்தைவெளியிலிருந்து கடற்கரை நோக்கிச் சென்ற ரயிலின் ஓட்டுநரும் இதே பாணியில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மந்தைவெளியிலிருந்து மயிலாப்புரை நோக்கி வந்த பயணிகளின் எண்ணிக்கை அதிகம். இதை ஒலிபெருக்கியில் அறிவித்திருந்தால் அருமையாக இருந்திருக்கும். பயணிகளும் குழப்பமடைந்திருக்க மாட்டார்கள்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-04-03 15:24:40 IST
காவிரி நதி நீர் பிரச்சினையில் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று முதல்வரும்-துணை முதல்வரும் உண்ணாவிரதம் இருப்பதாய் செய்திகள் வந்திருக்கின்றன.இருப்பினும் மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல விரும்பும் முதல்வர்-அதிமுகவின் இரு அணிகளை இணைத்த மோடி எனக் கூறும் துணை முதல்வர் இவர்கள் மத்திய அரசை எதிர்த்து போராடுவது-உண்ணா விரதமிருப்பது என்பதெல்லாம் ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் கூறுவதானால் இது ஒரு கபட நாடகமாகும் என்பதில் சந்தேகம் இம்மியளவும் சந்தேகம் இல்லை.இது தமிழக மக்களின் கண் துடைப்புக்காகத்தான் என்றே கூற வேண்டும்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.


» தினமலர் முதல் பக்கம்
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X