Advertisement
    தினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துக்களையும் வாசகர்கள் தெரிவிக்க விரும்பினால் இந்த பகுதியில் தெரிவிக்கலாம். நன்றி.
வாசகர் கருத்து
பக்கம் - 20
Ramesh RK - Theni,இந்தியா
2016-02-18 12:01:51 IST
அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நிர்வாகம் அமையவும், லஞ்சம் மற்றும் சிபாரிசின் பேரில் திறமை அற்றவர்களை பணியமர்த்தாமலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்க உத்தரவிட கோரியும், லஞ்சம் வாங்குபவர்கள், பணம் லஞ்சமாக கொடுத்து வேலைக்கு சேர்ந்தவரகள், மற்றும் திறமை அற்றவர்களை பணிநீக்கவும், இல்லை என்றால்அனைத்து அரசு மற்றும் கல்வி துறைகளையும் தனியாரிடம் ஒப்படைக்கவும் என்று மக்களுக்கு நன்மை தரகூடிய பல நல்ல கோரிக்கைகளை வலியுறுத்தி மிகவும் ஏழை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீவிர போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். மேலும் அரசு வருவாயில் 90% அரசு ஊழியர்கள் சம்பளத்திற்கே அரசு செலவழிப்பதால் அரசு கடனில் தத்தளிப்பதால் தங்களுக்கு 50% சம்பளம் குறைக்க கோரிக்கை வைத்து உள்ளார்கள். அவர்கள் போராட்டம் வெற்றி பெற பொது மக்கள் ஆகிய நாம் ஆதரவு அளிப்போமாக....
Chockalingam - Managiri - Karaikkudi,இந்தியா
2016-01-24 11:58:41 IST
சென்ற வாரம் தினமலர் இணையதளத்தில் PACL குறித்து ஒரு செய்தி வந்தது. இந்த நிறுவனத்தின் சுமார் 40,000 கோடி ரூபாய் மோசடி குறித்து வடஇந்திய பத்தரிகைகளில் செய்திகள் வருகின்றனவே தவிர, நம் பகுதிகளில் வருவதில்லை. தினமலர் இந்த நிறுவனத்தின் மோசடி குறித்து ஆதியோடந்தமாக, தற்சமய நிலவரங்கள் வரை ஒரு விரிவான செய்தி வெளியிட்டால் இப்பகுதியனருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....
sri.m - chennai,இந்தியா
2016-01-22 12:42:28 IST
மிகவும் பாராட்ட, போற்ற வேண்டிய உள்ளம்மிக்கவர்...
Nrk Dasan - CHENNAI,இந்தியா
2016-01-13 15:21:30 IST
அரசுக்கும் கல்வியாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள், எந்த மொழி வழி கல்வியாக இருந்தாலும், அந்த மொழியை முற்றிலும் எழுத படிக்க பேச கற்று தந்த பின்புதான் மற்ற பாடங்களை கற்று தரவேண்டும், இதனை விரைவாக சட்டமாக்கி அமல்படுத்த வேண்டும்....
SPR SANKAR - CHENNAI,இந்தியா
2016-01-13 08:48:34 IST
I think the SC judgment on Sabarimalai temple is a typical example of Judicial overreach. How can the SC arrogate to itself to change age-old , centuries old customs prevailing in a temple? Tomorrow, somebody may enter the temple with shoes and claim it as his fundamental right Another guy may smoke inside the temple. Shud not the SC respect the sanctity and rituals of temples? Religious customs and rituals are being followed by the faithful without questioning. This is valid for other religions also. The Hindu majority India is a unique country where the Govt and the Courts tamper with the affairs of temples only and safely refrain from commenting on the practices in Churches and Mosques. The other two religions are highly doctrinaire and will not allow the slightest deviation from their existing practices. What is the need for HR&CE dept, by which Govt controls the Hindu temples? Is this Secularism? It is exactly the opposite of the meaning of Secularism which is defined as the policy of the State refraining from Religions. It is also an undeniable fact that the Govt will not dare to poke it's nose into the affairs of other two religions, knowing fully that the consequences will be disastrous One can't forget an incident in Kerala. When the Communists were ruling the State, the Govt reconstituted the Devaswam Board by nominating two CPM Members, who are nonbelievers and confirmed Atheists, to the Dewaswam Board Instead of being mute spectators, Hindus have to voice their protest unitedly against all authoritarian Diktats of the Courts and the Governments in the temple rituals and practices which can't be subjected to "secular scrutiny" and compliance with flippant, imprudent and injudicious Orders. It will be still better if girls and women voluntarily refrain from breaching the temple customs which are being followed since time immemorial. - SPR SANKAR...
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
2016-01-13 08:16:50 IST
நம் நாடு கலாசாரம் எல்லோருடைய நன்மைக்காகவே உருவாக்கப்பட்டது.இது நாள் வரை காத அதை இப்போது காற்றில் பறக்க விடவேண்டியதில்லை. உள்ளாடைகளை மட்டும் அணிந்து திருமணத்திற்கு போகலாமே வீட்டிலும் அரைகுறை ஆடைகளை அணியலாமே கோவில் தானா கிடைத்தது?மதம் என்பதே மனிதனை வழிப்படுத்ததான். இனி எல்லாமே சீரழிவுக்குதான் போலும்...
Nagendran - Chennai,இந்தியா
2016-01-13 07:25:25 IST
சல்லிக்கட்டும் உலக அரசியலும் : இந்த பதிவு சற்றே பெரிதாக இருக்கும், ஆனால் இதன் முடிவில் தமிழர்கள் சந்திக்கப்போகும் பேராபத்தினை நிச்சயம் உணர்வீர்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை உணவான பால் இரண்டு வகைப்படும் (2 types of protein) இவை A1 மற்றும் A2 என்று வகையருக்கப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து பாலூட்டிகளும் இயற்கையாக A2 வகை பாலையே சுரக்கின்றன. மனிதனின் தாய்பாலும் இந்த A2 வகை பால் தான். இயற்கையாக A2 வகை பாலை தான் மனிதர்களால் செரிக்க இயலும். ஆகவே நம் முன்னோர்கள் இதே வகை பாலை சுரக்கும் நமது பசுவினங்களின் பாலை நம் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் பால் வியாபாரம் வர்த்தக மயமாக்கப்பட்டதற்கு பிறகு ஐரோபாவில் அதிகமாக பால் கறக்கும் மாடுகளை மட்டுமே தேர்வு செய்து அவற்றை மட்டுமே இனப் பெருக்கம் செய்ய அனுமதித்தனர் (ive breeding)  இவ்வாறு செய்தமையால் இவ்வகை மாடுகளில் மரபணு மாற்றம் ஏற்ப்பட்டது(mutation).  இதன் விளைவாக A1 என்ற பால் வகை உருவானது. சுவையற்ற இப்பால் உடலுக்கு தீங்கு செய்யக்கூடியது. சக்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு இந்த A1 வகை பாலும் ஒரு முக்கிய காரணமாகும். குழந்தைகளுக்கு இந்த A1 வகை பாலை செரிக்கும் ஆற்றல் இல்லை. இப்பால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்க செய்யும். சரி, இது இந்த அளவுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்க கூடியது என்று நினைத்தால், இப்பாலை உற்பத்தி செய்யும்முறை இதைவிட கொடூரமான தீங்குகளை ஏற்ப்படுதக்கூடியது. அதாவது ஒரு மாடு பால் சுரக்க வேண்டுமென்றால் அது கன்று ஈன்று இருக்க வேண்டும். அந்த கன்றைப் பார்க்கும்போது தாய்மாட்டுக்கு இயக்குநீர்(hormone) சுரந்து அது பாலை சுரக்க தூண்டும். ஆனால் இது பல மாடுகள் இருக்கும் பண்ணையில் சாத்தியமில்லை. ஆகையால் மாட்டுப் பண்ணையாளர்கள் செயற்கையாக இயக்குநீர்களை மாட்டின் உடம்பில் ஊசியின் மூலமாக செலுத்தி பால் சுரக்க வைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் மாட்டின் பாலிலும் இந்த இயக்குநீர்களின்(hormone) அளவு அதிகமாக இருக்கிறது. இந்த இயக்குநீரின் பெயர் ஈத்திரோசன் (Estrogen). இது பெண்ணிய இயல்பை தூண்டும் இயக்குநீராகும். இந்த ஈத்திரோசன் (Estrogen) கலந்த A1 பாலை உண்ணும் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள், மற்றும் தமிழர்கள் போற்றிக் காக்கும் கற்ப்பொழுக்கத்தையும் கெடுக்கும் விதமாக பிற பாலின ஈர்ப்பு தூண்டலை இயல்பு நிலையிலிருந்து அதிகப்படுத்தும் அதுமட்டுமின்றி ஆண் குழந்தைகளுக்கு சோம்பேரித்தனத்தையும், பாலின சம நிலை மாற்றத்தையும் (திருநங்கைகளாக மாறுதல்) ஏற்ப்படுத்தும். இது ஒரு சமுதாய பிரச்சனையே தூண்டிவிடும் அளவிற்கு கொடியது. தமிழகத்திலுள்ள அனைத்து நாட்டு மாட்டினங்களும் A2 பாலை சுரக்கக்கூடியது. இவைகள் பாலை கம்மியாக சுரந்தாலும் அது உடலுக்கு எந்த வித தீங்கையும் உண்டாக்குவதில்லை. மனிதர்களுக்கு உகந்த பாலும் இந்த A2 பாலே. சரி, சல்லிக்கட்டுக்கும் உலக அரசியலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்க்கிறீர்களா? கொஞ்சம் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள் தமிழகத்திலுள்ள நாட்டு மாட்டினங்களின் சாணத்தில் இருந்து பெறப்படும் பொருட்களின் மூலத்திலிருந்தே இயற்க்கை விவசாயம் (natural farming) செய்ய பயன்படும் பூச்சுக்கொல்லி, உரம், பஞ்சகாவியா, போன்ற விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் செய்ய முடியும். இது சர்சி(jersey) வகை மாடுகளின் சாணத்திலிருந்து செய்தாலும் பயன்தராது. ஆகவே மோன்சண்டோ (Monsanto) போன்ற பெரிய நிறுவனங்கள் இயற்க்கை விவசாயத்தை செய்ய உதவும் மாட்டினங்ககளை அழிப்பதற்காக இந்தியா முழுவதும் வெண்மை புரட்சி என்ற திட்டத்தை செயல்படுத்தி கிராம கிராமங்களாக சென்று சர்சி(jersey) மாடுகளை வினியோகித்தனர். இது படிப்படியாக இந்தியா முழுவதும் இருந்த நாட்டு மாடுகளை அழித்தே விட்டது. நமது கிராம மக்களுக்கு கூட நாட்டு மாட்டுக்கும் சர்சி மாட்டுக்கும் வித்யாசம் தெரியாமல் போய்விட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏறு தழுவுதல் (சல்லிக்கட்டு) என்ற வீர விளையாட்டு இருந்தமையால் நமது ஆண் மாடுகள் காப்பாற்றப் பட்டு வந்தது. ஆண் மாடுகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பெண் மாடுகள் சேர்ந்தே காப்பாற்றப்பட்டு வந்தது. இது ஆரம்பத்தில் மோன்சண்டோ போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ஒரு தடையாக இல்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் வரும் இயற்க்கை வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு அவர்களை கதிகலங்க செய்துவிட்டது. இந்தியா முழுவதும் காணாமல் போன நாட்டு மாடுகள் தமிழகத்தில் மட்டும் மிஞ்சி இருப்பது எப்படி என்று அவர்கள் தேடியபோதுதான் தமிழகத்தில் மட்டுமே உள்ள தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) நாட்டு மாட்டினங்களை வளர்ப்பதை ஒரு கடமையாகவே கொண்டுள்ளனர் என்பது புலப்பட்டது. இதை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக தான் சல்லிகட்டிற்கு தடை செய்ய முயற்சி செய்கின்றனர். தமிழர்களே ஏறு தழுவுதல் என்பது நமது இனத்தின் இறையாண்மை சார்ந்தது. இது கிட்டத்தட்ட ஒரு மதம் போன்றது. ஏனெனில் மாட்டை பிடிக்கும் வீரர்கள் விரதமிருந்து அம்மாட்டினை பிடிக்கிறார்கள். ஆகவே இது ஒரு சமயம் சார்ந்த நம்பிக்கையாகவே நம் மக்களால் கருதப்படுகிறது. இதை மாற்றும் அதிகாரம் இந்தியாவிற்கே இல்லை. ஆகவே, நமது அடையாளமான எதையும் இனி இழக்க வேண்டாம். அறிவுசார் தளத்தில் ஒன்றாக நின்று நம்மினத்தை காப்போம்....
SPR SANKAR - CHENNAI,இந்தியா
2016-01-12 07:30:01 IST
Smriti Irani speech is wonderful. The Khngrs is the main.culprit in abusing and vilifying Iranian. They conveniently forget the fact that their honourable President can't even speak for five minutes without the help of a Madam Sonia who lied about her educational qualification was exposed by Swami, who revealed that Sonia has studied only up to 5th standard Madam accepted Swami's statement and ly apologized. The son Rahul is also equally dull. The Times Now interview was a roaring joke. The Social media lampooned him for his comical interview. Again, he became a laughing stock when he wrote a simple condolence msg in the Visitors book by looking at his mobile phone where he had already ed it with the help of his ghostwriter Swami rightly called him a "joker" These are the credentials of the Mother and Son who are heading a National Party. It is absolutely shameful. But Khngrs has gone beyond any sense of shame or remorse. It has bcm shameproof Is the Khngrs competent to talk about Smriti Irani who has proved her debating ss in the Parliament and elsewhere. She is as good an orator as Modi or Vajpayee. I have enjoyed all her speeches and interviews in YouTube. Known for her immaculate presence of mind and witty or barbed repartees every interviewer will be flummoxed by Irani's counter attacks Such is her power of diction and eloquence Even IITs and IIMs are inviting her as Chief guest to address them. The real truth is that both the Mother and son as well.as their.Party are jealous of.Smriti Irani for her innate capabilities Nothing but jealousy Irani is a real asset to the Parliament as well as the BJP. This is the unpala truth which many can't digest - SPR SANKAR...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-01-07 15:50:54 IST
ஸ்ரீரங்கம் கோயிலின் வருமானம் கிட்டத் தட்ட ஒரு கோடியை எட்டியதாக செய்திகள் தெரிவிக்கின்றன .ஆனால் ஸ்ரீரங்கம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் ,கோயிலின் வருமானம் அதிகரிக்கிறது .எனவே மக்களுக்கு இன்னும் பல வசதிகள் செய்து தரப்பட வேண்டும் .இலவசமாக தேவஸ்தானம் திருப்பதியைப் போல் இலவசப் பேருந்துகளைக் கூட நகரம் எங்கும் விடலாம் இது ஸ்ரீரங்கம் வந்து அரங்கனைச் சேவிக்கும் பக்தர்களுக்கு மிக வசதியாக இருக்கும் . மேலும் வெளிநாட்டில் இருந்து பல சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக யுரோப்பியன் ஸ்டைல் (Western Style or European Style )கழிவறைகளைக் கட்ட சம்பந்தப் பட்ட அதிகாரிகள் ,சுற்றுலாத் துறை நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஸ்ரீரங்கம் எங்கும் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது.அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தின் கிழக்கு வாயில் சரியாக உபயோகப் படுத்தப் படாமல் உள்ளது தென்னக ரயில்வேத் துறையினரின் இடம் இப்பகுதியில் அதிகமாக உள்ளது,தற்போது மேற்குப் புறம் உள்ள வாயிலில் ஆட்டோக்கள் ,வாகன நிறுத்தங்கள் போதிய விசாலமாக இல்லை .வாயிலும் மிகச் சிறியதாக இருப்பதால் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வருவது மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது .கடும் இட நெருக்கடி காணப் படுகிறது. .எனவே இவ்விடத்தில் இருந்து பேருந்துகளை,மினி பேருந்துகளை அம்மா மண்டபம் ,ரங்கநாதர் கோவில்,சமயபுரம் ,திருவானைக் கோவில் ,குண சீலம் ,திருவெள்ளரை,உததமர் கோவில் ,வயலூர்,அன்பில் ,உறையூர் எனக் கோயில்கள் உள்ள பல முக்கிய இடங்களுக்கு இயக்க அனுமதிக்கலாம் மத்திய மாநில அரசுகள் மக்களின் நலன் கருதி கவனிக்குமா ???...
TRADERS - NEW DELHI,இந்தியா
2016-01-04 11:09:00 IST
Today morning during a 45 minutes travel in the bus, I met a person. During chat, I come to know that he is working in South Block New Delhi. He is working there in Government Ministries since last 25 yrs. When I know this, I asked him, that how things have changed after 2014 elections. And his answer was not indifferent from my Expectations. But after listening some of his points, my reaction was like “OMG”. (1) He told dat previously there was a culture among some Secretary level officers of not coming to office on time. And when they come, they keep work pending. And if its urgent to complete the work, then there was a culture of sitting till late in office. During late sitting they order their dinner from “Hotel Le Meridian” @ ₹1300 per plate. Though there will be 15 people present in d office, but food will come for around 30 ppl (including for d family members of Those so called Secretaries). In d next morning, there bills of ₹ 39000/- of dinner get passed instantly by planning commission vice chairman Mr. Montek Singh Ahluwalia. That was d kind of wastage of public money by those people. Now, if someone has to sit late, there food comes from their own home. (2) Previously there was the habit of spending public money on changing furniture, curtains and furnishing of office. Now, PM has communicated that No furniture and curtains will be replaced before 7 yrs. and no furnishing allowed before 11 yrs. (3) Now, no file can b kept pending for more than 7 days, otherwise direct PMO starts queries. (4) PM takes class of its Ministers at 6:20 AM early in d morning, if necessary (5) PM Modi get up daily before 5 AM, throughout d yr. and reaches office daily before 9:20 AM. (6) PM Modi keep fast for more den approx. 100 days in a year. During fast only water. (7) In planning commission canteen, delicious food was available from ₹.60 to ₹.175. (8) Daily at 10:10 all attendance sheets are dispatched to PMO. (9) Kaaju- Kishmish n Milk culture in Government Ministries has now been stopped by our New PM. (10) Government revenue's have increased by approx. 17%, after 2014 elections, due to above mentioned spending's have been curtailed by d PM. Readers can themselves decide, from last 60 years, how the tax payers money was wasted not only by scam ridden Congress and other so called Secular Parties, but by office staff as well because of laid back attitude of the government. - Traders from Newdelhi...
ramalingam gurusamy - Toronto ,கனடா
2016-01-03 04:14:41 IST
சென்னையை பொருத்தவரையில் பெருமழை வெள்ளத்தால் தாழ்வான வீடுகள் அனைத்திலும் வீட்டின் உள்ளே ஐந்தடி உயரத்திற்கு தண்ணீர் மட்டம் ஏறி இருந்தது. தெருக்களிலோ கழுத்தளவு வெள்ளநீர் இருந்தது உண்மை. சும்மாவே தைப்பனி தரையை பிளக்கும் என்பார்கள். இதில் வெள்ளம் வடிந்த நிலையில் மார்கழிப்பனி மாரில் சலிப்பிணியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனை வளாகங்களில் கூடியுள்ள போர்வை கூட்டங்கலை கண்டே அனுமானிக்க முடிகிறது. ஆரம்ப சுகாதார அம்மணிகள் கருணை செய்து மக்களின் தற்போதைய வாட்டும் காய்ச்சலையும் இருமலையும் தங்கள் கனிந்த சேவையால் விரட்ட வேண்டும். வெள்ளம் பாதித்த வீடுகளின் செப்டிக் டேன்க் அடிப் பூச்சு இல்லாததால் நீர் நிறைந்து வழியும் நிலையில் அன்றாட பிரச்சினையில் உள்ளவர்கள் ஏராளம். அவர்கள் துயர் துடைக்கும் விதமாக விலை இல்லாத சேவையாக அல்லது மிக குறைந்த கட்டணத்தில் வெள்ளம் பாதித்த வீடுகளில் செப்டிக் டேன்க் நிறைந்த வீடுகளில் கழிவு நீர் அகற்றும் ஊர்திகளை கொண்டு நிறைந்துள்ள நீரை அகற்ற வேண்டும் என்பது இன்றைய அவசர தேவையாகும்...
ramalingam gurusamy - Toronto ,கனடா
2016-01-03 00:14:33 IST
வங்கி பெயர்,வங்கிகிளை பெயர், கணக்கு வைத்திருப்போரின் பெயர் தவறாகவோ முழுமை இன்றியும் இருப்பதால் இரண்டு லட்சம் வெள்ளம் பாதிப்போருக்கான நிவாரண தொகை பெற்ற இயலாமல் திண்டாடுகின்றனர் இவர்கள் ஏற்கனவே வழங்கி உள்ள மொபைல் எங்களுக்கு எஸ் எம் எஸ் மூலம் மேற்படி தகவல் அரசினால் அனுப்பப்பட்டுள்ளது. இதனை அறியாமலும் வாசிக்கத் தெரியாதவர்களும் பாதி பேர் உள்ளனர் என்பதே தெரிய வரும் உண்மை. அடுத்தவர்களின் உதவியால் அரசின் தகவலை படித்து அறிந்து கேட்கப்பட்டுள்ள அனைத்து வங்கி விபரங்களையும் செய்தியை பெற்றுள்ள அதே மொபைல் மூலம் அனுப்புமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறித்திய விளம்பர வாசகங்களை அப்பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையம், வி,ஏ.ஓ அலுவலகம்,கல்வி நிலளையங்கள் ஆகியவற்றில் தமிழில் எழுதி விளம்பரம் செய்தால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்ப்பட்டு அனைவரின் வங்கி விபரங்களையும் அரசு பெற்றிடலாம்...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-01-01 05:55:31 IST
கருணாவே தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறை பற்றிக் கவலை தெரிவித்து இருக்கிறீர்கள். இந்தப் பற்றாக்குறை எல்லாம் உம்மால் அரசுக்கு வந்ததுதான். வழக்கமா கஜானாவைக் காலி செய்வதெல்லாம் உமது திருவிளையாடல்தான். இவை எல்லாமே உமது திருவிளையாடல்தான்,உமது கைதான் எப்பவும் நீளம் ஆச்சே அரிப்பெடுத்த கையாச்சே.அதன் வேலையைக் காட்டாமல் இருக்குமா ???...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-01-01 05:52:22 IST
அம்மா முழு மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் ,இது உறுதி ....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-01-01 05:32:34 IST
இந்தியாவில் மற்றும் உலகெங்கிலும் நிறைந்து உள்ள தினமலர் வாசர்களுக்கு ஹாப்பி நியூ இயர் 2016 .READERS IN INDIA AND AROUND THE WORLD WISH YOU ALL A HAPPY AND PROSPEROUS NEW YEAR 2016 .....
ramalingam gurusamy - Toronto ,கனடா
2016-01-01 05:03:08 IST
திராவிட கழகங்களுக்கு பேனர் வைப்பதிலும் கட் அவுட் கட்டுவதிலும் மக்கள் வரிப்பணத்தில் [தங்கள் கைப்பணத்தில் அல்ல] வழங்கப்படும் நல திட்டம் மற்றும் நிவாரண பொருட்களிலும் பிச்சைக்காரதனமாக தங்கள் படங்களையும் ஸ்டிக்கர்களையும் ஒட்டி மலிவு விளம்பரங்களை போட்டுக் கொள்வது கைவந்த கலை அவர்கள் வசிக்கும் வீட்டின் மீதும் வெளிப்புற சுவர்களிலும் தங்கள் கைப்பணத்தில் நாகரிக நாரிமணிகள் தங்கள் புகைப் படங்களையும் பேனர் கட் அவுட்களையும் விளம்பரம் செய்திட தயங்குவது எதனால் தங்கள் கைப்பண்டம் கரைந்துவிடும் என்றா? இதைத்தான் ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி வீட்டு கையே என்பார்கள் தமிழ் அறிந்தோர். இன்று கட் அவுட் கலாச்சாரத்தால் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை சிதைத்தவர்கள் மலிவுவிலை விளம்பர அதிபதிகளான திராவிட கட்சியின் உடன்பிறப்புக்களே. தமிழர்கள் உணர வேண்டிய தருணமிது ....
Muniyandi V - pondicherry,இந்தியா
2016-01-01 01:26:19 IST
புதுவையில் பல கடைகளில் குளிர்பானங்களுக்கு அதிக பட்ச விலையை விட அதிகமாக குளிர்விற்பதர்க்கு என்று பணம் வாங்குகிறார்கள். குளிர்பானம் என்பதே குளிர்ச்சியுடன் பருகுவதர்க்கே. குளிர்ச்சியுடன் அதிகபட்ச விற்பனை விலையை விட அதிகமாக விற்பனை செய்கிறார்கள் இதனை புதுவை அரசு ஆய்வு செய்துஉடனடி நடவடிக்கை மேற்கொண்டு நுகர்வோர் நலன் காக்க வேண்டுகிறேன். அதிகமாக...
Muniyandi V - pondicherry,இந்தியா
2016-01-01 01:10:23 IST
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  .... 20 Next »Last »
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.


» தினமலர் முதல் பக்கம்
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X