Advertisement
    தினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துக்களையும் வாசகர்கள் தெரிவிக்க விரும்பினால் இந்த பகுதியில் தெரிவிக்கலாம். நன்றி.
வாசகர் கருத்து
பக்கம் - 5
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-25 18:52:40 IST
தமிழகம் சர்ச்சையின் புகலிடமாக ஆகிவிட்டதோ என தோன்றுகிறது.வைரமுத்து-ஆண்டாள் பிரச்சினை,விஜயேந்திரர் -தமிழ்த்தாய் பிரச்சினை என தமிழகத்தில் சர்ச்சைகள் அதிகரித்து வருவது.ஏற்புடையதாக இல்லை.இந்த நிலை மாறி தமிழகம் அமைதியின் புகலிடமாக திகழவேண்டும்....
g.s,rajan - chennai ,இந்தியா
2018-01-23 15:32:22 IST
ரயில்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப் போவதாக செய்திகள் வருகின்றன .மொதல்ல ரயில்ல ஏறும் இறங்கும் படிகளை ஒழுங்கா நல்ல அகலமா வையுங்கடா மக்களுக்கு நாக்குத் தள்ளுது ,கால் இடறினால் பலருக்கு கபால மோட்சம் நிச்சயம். ஜி.எஸ்.ராஜன் சென்னை ....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-23 07:10:19 IST
ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பான தனக்கு எதிரான புகார் மற்றும் சாட்சியங்களை அளிக்க வேண்டும், அதன்பின்பு குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்ற சசிகலாவின் கோரிக்கையை ஏற்றால் விசாரணை முடிவடைய 15 ஆண்டுகள் ஆகிவிடும் என்று விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமி கருத்து தெரிவித்து இருக்கிறார்.இது மிகவும் வருந்த தக்கது-இந்த விசாரணைக்கு முழு முதல் ஒத்துழைப்பு தரவேண்டிய நபரான ஜெயலலிதாவின் உயிர்தோழி காலதாமதம் செய்வது வினோதமாக இருக்கிறது....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-22 07:46:23 IST
ஆக்கப்பூர்வமான கருத்தை வரவேற்போம்.பல்வேறு வங்கிகளில் நிலுவையில் உள்ள, 15 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை வசூலிக்க, சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட சொத்துகளை, 'ஜப்தி' செய்யவேண்டும்,''என, தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலர், அருணாசலம் அவர்கள் கூறியிருக்கிறார்.தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையா உள்ளிட்ட , வாராக்கடன் வைத்திருப்பவர்களின், தனிப்பட்ட சொத்துகளை ஜப்தி செய்தால் மட்டுமே, வாராக்கடன் வசூலாகும்என்பதை எவராலும் மறுக்க முடியாது.வங்கிகளில், நகைக்கடன்,கல்விக் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் புகைப் படத்தை பிரசுரித்து, அவர்களிடம் இருந்து கடனை வசூலிப்பது போன்று,வாராக்கடன் வைத்துஉள்ள பெருமுதலாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, லோக்சபா நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது, இதை, மத்திய அரசு ஏற்க வேண்டும்.அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்படும், வங்கிகளின் தலைவர், நிர்வாக இயக்குனர் போன்றோரின் நிர்வாக குளறுபடிகள் தான், இத்தகைய பிரச்னைகளுக்கு காரணம் ஆகும் .முறைகேடு, ஊழல், வாராக்கடனுக்கு காரண மான, வங்கி உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.திவாலாகும் வங்கிக் கிளைகளை, வாடிக்கையாளர்களின் டிபாசிட் தொகையை வைத்தே புனரமைக்கும், 'நிதி தீர்வு மற்றும் வைப்புத் தொகை காப்பீடு' மசோதாவால், தங்களின் டிபாசிட் தொகைக்கு பாதுகாப்பு இருக்காது என்ற அச்சம், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இதனால், வங்கிகளில் உள்ள தங்கள் டிபாசிட் பணத்தை, அவர்கள் திரும்ப பெறுகின்றனர். எனவே, அந்த மசோதாவை, மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அருணாசலம் கூறி இருக்கிறார் .வங்கி ஊழியர் சம்மேளன பொது செயலாளர் அவர்களின் கருத்து ஏற்புடையதே.மத்திய அரசு இதில் செவி சாய்க்க வேண்டும்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-22 06:14:07 IST
ஜெயலலிதாவின் நிழலான அவரது உயிர்த்தோழிதான் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் முக்கிய மர்மங்களை வெளிப்படுத்த வேண்டும். இவர் தெரிவிக்கும் கருத்துக்கள்தான் இவ்விசாரணைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது....
g.s,rajan - chennai ,இந்தியா
2018-01-20 13:00:00 IST
நம்ம இந்தியாவுல ஒரு ரயிலோட பேரு என்ன , எங்க போகுது என்னன்னே தெளிவாத் தெரியல ,முன்னும் பெயர் பலகை இல்லை பின்னும் இல்லை பக்கவாட்டிலும் எழுதி இருப்பது சரியாத் தெரியல எவ்வளவோ தகவல் தொழில் நுட்பம் மின்னணுத் துறை முன்னேறி இருக்கு ,இன்னும் ஹைதர் அலி கால முறையே பின் பற்றி வருவது வேதனை . பண்டிகைக் காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப் போறாங்களாம் ,நாசமாப் போச்சு. முதலில் அதைத் தெளிவு படுத்தட்டும் .பாசஞ்சர் ரயிலுக்கு நீல நிறம் , எக்ஸ்பிரஸ் அதாவது விரைவு ,அதிவிரைவு வண்டிகளுக்கும் அதே நீல நிறம், எப்படிக் கண்டுபிடிப்பது ???வேறுபடுத்துவது ,அதுதான் மக்களுக்குத் தெரியல. ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2018-01-20 12:35:28 IST
பண்டிகைக்கு காலங்களில் ரயிலில் பயணம் செய்தால் அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசின் ரயில்வே துறை முடிவு செய்து உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன ,மக்களின் நெருக்கடியைப் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி கள்ள மார்க்கெட்டில் ப்ளாக்கில் டிக்கெட் விற்பது போல பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க முடிவு செய்து உள்ளதாக வரும் செய்திகள் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .இருப்பிடம் வைகுண்டம் என்று கூறுவார்கள் அது போல அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே, எதுக்கு மக்கள் அதிக காசு குடுத்து கூட்டத்துல போய் நெரிசல்ல சிக்கி உக்கார இடமே இல்லாம கால் கடுக்க நின்னுக்கிட்டு பயணம் செய்யணும் ,டிக்கெட் எடுத்து முன் பதிவு செய்யப்பட பெட்டியில் நாய் மாதிரி அங்கும் இங்கும் அலையனும் டிக்கெட் பரிசோதகர்களால் விரட்டப் படணும் . இன்னும்கா அதிக காசு கொடுத்து,அபராதம் கட்டி தண்டம் அழணும்.???அப்படி இல்லேன்னா உள்நாட்டுல ரயில்ல ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடம் போறதுக்கு உள்நாட்டு விசா மாதிரி இந்தியாவுல எங்கயும் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்யலாம் ,வெளிநாட்டுக்குப் போகறதுக்குத் தான் விசா வேண்டுமா ???உள்நாட்டுக்கே இந்தியாவில் விசா கொடுக்க மத்திய அரசு முடிவு செய்யலாம் அப்படி செஞ்சா தேவையானவங்க மட்டும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு போவாங்க,வருவாங்க ,மத்தபடி வெட்டியாய் போறவங்க தேவை இல்லாம இஷ்டப்படி மனம் போன போக்கில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு ,மற்றொரு ஊருக்கு போக மாட்டாங்க அடிக்கடி போய் போய் அரசாங்கத்துக்கு தொந்தரவு கொடுக்க மாட்டாங்க ,ஏன்னா ரயில்வேத் துறையில மக்களுக்குத் தகுந்த மாதிரி தேவையான நேரங்களில் போதுமான ரயில்களை மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இதுநாள் வரை முடியல ,அப்ப என்ன செய்யறது ,ரயில்ல போக இது மாதிரி கட்டுப்பாடு விதிக்கலாம் ஒரு நாளைக்கு ஒரு மாதத்திற்கு ஒரு வருடத்திற்கு இத்தனை முறைதான் செல்ல வேண்டும் என்று சொல்லி விடலாம் சரிதானே .மக்களுக்கு தீவிர நெருக்கடி கொடுக்கலாம் இப்போது கூட அவசரத்துக்கு ரயில்களில் நினைத்தவுடன் போக முடியாது அவ்வளவு கூட்டம் நெருக்கடி ,முன் பதிவு செய்யப் படாத பெட்டிகளில் பயணம் செய்து பார்த்தால் தான் தெரியும் ,அந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது ,எப்பொழுதும் மக்கள் முன்பதிவு செய்துதான் பயணம் செய்ய வேண்டுமா ??அது எப்படி எல்லா நாளும் சாத்தியம் ???தெரியவில்லை ஆத்திர அவசரத்திற்கு செல்லும் நபர்கள்,நல்லது கெட்டதுக்கு உடனடியாகச் செல்லும் நபர்கள் ரயில்களில் எப்படிப் பயணம் செய்வது ,அதுதான் மக்களுக்கு இன்னும் புரியவில்லை . ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2018-01-17 12:37:51 IST
இனி ரயில்களில் பண்டிகைக் காலங்களில் தாறுமாறா கட்டணத்தை உயர்த்தப்போறதா செய்திகள் வருகின்றன ரயில்வே துறைக்கு அழிவு காலம் ஆரம்பம். இனி ரெண்டு கண்ணால ரயிலைப் பாத்தாக் கூட காசு கேப்பாங்க போல இருக்கு அநியாயம் அக்கிரமம்...
g.s,rajan - chennai ,இந்தியா
2018-01-17 11:21:54 IST
தமிழ்ப் புத்தாண்டை சித்திரையில் இருந்து தைக்கு மாற்றிய அறிவு ஜீவிகள் மழைக்காலத்தையும் வெயில் காலத்தையும் மாற்றாமல் விட்டார்களே அதுவரை சந்தோஷம் ....
g.s,rajan - chennai ,இந்தியா
2018-01-16 12:35:23 IST
இந்து மதத்தில் கடவுளாகப் போற்றப்படும் ஆண்டாள் குறித்து அவதூறாகப் பேசிய விஷயத்தில் தற்போது நிலைமை மோசமாகி விட்டது .இன்னும் நிலைமை மோசமானால் பாத்வா ,கனிமொழி மற்றும் வைரமுத்துவுக்கு விடுக்கப் படலாம்,பத்மாவதி படத்தில் ராஜபுத்திர வம்சத்தை இழிவு படுத்தியதற்காக பிரபல ஹிந்தி நடிகை தீபிகாவுக்கு பாத்வா அறிவித்தனர் ,பிறகு அந்த நடிகை மன்னிப்பு கேட்டார் அது போல இங்கும் இந்து மதத்தை இழிவு படுத்தியதாக நடக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது .தலைக்கு விலை நிர்ணயம் செய்யும் நிலை கட்டாயம் இவர்களுக்கும் வந்துவிடும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2018-01-15 12:25:33 IST
இந்துக்களின் மனதை புண்படுத்தும் எவரையும் சும்மா விடக் கூடாது ,வைரமுத்து மற்றும் கனிமொழி போன்றவர்களின் கொட்டத்தை அறவே ஒடுக்க வேண்டும் .இதற்கு இந்துக்களிடம் ஒற்றுமை அதிகரிக்க வேண்டும் ,கடவுளை இழிவு படுத்தினால் மானாவாரியா சுளுக்கு எடுக்கணும் ,இந்து மதத்தில் இருந்து கொண்டு அதைக் கேவலப் படுத்துவது சரியல்ல ,எனவே இழிவு படுத்தும் நபர்கள் உடனே வேறு மதத்திற்கு மாறி விடுவது அவர்களுக்கும் நல்லது ,மற்றவர்களுக்கும் நல்லது ."தில்" இருந்தால் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை.பிற மதத்தை இழிவு படுத்திப் பேசட்டும் ,அப்புறம் பாருங்கள் அவர்கள் கதியை, எங்குமே தலை காட்ட முடியாது .அவர்கள் எல்லாம் தோலை உரித்து உப்புக் கண்டம் போட்டுவிடுவார்கள் தெரியுமா ???...
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-14 16:17:46 IST
மத்திய அமைச்சரிடம் நிதி பெற்று பஸ்போர்ட் என்பதற்கு பதிலாக பயணிக்கவே அச்சுறுத்தலாக இருக்கும் பேருந்துகளை மாற்றலாம். தற்போது நட்டத்தில் இருக்கும் தமிழக அரசு போக்கு வரத்து கழகத்தை நட்டமேற்படாத வகையில் சீர் செய்யலாம் என்பது முதல்வருக்கு எனது வேண்டுகோள்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-13 07:35:09 IST
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்கள், 5,000 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களது போலி நிறுவனங்கள் என, 200க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அவர்கள் வாங்கிக் குவித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும், கணக்கில் வராத சொத்து, பணம், நகை மற்றும் முதலீடுகள் என, தோண்ட தோண்ட பூதம் கிளம்புவதால், வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை என்பது சமீப காலமாக அதிகரித்து வருவதோடல்லாமல், கோடிக்கணக்கான ரூபாய் வருமான வரிஏய்ப்பு என்கிற விஷயம் எல்லாம் கூடா நட்பு மற்றும் நிழல் ராஜ்ஜியத்தின் வாயிலாக வந்த வினைகள் தான் என்பதை எவராலும் மறுக்க இயலாது....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-12 18:58:20 IST
சென்னை அடையாறு ஆற்றின் மீது, அனகாபுத்துார் அருகே கட்டப்பட்ட மேம்பாலம், 1,000 சதுரடி, பாதுகாப்புதுறை நிலபிரச்னையால், சுமார் ஆறு ஆண்டுகளாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்,தற்போது, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருப்பதால், இந்த பிரச்னைக்கு,மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் தமிழக அரசு ஒரு முடிவுகட்ட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள தரப்பாக்கம், கோவூர், 2 ம் கட்டளை, கெருகம்பாக்கம் பகுதி மக்கள், அனகாபுத்துார், பம்மல், பல்லாவரம் பகுதிகளுக்கு செல்ல, அடையாறு ஆறு, இடையில் பயணிப்பதால், சாலை மார்க்கமாக, பல கி.மீ., துாரம், சுற்றி செல்ல வேண்டியுள்ளது.தரப்பாக்கத்தில் இருந்து அடையாற்றை கடந்தால், எளிதாக இப்பகுதிகளுக்கு சென்று விடலாம்.இதனால், தினசரி, மாணவர்கள், அரசு (ம) தனியார் அலுவலகங்களுக்கு செல்பவர்கள், அடையாற்றை கடந்து,அங்கும், இங்கும் செல்கின்றனர். இருசக்கர வாகனங்கள், அதிக அளவில் சென்று வருகின்றன.பம்மல், அனகாபுத்துார் பகுதிகளில் உள்ளவியாபாரிகள், இதன் வழியாக, கோயம்பேடு மார்க்கெட்டிற்கும் சென்றுவருகின்றனர். இதனால், இந்த பாதையில் மேம்பாலம் கட்டினால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மிகவும் பயனடைவர் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 2008ல், அனகாபுத்துார்- - தரப்பாக்கம் இடையே, அடையாற்றின் மேல், 4.70 கோடி ரூபாய் செலவில், மேம்பாலம் கட்டும் பணிதுவங்கியது.இதில், 80 % பணிகள் முடிந்த நிலையில், அனகாபுத்துார் பகுதியில் மேம்பாலம் இறங்க வேண்டிய இடம், இந்திய விமானப் படைக்கு சொந்தமானது எனக் கூறி, பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.இந்த மேம்பால பணிகள் முழுமையாக முடிய, விமானப்படைக்கு சொந்தமானது என கூறப்படும், 1,000 சதுரடி நிலம் மட்டுமே தேவை.காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், இடத்தை ஆய்வு செய்தது. நெடுஞ்சாலைத் துறை-, விமானப்படை அதிகாரிகள், பேச்சு நடத்தி அனகாபுத்துாரிலேயே மாற்று இடம் வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், தாங்கள் வழங்கும் நிலத்திற்கு ஏற்ற மதிப்பில், மாற்று இடம் வேண்டும் என, விமானப்படை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு, மாவட்ட நிர்வாகம் ஒப்புக் கொண்டது.ஆனால், மாவட்ட நிர்வாகம் தரும், மாற்று இடத்தை ஏற்க முடியாது என, விமானப் படை அதிகாரிகள், திடீரென, நிலத்தை வழங்காமல் கைவிரித்துவிட்டனர்.இது சம்பந்தமாக, பெங்களூரு, டில்லியில் உள்ள, விமானப்படை நிர்வாக அதிகாரிகளுக்கு, பலமுறை கடிதம் எழுதியும், பயனில்லை.இதனால், பணிகள் நிறுத்தப்பட்டு, ஆறு ஆண்டுகள் ஆகியும், மேம்பாலம் அரைகுறையாக அப்படியே உள்ளது.ஆயிரம் சதுரடி நிலத்திற்காக, நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பால திட்டம் முடக்கப்பட்டுள்ளது, பொது மக்களிடையே, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நிலத்தை ஒப்படைக்க, பாதுகாப்பு துறை முன்வந்தால், பணியை முடித்து, மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு திறக்க, நெடுஞ்சாலைத் துறை தயாராக உள்ளது.தற்போது தமிழகத்தைச் சேர்ந்த,நிர்மலா சீதாராமன், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருக்கிறார்.மக்கள் நலத் திட்டங்களுக்கு, முட்டுக்கட்டையாக உள்ள, பாதுகாப்பு நிலம் தொடர்பான பிரச்னைகளை,மத்திய அரசுடன் இணக்கமாக உள்ள தமிழகஅரசு, தற்போது பேசி எளிதாக தீர்க்க வேண்டும் என்பதே, இப்பகுதி பொதுமக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஆகும்.மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து இந்த மக்களுக்கு அவசியமான ஆக்கப்பூர்வமான பணியை முடித்து,அரசுப்பணம் வீணாவதை தவிர்க்குமா?...
Bhaskaran - madurai,இந்தியா
2018-01-12 13:37:07 IST
சார், கோவில்கள் பற்றிய தினமலரின் தொகுப்பு மிக பிரமாதம் . அதுபோல் இந்தியாவில் இன்று வாழும் மடாதிபதிகள் முனிவர்கள் ரிஷிகள் குருக்கள் சாதுக்கள் சந்நியாசிகள் வேதிகர்கள் ஆச்சார்யர்கள் மற்றும் மடங்கள் குருகுலங்கள் சித்தாஸ்ரமகள் பற்றிய எல்லா தகவல்களும் கொண்ட ஒரு பக்கத்தை உருவாக்கி தரவேண்டும் .இதன்மூலம் மக்கள் அவர்களை எளிதில் கண்டு தங்களின் பிரச்சினைகளை நல்லவழிகளில் தீர்த்துக்கொள்ளவும் முடியும் .மக்களும் நல்லவழி யில் வாழவும் உதவும் . இது உடனடியாக தங்கள் வலையத்தளத்தில் வெளிவரும்பட்சத்தில் இந்தியா வெகுவிரைவில் முன்னேற்றமடைந்து வல்லரசாகும் . இது தங்களுக்கு பெரும் போற்றுதலையும் , உலகளாவிய புகழையும் , மக்களின் வாழ்த்துக்களையும் புண்ணியத்தையும் தரும் . அதோடு இன்றைய முக்கியதேவையான நன்கு வேதம்கற்றுள்ள புரோகிதர்களையும் பண்டிதர்களையும் மக்கள் எளிதில் கண்டுகொள்ளும்படி முகவரி மற்றும் தொடர்பு கொள்ளும் படி போன் எண்கள் போன்றவைகளும் இருக்கவேண்டும் . பொதுமக்கள் தங்களின் குலதெய்வங்களை அறிய சோதிடத்தில் ஐந்தாம் பாவம்பற்றியும் அதிலமரும் கிரகங்கள் பார்க்கும் கிரகங்களின் மூலம் எளிதில் கண்டுகொள்ள உள்ள வழிகள் பற்றியும் சொல்லவும் . அதன்மூலம் இன்று கோடிக்கணக்கான மக்கள் குலதெய்வம் தெரியாமல் , வழிபடமுடியாமல் போவதால் , முறையற்ற காதல் , குழந்தையின்மை போன்றவைகளிலிருந்து விடுபடுவார்கள் . பொதுமக்கள் தங்கள் பாவங்களையும் அதன் நிவர்த்தி வழிகளும் அறியும்படி கருட புராணம் சேர்க்கவும் .மேலும் ஏழை பிராமணர்கள் பற்றிய குறிப்புக்கள் இருப்பின் தானம் கொடுக்கவும் கோவில்களில் பூஜை செய்ய பனி அமர்த்தவும் வழிகிடைக்கும் . இது மிகப்பெரிய பலன் கொடுக்கும் . எனவே தாங்கள் தங்களின் நிருபர்களின் மூலம் அந்தந்த பகுதிகளின் உள்ள விபரங்களை தொகுத்து வழங்கவும் , பொதுமக்களின் மூலம் ஆன்லைனில் பெறவும் வழிவகை செய்ய தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றியுடன் - பாஸ்கரன் . 9445429832...
g.s,rajan - chennai ,இந்தியா
2018-01-12 12:21:27 IST
வருமான வரி உச்சவரம்பை ஆண்டுக்கு ஐந்து லட்சமாக உயர்த்துங்கள் ,இதனால் மாத சம்பளம் வாங்கி அரைகுறையாக குடும்பம் நடத்தும் நடுத்தர குடும்பங்கள் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விடுவர்.எப்பொழுதும் பற்றாக்குறை பட்ஜெட்டை போட்டு குடும்பத்தை கடனை உடனை வாங்கி ஓட்டும் மக்களின் வாழ்க்கை ஓடும் .இல்லை என்றால் விஷம் போல நாளுக்கு நாள் ஏறி வரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துங்கள் ,அது போதும் அருண் ஜெட்லீ அவர்களே ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2018-01-12 12:20:12 IST
வருமான வரி உச்சவரம்பை மூன்று லட்சமா உயர்த்த இருப்பதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ கூறி உள்ளார் .மொதல்ல இந்தியாவுல தாறுமாறா ஏறி வரும் விலைவாசியைக் குறையுங்க, சம்பளத்தை ஏத்தச் சொல்லி ஒரு பயலும் கேக்க மாட்டான், வருமான வரி பற்றியும் மாத சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள் இனிமேல் கவலைப் படவேண்டாம் மாத சம்பளம் வாங்கும் மக்களிடம் அவர்களைக் கேட்காமலே வருமான வரியைப் பிடித்துக்கொள்ளும்(TDS-Tax Deduction at Source) என்ற ஈனமான வெட்கங்கெட்ட கேடுகெட்ட செயலை அற்பமான செயலை இனியும் இந்தியாவில் தொடரவேண்டாம் அதற்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி இனியாவது வைக்கப் பட வேண்டும்.சாதாரணமா வாழ்க்கை நடத்தும் மக்களுக்கு எதுக்கு வருமான வரி ????தேவையே இல்லை . ஜி.எஸ்.ராஜன் சென்னை ,...
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-12 08:04:14 IST
ஒரு பொறுப்பு வாய்ந்த முன்னாள் தலைமை செயலாளரும்-ஆலோசகரும் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்கவில்லை எப்படி உண்மையை கண்டறிய முடியும்?விசாரணை ஆணையம் இது விஷயத்தில் எப்படி என்ன முடிவெடுக்கும்?திருமதி ஷீலா அவர்கள் சிந்திப்பாரா?...
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-12 07:42:43 IST
தமிழக அரசா?போக்குவரத்து தொழிற்சங்கமா? என்கிற நீயா-நானா? போட்டி நிலவிய நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்னையில், மத்தியஸ்தம் செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதியை, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது. அத்துடன், போராட்டத்தை கைவிட்டு, உடனே பணிக்கு திரும்பவும், நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியதால், தொழிற்சங்கங்கள் போராட்டத்தை, வாபஸ் பெற்றுள்ளன. இதனால், எட்டு நாட்களாக முடங்கிய அரசு பஸ்கள், இன்று முதல் ஓடும். பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல காத்திருந்தோரும், நிம்மதி அடைந்துள்ளனர்.எனினும் போக்குவரத்து தொழிலாளர் நலன் விஷயத்திலும் போக்குவரத்து துறை லாபத்தில் இல்லாமல் போனாலும் நட்டத்தில் இயங்காத நிலைக்கு மத்தியஸ்தம் செய்கிற அதிகாரி மேற்கொள்ள வேண்டும் இதுவே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-11 16:19:29 IST
தமிழகத்தில் மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மாநகராட்சி மேயர், நகராட்சி, பேருராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்யும் முறையை மாற்றி கவுன்சிலர்களே தேர்வு செய்யும் வகையில் கடந்த 2016 ல் சட்டம் இயற்றப்பட்டது.இந்நிலையில், இதனை மாற்றி, மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களையும் மக்களே தேர்வு செய்யவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.கவுன்சிலர்களை தேர்வு செய்கிற அதே நேரம் மேயர் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு அளித்திருப்பது வரவேற்புக்கு உரியது....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-11 07:49:32 IST
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா மீதான நாடுகடத்தல் வழக்கின் விசாரணை இன்று துவங்குவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மல்லையா இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் லண்டன் தப்பியோடினார். இந்தியாவால் "தேடப்படும் குற்றவாளி" என சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். சி.பி. ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் மல்லையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வருவதாக இந்தியா சார்பில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.எதுவாக இருப்பினும் இந்திய வங்கிகளில் "தேடப்படுகிற குற்றவாளி" செலுத்த வேண்டிய ரூபாய் 9000 கோடிக்கு வசூல் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது இந்திய அரசின் கடமையாகும்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-11 07:34:59 IST
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவரை சந்தித்தவர்கள் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளதாக, ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் கூறியுள்ளது. ஜெயலலிதாவை அவரது அண்ணன் மகன் தீபக், முன்னாள் தலைமை செயலர் ராமமோகனராவ், முன்னாள் தமிழக அரசின் சிறப்பு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், டாக்டர் பாலாஜி ஆகியோர் சந்தித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறியுள்ளது. இருப்பினும் சந்தித்தவர்கள் அவருடன் பேசினார்களா? என்கிற விவரமும் தெரிவிக்கப் பட்டிருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்கும்....
k prabhakaran - chennai,இந்தியா
2018-01-08 12:15:58 IST
ஐஓபி லோன்ஸ் வைவேர் இல்லை. ஐஓபி செய்வது இதுவரை உள்ள லாஸ் அட்ஜஸ்ட் செய்ய ஷேர் பிரீமியம் பணத்தை மாறிடுகிறது கடன் தள்ளுபடி இல்லை ....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-08 08:55:50 IST
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு சமம் என்று கூறியுள்ளார் திவாகரன்.ஏன் எம் ஜியாரும் ஜெயலலிதாவும் நடிக்க நடிகையர்தானே? அவர்கள் அரசியலில் இருந்து சாதிக்கவில்லையா என்ன?அது போலத்தான் ரஜினியும் கமலும் அரசியலுக்கு வர விரும்புகிறார்கள்.அவர்கள் சாதிக்கிறார்களோ சாதிப்பதில்லையோ என்பது அப்பாற்பட்ட விஷயம்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-07 06:01:00 IST
ஏற்கெனவே மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் அவரது இணை பிரியா உயிர்த்தோழி சசிகலாவுக்கும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கப்பட்டது.இன்று அதே பாணியில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அவர்களுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் பத்து லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.இதனை முன் உதாரணமாகக் கொண்டு இனி வரும் காலங்களிலேனும் அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கவோ-அளவுக்கு அதிகமாக சொத்து சேர்க்கவோ முற்படலாகாது....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.


» தினமலர் முதல் பக்கம்
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X