அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் கும்பாபிஷேகம் Live

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின்‌ இளம்பிறை போலும்‌ எயிற்றனை
நந்தி மகன்‌ தனை ஞானக்‌ கொழுந்தினைப்‌
புந்தியில்‌ வைத்து அடி போற்றுகின்றேனே
– திருமூலர்
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்‌
விநாயகனே வேட்கை தணிவிப்பான்‌ விநாயகனே
விண்ணிற்கும்‌ மண்ணிற்கும்‌ நாதனுமாம்‌
தன்மையினால்‌ கண்ணிற்‌ பணிமின்‌ கணிந்து
- கபிலர்‌
பாலும்‌ தெளிதேனும்‌ பாகும்‌ பருப்பும்‌ இவை
நாலும் கலந்துனக்கு நான்‌ தருவேன்‌ கோலஞ்செய்‌
துங்கக்‌ கரிமுகத்துத்‌ தூமணியே நீயெனக்குச்‌
சங்கத்‌ தமிழ்‌ மூன்றும்‌ தா
- ஒளவையார்‌

மூவிரு முகங்கள்‌ போற்றி!
முகம்‌ பொழி கருணை போற்றி!
காஞ்சி மாவடி வைகும்‌ செவ்வேல்‌
மலரடி போற்றி அண்ணான்‌
சேவலும்‌ மயிலும்‌ போற்றி!
திருக்கை வேல்‌ போற்றி! போற்றி!