சித்தர்கள்‌ வரலாறு

ஜனவரி 19, 2022


 சித்தர்கள்‌ வரலாறு

தவத்திரு ஸ்ரீ௮ண்ணாசாமி நாயகர்‌
(முதல்‌ சித்தர்‌)

இப்போது வடபழநி ஆண்டவர்‌ கோயில்‌ உள்ள இடத்தில்‌ இன்றைக்குச்‌ சற்றே ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்‌ சாலிக்கிராமம்‌ என்னும்‌ பகுதியில்‌, அண்ணாசாமி நாயகர்‌ என்‌பவருடைய வீடு இருந்தது. அவருடைய தாயார்‌ தகப்பனார்‌ பெயர்கள்‌ தெரியவில்லை. இளமையிலேயே அவர்‌ அருள்‌ நாட்டமும்‌ இனிய குணங்களும்‌, எவரிடமும்‌ பணிவுடன்‌ இன்சொற்பேசும்‌ இயல்பும்‌, உடையவராக இருந்தார்‌. பெற்றோர்‌ அவரை வியாக்கிரபுரீஸ்வரர்‌ கோயிலின்‌ அருகில்‌ குடியிருந்த சாம்பசிவம்‌ பிள்ளை என்னும்‌ தமிழறிஞர்‌ ஒருவரிடம்‌ அனுப்பிக்‌கல்வி கற்க ஏற்பாடு செய்தனர்‌. ஆனால்‌; அவருக்கு படிப்பில்‌ நாட்டம்‌ செல்லவில்லை. நாளடைவில்‌ பள்ளிக்குச்‌ செல்வதையும்‌ நிறுத்திக்‌ கொண்டார்‌.

முன்புசெய்‌ தவத்தின்‌ ஈட்டம்‌
முடிவிலா இன்பம்‌ ஆள
அன்பினை எடுத்துக்‌ காட்ட...

என்றபடி, அவருக்கு இறையன்பு மட்டும்‌ பெருகி வளர்ந்து வந்தது. உற்ற வயதில்‌ திருமணம்‌ செய்து கொண்டு இரண்டு புதல்வர்களைப்‌ பெற்ற இவர்‌, வயிற்றுவலி நோயால்‌ மிகவும்‌ துன்பழுற்று வருந்தி வந்தார்‌. எவ்வளவோ மருத்துவம்‌ செய்தும்‌ வயிற்று வலி நீங்கவில்லை. ஒரு நாள்‌ பழநியில்‌ இருந்து தல யாத்திரையாக வந்த சாது ஒருவரை, வியாக்கிரபுரீஸ்வரர்‌ கோயிலுக்குச்‌ சென்றபோது கண்டார்‌. மிகவும்‌ அருள்நோக்கு உடையவராகக்‌ காணப்பட்ட அச்சாதுவை வணங்கித்‌ தமது குறையைச்‌ சொல்லி, அது தீரும்‌ வழி எதேனும்‌ ஒன்றைக்‌கூறுமாறு வேண்டிக்கொண்டார்‌, அண்ணாசாமி நாயகர்‌. அதற்கு அச்சாது வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, குகனுண்டு குறைவில்லை என்று கூறி, நீ இருத்திகை தோறும்‌ தவறாது திருப்போரூர்‌ சென்று வழிபட்டு வா, திருத்தணிகை நாதனுக்கு ஏதேனும்‌ புதுமுறையான காணிக்கை செலுத்து. முடிந்த போது பழநிக்குப்‌ போய்‌ தரிசனம்‌ செய்‌. உன்‌ வயிற்றுவலி தீரும்‌ என்று அருளுரை பகர்ந்தார்‌.

அதுமுதல்‌ அண்ணாசாமி நாயகர்‌ முருகபக்தியில்‌ தலை நின்றவராய்‌, அடுத்த கிருத்திகை முதல்‌ திருப்போரூருக்குத்‌ தவறாது சென்று வழிபடலானார்‌. அக்காலத்தில்‌ சென்னையில்‌ இருந்து திருப்போரூருக்குச்‌ செல்வது என்பது எளிதன்று. வசதியுள்ளவர்கள்‌ படகுகளில்‌ செல்வர்‌. மற்றவர்கள்‌ நடந்தேதான்‌ செல்லுதல்‌ வேண்டும்‌.

படகுகளும்‌ மிகுதியாகப்‌ போவதில்லை. வழியிற்‌கள்வர்களின்‌ தொல்லைகளும்‌ இருக்கும்‌. எப்படிப்‌ போனாலும்‌ குறைந்தது இரண்டு நாளாவது ஆகும்‌. அவ்வளவாக வசதியில்‌லாத குடும்பத்தைச்‌ சேர்ந்த நாயகர்‌, நடந்தே திருப்போரூருக்குச் சென்றார்‌. கள்ளர்கள்‌ நாயகரை வழிமறித்து அவரிடம்‌ இருந்த கட்டுச்‌ சோறு, துணி, சில்லரைக்‌ காசுகள்‌ எல்லாவற்றையும்‌ பறித்துக்‌ கொண்டு விட்டனர்‌. ஆயினும்‌ நாயகர்‌ மனந்தளராமல்‌ ஏகாங்கியாகவே திருப்போரூர்‌ சென்று முருகனை வழிபட்டு திரும்பினார்‌.

அடுத்த கிருத்திகைக்குத்‌ திருப்போரூர்‌ செல்லப்‌ புறப்பட்ட போது, பெருமழை பெய்து இடையிலுள்ள ஆற்றில்‌ வெள்ளம்‌ மிகுந்து, நடந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டு விட்டது. படகில்‌ சென்றவர்களும்‌ வெள்ளம்‌ கண்டு திரும்பி விட்டனர்‌. ஆனால்‌ அண்ணாசாமி நாயகர்‌ மட்டும்‌ மனம்‌ சிறிதும்‌ தளராமல்‌, திட சித்தத்துடன்‌ வெள்ளத்தை நீந்திக்‌ கடந்து திருப்போரூர்‌ சென்று வழிபட்டே திரும்பினார். ஊர்‌ மக்கள்‌ அவர்தம்‌ பக்தியின்‌ பெருக்கையும்‌, உள்ளத்திண்மையையும்‌ வியந்து புகழ்ந்தனர்‌. இருப்போரூர்‌ சென்று தொழுதும்‌ வயிற்று வலி தீர்வதாக இல்லை. வீட்டில்‌ உறவினர்கள்‌ வருந்தி கவலைப்பட்டனர்‌. இவ்வளவு வயிற்று வலியுடன்‌, ஏன்‌ தருப்போரூருக்கு நடந்து சென்று அல்லற்‌ படுகின்றீர்கள்‌? என்று அன்பால்‌ தடுத்தனர்‌.

அவன்‌ விட்டவழி ஆகட்டும்‌. அவனின்றி நமக்கு வேறு துணையில்லை. இடரினும்‌ தளரினும்‌ எனதுறுநோய்‌ தொடரினும்‌, யான்‌ திருப்போரூர்‌ சென்று முருகனை வழிபட்டே வருவேன்‌ என்று கூறி, மூன்றாம்‌ முறையும்‌ அண்ணாசாமியார்‌ திருப்போரூர்‌ சென்று முருகனைப்‌ பணிந்து வழிபட்டார்‌. வழிபாட்டை முடித்துக்‌கொண்டு, கண்ணுப்பேட்டையில்‌ சிதம்பர சுவாமிகள்‌ சன்னதியின்‌ எதிரில்‌ இரவு படுத்துக்கொண்டார்‌. அப்போது கனவில்‌ ஒரு பெரியவர்‌ தோன்றி, உன்‌ வீட்டிலேயே முருகன்‌ குடியிருக்கிற பொழுது, நீ ஏன்‌ இங்கு அவனைத்‌ தேடிக்கொண்டு அல்லற்பட்டு ஓடி வருகின்றாய்‌ ? அங்கேயே நீ முருகனை வழிபட்டு மகிழலாமே. என்று கூறக்‌ கேட்டு, உறக்‌கத்தினின்று திடுமென விழித்து எழுந்து, முருகன்‌ அருளை நினைத்து உருகித்‌ தொழுது, வீட்டுக்குத்‌ திரும்பி வந்து சேர்ந்தார்‌. செய்தியை வீட்டில்‌ உள்ளவர்களுக்கு அறிவித்து, அன்று முதல்தம்‌ வீட்டிலேயே காலை மாலை இரு வேளைகளிலும்‌, முருகனை நினைத்து வழிபாடு செய்து கொண்டு வந்தார்‌.

அப்போது அவருக்குப்‌ பழநியில்‌ இருந்து வந்த சாது முன்னர்‌ தெரிவித்தபடி, திருத்தணிகைக்குச் செல்லவேண்டும்‌ என்கிற விருப்பமும்‌, அங்குச்‌ சென்று ஏதேனும்‌ காணிக்கை செலுத்தினால்‌ தான்‌ தம்‌ நோய்‌ தீரப்‌ பெறும்‌ என்ற கருத்தும்‌, பெரிதாக நிகழ்ந்து வந்தன. முருகனை வழிபடுகிற போது அவரை நாவாரப்‌ பாடி மகிழ வேண்டும்‌ என்கிற விருப்பமும்‌ அண்ணாசாமி நாயகருக்கு உண்டாயிற்று. இளமையிற்‌ கல்வியறிவு பெறாமற்‌ போனதை எண்ணியெண்ணி வருந்தினார்‌. திருப்போரூரில்‌ அடியார்கள்‌ இருப்‌புகழ்‌ பாடி முருகனை வழிபட்ட காட்சியையும்‌, ஆங்காங்கே அன்பர்கள்‌ கந்தர்‌ அனுபூதி, கந்தர்‌ அலங்காரம்‌, கந்தர்‌ கலி வெண்பா, வேல்‌ வகுப்பு, மயில்‌ விருத்தம்‌. இருப்போரூர்ச்‌ சன்னதி முறை முதலியவற்றைப்‌ பாராயணம்‌ செய்து கொண்டு அமர்ந்திருந்த அழகையும்‌ நினைத்து நினைத்து ஏங்கினார்‌.

அடுத்த கார்த்திகையன்று நாயகர்‌ திருத்தணிகைக்கு சென்றார்‌. அடியார்களின்‌ பாராயணங்களையும்‌ அன்பர்களின்‌ திருப்புகழ்ப்‌ பாடல்களையும்‌ கேட்டுக்‌ கொண்டே தம்மை மறந்த நிலையில்‌ அவர்களுடன்‌ திருத்தணி வந்து திருக்கோயிலை அடைத்தார்‌. கொடி மரத்தின்‌ எதிரில்‌ நின்று மேலும்‌, மேலும்‌ வரிசையாகத்‌ திரண்டு வரும்‌ அடியார்களின்‌ ஆடல்‌ பாடல்களைக்‌ கண்டும்‌ கேட்டும்‌ விம்மிதம்‌ எய்தினார்‌. நெடுநேரம்‌ ஆகியது. இரவு மணி ஒன்பதும்‌ நெருங்கியது. அடியார்‌ குரல்‌ மெல்ல மெல்லக் குறைந்தது. திருக்கோயில்‌ அமைதியுற்றது. நாயகர்‌ உணர்வு எய்திக்‌ கண்‌ விழித்துப்‌ பலிபீடத்தைக்‌ கண்டார்‌. அருகில்‌ இருந்த காணிக்கை உண்டியையும்‌ கண்களால்‌ நோக்கினார்.

அவருக்கு ஏதோ ஓர்‌ உள்ளுணர்ச்சி தோன்றியது. முருகனைப்‌ பாடாத நாக்கினைப்‌ பெற்ற நாம்‌ நமது நாக்கையே அவன்‌ திருமுன் ‌ ஏன்‌ பலியிட்டுக்‌ காணிக்கை செலுத்தக்கூடாது? என்ற எண்ணம் ‌ தோன்றியது. உடனே அவர்‌ சிறிதும்‌ தாமதிக்காமலும்‌, தயங்கா மலும்‌ முருகா முருகா எனக்கூவி அழைத்துத்‌ தமது சாவிக்கொத்‌ தில்‌ இருந்த சிறு கத்தியை எடுத்து நாக்கை அறுத்து ஓர்‌ இலையில்‌ ஏந்திப்‌ பலிபீடத்தின்‌ அடியில்‌ வைத்து, அடியற்ற மரம்போலத்‌ தணிகை அண்ணலின்‌ திருமுன்‌ வீழ்ந்து வணங்கினார்‌. பழநிச் சாது தெரிவித்தது போன்று. புதுமையான காணிக்கை செலுத்திய மனநிறைவு அவருக்கு ஏற்பட்டது.

அப்போது அங்கே இருந்த மக்கள்‌ அண்ணசாமியாரின்‌ செய்கையைக்‌ கண்டு மிகவும்‌ வியப்புற்றனர்‌. அச்சமும்‌, அன்பும்‌, பக்தியும்‌, மதிப்பும்‌ கலந்த ஒருவகை உணர்ச்சி அவர்‌ களை ஆட்கொண்டது. அண்ணாசாமியாரை அணுகி நின்று. அவர்‌ யார்‌? எந்த ஊர்‌? ஏன்‌ அவர்‌ தமது நாக்கை அறுத்துக்‌ கொண்டார்‌? என்றெல்லாம்‌ அறிந்து கொள்ள, மக்கள்‌ ஆவல்‌ கொண்டனர்‌. ஆனால்‌ எப்படி அவரைக்‌ கேட்பது? அவர்‌ தம்‌ நாக்கை அறுத்துக்‌ கொண்டு தம்மை மறந்த நிலையில்‌ இருக்கின்றாரே! என்று மயங்‌ கினர்‌. நாக்கு துண்டிக்கப்‌ பெற்றதால்‌ குருதி பெருக மயங்கிக்‌ கிடந்த நாயகரின்‌ முகத்தில்‌, அன்பர்கள்‌ சிலர்‌ தண்ணீர்‌ தெளித்துப் ‌ பணிவிடைகள்‌ செய்தனர்‌. (நாக்கை அறுத்து இறைவனுக்குக் ‌ காணிக்கை செலுத்தும்‌ வழக்கத்திற்குப்‌ பாவாடம்‌ என்று மக்கள் ‌ பெயர் வழங்குவர்‌. திருத்தணிகையில்‌ நாயகர்தம்‌ நாக்கை அறுத்துக்‌ கொண்டது போல, இசையுலகில்‌ புகழ் பெற்றுள்ள மதுரை மாரி யப்ப சுவாமிகளும்‌ தம்‌ நாக்கை அறுத்துக்‌ கொண்ட பின்னரே மிகச்‌ சிறந்த இசைப்‌ புலமை எய்தினார்‌ என்பர்‌.

நாயகர்‌ முருகனுக்குத்‌ தமது நாக்கை அறுத்துக்‌ காணிக்கை செலுத்தியதின்‌ பயனாக, இருத்தணிகையில்‌ நாயகர்‌ பெற்ற முருகன்‌ படம்‌ இருந்த இடமே, இப்போது பாவாட மண்டபம்‌ என்று வழங்கப்படுகின்றது. அங்கே இவருக்குப்‌ பின்‌ வந்த வடபழநித்‌ தொண்டர்களான இரத்தினசாமித்‌ தம்பிரானும்‌, பாக்கியலிங்கத்‌ தம் பிரானும் கூட, தம்‌ குருநாதரைப்‌ போல தங்கள்‌ நாக்கை அறுத்து முருகனுக்குக்‌ காணிக்கை செலுத்திப்‌ பாவாடம்‌ தரித்துக்‌ கொண்ட னர்‌. அதனாலேயே ௮ம்‌ மண்டபத்திற்கு அப்பெயர்‌ அமைந்தது. )

நீண்ட நேரம்‌ கழித்து நாயகர்‌ நினைவு பெற்றுக்‌ கண்விழித்தார்‌. அன்பர்கள்‌ துணை செய்ய மெல்ல எழுந்து கண்விழித்தார்‌. எழுந்து நின்றார்‌ சிறிது தண்ணீர்‌ பருகினார்‌. குளிர்ந்த நீர்‌ பட்டபின்‌ இரத்தம்‌ அறவே நின்று விட்டது. வாய்‌ பேச வராத நிலையிலும் ‌ நாயகர்‌ முருகா முருகா என்று குமுறிக்‌ குழறி முணு முணுத்தார்‌. கோயிலை வலம்‌ வந்தார்‌. அருகிலிருந்த படக்‌ கடையில்‌ முருகன்‌ படம்‌ ஒன்றைப்‌ பார்த்து வணங்கினார்‌. யாரோ ஓர்‌ அன்பர்‌ உடனே அப்படத்தை வாங்கி அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்‌. நம்‌ அண்ணாசாமியார்‌ தமக்கு ௮ம்‌ முருகன்‌ படம்‌ கிடைத்ததைப்‌ பெரும்பேறு என்று கருதி அதைத்‌ தம்‌ தலைமேல்‌ வைத்துக்‌ கொண்டு மகிழ்ந்து கூத்தாடி இன்புற்றார்‌. இங்ஙனம் திருத்தணிகை வழிபாட்டை முடித்துக்‌ கொண்டு மறுநாள்‌ அவர்‌ சென்னை வந்து சேர்ந்தார்‌.

திருத்தணிகையில்‌ இருந்து, கொண்டு வந்த படத்தைத்‌ தமது வீட்டில்‌ வைத்து வழிபாடு செய்து கொண்டு வந்த நாயகருக்கு அதற்குப்பின்‌ வயிற்று வலி ஏற்படவேயில்லை. அவர்தம்‌ நோய்‌ அறவே அகன்றொழிந்தது. சில நாட்களில்‌ அவர்தம்‌ நாக்கும்‌ நன்‌ கினிது வளர்ந்து விட்டது. அவர்தம்‌ அன்பின்‌ பெருக்கையும்‌, பக்தி உணர்வையும்‌ மனத்திண்மையையும்‌ அறிந்த அன்பர்‌ பலர்‌ அவரிடம்‌ வந்து பேசுவதனுடன்‌ தமது குறைகளையும்‌ கூறி, அவை இரும்‌ வழிவகைகளையும்‌ கேட்கத்‌ தொடங்கலாயினர்‌. நாயகர்‌, அவர்களுக்கெல்லாம்‌ ஒன்றும்‌ விடை கூற இயலாத நிலையில்‌, முருகனை வழிபடும்படி அறிவுறுத்தி அனுப்பிவிடுவார்‌.

சிலர்‌ மாலை வேளையில்‌ அவர்‌ செய்யும்‌ வழிபாடுகளில்‌ அன்புடன்‌ கலந்து கொள்வர்‌. திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை தோறும்‌ முருகனுக்குச்‌ சிறப்பு வழிபாடுகள்‌ செய்யப்‌ படலாயின. அன்பர்கள்‌ அவற்றிற்‌ கலந்து கொண்டதுடன்‌, அவை சிறப்புற நிகழ மனமுவந்து உதவிகளும்‌, செய்து வந்தனர்‌. வழிபாடும் ‌ பாராயணமும்‌ இன்னிசைப்‌ பாடல்களும்‌ அப்போது நிகழும்‌. மூருக பக்தியில்‌ மிகவும்‌ திளைத்து வளர்ந்த சிறந்த பேரன்ப ராகிய நாயகர்‌, அவ்வழிபாட்டு நிகழ்ச்சிகளின்‌ போது தம்மை மறந்த நிலையில்‌, ஒருவகை உணர்ச்சிப்‌ பெருக்கம்‌ (ஆவேசம்‌) எய்தி விடுவது வழக்கம்‌. அப்போது அன்பர்கள்‌ அவரிடம்‌ தமது குறைகளை முருகனிடம்‌ கூறுவது போலக்‌ கூறி, அவைகள்‌ தீரும் வண்ணம்‌ அருள்புரியுமாறு வேண்டுகோள்‌ விடுப்பர்‌. நாயகரும்‌ தம்மை மறந்த ஆவேச நிலையில்‌ அன்பர்களின்‌ வினாக்களுக்கு ஏற்ற விடைகளையும்‌, வேண்டுகோளுக்கு தகுந்த விளக்கங்‌ களையும்‌ தெரிவிப்பார்‌.

நாளடைவில்‌ நாயகரின்‌ இல்லம்‌, பண்டைக்‌ கிரேக்க நாட்டில்‌, டெல்பி நகரில்‌ இருந்த புகழ்‌ ஒங்கியதொரு குறிபீடம்‌ போன்று, புகழ்‌ மிக்கதொரு குறிபீடம்‌ ஆகிவிட்டது. ஆவேசமுற்ற நிலையில்‌ அவர்‌ எவருக்கு எதைச்‌ சொன்னாலும்‌, சொன்னது சொன்ன படியே பலித்து நடந்து வந்தது. இதனால்‌ ஏராளமான மக்கள்‌, இிரள்‌, திரளாக அவர்‌ இல்லத்துக்கு வரத்‌ தொடங்கிவிட்டனர்‌. கோடம்பாக்கம்‌ குறிமேடை எங்கும்‌ புகழ்‌ பெறுவதாயிற்று. எழை பணக்காரர்‌, உயர்ந்தோர்‌ தாழ்ந்தோர்‌, கற்றார்‌ கல்லாதார்‌ அனை வரும்‌ அங்கு போய்‌ தத்தம்‌ குறைகள்‌ தீரக்‌ குறிகள்‌ கேட்டு நலம்‌ பெற்று மகிழலாயினர்‌.

இந்நிலையில்‌ நாயகர்‌ அவர்களுக்குப்‌ பழநி செல்ல வேண்டும்‌ என்னும்‌ ஆர்வம்‌ மிகவும்‌ பெருகி வந்தது.

அந்தநாளில்‌ ரயில்‌ முதலிய வசதிகள்‌ ஏதும்‌ இல்லாமல்‌ இருந்தன. பெரும்பாலும்‌ கால்நடையாகவே யாத்திரிகர்கள்‌ தலங்களுக்குச்‌ செல்வது வழக்கம்‌. பழநி சென்று முருகனை வழிபடும்‌ பேரார்வம்‌ மேலிட்டு ஒரு நாள்‌ இடீரென்று நாயகர்‌ புறப்பட்டு விட்டார்‌. கால்‌ நடையாகவே பல தலங்களையும்‌ தரிசித்துக்‌ கொண்டு பழநி சென்று அடைந்தார்‌. அங்கு ஞான தண்டாயுதபாணியைத்‌ தரிசித்து, ஆரா அன்புடன்‌ வலம்‌ வந்து வழிபட்டுப்‌ பெருமகிழ்வுற்றார்‌. பழநியிலேயே சில நாட்கள்‌ பக்தி பெருக்குடன்‌ தங்கி மகிழ்ந்து இன்புற்றார்‌.

அப்போது அவருக்கு மேலும்‌, மேலும்‌ பழநி பரமன்பால்‌ பக்தி ஒங்கி வளர்ந்து வந்தது. ஒரு நாள்‌ அவர்‌ ஞான தண்டாயுத பாணியை மலை மேற்‌ சென்று தரிசித்துக்‌ கொண்டு படிகளில்‌ கீழிறங்கி வந்தார்‌. வழியில்‌ இருந்த படக்கடை ஒன்றில்‌ பழநி ஆண்டவரின்‌ பெரிய அழகிய படம்‌ ஒன்று அவர்‌ கண்களைக்‌ கவர்ந்தது. அதன்பால்‌ ஈடுபட்டு நாயகர்‌ அதனையே பார்த்துக்‌ கொண்டு அங்கேயே நின்று விட்டார்‌. அப்படத்தை விலைக்கு வாங்கிக்‌ கொள்வதற்கு அவர்‌ கையில்‌ பொருள்‌ ஏதுமில்லை, ஆயினும்‌ அவர்‌ அதனைப்‌ பெறவேண்டும்‌ என்று பெரிதும்‌ விரும்‌ பினார்‌. அன்றிரவு அந்தப்‌ படத்தை நாயகர்‌ அவர்களிடம்‌ தரும்படி கடைக்காரர்‌ கனவிலும்‌, அதைப்‌ பெற்றுக்‌ கொள்ளும்படி நாயகர்‌ கனவிலும்‌ ஆண்டவர்‌ அருள்‌ புரிந்தார்‌. மறு நாள்‌ நாயகரைக்‌ கண்டதும்‌ கடைக்காரர்‌ படத்திற்கு பூமாலை தரித்து மிகவும் ‌ அன்புடன்‌, நாயகர்‌ அவர்களிடம்‌ தாமே வலிந்து வந்து கொடுத்து வணங்கி மகிழ்ந்தார்‌.

நாயகர்‌ அவர்கள்‌ அந்தப்படத்தைப்பெருஞ்‌ செல்வமாக மதித்துப்‌ போற்றி எடுத்துக்‌ கொண்டு சென்னைக்கு வந்தார்‌. தமது குறி மேடையில்‌ அதனை வைத்து, அதனைப்‌ பழநி ஆண்டவர்‌ திருக்‌ கோயிலாக மாற்றி அமைத்தார்‌. சிறிய கீற்றுக்‌ கொட்டகையொன்று போட்டு தம்‌ குடும்பத்தை வேறிடத்திற்கு இடம்‌ பெயரச்‌ செய்தார்‌. தாம்‌ குடும்பத்தினின்று விலகித்‌ துறவு நெறி மேற்கொண்டு, காவியுடைபுனைந்து, ஆண்டவர் சன்னதியிலேயே இருக்கத்தலைப்‌ படலாயினார்‌. குறிகேட்கவரும்‌௮அன்பர்கள்மனமுவந்து கொடுக்கும்‌ காணிக்கையைக்‌ கொண்டு ஆண்டவருக்கு வழிபாடுகள்‌ முதலி யவற்றைச்‌ சிறப்புற நடத்தி வந்தார்‌. அது முதல்‌ நாயகருக்கு அண்ணாசாமித்‌ தம்‌பிரான்‌ என்னும்‌ பெயர்‌ வழங்குவதாயிற்று.


தவத்திரு ஸ்ரீ இரத்தின சாமிச்செட்டியார்‌
(இரண்டாவது சித்தர்)

அண்ணாசாமித்தம்‌பிரானின்‌ அரிய பக்தியையும்‌, குறி சொல்லும்‌ சிறப்பையும்‌ கேள்வியுற்று அவரை நாடிய அன்பர்கள்‌ பற்பலர்‌ ஆவர்‌. அவர்களுள்‌ தேனாம்பேட்டையில்‌ வாழ்ந்துவந்த இரத்தின சாமிச்‌ செட்டியார்‌ என்பவரும்‌ ஒருவர்‌. அவர்‌ ஆயிரம்‌ விளக்குப்‌ பகுதியில்‌ ஒரு மளிகைக்கடை வைத்து வணிகம்‌ செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்‌. 1863ஆம்‌ ஆண்டு சஷ்டியின்‌ போது ஒரு வெள்ளிக்‌ கிழமையன்று முதன்‌ முதல்‌ செட்டியார்‌ அண்ணாசாமித்‌ தம்பிரான்‌ அவர்களைக்‌ கண்டார்‌. அன்று நிகழ்ந்த வழிபாட்டில்‌ உள்ளத்தைப்‌ பறிகொடுத்தார்‌. அது முதல்‌ தொடர்ந்து வெள்ளிக்கிழமை தோறும்‌ வழிபாட்டுக்கு வந்து கலந்து கொண்டார்‌. தம்முடைய செலவில் ‌ பழநி ஆண்டவருக்குப்‌ பூ, பழம்‌, ஊதுவத்தி, கற்பூரம்‌ முதலிய வழிபாட்டுப்‌ பொருள்களை வாங்கி வந்து கொடுப்பது அவருக்கு வழக்கமாயிற்று.

செட்டியாரின்‌ அன்பையும்‌ ஆர்வத்தையும்‌ அறிந்த தம்‌.பிரான்‌ சிலகாலம்‌ கழித்து, நமக்குப்‌ பின்‌ இவ்வழிபாட்டைத்‌ தொடர்ந்து செய்யக்‌ கூடியவர்‌ இவரே ஆவார்‌ எனத்தேர்ந்து, இரத்தினசாமிச்‌ செட்டியாரை அன்புடன்‌ அருகில்‌ அழைத்து நீர்‌ இங்கேயே இருந்து ஆண்டவருக்குத்‌ தொண்டு செய்தல்‌ இயலுமா? என்று வினவினார்‌. இரத்தினசாமி செட்டியார்‌ எதிர்பாராத நிலையில்‌ வினா எழவே மிகவும்‌ தயங்கி, அடியேன்‌ குடும்பத்தவன்‌ ஆயிற்றே என்னால்‌ எங்ஙனம்‌ இயலும்‌? ஏதேனும்‌ இயன்ற தொண்டுகளை மட்டும்‌ தான்‌ செய்து வருவேன்‌ என்று பணிவுடன்‌ தெரிவித்தார்‌. அது கேட்ட தம்பிரான்‌, இக்&ற்றுக்‌ கொட்டகையை மாற்றி இங்குப்‌ பழநி ஆண்டவருக்கு ஒரு சிறிய கோயில்‌ கட்ட வேண்டுமென்று என்‌ உள்ளம்‌ விரும்புகின்றது. தாங்கள்‌ இதற்கு ஏதேனும்‌ உதவி செய்தல்‌ இயலுமா? என்றார்‌.

உடனே செட்டியார்‌, அப்படியே செய்யலாம்‌, தங்கள்‌ விருப்பம்‌ போலவே அன்பர்களுக்கும்‌ இக்கருத்து உள்ளது. தாங்களே வாய்‌ இறந்து பணித்த பின்னர்‌ அதனை நிறைவேற்றுவதில்‌ என்ன தடை? இன்றைக்கே கோயில்‌ திருப்பணிக்கு உரிய ஏற்பாடுகளைச்‌ செய்யலாம்‌.

தாங்கள்‌ இசைவு தெரிவித்தால்‌, பழநி ஆண்டவர்‌ சிலை ஒன்றையும்‌ அழகுற அமைப்பித்துக்‌ கோயில்‌ நிறுவிக்‌ கும்பா பிஷேகமும்‌ விரைவில்‌ செய்து விடலாம்‌, என்று, மிகவும்‌ பேரார்‌ வத்துடன்‌ தெரிவித்தார்‌. அண்ணசாமித்‌ தம்பிரான்‌, ஆண்டவன்‌ பணிக்கு எம்முடைய இசைவு எதற்கு ? தங்கள்‌ உள்ளத்தில்‌ தோன்று கிறபடியே திருப்பணிக்கு ஏற்பாடு செய்யுங்கள்‌ என்று சொல்லிச்‌ செட்டியாருக்குத்‌ திருநீறு கொடுத்து அனுப்பிவிட்டார்‌.

மறுநாளே, செட்டியார்‌ வண்ணையம்பதிக்குச்‌ சென்று தமக்குத்‌ தெரிந்த ஒரு ஸ்தபதியாரிடம்‌ பழநி ஆண்டவர்‌ சிலையொன்று செய்யும்படி ஏற்பாடு செய்தார்‌. அன்று முதல்‌ செட்டியாருக்கு அடிக்கடி தாம்‌ காவியுடை உடுத்தியிருப்பது போன்ற ஒருவகை உணர்வு நிகழ்ந்து வரலாயிற்று.

பின்னர்‌ சில நாட்களில்‌ ஒரு நல்ல நாள்‌ பார்த்துச்‌ செட்டியாரே அண்ணாசாமித்‌ தம்பிரானின்‌ திருவுள்ளக்குறிப்பின் படி, கோயில்‌ திருப்பணியை முன் நின்று தொடங்கினார்‌. குறிமேடைக்‌ கருகில்‌, இப்போது வடபழநி ஆண்டவர்‌ திருக்கோயிலின் ‌ கருவறைப்‌ பகுதி உள்ள இடத்தில்‌ செங்கல்‌, சுண்ணாம்புக்கட்டிடம் ‌ ஒன்று அமைக்கப்‌ பெற்றது. அன்பர்கள்‌ பலர்‌ செய்த பொருளுதவி யினால்‌ திருப்பணி விரைவில்‌ நிறைவேறியது.

இது சுமார்‌ கி.பி. 1865ஆம்‌ ஆண்டாக இருக்கலாம்‌ என்று தெரிகிறது. இந்நிலையில்‌ திடீரென்று ஒரு நாள்‌ ஆவணி மாதம்‌ அமாவாசைத்‌ இதி மகநட்சத்திரத்தன்று அண்ணாசாமித்‌ தம்‌.பிரான்‌ ஆண்டவர்‌ திருவடியை அடைந்து விட்டார்‌. அன்பர்கள்‌ பெரிதும்‌ வருந்தினர்‌.

அப்போதுதான்‌ இரத்தினசாமிச்‌ செட்டியாருக்கு, தம்.பிரான்‌ ஏன்‌ தம்மை இங்கேயே இருந்து கொண்டு, தொண்டு செய்து வரும்படி விரும்பிப்பணித்தார்‌. என்னும்‌ குறிப்பும்‌ நுட்ப மும்‌ தெரிந்தன. தம்.பிரானின்‌ திருமேனியை உரிய முறையில்‌ பூஜித்து திருக்கோயிலின்‌ வடக்குப்‌ பகுதியில்‌ சமாதியாக வைத்தார்‌, இரத்தினசாமிச்‌ செட்டியார்‌.

மறுநாள்‌ ஒன்றும்‌ புரியாத நிலையில்‌, ஆண்டவர்‌ சன்னதியை விட்டுப்‌ பிரிய மனமின்றி, வீட்டுக்குச்‌ செல்லவும்‌ விருப்பமின்றி, அன்று மாலையில்‌ கடைக்குச்‌ சென்றார்‌. மூடியிருந்த கடையைத்‌ திறந்தபோது காவியுடை தரித்த யாரோ ஒரு பெரியவர்‌ அங்கி ருந்து வெளிப்பட்டுச்‌ செல்வது போலத்‌ தோன்றக்‌ கண்டார்‌. கடையை அப்படியே விட்டு, விட்டு அவர்தம்‌ அடிச்சுவட்டைப்‌ பின்பற்றி உடன்‌ சென்றார்‌. பெரியவரை அணுகவும்‌ அவர்க்கு இயலவில்லை, பேசவும்‌ அவரால்‌ முடியவில்லை. பேசாமல்‌ பின்‌ தொடர்ந்தார்‌. காவியுடை அணிந்தவர்‌ குறி மேடை வரை வந்து அங்கிருந்த கோயிலுக்குள்‌ நுழைந்தார்‌. பின்‌ வந்த செட்டியார்‌ உள்ளே புகுந்தபோது பெரியவரைக்‌ காணவில்லை. அதனால்‌ திகைப்பும்‌, வியப்பும்‌ அடைந்தார்‌, செட்டியார்‌. அருகிருந்தவா்‌ களும்‌ நிகழ்ந்ததை அறிந்து வியப்பு மேலிட்டனர்‌. இத்தகைய சில நிகழ்ச்சிகளால்‌ செட்டியார்‌ குடும்பப்‌ பற்றுத்‌ தவிர்த்து துறவு நெறி யுணர்வு பெருகி, ஆண்டவர்‌ சன்னதியிலேயே இருந்து கொண்டு, வழிபாடு செய்யத்தலைப்பட்டார்‌.

ஒரு நாள்‌ அவர்தம்‌ கனவில்‌ ஸ்ரீ அண்ணாசாமித்‌ தம்பிரான்‌ தோன்றி, அவரையும்‌ தம்மைப்‌ போலவே பாவாடம்‌ தரித்துக்‌ கொள்ளுமாறு பணித்தார்‌. அவ்வாறே ஓர்‌ ஆடிக்கிருத்திகையன்று முறையாக நோன்பிருந்து வழிபாடுகள்‌ செய்து நாக்கை அறுத்து இறைவன்‌ திருமுன்‌ வைத்து வழிபட்டார்‌. அன்றே அவர்‌ காவியு டையும்‌ புனைந்துகொண்டு துறவியானார்‌. மக்கள்‌ அவரைக்‌ தம்‌ பிரான்‌ என்று அன்புடன்‌ அழைக்கலாயினர்‌. அடுத்த கிருத்திகை முதல்‌ இரத்தினசாமித்‌ தம்‌.பிரானும்‌ ஆவேசமுற்றுக்‌ குறிசொல்லும்‌ ஆற்றல்‌ பெற்றார்‌. பின்‌ சிலநாட்களில்‌ அண்ணாசாமித்‌ தம்பிரான்‌ விரும்பியபடியே தொடங்கப்‌ பெற்ற கோயில்‌ திருப்பணி சிறப்புற நிறைவேறியது.

பழநியாண்டவர்‌ சிலையும்‌ பிரதிஷ்டை செய்யப்‌ பெற்றுக்‌ கும்பாபிஷேகமும்‌ நன்கு நிறைவேறியது. வழக்கம்‌ போல்‌ குறி கேட்க வரும்‌ அன்பர்கள்‌ கொடுக்கும்‌ காணிக்கைப்‌ பொருளைக்‌ கொண்டே இரத்தினசாமித்‌ தம்பிரான்‌ திருக்கோயிற்‌ பூஜை முதலிய செலவுகளை நன்முறையில்‌ நடத்திக்‌ கொண்டு வந்தார்‌.

கும்பாபிஷேகத்திற்குப்‌ பிறகு கோடம்பாக்கம்‌ குறி மேடையை, வடபழநி ஆண்டவர்‌ கோயில்‌ என்று வழங்கும்படி இரத்தின சாமித்‌ தம்பிரான்‌ அனைவரிடமும்‌ கூறி வந்தார்‌. நாளடைவில்‌ அருள்மிகு வடபழநிக்‌ கோயிலின்‌ புகழ்‌ சென்னை நகர்‌ முழுதும்‌ விரைந்து பரவுவதாயிற்று.

இரத்தினசாமி தம்பிரான்‌, சுமார்‌ இருபது ஆண்டுகள்‌ கோயிலைச்‌ சிறப்புறப்‌ போற்றி நடத்தி வந்தார்‌. அவருக்குப்‌ பின்னர்‌ சென்னை சைதாப்பேட்டையைச்‌ சேர்ந்தவரும்‌, செங்குந்தர்‌ குலத்தில்‌ தோன்றியவருமான பாக்கியலிங்கத்‌ தம்பிரான்‌ என்பவர்‌, இரத்தினசாமித்‌ தம்‌பிரானின்‌ அன்பிற்குரிய சீடராக அமைந்தார்‌. அவரும்‌ தம்குருவின்‌ திருவுள்ளக்‌ குறிப்பிற்கேற்ப முறைப்படி நோன்பிருந்து துறவு பூண்டு காவியுடை புனைந்து வழிபாடுகள் ‌ நிகழ்த்தித்‌ தம்‌ நாக்கை அறுத்து இறைவன்‌ திருமுன்‌ படைத்துப்‌ பாவாடம்‌ தரித்துக்‌ கொண்டார்‌. தம்‌ குடும்பத்தில்‌ தமக்குரிய சொத்தின்‌ பங்கைக்‌ கேட்டுப்‌ பெற்று, பழநியாண்டவர்‌ கோயில் ‌ பணிகளுக்கே பயன்படுத்தினார்‌.

தம்‌ குருவின்‌ திருவுள்ளம்‌ மகிழும்படி கோயிற்‌பூஜைகளையும்‌ முறையாக நடத்திவந்தார்‌. இவருக்கும்‌ இறைவன்‌ அருளால்‌ குறி சொல்லும்‌ ஆற்றல்‌ உண்டாயிற்று. குருவும்‌ சீடருமாக மன மொத்துப்‌ பழநியாண்டவருக்கு ஒரு சில ஆண்டுகள் பணிபுரிந்து வந்தனர்‌.1886ஆம்‌ ஆண்டு அளவில்‌, மார்கழி மாதம்‌ சஷ்டி நாளில்‌ சதய நட்சத்திரத்தன்று ஸ்ரீ இரத்தினசாமித்‌ தம்பிரான்‌ இறைவன்‌ திருவடி நிழலையடைந்தார்‌.


தவத்திரு ஸ்ரீ பாக்கியலிங்கத் தம்பிரான்‌
(மூன்றாவது சித்தர்)

தம்‌ குருநாதர்‌ குகனின்‌ திருவடி அடைந்தார்‌. பின்னர்‌ பாக்கிய லிங்கத்‌ தம்‌பிரான்‌ அவர்கள்‌, கோயிற்‌ பணிகளை மிகவும்‌ கண்ணுங்‌ கருத்துமாக இருந்து அரும்‌ பாடுபட்டுக்‌ கவனித்து வந்தார்‌. இப்போதுள்ள வடபழநித்‌ திருக்கோயிலின்‌ கர்ப்பக்‌ கிரகமும்‌, முதல்‌ உட்பிரகாரத்‌ திருச்சுற்றும்‌, கருங்கல்‌ இருப்பணியாகக்‌ செய்வித்தவர்‌ ஸ்ரீ பாக்கியலிங்கத்‌ தம்பிரான்‌ அவர்களேயாவார்‌. வடபழநி கோயிலுக்கு இவர்‌ பாவாடம்‌ தரித்துக்‌ கொண்ட நாள்‌ முதல்‌, ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள்‌ பணிபுரிந்திருக்கின்றார்‌. இவருடைய காலத்தில்தான்‌, இவர்தம்‌ சிறந்த அரும்பெரும்‌ முயற்சிகளின்‌ பயனாகவே, ஸ்ரீ வடபழநி ஆண்டவர்‌ கோயில்‌ பெரும்‌ புகழ்‌ பெறுவதாயிற்று.

சொல்லியது சொல்லியபடியே தவறாது பலித்து வந்தது. அவர்‌ தம்‌ குறி சொல்லும்‌ ஆற்றலால்‌, அன்பர்கள்‌ பெருந்திரளாக கூடி வந்தனர்‌. கோயிலின்‌ வளர்ச்சியும்‌ புகழும் நன்கு பெருகின. இந்நிலையில்‌ ஆயிரத்துத்‌ தொள்ளாயிரத்து முப்பத்தோராம்‌ ஆண்டு புரட்டாசித்திங்கள்‌ தசமி திதி கூடிய பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீ பாக்கியலிங்கத்‌ தம்பிரான்‌ பழநியாண்டவர்‌ திருவடியைப்‌ பாங்குற அடைந்தார்‌. அவருடைய பொன்னுடலும்‌, அவருக்கு முன்னிருந்த தம்பிரான்௧களின்‌ சமாதிக்கு அருகில்‌ உரிய முறையில்‌ பூஜை முதலிய சிறப்புக்களுடன்‌ சமாதி வைக்கப்பட்டது. இம்‌ மூவருடைய சமாதிப்‌ பூஜையும்‌ வழிபாடும்‌ தொடர்ந்து நடந்து வருகின்றன. இம்மூவரின்‌ சமாதிகளும்‌ அருள்மிகு வடபழநி ஆண்டவர்கோயிலுக்கு ஒரு பர்லாங்கு தொலைவில்‌ இருக்கின்றன.

ஸ்ரீ பாக்கியலிங்கத்‌ தம்பிரானுக்குப்‌ பின்னர்‌ அவர்கள் முறை யைப்‌ பின்பற்றிக்‌ குறி சொல்லத்தக்கவர்‌ ஒருவரும்‌ அமைய வில்லை. இப்போதுள்ள கோயிலின்‌ தென்கிழக்குப்‌ பக்கத்தில்‌ பழைய குறிமேடை இருந்த இடம்‌ இன்றும்‌ இருக்கின்றது. அங்கு அண்ணாசாமியார்‌ பழநியிலிருந்து கொண்டுவந்த திருவுருவப்‌ படம்‌ இருக்கிறது.