அருள்மிகு வடபழநி ஆண்டவர்‌ தரிசனம்‌

ஜனவரி 19, 2022


vadapalani murugan temple dharishanam

தொண்டை நன்னாடு (சான்றோர்‌ உடைத்து) எனும்‌ ஒளவையின்‌ மொழியாலும்‌, தூய மாதவம்‌ செய்தது தொண்டை நன்னாடு என்று சேக்கிழார்‌ பெருமானாலும்‌, புகழப்பட்ட சிறப்பு டையது தொண்டை நன்னாடு. அதிலும்‌ செல்வமலி குன்றத்தூர்‌ சேக்கிழார்‌ பெருமான்‌ அவதாரம்‌ செய்தது புலியூர்‌ கோட்டம்‌. அந்த புலியூர் கோட்டம்‌ எனும்‌ பழம்‌ பதியில் தருமமிகு சென்னையில் கார்‌ கோடகன்‌ எனும் நாகதேவனாலும் வியாக்கிரபாதர்‌ எனும்‌ புலிக்கால்‌ முனிவராலும்‌ வழிபட்ட வேங்கிச்சரம்‌ எனும்‌ சிவாலயத்திற்கு அருகில்‌ அமைந்துள்ள வடபழநியில்‌ உள்ள அருள்மிகு வடபழநி ஆண்டவரை தரிசிக்க செல்கிறோம்‌. வடபழநி ஆண்டவர்‌ சன்னதி

தெருவில்‌ நின்று சுமார்‌ 12 அடி உயரமுள்ள அழகான ராஜ கோபுரத்தை தரிசனம்‌ செய்கிறோம்‌. கோபுர தரிசனம்‌ கோடி புண்ணியம்‌ என்பார்கள்‌. ராஜகோபுரம்‌ பக்தர்களின்‌ பொருளு தவியால்‌ இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தால்‌ மிகவும்‌ அழகுற சுதை வேலைப்பாடுடன்‌ செய்யப்பட்டுள்ளது. கோயிலினுள்ளே செல்கிறோம்‌. முதலில்‌ வந்தோருக்கெல்லாம்‌ அருளை வாரி வழங்கிக்‌ கொண்டிருக்கும்‌ ஸ்ரீ வரசித்தி விநாயகர்‌ அழகிய மண்டபத்தில்‌ வீற்றிருக்கிறார்‌.

அருகம்புல்‌ மாலையுடன்‌ அழகாக காட்சி தருகிறார்‌.

நெய்‌ விளக்கேற்றி ஆராதனை செய்கிறார்‌ அர்ச்சகர்‌. அருள்மிகு வரசித்தி விநாயகரை தரிசனம்‌ செய்து ராஜ கோபுரத்தின்‌ உள்ளே செல்கிறோம்‌. மேற்குப்புறம்‌ அமைந்துள்ள அருள்மிகு சொக்க நாதரை தரிசிக்கிறோம்‌. ஐந்து தலை நாக கவசத்துடன்‌ மிக அழகாக வீற்றிருக்கிறார்‌. நெய்‌ தீபம்‌ ஏற்றி ஆரத்தி காட்டுகிறார்‌ அர்ச்சகர்‌. மதுரை சொக்கதாதரை தரிசித்தது போன்ற திருப்தியுடன்‌ வெளி பிரகாரத்தில்‌ செல்கிறோம்‌.

அருள்மிகு சொக்கநாதர்‌ சன்னதியின்‌ பின்புறம்‌ தங்கத் தேர்‌ பாதுகாப்பு அறை உள்ளது. தங்கத்தேரை தரிசனம்‌ செய்கிறோம்‌. அதன்‌ பின்‌ வெளிபிரகாரத்தில்‌ உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்‌ சன்னதியை அடைந்து, விபூதி அலங்காரத்தில்‌ வீற்றிருக்கும்‌ ஸ்ரீ சுப்பிரமணியரை தரிசித்து, அதன்பின்‌ அங்காரகன் ‌சன்னதிக்கு (செவ்வாய்‌) செல்கிறோம்‌. இந்த சன்னதியில்‌ செவ்வாய் ‌தோஷம்‌ உள்ளவர்கள்‌ பரிகார பூஜை செய்ய, துவரை சாதம்‌ நைவேத்தியம்‌ செய்கிறார்கள்‌. செவ்வாயை தரிசனம்‌ செய்து அதன்‌ அருகில்‌ உள்ள அருள்தரும்‌ மீனாட்சி அம்மனை தரி௫க்‌கிறோம்‌. அருள் தரும்‌ மீனாட்சி அம்மன்‌ பச்சை பட்டுப்புடவையில்‌ மிகவும்‌ அழகாக காட்சி தருகிறார்‌. அர்ச்சகர்‌ நெய்விளக்கு ஏற்றி தீபாராதனை செய்து குங்குமப்‌ பிரசாதம்‌ வழங்குகிறார்‌. அருள்‌ தரும்‌ மீனாட்சி அம்மன்‌ சன்னதிக்கு அருகில்‌ ஆறுமுகர்‌ உற்சவர் சன்னதி உள்ளது.

அருள்மிகு ஆறுமுகர்‌ உற்சவர்‌ சன்னதியை அறுகோண வடிவில்‌ அமைத்துள்ளார்கள்‌. அதனை சுற்றிலும்‌ கண்ணாடிகள்‌ பொருத்‌தப்பட்டுள்ளது. இந்த கண்ணாடியில்‌ ஆறுமுகத்தினையும்‌ காணலாம்‌. அர்ச்சகர்‌ நெய்தீபம்‌ ஏற்றி தீபாராதனை காட்டி, எலக்‌காய்‌, பச்சை கற்பூரம்‌, கிராம்பு, ஜாதிக்காய்‌, ஜாதஇப்பத்ரீ, ஜலத்தி ரவியம்‌, பன்னீர்‌ போட்ட தீர்த்தத்தை பிரசாதமாக கொடுக்கிறார்‌.

தீர்த்த பிரசாதத்தை பெற்றுக்கொண்டு, திருப்புகழ்‌ தந்த அருணகிரி நாதரை தரிசனம்‌ செய்கிறோம்‌. பின்னர்‌ கிழக்கு கோபுரத்தின்‌ அருகில்‌ உள்ள அருள்மிகு ஆஞ்சநேயரை தரிசித்து துளசி தீர்த்தத்தை பிரசாதமாக பெற்றுக்கொண்டு அருள்மிகு வடபழநி ஆண்டவரை தரிசனம்‌ செய்ய செல்கிறோம்‌.

அருள்மிகுவடபழநிஆண்டவர் வந்தோர்க்கெல்லாம்‌ வேண்டும்‌ வரங்களை வழங்கிக்‌ கொண்டு, சந்தனகாப்பு அலங்காரத்தில்‌ மிகவும்‌ அழகாக காட்சி தருகிறார்‌. அருள்மிகு வடபழநி ஆண்டவருக்கு பால்‌ அபிஷேகமும்‌, விபூதி அபிஷேகமும்‌, சந்தனம்‌, பன்னீர்‌ அபிஷேகமும்‌ செய்து பக்தர்கள்‌ வரங்களை கேட்டு பெறுகிறார்கள்‌.