வடபழநி ஆண்டவர் கோவிலில் ஆறாம் கால யாக சாலை பூஜை மகா பூர்ணாஹுதி

ஜனவரி 23,2022சென்னையில் வடபழநி ஷேத்ரத்தில் அமைந்துள்ளது வடபழநி ஆண்டவர் கோவில். இக்கோவிலுக்கு, 2007ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 14 ஆண்டுகள் கழிந்த நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த,பாலாலயம் செய்யப்பட்டு, ஆகம விதிகளின் படி திருப்பணிகள் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து, இன்று (23ம் தேதி) ராஜகோபுர, விமானங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற விருக்கிறது. இன்று காலை 6.00 மணிக்கு ஆறாம் காலயாக சாலை பூஜைகள் துவங்கியது. தொடந்து நாடி சந்தனம், தத்வார்ச்சனை, ஸ்பர்ஸாஹுதி நடைபெற்றது. காலை 7.00 மணிக்கு பரிவார யாகசாலை மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்று வருகிறது. சற்று நேரத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.